Monday, June 09, 2008

என்னப் பிறப்பிதுவோ இராமா?

என்னப் பிறப்பிதுவோ இராமா?என்னப் பிறப்பிதுவோ?எப்போதும் உன்னை அணுகிப்பேசிட இயலாதஎன்ன பிறப்பிதுவோ, என் இராமா

இது மஹான் தியாகராஜர் பாடியது. நண்பர் ஜீவா மிக அருமையாக பாடலை விளக்கி பதிவு போட்டு இருக்கிறார்.இன்று அதை மறுபடியும் படித்தபோது எழுந்த எண்ணங்கள்.
என்ன நான் தர இயலும்-- இறைவா
என்னுள் இருந்து எனக்கு-- இன்னருள் செய்யும் உனக்கு
மூச்சினிற் பிராணன் ஆனாய்--முதலும் முடிவுமானாய்
பேச்சும் திறனும் ஆனாய்--பேராற்றல் அறிவுமானாய்
ஆக்கம் தரும் பொருள்கள் அனைத்துமே நீ ஆனாய்
அன்னை தந்தை குரு தெய்வமும் நீ ஆனாய்
விண்ணும் மண்ணூமானாய் விரிந்த பிரபஞ்சம் ஆனாய்
நீர், காற்று, நெருப்புமானாய் நிறைந்துள்ள சக்தி நீ ஆனாய்
எல்லாம் நீயாயிருக்க எனதென்று எதைக் கொள்வேன்
வல்ல நின் பதமல்ர்கள் வாழ்த்தியே பணிகின்றேன்


இதுவும் நான் சமீபத்தில் படித்த கவிதை. இதெல்லாம் எதற்கு பில்டப்புன்னு கேக்கிறங்களா?ஒன்றுமில்லை ஒரு புத்தகம் படித்துக்கொண்டு இருக்கிறேன். நல்ல உணர்ச்சிகரமாகவும் திருப்பங்களுடன் செல்லுகிறது. ஆனால் கடைசி பக்கத்தைத்தான் எவ்வளவு தேடியும் கண்டு பிடிக்கமுடியைல்லை.இதுவரை 62 பக்கங்கள் படித்து முடித்துவிட்டேன்.என்ன புத்தகம் என்று கேட்கிறீர்களா? வேறு ஒன்றுமில்லை அது என் வாழ்க்கைப் புத்தகம்தான் அது. ஆம் இன்றோடு 62 ஆண்டுகள் வாழ்க்கைப் பயணத்தில் கடந்துவிட்டேன். மற்றொரு மகிழ்ச்சியான செய்தி நண்பர்களே மகளுக்குத் திருமணம் நிச்சியமாகி விட்டது. அக்டோபர் 31 ஆம் தேதியை இப்பொழுதே குறித்துவைத்துக்கொள்ளுங்கள்.

அதுசரி இப்படி என்னை நலமாக வைத்திருக்கும் ராமா உனக்கு நான் என்ன கைமாறு செய்ய முடியும். உனக்கு சந்தனம் பூசமுடியுமா,பன்னீர் தெளிக்க முடியுமா, கஸ்தூரி திலகம்தான் வைக்கத்தான் முடியுமா பட்டாடைகள் சாத்த இயலுமா , சொர்ணாபரணங்கள் பூட்ட முடியுமா , அதெல்லாம் முடியாது இந்த ஏழை தியகராஜனால் என்னால் முடிந்தது மனமொன்றி பூஜை செய்யத்தான் முடியும் அதை ஏற்றுக்கொள் ராமா என்று இறஞ்சும் தியகராஜரின் பாடல்தான் எனக்கு பொருத்தமக உள்ளது.
இந்தப் பாட்டைக் பார்த்து கேட்டு ரசியுங்கள். இதில் வினோதம் என்னவென்றல் பாட்டை பாடுபவர் சாதரணமானவர் இல்லை திருவனந்தபுரம் மஹாராஜவின் வழித்தோன்றல்


-

இதே பாடல் வெள்ளித்திரையில் பாடியவர்கள் திரு. ஸ்.பி பாலுவும் திருமதி. சுசீலாவும்.பாட்டின் மெருகு குறையாமல் இசை அமைப்பு.

19 comments:

kannabiran, RAVI SHANKAR (KRS) said...

இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் திராச!

அடியேன் சிறியேன்! வயதில்லை என்றாலும் மனதுண்டே வாழ்த்த!

பல்லாண்டு பல்லாண்டு பல்லாயிரத்தாண்டு பல பதிவு நூறாயிரம்!
செஞ்சொற் சொல்லாண்டு, சோர்வில்லாண்டு
நல்லாண்டு நாளும் இரும்! :-)

kannabiran, RAVI SHANKAR (KRS) said...

