
நவராத்திரிநாயகியின்விழாஆரம்பம்ஆகிவிட்டது. இந்த வருடமும்
லலிதாசஹஸ்ர நாமத்திலிருந்து சில நாமங்களுக்கு எனக்குதெரிந்தவரை விளக்கம் சொல்ல முயற்சிக்கிறேன்.
சிதக்னிகூட சம்பூதா
லலிதாதேவி எங்கே இருந்து தோன்றினாள். தேவேந்திரன் ஒரு மிகப்பெரிய யாகம் செய்தான். அந்த யாககுண்டத்திலிருந்து 16 வயது பாலாவாக ஜொலிக்கும் தங்கத்தட்டில் வந்து அவதாரம் செய்தாள் லலிதா தேவி.அதனால்தான் அவளுக்கு சிதக்னிகூட சம்பூதா என்ற நாமம் வந்தது.
மஹாபைரவ பூஜிதா
மஹாபைரவரால் பூஜிக்கப் படுபவள்.யார் இந்த மஹாபைரவர்? வேறுயாரும் இல்லை சாக்ஷாத் பரமசிவனேதான். பைரவர் என்ற வார்த்தை எப்படி வந்தது? ப என்றால் பவம் படைத்தல், ர என்றால் ரக்ஷிப்பவர் காத்தல், வ வமனம் என்றால் அழித்தல். இந்த மூன்று தொழில்களையும் சிவன் லலிதாதேவியின் அருளினால் செய்கிறார்.
அப்பேற்பட்ட மஹாபைரவரால் பூஜிக்கப் படுபவர்.
நிர்பவா பவநாசினி
ஒருதாயின் வயிற்றிலிருந்து பிறக்காதவள்.பிறப்பிலிருந்து விடுபட்டவள் மட்டும் அல்ல தன்னை வழிபடுபவர்களுக்கு அவர்களது பிறப்பையும் அழித்து வீடுபேற்றை அளிப்பவள். அதனால்தான் பவநாசினி என்ற பெயர் வந்தது அபிராமி பட்டரும் இதையே சொல்லி பாடுகிறார்
ஆசைக்கடலில் அகப்பட்டு அருளற்ற அந்தகன்கைப்
பாசத்தில் அல்லற்பட இருந்தெனை நின்பாதம் என்னும்
வாசகமலம் தலை மேல் வலிய வைத்து ஆண்டுகொண்ட
நேசத்தை என்சொல்லுவேன் ஈசர் பாகத்து நேரிழையே
சரி இன்றைய தினம் அம்பளுக்கு பட்டாணி சுண்டல் படைக்கப்பட்டு இருக்கிறது. வேணும்வரை எடுத்துக்கொள்ளுங்கள்
நாளை பார்க்கலாமா

5 comments:
சென்னையில இருந்தா சுண்டலாவது கிடச்சிருக்கும்.. :(
very informative mama.. thanks for sharing.. I am looking forward for more. thanks again
அதெனால் என்ன இளா பார்சலில் அனுப்பி வைத்தால் போகிறது. வருகைக்கு நன்றி.
Thank you Ananya
அருமை! சுதாசேஷய்யனின் வர்ணிப்பு போல் உள்ளது!பத்மாசூரி
Post a Comment