Wednesday, October 17, 2007

கொலுவுக்கு வாருங்கள் ( 6 )


இன்று ஆறாவது நாள் லக்ஷ்மிக்கு உரிய நாள்.


ஆறாம் நாளன்று மஹாலக்ஷ்மி இந்திராணியாகத் தோன்றுவதால் அன்று செம்பருத்திப் பூக்களால் அம்பாளை அலங்காரம் செய்து, நீலாம்பரி ராகம் பாடி, தேங்காய் சாதம் படைத்து வழிபட மனக் கவலைகள் எல்லாம் நீங்கும், விரோதங்கள் அகலும், வெற்றிகள் பல கிட்டும். நீலாம்பரி ராகம்மனதை சாந்தப்படுத்தும் ராகம்.அதில் மீனாக்ஷி அம்பாள் பேரில் உள்ள இந்தப்பாடலைக் கேளுங்கள்.
<"நித்யஸ்ரீயின் நீலாம்பரி"> ">



ஸ்ரீரங்கத்திலே போனால் பார்க்கலாம். ரங்கநாதரை சேவிக்க வேண்டுமானால் ஏகப்பட்ட தூரம் உள்ளே போகவேண்டும். தாயாரை சேவிக்க வேண்டுமானால் ஒரு க்ஷணத்திலே சேவித்து விட்டு வந்து விடலாம் - பக்கத்திலேயே இருக்கிறாள் அல்லவா ! மஹாலக்ஷ்மி உடனே கிடைக்கிறாள் நமக்கு! திருவேங்கடமுடையான் சந்நதிக்குத் தான் போங்களேன்... தாயரை சீக்கிரமாக பார்த்துவிடலாம். அவன் சேவை சுலபமாக சுலபமாக கிடைக்குமா! தாயாருக்கு எவ்வளவு காருண்யம் நம்மீது. நாம் சுலபமாகச் சேவிக்கும்படியாக ரொம்பக்கிட்டே நெருங்கி நிற்கிறாள். அவனை எப்போதும் அணுகியே இருக்கிறாள்
மஹாலக்ஷ்மியின் அருள் இருந்தால் போதுமே வேறு என்ன வேண்டும் நமக்கு.திரு. சிவன் அவர்கள் தனது சங்கராபரண ராகத்தில் அமைந்த "மஹாலக்ஷிமி ஜகன்மாதா" என்ற பாடலில் உள்ளம் உருகி அழைக்கிறார். பாடலைப் பார்ப்போமா

ராகம்:-சங்கராபரணம் தாளம்:- மிஸ்ர சாபு

பல்லவி

மஹாலக்ஷ்மி ஜகன்மாதா
மனமிரங்கி வரமருள்...............(மஹாலக்ஷ்மி)


அனுபல்லவி

மஹாவிஷ்ணுவின் மார்பெனும்
மணிபீடமதனில் அமர்ந்திடும்
மன்மதனை ஈன்றருளும் தாயே
தயாநிதியே மஹா மாயே........(மஹாலக்ஷ்மி)


சரணம்

பாற்கடல் தரும் கிருபாகரி
பரிந்துவந்தென்னை ஆதரி
பங்கஜ மலர் வளர் அன்னையே-- கடைக்கண்
பார் ராமதாஸன் பணியும்......(மஹாலக்ஷ்மி)


இந்தப் பாடலை மிக இளம் வயதிலேயே இசை உலகை தன் குரலினால் கவர்ந்த அதே மாதிரி இளம் வயதிலேயே மறைந்த திருமதி.வஸந்தகோகிலத்தின் குரலில் <"இங்கே கேட்கவும்">">

கீழே பாருங்கள் உங்களுக்காக மஹால்க்ஷ்மி தன் இருகைகளாலும் தங்கக் காசுகளை தாரளமாக அள்ளித்தருகிறாள் அள்ளிக்கொண்டுபோங்கள்.

இன்று வேர்க்கடலை சுண்டல்.

10 comments:

Sumathi. said...

ஹலோ சார்,

ஆஹா, பாரபட்சமே இல்லாமல் எல்லாருக்கும் தங்க காசுகளை குடுத்த(ஏற்பாடு செய்த) நீங்கள் வாழ்க...

அம்பி இது ரொம்ப அந்நியாயம், கீதா மேடம் சொன்ன மாதிரி இந்த 10 நாளும் கிப்டு எல்லாம் எங்களுக்கு மட்டும் தான், சுண்டல் மட்டும் தான் உங்களுக்கு ஞாபகம் இருக்கட்டும்.

அதோட இன்னிக்கு வேர்கடலை சுண்டல் எனக்கு பிடிச்சது. ஓ.கே. என் பங்கு நான் எடுத்துகிட்டேன். நன்றி.

தி. ரா. ச.(T.R.C.) said...

@வேதா காசைவெச்சு என்ன பன்னப்போறே.நகையெல்லாம் செய்யமுடியாது.நெஜ சுண்டல் பார்சல் அனுப்பு

பாரதிய நவீன இளவரசன் said...

Thanks for your invitation; and thanks a lot for the sundal.. :)

cheers

தி. ரா. ச.(T.R.C.) said...

மின்னலுக்கு நிஜமாகவே பரிசு உண்டு..நீங்க ஒருத்தர் தான் தினமும் வரீங்க!!
இதுக்கு பதில் எங்கேயிருந்து வரும் சொல்லுங்கள்?

தி. ரா. ச.(T.R.C.) said...

Thank you very much prince for our Royal visit

ambi said...

அருமையான ராகம். ஜென்டில்மேன் படத்தில் வரும் என் வீட்டு தோட்டத்தில் பூவெல்லாம் கேட்டு பார்! நீலாம்பரியா? சந்தேகத்தை தீர்த்து வையுங்கள் ப்ளீஸ். :)

//இதுக்கு பதில் எங்கேயிருந்து வரும் சொல்லுங்கள்?
//
கண்டிப்பா இதுக்கு பதில் என் கிட்ட இருந்து தான் வரும். :p

Geetha Sambasivam said...

வேர்க்கடலைச் சுண்டலுக்குக் கூட ஆளே இல்லையா? எங்க வீட்டிலே எனக்கு சாம்பிளுக்குக் கூடக் கிடைக்கலை. :P

dubukudisciple said...

kolu post ellam kalakareengale....seri nallatha pattani sundal enaku parcel pannunga

தி. ரா. ச.(T.R.C.) said...

அம்பி அது யடுகுலகாம்போதின்னு நினைக்கிறேன்.

தி. ரா. ச.(T.R.C.) said...

DD அக்கா பட்டாணி சுண்டலா உங்களுக்கா.. சரி எதுக்கும் ரங்கமணிக்கு சொல்லிடறேன். அப்பறம் அடுத்தவீட்டுகும் கேட்பீங்களா