Tuesday, October 16, 2007

கொலுவுக்கு வாருங்கள்(5)

இன்று ஐந்தாவது நாள் பண்டிகை. இன்றும் மஹாலக்ஷ்மியின் தினம்தான்
வருடத்தில் நான்கு முறை கொண்டாடப்படும் நவராத்ரியில் புரட்டாசி மாத நவராத்ரியை "கொலு" வைத்துக் கொண்டாடுகிறோம். ப்ரம்மா, விஷ்ணு, சிவபெருமானின் சக்தி ஒன்றாக இணைந்து அக்னி பிழம்பாக அதிலிருந்து தேவி வெளிவந்து, பிரம்மா, விஷ்ணு, சிவன், இந்திரன், எமதர்மராஜன் முதல் அனைத்து தேவர்களும் தெய்வங்களும் தங்கள் ஆயுதங்களையும் அவருக்கு அளித்து சக்தி அனைத்தையும் துறந்து பொம்மைகளாக மாறி நின்றனர். அதனால் அம்பாளைத் தவிர மற்ற தெய்வங்களை பொம்மைகளாக 'கொலு' என்று புரட்டாசி அமாவாசையன்று , நல்ல சுப நேரத்தில் வைப்பதாக ஐதீகம்.
ஆம் ...இந்த ல்ட்சுமி என்பவள் யார்?தேவர்களுக்கும் அசுரர்களுக்கும் அடிக்கடி யுத்தம் நடந்துக்கொண்டே இருந்தது அதில் இருவருக்கும் பெருத்த அளவில் செல்வங்களை இழந்து பெரும் நஷ்டம் ஏற்பட்டன. அப்போது நாரதர் மூலமாகஒரு வழி கண்டுப் பிடித்தனர்,அதாவது தேவர்களும் அசுரர்களும் மந்தாகினி மலையை மத்தாக்கி வாசுகியை கயிராக்கி பாற்கடலைக் கடைந்தனர்.அப்படிக் கடையும் போது ஜகஜ்ஜோதியாய் தோன்றினாள் அவள்....மஹாலட்சுமி.அவளுடன் சந்திரனும் பின் அமிருதமும் தோன்றின்.தேவர்கள் பூஜித்தார்கள்.அவள் அங்கு இருந்த மஹாவிஷ்ணுவை மண்ந்தாள். பின்பு தேவர்களுக்கு செல்வம் பெருகியது.

அம்பாள் அனேக அம்சங்களை உடையவள். யார் யார் எப்படி
விரும்புகிறார்களோ அம்முறையில் அம்சங்களை ஏற்று அவள் காட்சி தருகிறாள். எங்கும் நிறைபொருளாகக் காணப்படும்போது அவள் பூரணி என்று அழைக்கப்படுகிறாள். சக்தி நிறைந்தவளாய், சர்வ வல்லமை பொருந்தியவளாய் போற்றப்படும்போது பராசக்தி என்றும், ராஜராஜேஸ்வரி என்றும், மூலப்பிரகிருதி என்றும் பெயரிடப்படுகிறாள். முத்தொழிலைச் செய்யுமிடத்து பிரம்மாணி, வைஷ்ணவி, ராத்ராணி என்று அவள் பெயர் படைக்கிறாள். சகுணப் பிரம்மம் அல்லது ஈசுவரனுக்கு ஒப்பாகும் போது துர்கை எனப்படுகிறாள். கால சொரூபிணியாகத் தோன்றுமிடத்துக் காளியாகிறாள். வித்தையின் வடிவமாகும்போது ஸரஸ்வதி என்றும், தனதான்ய வடிவெடுக்கும்போது லக்ஷ்மி என்றும் அழைக்கப்படுகிறாள். ஞாலத்தை ஆதரிக்கும் மகாதேவி, ஜகதாத்ரியாகவும், பவதாரிணியாகவும் போற்றப்படுகிறாள்.

பாரதியார் அவர்கள் வர்ணிக்கிறார், பொன்னிலும் மணிகளிலும் - நறும் பூவிலும் சாந்திலும் விள்க்கினிலும் கன்னியர் நகைப்பினிலும் செழுங் காட்டிலும் பொழிலிலும் கழனியிலும் முன்னிய துணிவினிலும் -மன்னர் முகத்திலும் வாழ்ந்திடும் திருமகளைப் பண்ணிநற் புகழ் பாடி - அவ்ள் பதமலர் வாழ்த்திநற் பதம்பெறுவோம்
பின்னர் ஒரு பாடலில் அவர் கூறுகிறார் செல்வமெட்டுமெய்தி நின்னாற் செம்மை ஏறி வாழ்வேன் இல்லை என்ற கொடுமை- உலகில் இல்லையாக வைப்பேன் ..........மலரின் மீதுதிருவே உன் மேல்மையல் பொங்கி நின்றேன்"
வையமெல்லாம் ஆதரிக்கும் அந்த ஸ்ரீதேவியைப் போற்றுவோம் சிரதையுடன் பக்தியுடன் மஹாலக்ஷ்மி அஷ்டகத்தை கேட்டு வழிபடுவொம்.


