Wednesday, December 27, 2006

கிருஷ்ணப்பிரவாஹம்.

இன்று காலையில் தினமலர் பேப்பரில் ஒரு செய்தி.கிருஷ்ணா நதித் தண்ணீர் சென்னை வந்து புழலேரி நிறைந்தது. புழலேரி நிறைந்ததோ இல்லையோ ஆனால் டிஸெம்பர் 26ஆம்தேதியன்று மாலை நாரத கான சபாவில் இருந்த ரசிகர்கள் கிருஷ்ணாவின் சங்கீத பிரவாகத்தில் முழுகி மனது நிறைந்தவர்களாக ஆனார்கள்.

மணி4.30க்குத்தான் கச்சேரி ஆனால் 4.15க்கே ஹால் நிரம்பி வழிந்தது.4.40(10 நிமிடம் லேட்)க்கு கரகோஷத்துடன் கச்சேரி ஆராம்பம். அவருக்கு பக்காபலாமாக திரு. வரதராஜன் வயலின்,கரைக்குடி திரு. மணி மிருதங்கம்,திரு.சுரேஷ் கடம் பக்கபலமாக வாத்தியக்காரர்கள். நல்ல ஜமாவுடன் "சாமி தயாசூடா... என்ற கேதரகௌள வர்ணத்துடன் கச்சேரி ஆரம்பம் அடுத்து வந்தது"வினதா சுத வாஹனா ச்ரி ராமா" என்ற ஜயந்தசேனா ராகத்தில் அமைந்த கிருதி. இந்த மாதிரி புதிய ராகங்களையும் கிருதிகளயும் பல வித்வான்கள் தொடுவதே இல்லை நமக்கு ஏன் வம்பு என்று.ஆனால் திரு. கிருஷ்ணா இதையும் லாவகமாக எடுத்து அருமையாகப் பாடி ரசிகர்களை குஷிப் படுத்தினார்

அடுத்தது வந்தது யதுகுல காம்போதி.ஒரு 20 நிமிஷம் நாரத கான சபா கிருஷ்ணா கான சபா ஆகிவிட்டது. அதாவது கிருஷ்ணா கான மழைதான். அதனுடன் கொஞ்சி விளையாடி யதுகுலகாம்போதியின் முழு ராகஸ்வரூபத்தையும் கொஞ்சம் கூட ரசிகர்களுக்கு சந்தேகமே வராதமாதிரி வெளிச்சம் போட்டு காட்டி விட்டார். திரு. வரதராஜனும் அப்படியே அதை வாங்கி அதே நெளிவு சுளிவுகளுடன் திருப்பிக் கொடுத்து தன் கணக்கை சரி பண்ணி விட்டார். எடுத்துக்கொண்ட கிருதியும் மறைந்த திரு.ஜி.என்.பி யின் "பரம கிருபா சாகரி பாஹி பரமேஸ்வரி".பின்னே கேட்கவேண்டுமா வெற்றிக்கு.

அதன் பின்னர் ஹிந்தோளவசந்தம் ராகத்தில் "சந்தான ராமஸ்வமினம்' என்ற கிருதியை துரித காலத்தில் சுருக்கமாக சுறு சுறுப்புட்ன வழங்கி விட்டு மெய்ன் ராகமான கீரவணிக்குத் தாவினார்.

கீரவாணியை மூன்று காலங்களிலும் விஸ்த்தாரமாக பாடி ஒரு அலசு அலசிவிட்டார்.பிருகாக்களும்,கோர்வைகளும் பின்னிவர ராகத்தின் லக்ஷ்ணங்களை அழகாக படிப்படியாக மேலே கொண்டு போய் "அவுட் வாணம்" போல் வானவேடிக்கைதான் போங்கள்.தியகராஜரின் "கலிகியுண்டே கதா" தான் கீர்த்தணை.நிரவல்,அதைத்தொடர்ந்து வந்த ஸ்வரப்பிரஸ்தாரங்களும் கீரவாணியை கச்சேரியின் ரகாof the day ஆக மாற்றிவிட்டது.