உங்கள் மகளுக்கும் என் இனிய திருமண வாழ்த்துக்கள்! தீபாவளியை ஒட்டிக் கல்யாணமா? சூப்பர்!

kannabiran, RAVI SHANKAR (KRS) said...

இளவரசர் ராம வர்மா தானே அவரு?
ஸ்வாதித் திருநாள் வழி வந்தவர்!

அருமையான பாடல் திராச! கந்தமு புய்யரகா, பன்னீரு கந்தமு புய்யரகா! சுசீலாம்மா கலக்குறாங்க!
பிறந்த நாளுக்கு பன்னீர் தெளிச்ச எஃபெகட்டு! :-)

இப்ப தான் உங்க மணிவிழா வந்து போனா மாதிரி இருக்கு! Time Flies! :-)

கீதா சாம்பசிவம் said...

மனமார்ந்த பிறந்த நாள் வாழ்த்துகள், தாமதாமாயும், என் பணிவான நமஸ்காரங்களும் சார். நேத்து ஆனால் நினைச்சேன், தேதி சரியாத் தெரியலையேனு, அப்புறம் பெண்ணுக்கு நிச்சயம் என்பதால் பிசியா இருப்பீங்கனு கூப்பிடலை. பெண்ணுக்கும் இனிய மணவாழ்வுக்கு வாழ்த்துகள்.

Sumathi. said...

ஹலோ சார்,

ஆஹா, எவ்ளோ நல்ல ந்யூஸ்.அப்படியே ஒரு 100 அடிக்க என்னோட வாழ்த்துக்கள்.(வாழ்த்த வயது வேண்டாம், நல்ல மனது இருந்தால் போதும் என்பது என்னோட கருத்து) அதனால் வாழ்த்துகிறேன்.

குமரன் (Kumaran) said...

பிறந்த நாள் வாழ்த்துகள் தி.ரா.ச.

வணக்கங்களும். ஆசிகளைத் தாருங்கள்.

தி. ரா. ச.(T.R.C.) said...

@கேஆர்ஸ் நன்றி. ஆமாம் தீபாவளிப் பிறகு 4 நாள் கழித்துதான். சுசீலாமட்டும்தானா பாலுவும் பிச்சு எடுத்துட்டாரே.

தி. ரா. ச.(T.R.C.) said...

வரனும் கீதா மேடம். தமதமானலும் பரவாயில்லை வழத்தூக்கு நன்றி. நல்லவேளை அம்பிக்கு அனுப்பினாமதிரி 2 நளைக்கு முன்னாலேயே அனுப்பமால் இருந்தீர்களே.

தி. ரா. ச.(T.R.C.) said...

வாம்மா சுமதி நன்றி.வாழ்த்துவதற்கு மனம் தான் முக்கியம் மற்றெதெல்லாம் இரண்டாம் பட்சம்தான். இந்த தடவையாவது அம்பி ஸ்வீட் கொண்டுவந்து கொடுக்கிறானா என்று பார்க்கலாம். அவனைக் கேட்டால் கொடுக்கிறது கோத்ரத்தில் கிடையாது வாங்குவது வம்ச பழக்கம் உண்டு என்கிறான்.

தி. ரா. ச.(T.R.C.) said...

வாங்க குமரன் என் ஆசிகள் எப்பொழுதும் உங்களுக்கும் மனவிக்கும் இரு குழந்தைகளுக்கும் உண்டு. வாழ்க வளமுடன். நன்றி வருகைக்கும் வாழ்த்துக்கும்

ஜீவா (Jeeva Venkataraman) said...

//என்ன நான் தர இயலும்-- இறைவா
என்னுள் இருந்து எனக்கு-- இன்னருள் செய்யும் உனக்கு//
வரிகள் ஆழ்ந்த பொருளுடன் வந்திருக்கு தி.ரா.ச சார்! - எல்லா சுப நிகழ்சிகளும் சுபமாய் நிறைய, என் பிரார்த்தனைகள்.
"கந்தமு புய்யருக" பாடல் அறிமுகத்திற்கு நன்றிகள்!

கபீரன்பன் said...

பிறந்தநாள் வாழ்த்துகள் தி.ரா.ச சார்!

லட்சுமி கடாட்சமும் குரு கடாட்சமும் பெருகி என்றென்றும் தங்களையும் தங்கள் குடும்பத்தாரையும் மகிழ்ச்சி வெள்ளத்தில் ஆழ்த்தட்டும்.

ambi said...

அடடே! தாமதமான ஹேப்பி பர்த் டே!