ஸ்ரீமஹாலக்ஷ்மி அஷ்டகம்ஸ்ரீ இந்திர உவாச

நமஸ்தேஸ்து மஹாமாயேஸ்ரீ பீடே ஸுரபூஜிதே

சங்கு சக்ர கதாஹஸ்தேமஹாலக்ஷ்மி நமோஸ்துதே

நமஸ்தே கரூடாருடேகோலாஸு பயங்கரி

ஸர்வ பாப ஹரேதேவிமஹாலக்ஷ்மி நமோஸ்துதே

ஸர்வஜ்ஞே ஸர்வவரதேஸர்வதுஷ்ட பயங்கரி

ஸர்வ துஃக்கஹரே தேவிமஹாலக்ஷ்மி நமோஸ்துதே

ஸித்தி புத்திப்ரதே தேவிபுக்தி முக்தி ப்ரதாயினி

மந்த்ரமூர்த்தே ஸதாதேவிமஹாலக்ஷ்மி நமோஸ்துதே

ஆத்யந்தர ஹிதே தேவிஆதிசக்தி மஹேச்வரி

யோகக்ஞே யோஸகம்பூதேமஹாலக்ஷ்மி நமோஸ்துதே

ஸ்தூல ஸூக்ஷ்ம மஹாரௌதரேமஹாசக்தி மஹோதரே

மஹா பாபஹரே தேவிமஹாலக்ஷ்மி நமோஸ்துதே

பத்மாஸன ஸ்திதே தேவிபரப்ரஹ்ம ஸ்வரூபினி

பரமேசி ஜகந்மாதாமஹாலக்ஷ்மி நமோஸ்துதே

ச்வேதாம்பரதரே தேவிநானாலங்கார பூஷிதே

ஜகஸ்திதே ஜகந்மாதமஹாலக்ஷ்மி நமோஸ்துதே

மஹாலக்ஷ்மியஷ்டகம் ஸ்தோத்திரம்ய படேத் பக்திமான்நர

ஸர்வஸித்தி மவாப்னோதி ஸர்வதா

ஏக காலம் படேந் நித்யம்மஹாபாப விநாசனம்

த்விகாலம் ய படேந் நித்யம்தனதான்ய ஸமந்வித

த்ரிகாலம் ய படேந் நித்யம்மஹாசத்ரு விநாசனம்

மஹாலக்ஷ்மீர் பவேந் நித்யம்ப்ரஸன்னா வரதா சுபாஸ்ரீமஹாலக்ஷ்மியஷ்டகம் ஸம்பூர்ணம்


மறுபதிவு பாடல்தான் ஆனால் மனத்தை மருகச்செய்யும் பாடல்
திரு. பாபநாசம் சிவன் அவர்கள் அன்னை மஹாலக்ஷ்மியின் மீது இரண்டு பாடல்கள் பாடியுள்ளார். இரண்டுமே மிகவும் பிரசித்தி பெற்றது.

முதல் பாடல்
ராகம்:- அடாணா தாளம்:- ஆதி

பல்லவி

நீ இரங்காயெனில் புகலேது---அம்பா

நிகில ஜகன் நாதன் மார்பில் உறை--திரு.........(நீ இரங்காயெனில்)

அனுபல்லவி

தாயிரங்காவிடில் சேய் உயிர் வாழுமோ?

சகல உலகிற்கும் தாயல்லவோ----அம்பா.....(நீ இரங்காயெனில்)

சரணம்

பாற்கடலில் உதித்த திருமணியே--சௌ

பாக்யலக்ஷ்மி என்னைக் கடைக்கணியே

நாற்கவியும் பொழியும் புலவோர்க்கும்--மெய்

ஞானியர்க்கும் உயர் வானவர்க்கும்.....அம்பா........(நீ இரங்காயெனில்)