கரைக்குடி திரு. மணி தாள வாத்தியத்தின் மதிப்பை உயர்த்தியவர்.பரம ஞானஸ்த்தர்,நல்ல அனுபவசாலி,பாடகர்களுக்கும் பாட்டிற்கும் போஷித்து வாசிக்கும் வல்லமை படைத்தவர். அன்று அவர் வாசித்த தனி ஆவர்த்தனத்தில் அவரது கை விரல்களில் நெருப்பு பொறி பறந்தது. அப்படி ஒரு லய வாசிப்பு. அன்று அவர் வைத்த மொஹராக்களும்,ப்ரன்களும்,முத்தாய்ப்பும் மற்றும் தாளப்பங்கீடும் அலாதி முத்திரையை பதித்தது.இருந்தாலும் மிருதங்கத்தின் நாதத்தில் கொஞ்சம் கூடுதல் கவனம் செலுத்தியிருக்கலாம்.

ஆனால் கடம் திரு சுரேஷ் தன்னுடைய பங்குக்கு தனியில் தனிக்கொடி நாட்டி சாதித்துவிட்டார். என்ன நாதம் ஐய்யா அது,இன்னும் காதில் ரீங்காரமிட்டுக்கொண்டு இருக்கிறது கச்சேரியின் ஆரம்பம் முதல் கடைசிவரை கச்சிதமான சபையோரைக் கவர்ந்த வாசிப்பு.

திரு கிருஷ்ணா பின்னர் சஹாணாவை ராகத்தை எடுத்துக்கொண்டு ஒரு மினி ராகம் தானம் பல்லவி பாடி அவையோரின் கரகோஷத்தையும். ஆஹாக்களயும்,உச்சு உச்சுக்களையும் ஏராளமக பெற்றுக்கொண்டார்.பல்லவி எளிமையானது"வடிவேலனை நிதம் போற்றுவொம். வையம் எல்லாம் அருள்புரிந்து காக்கும்...." அன்றைய கச்சேரியை மதுவந்தி ராகத்தில் சதாசிவ பிரும்மேந்திரரின் "ஸ்ர்வம் பிரும்ம மயம்" என்ற கிருதியுடனும் மற்றும் ரசிகர்களின் மனதை உருகச்செய்து உருகிபடிய 'இரக்கம் வராமல் போனதென்ன காரணம்" என்ற பெஹாஹ் ராகத்தோடு முடித்துக் கொண்டார்

வயலின் வாசித்த திரு வரதராஜனைப் பற்றி ஒரு வார்த்தை. ஆரம்பமுதல் தலையைக்குனிந்து கொண்டு வயலின் நாதம் எங்கிருந்து வருகிறது என்ற சந்தேகம் வருகிறமாதிரி அப்படி ஒரு அடக்கமான வாசிப்பு.பாடகரை நிழல் போலத்தொடர்ந்து அனுசரனையான வாசிப்பு.பாடகர் எந்தப் பிடி கொடுத்தாலும் இந்தா 'பிடி" என்று அதே வேகத்தில் திருப்பி வழங்கும் அலட்டல் இல்லாத வாசிப்பு. நல்ல ஒரு முழு நிறைவுள்ள கச்சேரியை கேட்ட திருப்தியுடன் வீடு திரும்பினேன்.

20 comments:

Kannabiran, Ravi Shankar (KRS) said...

//ஜயந்தசேனா//

அட, கேள்விப்படாத ராகமாத் தான் இருக்கு!

திராச ஐயா,
கச்சேரியை நாங்க கேக்கலை; அதனால கிருஷ்ண கானம் பொழிந்தது பற்றி தெரியாது.
ஆனா அதை நேராக் கேட்டா மாதிரி ஒரு ஃபீலிங்கை உருவாக்குதே உங்க இசை விமர்சனம்! அதை எப்படிப் பாராட்ட?

அதுவும் வயலின் வரதராஜன் அவர்கள் பணிவைச் சொல்லிய விதம் அருமை!

Kannabiran, Ravi Shankar (KRS) said...

//நல்ல ஒரு முழு நிறைவுள்ள கச்சேரியை கேட்ட திருப்தியுடன் வீடு திரும்பினேன்//

நல்ல ஒரு முழு நிறைவுள்ள வர்ணனையைப் படித்த திருப்தியுடன் பின்னூட்டம் போடுகிறேன் :-)

தி. ரா. ச.(T.R.C.) said...

