Monday, October 06, 2008

அம்பிகைக்கு ஆயிரம் நாமங்கள் ((9 )




அம்பாளின் காதுகளின் அழகை வர்ணிக்கும் வரிகள். அம்பாளுடைய ஆற்றல் எல்லாம் இருக்கக் கூடிய பெருமை படைத்தது அந்தக் காதுகளும் அதில் உள்ள தாடகங்களும்தான்.ஆதிசங்கரரும் தவதாடங்க மஹிமா என்று போற்றுகிறார்.ஆதி சங்கரர் பிருதிவி சேக்ஷ்த்திரமான காஞ்சிபுரத்தில் அவளுடைய உக்ரத்தை ஸ்ரீ சக்கரமாக பிரதிஷ்டை செய்தார். அதே போல் திருவானைக்கா கோவிலில் உள்ள அகிலாண்டாஸ்வரிக்கு அவளுடைய காதுகளில் தாடங்கமாக ஸ்ரீ சக்கரத்தை அணிவித்தார். அர்ச்சனை ஆரதனை எல்லாம் தடங்கத்துக்குத்தான்.இரண்டு தாடகங்கள் இரணடு காதுகளிலும். ஒன்று நக்ஷ்த்திர மண்டலதிற்கு அதிபதியாய் விளங்கும் சூரிய பகவான். மற்றொன்று சந்திரன்.விழிக்கே அருளுண்டு என்று அபிராமி பட்டர் பாடியவுடன் தன்னுடை சந்திர தாடங்கத்தை கழட்டி வானில் வீசியதும் பௌர்ண்மி நிலவுபோல் காட்சி அளித்தது.அழகான காதுகள் அதில் தாடங்களாக உள்ள சந்திர சூரியர்கள்
கதம்ப மஞ்சரி கிலுப்த கர்ணபூர மனோஹரா!
தாடங்க யுகளி பூத தபனோடுப மண்டலா!!






2 comments:

Sumathi. said...

ஹலோ சார்,

வாவ்... இன்னைக்கு கோலம் ரொம்ப அழகாயிருக்கு.இன்னும் கொஞ்சம் பெருச்சாக்கியிருந்தா இன்னும் நல்லாயிருந்திருக்கும்.சரி, என்னுடையசுண்டல் நான் எடுத்துண்டுட்டேன். நாளைக்கு சரஸ்வதி பூஜை. இனிய வாழ்த்துக்கள்.

மதுரையம்பதி said...

தாடங்க மகிமையை அழகாகச் சொன்னீர்...வராஹி/தண்டினி எல்லோரையும் காக்கட்டும்.