சிவன் அவ்ர்கள் இந்த அடாணா ராகத்தை கையாண்டவிதமே அலாதி.அடாணா ராகம் மிகவும் கம்பீரமான ராகம். அதிகாரம் த்வனிக்கும் பாடல்களுக்கு ஏற்ற ராகம். கோபலகிருஷ்ண பாரதியார் மிகவும் அதிகாரமாக" கனக சபாபதிக்கு நமஸ்காரம் பண்ணடி பெண்ணே"என்று ஆர்டரே போடுவார்(சீர்காழி.கோவிந்தராஜன் அருமையாகப் பாடி இருக்கிறார்). இது ஒரு ராஜ ராகம்.ஆனால் சிவன் அவர்கள் தெலுங்கு தியாகைய்யாவை பின் பற்றி இந்த ராகத்தில் தயாரசத்தையும் காருண்ய ரசத்தையும் கொண்டு வருகிறார். தியகராஜஸ்வாமிகள் தனக்கு ராமரின் தரிசனம் கிடைத்தபின் மறுபடியும் அதேபோல் கிடைக்க வேண்டும் என்று மிகவும் கெஞ்சலுடன் படுகிறார்"ஏலா நீ தயராது பரா குசேலா......' அண்ணல் ராமச்சந்திர மூர்த்தியே என்னிடம் ஏன் தயை காட்ட மாட்டேன் என்கிறாய் நான் ஏழை என்பதாலா.... என்று அதனுடையதாக்கத்தாலோ என்னவோ நம்தமிழ்தியாகைய்யாவானசிவனும் அதே அடாணாவில்"நீ இரங்காயெனில் புகலேது" என்கிறார். அடாணாவின் ஜீவஸ்வரமான 'நீ"யை உயர்த்தி வைத்து அரோஹணமாக மேல்ஸ்தாயியில் ஆரம்பித்து மஹாலக்ஷ்மியை மற்ற தெய்வங்களுக்கும் மேலாக உயர்த்திவிடுகிறார். நீயே இரங்கவிட்டால் வேறு யார் இரங்குவார்கள்?அவள்எங்குஇருக்கிறாள்என்று சந்தேகமறமேல் உலகத்திற்கும்பூலோகத்திற்கும் நாயகனானதிருமாலினின் மார்பில் சதா வசம் செய்பவள் என்று "ஹரிவத்ஸசலஸ்திதாம்" என்று முன்பு லலிதா ராகப் பாடலில் தீக்ஷ்தர் சொன்னாரே அதே மதிரி சொல்கிறார்சரி இரக்கம் யாரிடம் அதிகம் இருக்கும். சந்தேகமே இல்லாமல் தாயிடம்தான்.அம்மாதான் தன் குழந்தைகளிடம் அதிக இரக்கம் காட்டுவாள். அதனால்தானே சொன்னார் "தடித்த ஒர் மகனைத் தந்தை ஈண்டு அடித்தால் தாய் அணைப்பாள்'என்று.

அதனால்தானோ என்னவோ தாயிரங்காவிடில் குழந்தை உயிர் வாழமுடியுமா என்ற கேள்வியும் கேட்டுவிட்டு சகல உயிர்களுக்கும் நீ தான் தாய் என்று ஐஸும் வைத்துவிடுகிறார். பாற்கடலில் இருந்து பிறந்த தாயே என்னை உன் முழுக்கண்ணாலும் கூட பார்க்கவேண்டாம், கடைக்கண் வைத்தென்னை ஆதரி என்று ஆதி சங்கரர் கனகதாரஸ்தவ்த்தில் சொன்னாரே அதுபோல் இறைஞ்சுகிறார்.சரஸ்வதி காடக்ஷ்த்தால் நான்குவிதமான கவிகளைமழைபோல வர்ஷிக்ககூடிய வல்லமைபடைத்தபுலவர்களுக்கும். ஸ்ரீவித்யாவான பராசக்தியை உபாசனை செய்யும் மெய் ஞானியர்களான முனிவர்களுக்கும்,எல்லா சக்திகளையும் பெற்ற வானவர்களுக்கு கூட அம்மா லக்ஷ்மிதேவியான நீ இரங்கா விட்டால் வேறு புகலிடம் கிடையாது என்று கூறுவது போல் இருக்கிறது இந்தப் பாடல்

சரி இனி பாடலை கேட்கலாமா. யார் பாடியிருக்கிறார்கள். வேறு யார் இந்த பட்டுக்கு உயிர் கொடுத்து சிவனை பட்டி தொட்டிகளில் எல்லாம் புகழ் பெறச்செய்த எம் ஸ் அம்மாவின் குரலில் இங்கேகேட்கவும்

திரு. மஹாராஜபுரம் சந்தானத்தின் குரலில்<"இங்கே கேட்கவும்"> ">

மற்றொரு பாடல் நாளை பார்ப்போமா

இன்றைய முக்கிய நிகழ்ச்சி சுண்டல் பிரசாதம்.பயத்தம் பருப்பு சுண்டல்.2 comments:

கீதா சாம்பசிவம் said...

ரொம்பவே ஓரவஞ்சனை உங்களுக்கு! :P அம்பிக்கு மட்டும் புட்டா? க்ர்ர்ர்ர்ர்ர்., இன்னிக்குச் சுண்டல் கூடவா இல்லை? அது சரி, உங்க தங்கமணி கூட எஸ்கேஎம் வீட்டுக்குப் போனப்போ அவங்க சொல்லிக் கொடுத்தாங்களோ, சுண்டல் கொடுக்க வேணாம்னு! :P

குமரன் (Kumaran) said...

நீ இரங்காய் எனில் புகலேது - நான் மிக விரும்பி அடிக்கடி கேட்கும் பாடல் திராச.

உங்கள் நவராத்திரி இடுகைகளை ஒவ்வொன்றாக இப்போது தான் படித்துக் கொண்டு வருகிறேன்.