@ரவிசங்கர் இதுதான் என் முதல் கச்சேரி விமர்சனம்.சங்கீதத்தில் எனக்கு கொஞ்சம் கேள்வி ஞானம்தான் உண்டு. ஆனால் கற்றது இல்லை. 1970 களில் இசை விமர்சகர் திரு. சுப்புடுவுக்கு சிஷ்யனாக பணிபுரிந்த அனுபவம்தான் எழுத உதவியது.அதனால் அவருடைய தாக்கமும் நக்கலும் இருக்கும். சிங்கப்பூரில் இருக்கும என் மகன் கேட்டுக் கொண்டதின் பேரில் இதை எழுதினேன். தங்கள் பதிலுக்கும் ஆதரவுக்கும் நன்றி

Syam said...

vanakkam sir,
Wish You a Wonderful New Year!!!

மெளலி (மதுரையம்பதி) said...

நல்ல பதிவு, அதுவும் குறிப்பாக முழுக்கச்சேரியும் கேட்டு எழுதியுள்ளீர்கள்...பல விமர்சனங்கள் ஒன்றிரண்டு பாடல்களை மட்டும் கேட்டு அதனை மட்டும் வைத்து எழுதும் இக்காலத்தில் இது மிக அருமை.

ambi said...

i felt as if i also listened the concert. All are new raagas for me.
நேராக் கேட்டா மாதிரி ஒரு ஃபீலிங்கை உருவாக்குதே உங்க இசை விமர்சனம்

//1970 களில் இசை விமர்சகர் திரு. சுப்புடுவுக்கு சிஷ்யனாக பணிபுரிந்த அனுபவம்தான் எழுத உதவியது.அதனால் அவருடைய தாக்கமும் நக்கலும் இருக்கும்.//
ohhh! athaane paarthen! :)

oru ph panni irukaalam, odi vanthrupen illa, unga kooda kacheri kekka thaan! vera ethukkum illa! :)

தி. ரா. ச.(T.R.C.) said...

@ஷ்யாம் . நன்றி புது வருட நல் வாழ்த்துக்கள்

தி. ரா. ச.(T.R.C.) said...

@மதுரையம்பதி . நன்றி புது வருட நல் வாழ்த்துக்கள். வங்கியில் இருந்த வரை எல்லா சபா சீசன் டிக்கெட்களும் வரும் ஆனால் போக முடியாது ஆபிஸ் விட்டு கிளம்பவே மணி 9 ஆகிவிடும். பாலிருக்கும் பழமிருக்கும் பசி இருக்காது கேஸ்தான்.இந்த வருடம்தான் கச்சேரி கேட்கமுடிகிறது.ஒருவேலை காசுகொடுத்துத்தான் கேக்கனும்ன்னு போலிருக்கு. 1974க்கு அப்பறம் இப்போதான் விமரிசனம் எழுதினேன்.என் குருவான திரு சுப்புடு சாருக்கு காபி அனுப்பியுள்ளேன்.நீங்கள் வந்து பார்த்ததுக்கு நன்றி.

தி. ரா. ச.(T.R.C.) said...

@அம்பி எங்க இருக்கீங்க சென்னையிலேதானே? அப்பதானே கூப்பிட்டவுடனே வரமுடியும்!
கச்சேரிக்கு !உனக்கு பிரியாமான ரகம் எதுன்னு சொல்லு உடனே போட்டுடலாம்.கரகரக் பிரியாவா? ஷன்முகப்பிரியாவா/ ரசிகப்பிரியாவா?
விமர்சனமே கச்சேரியை நேராகேட்ட அனுபவம் வரதுன்னு credit goes to திரு சுப்புடு.சரி சனிக்கிழமை சென்னையில் பார்க்கலாமா?

EarthlyTraveler said...

நேரில் கச்சேரி செல்லும் பாக்கியம் இதுவரை அமைந்தது இல்லை.நேரில் நாங்களும் கச்சேரி கேட்டதுப் போன்ற ஒரு உணர்வு உங்கள் விமர்சனம் அளித்தது.மிக்க நன்றி.தங்களுக்கும் தங்கள் குடும்பத்தினருக்கும் புது வருட வாழ்த்துக்கள்.--SKM

மு.கார்த்திகேயன் said...

இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள் தி.ரா.சா சார்
இந்த வருடத்தில் கிடைத்த உங்கள் நட்பு எனக்கு மகிழ்ச்சியை தருகிறது. பரந்து விரிந்த இந்த உலகத்தில் நம்மை சேர்த்து வைத்த இந்த பிளாக்கருக்கு நன்றி.

