Friday, October 19, 2007

கொலுவுக்கு வாருங்கள் (8)

இன்று எட்டாவது நாள். அன்னையை நரசிம்ஹி ஆக வழிபடவேண்டும். மனித உடலும், சிம்ம தலையும் உடையவள். கூரிய நகங்களுடன் சங்கு, சக்கர தாரிணியாக சிம்ம வாகனத்தில் காட்சி தருபவள். சத்ருக்கள் தொல்லையில் இருந்து விடுபட அன்னையின் அருள்வேண்டும்.நைவேத்தியம் :- சர்க்கரைப் பொங்கல்

ஆய கலைக ளறுபத்து நான்கினையும்
ஏய வுணர்விக்கு மென்னம்மை
தூய வுருப்பளிங்கு போல்வாளென் னுள்ளத்தி
னுள்ளே யிருப்பளிங்கு வாரா திடர்.
படிக நிறமும் பவளச்செவ் வாயும்
கடிகமழ்பூந் தாமரைபோற் கையுந்
துடியிடையும் அல்லும் பகலும் அனவரத
முந்துதித்தால் கல்லுஞ்சொல் லாதோ கவி.

மண்கண்ட வெண்குடைக் கீழாக மேற்பட்ட மன்னருமென்
பண்கண் டளவிற் பணியச்செய் வாய்படைப் போன்முதலாம்
விண்கண்ட தெய்வம்பல் கோடியுண்டேனும் விளம்பிலுன்போற்
கண்கண்ட தெய்வ முளதோ சகல கலாவல்லியே!
..
எங்கெங்கு இருப்பார் சரஸ்வதி?கல்விக்கும் அறிவிற்கும் அதிபதியான கடவுள் சரஸ்வதி தேவியார் எங்கெங்கு இருப்பார்?யாரும் தேடி அலைய வேண்டாமென்று பாரதியார், சரஸ்வதி தேவியார் இருக்கும் இடங்களைப் பற்றிச் சிறப்பாக எழுதிவைத்து விட்டுப் போயிருக்கின்றார்.

வெள்ளைத் தாமரைப் பூவிலிருப்பாள்வீணை செய்யும் ஒலியிலிருப்பாள்
கொள்ளை இன்பம் குலவுகவிதைகூறுபாவலர் உள்ளத் திருப்பாள்
உள்ளதாம் பொருள்தேடி உணர்ந்தேஓதும்வேதத்தின் உள்னின்று ஒளிர்வாள்
கள்ளம் அற்ற முனிவர்கள் கூறும்கருணை வாசகத்து உள்பொருள் ஆவாள்

தாயே என் சரஸ்வதி - கலைஞானம் அருள்வாயே…(தாயே…)

மாயே என் கலைவாணி - சேய்என்பால் கனிவாய்…(தாயே…)
தாயே என் குறை தீர - நாவில்நீ அமர வேண்டும்
நாவால்உன் புகழ் பாடி - பாமாலைசூட்ட வேண்டும்…(தாயே…)
ஆகமங்கள் கூறுகின்ற ஆத்மசுகம் நான் பெறவே…
இராக தாள சந்தி சேர்த்துதூய கானம் பாடிடவே…
யேக நாத ரூபிணி…நாசிகாபூஷிணி…தாகம் தீர்ப்பாய்
கலைமகளேவரம் யாவும் தருவாயே…(தாயே…)
இன்றைய பாடல்
ராகம்;- ஸரஸ்வதி தாளம்;- ஆதி
பல்லவி
சரஸ்வதி தயைநிதி நீ கதி தண்ணருள் தந்தருள்வாய் பாரதி
அனுபல்லவி

கரமலர்மிளிர் மணிமாலையும் வீணையும்
கருணை பொழியும் கடைக்கண் அழகும் வளர் (ஸ்ரஸ்வதி)
சரணம்
நின்னருள் ஒளி இல்லையால் என் மனஇருள் நீங்குமோ சகல கலைமாதே
வெள்அன்னவாஹினி வெண்கமலமலர் வளரும் வாணி வெள்ளைகலைஅணி புராணி (ஸரஸ்வதி)
இது கொள்ளுச் சுண்டல். வாய், கை பை, கொள்ளும் அளவுக்குஎடுத்துக்கோங்க5 comments:

Sumathi. said...

ஹலோ சார்,

ஆஹா, கொலுவும் பாட்டும் சூப்பர்,
அம்பிக்கு என்னோட பங்கு சுண்டலைக்
குடுத்துடுங்க..

தி. ரா. ச.(T.R.C.) said...

சுமதி ஆனாலும் உனக்கு கொழுப்பு ஜாஸ்தி. அம்பிக்கு மொத்த சுண்டலும் கொடுன்னா என்ன அர்த்த.குதிரைக்கு கொள்ளு கொடுன்னுதானே

கீதா சாம்பசிவம் said...

ஹிஹிஹி, அம்பிக்கே கொடுத்துடுங்க, எல்லாச் சுண்டலும், நான் நாளைக்கு வந்து எடுத்துக்கறேன். :P

தி. ரா. ச.(T.R.C.) said...

நீங்கதான் தினமும் வாரறிங்க சாரி வரீங்க அம்பியா வரான் .சுடுங்க

மதுரையம்பதி said...

பாட்டு-பைட்டு சூப்பர் அப்படின்னு சொல்லற மாதிரி, பாட்டு மற்றும் படம் அருமை.