இந்த பதிவை முன்னாடியே பாத்திருந்தா ஸ்வீட் வாங்க கிண்டி பக்கம் வந்ருப்பேன். பரவாயில்ல, வரும் சனிகிழமை தம்பி சகிதம் வந்து வசூல் பண்ணிக்கறேன். :))

தி. ரா. ச.(T.R.C.) said...

அடடே! தாமதமான ஹேப்பி பர்த் டே!

இந்த பதிவை முன்னாடியே பாத்திருந்தா ஸ்வீட் வாங்க கிண்டி பக்கம் வந்ருப்பேன். பரவாயில்ல, வரும் சனிகிழமை தம்பி சகிதம் வந்து வசூல் பண்ணிக்கறேன். :))

இந்த தடவையாவது அம்பி ஸ்வீட் கொண்டுவந்து கொடுக்கிறானா என்று பார்க்கலாம். அவனைக் கேட்டால் கொடுக்கிறது கோத்ரத்தில் கிடையாது வாங்குவது வம்ச பழக்கம் உண்டு என்கிறான்

@சுமதி. எப்படி நான் சொன்னது சரியா போச்சா.அம்பியாவது ஸ்வீட்டாவது தரதாவது. அல்வாத்தான் கொடுப்பான்

sury said...

// ஆனால் கடைசி பக்கத்தைத்தான் எவ்வளவு தேடியும் கண்டு பிடிக்கமுடியைல்லை//


அது கடைசி பக்கம் என்று சொன்னாலும் அது ஒரு சாப்டரின்
கடைசி பக்கம்தானே ! எத்தனை சாப்டர் இதுவரை இருந்தன ?
இனி இருக்கப்போகின்றன எனபதெல்லாம் அவரவர் கர்மவினைகளைப்
பொருத்தல்லவா ?
*****************************
***************************
*************************
***********************
//நண்பர்களே மகளுக்குத் திருமணம் நிச்சியமாகி விட்டது. அக்டோபர் 31 ஆம் தேதியை இப்பொழுதே குறித்துவைத்துக்கொள்ளுங்கள்.//

மகளுக்குத் திருமணமா ! ரொம்ப சந்தோஷம்.
எங்கே சென்னையிலா ? அக்டோபர் 31ந்தேதியா ?
அக்ஷதை போட நான் வந்துவிடுகிறேன். மாப்பிள்ளை அழைப்பு என்றைக்கு?
முகூர்த்தம் எந்த டைம்!

எல்லா க்ஷேமங்களும் தங்களை அடையட்டும்.

ஸம்பத்கராணி ஸகலேந்த்ரிய நந்தனானி
ஸாம்ராஜ்யதான நிரதானி ஸரோருஹாக்ஷி.
த்வத்வந்தனானி துரிதோஹாரணோத்யதானி
மாமேவ மாதரனிஷம் கலயந்து நான்யம். (கனக தாரா ஸ்தோத்ரம் =12)

ஸர்வ மங்களானி பவந்தி.

சுப்பு ரத்தினம்.
தஞ்சை. (இப்போது சென்னை ‍ 600087)

sury said...

என்னது 9 ஜுன் உங்கள் பிறந்த நாளா ?
பேஷ் !
என்னோட பிறந்த நாள் 10 ஜூன்.
உங்க வயசோட
ஒரு 5 வருஷத்தைக் கூட்டிக்கோங்கோ
அவ்வளவு தான்.
எல்லாருக்கும் எங்க ஆசிர்வாதம்.
நன்னா க்ஷேமமா இருங்கோ.
ஸர்வ மங்களானி பவந்தி.

சுப்பு ரத்தினம்.
தஞ்சை. (இப்போது சென்னை ‍ 600087)

sury said...

http://www.youtube.com/watch?v=q_BsnifpznE

please link to the above:
a prayer to Lord Chandramouleeswara by
Paramacharya. your song stirs the soul.So
anticipating your approval,
i have set the tune.
if i do not have your approval,
pl.let me be informed, so that i can delete the same immediately.
BDHFEICB Chennai.

you know me i suppose.
subbu
pl.do not publish this, as this has my tel no.

கீதா சாம்பசிவம் said...

இந்த தடவையாவது அம்பி ஸ்வீட் கொண்டுவந்து கொடுக்கிறானா என்று பார்க்கலாம். அவனைக் கேட்டால் கொடுக்கிறது கோத்ரத்தில் கிடையாது வாங்குவது வம்ச பழக்கம் உண்டு என்கிறான்

SUMATHI enge vanthu sollap poranga??
nan sollaren, ambiyavathu, sweet kodukirathavathu??? Nope!!! :P

Sowmya Srikrishnan said...

Good news there! Best wishes to your daughter.

Belated wishes to you.