இந்த புதிய வருடத்தில் ஆண்டவனிடன் நீங்கள் வேண்டும் யாவும் கிடைக்கப்பெற்று, நல்ல ஆரோக்கியத்துடன் நீங்களும் உங்களும் குடும்பத்தினரும் எல்லா வித இன்பங்களும் கிடைக்கப் பெற்று வாழ வாழ்த்துக்கள். தாங்கள் பணிபுரியும் அலுவலகத்தில் மேலும் மேன்மை அடைந்து சிறக்க வாழ்த்துக்கள்

தி. ரா. ச.(T.R.C.) said...

@ஸ்.கே.எம் என் புதிய முயற்சிக்கு தங்கள் பாராட்டுக்கு மிகவும் நன்றி.தங்களுக்கும் தங்கள் குடும்பத்துக்கும் வரும் புத்தாண்டில் எல்லா நன்மைகளும் பெற வயதில் பெரியவன் என்ற முறையில் ஆசிகள்.தங்கள் வாழ்த்துக்கும் நன்றி

தி. ரா. ச.(T.R.C.) said...

@கார்த்திக்.என் நிலையும் அப்படியே.உங்கள் நட்பு கிடைத்தது நல்லது.அழகாக எழுதுகிறீர்கள் தொடருங்கள் பணியை.நான் இந்தியன் வங்கிப் பணியிலிருந்து அதன் Deputy General Manager இருந்து ஓய்வு பெற்று இப்பொழுது Chartered Accountanat தொழில் புரிந்து வருகிறேன் தங்களுக்கும் தங்கள் குடும்பத்துக்கும் வரும் புத்தாண்டில் எல்லா நன்மைகளும் பெற வயதில் பெரியவன் என்ற முறையில் ஆசிகள்.தங்கள் வாழ்த்துக்கும் நன்றி
.

Cogito said...

I almost felt like having been in the concert ! Thanks for the review.Seems he sang most of my favorite ragas ( Sahana, Keeravani, Madhuvanthi, Behag).

Dubukku said...

அழகாக விமர்சனம் செய்துள்ளீர்கள். சுப்புடுவின் சிஷ்யரா நீங்கள்? நிறைய இந்த மாதிரி எழுதுங்கள் சார்.

உங்களுக்கும் உங்கள் குடும்பத்தாருக்கும் இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள்!!

தி. ரா. ச.(T.R.C.) said...

@டுபுக்கு. புது வரவுக்கு நன்றி.அம்பியின் மூலமாக உங்களைப் பற்றி நிறைய கேள்விப் பட்டு இருக்கிறேன். பார்க்கும் வாய்ப்பும் கூடிய சீக்கிரம் வரும் என்று நினைக்கிறேன்.எதோ அம்பி மறந்து விட்டாலும் நீங்களாவது ஞாபகம் வைதுக்கொண்டு இருக்கிறீர்களே.
என் பொழுது போக்கே சங்கீதம்தான். அதனுடைய தாக்கம்தான் இந்த விமரிசனம்

தி. ரா. ச.(T.R.C.) said...

@cogito thank you very much for your instication to write this post.If it is good credit should come to me,incase otherwise you are to be blamed.

Geetha Sambasivam said...

விமரிசனத்துக்கு சுப்புடு இல்லாத குறையைத் தீர்க்க வந்திருக்கீங்க போல் இருக்கு. நல்லா எழுதி இருக்கீங்க. உங்க எழுத்தையும், சங்கீத விமரிசனத்தையும் பத்திச் சொல்ற அளவு எனக்குத் தகுதி ஏதும் இல்லை.

Geetha Sambasivam said...

ஒருவழியா உங்க லிங்க்கும் கிடைச்சது, இந்தப் பதிவுக்கு மட்டும் தான். வேறே எழுதி இருக்கீங்களே அதுக்கு இன்னும் வர முடியலை, பார்க்கிறேன்.

தி. ரா. ச.(T.R.C.) said...

@கீதமேடம் தகுதியே இல்லாத நான் விமர்சனம் பண்ணும் போது நீங்க தைர்யமாகச் சொல்லலாம். பாக்கி பதிவையும் பார்த்து எழுதுங்கள். முயற்சி உடையார் இகழ்ச்சி அடையார்