Friday, October 12, 2007

கொலுவுக்கு வாருங்கள்

நவராத்திரியின் முதல்நாள் இன்று. கொலு வைத்தாகி விட்டது.நம்ப மக்கள் எல்லோரும் வந்து கொலுவைப் பார்த்து அன்னையின் அருள் பெற்றுச் செல்லுங்கள்.
கொலுவில்முதல் மூன்று நாட்கள் துர்கா மாதாவை கொண்டாட வேண்டும்.

அடுத்த மூன்று நாட்கள் மஹாலக்ஷ்மியைக் கொண்டாடவேண்டும்.

கடைசி மூன்று நாட்கள் ஸரஸ்வதியைக் கொண்டாடவேண்டும்.

நவராத்திரி என்றாலே பொட்டியில் இருக்கும் பட்டு புடைவைகள் வெளியே வந்து விடும்.அம்பிக்கு கொண்டாடம்தான் தினம் ஒரு சுண்டல்,அல்வா, கேசரி இத்யாதி.இது முழுக்க முழுக்க பெண்கள் பண்டிகை ஆனாலும் ஆண்களுக்கு வேலையும் கார் டிரைவர் பொறுப்பும் உண்டு.

நவராத்திரி என்றால் சங்கீதம் இல்லாமலா? இந்த கொலுவுக்கு பாட யாரும் முன்வரமாட்டார்கள் என்று நானே பாடலையும் போட்டு விடுகிறேன்.
பாடல் பாபநாசம் சிவனுடையது.ராகம்:-கரஹரப்பிரியா தாளம்: ஆதி
பல்லவி
என்ன செய்தாலும் எந்தன் துணைநீயேஎன்அன்னையே உமையே என்னை நீ (என்ன செய்தாலும்)
அனு பல்லவி
சின்ன வயது முதல் உன்னையே நம்பினேன்
சினந்து என்னை அடித்தாலும் பரிந்து என்னை அணைத்தாலும்....(என்ன)
சரணம்
முன்வினையால் இன்ப துன்பங்கள் விளைந்திடமூடமதி கொண்டுன்னை நோவது என் பேதமைஎன் விதியால் இடராயிரம் சூழினும்எல்லாம் உன் திருவிளையாடல் என்று எண்ணி இனி...(என்ன செய்தாலும்)
பாட்டைக் கேட்டவர்கள் மட்டும் சுண்டலை எடுத்துக்கொள்ளவும்

11 comments:

ஜீவா (Jeeva Venkataraman) said...

வந்து விட்டேன்!
எல்லாப்படிகளும் படத்துக்குள்ளேயே பிடிபடவில்லை - அவ்வளவு பெரிய கொலு போலும்!

எங்கள் வீட்டிலேயும் - ஏழைக்கேத்த எள்ளுருண்டையென - சிறிதாக வைத்திருக்கிறோம் ஐயா!

சிவனின் பாடலும் Simply Super!

தி. ரா. ச.(T.R.C.) said...

ஜீவா இதுசுட்ட கொலு.. சுடாதகொலு அப்பறம் வரும்.

துளசி கோபால் said...

ஓஓஓஓஓ...... சுட்ட கொலுவா?

முதல்லெ படத்தைப் பார்த்து வாயடைச்சு நின்னுட்டேன்.

இப்ப சுண்டலை எடுத்துக்கிட்டேன், பாட்டைக் கேட்டுட்டுத்தான்.

சுண்டலும் ரொம்ப 'சூடு':-))))

வேதா said...

சுண்டலுக்கு ரொம்ப நன்றி :)

தி. ரா. ச.(T.R.C.) said...

என்ன வேதா இப்படி பண்ணீட்டிங்க.தலைவி வருவதற்குள் சுண்டல் காலி செய்யலாமா? தப்பு தப்பு
எடுத்தசுண்ட்டலைதிருப்பி வெச்சுடுங்க
கொலுவுக்க்கு வந்ததற்கு நன்றி

தி. ரா. ச.(T.R.C.) said...

வாங்க டீச்சர்.நீங்க சொன்னாசரியாத்தான் இருக்கும்
கொலுவை "சூடு"ன்னத்துக்கு நன்றி

Sumathi. said...

ஹலோ சார்,

ஹைய்யா, உங்க வீட்டு கொலு சுட்டதாயிருந்தாலும் ரொம்பவே அழகாயிருக்கு.

ஆனா இந்த சுண்டல் சாப்டு போர் அடிச்சு போச்சு, அதனால எனக்கு புட்டு ஒரு பார்சல் சார், ஹி ஹி ஹி....

சீக்கிரம் சுடாத கொலு ப்ளீஸ்.

தி. ரா. ச.(T.R.C.) said...

வாம்மா மின்னல். புட்டுதானே நாளைக்கு நிச்சியம் உண்டு.ஆனா ஒரு பாட்டு பாடவேண்டும்

செல்லி said...

இது உங்க வீட்டு கொலுவா?தங்கமணி அம்மாவின் கைவண்ணந்தானா?
சும்மா சொல்லக்கூடாது, அழகா இருக்கு.

சார், பாட்டைக் கேட்டுட்டேன் சுண்டல் ஒரு கைப் பிடி எடுக்கட்டா?
நீண்ட நாளுக்கப்பறம் உங்க வீட்டுக்கு வந்திருக்கேன்.நன்றி:-)

தி. ரா. ச.(T.R.C.) said...

@செல்லி.ஓராயிரம் வருடம் ஓய்ந்துகிடந்த பின்னார் வாராது வந்தவரா??
நவராத்ரிக்கு தீனமும்ம் பதிவும் சுண்டலும் உண்டு வாருங்கள்

இலவசக்கொத்தனார் said...

சுண்டல் சூப்பர். கொஞ்சம் சூடா இருக்கும் போதே வரச் சொல்லிக் கூப்பிட்டு இருக்கலாம்! :))