Wednesday, November 16, 2011

திருமணநாளை திரும்பிப் பார்த்தால்.........



இன்றோடு திருமண வாழ்க்கையில் 36 வருடங்கள் முடிவடைந்து விட்டது. இந்த மாதிரியான தினத்தை கொண்டாடும் வழக்கம் இல்லை  ஆனால் அன்று முதியோர் இல்லம் சென்று அவர்களுக்கு அன்னதானம் செய்து அவர்களுடன் சில மணித்துளிகள் செலவிடும்  வழக்கமுண்டு. கொண்டாடவில்லை என்றாலும் நினைத்துப் பார்த்ததில் சில உண்மைகள் தெரியவருகிறது.

நாம் இதுவரை வாழ்க்கையில் ஒரு பணம் முதலீடு செய்த பங்குதாரராக மட்டும்தான் இருந்தோம் என்பது.அது மட்டும் இல்லை கூட்டு வியாபாரத்தில் சேர்த்துக் கொண்ட "மைனர்" பங்குதாரர் மாதிரிதான் இருந்தோம் என்பதும் தெரியவருகிறது.அதில்"மைனருக்கு' லாபத்தில் மட்டுமே பங்கு உண்டு,நஷ்டம் வந்தால் அதை மற்ற "மேஜர்' பார்ட்னர்தான் ஏற்றுக்கொள்ளவேண்டும். அதுதான் சட்டம்.

அது என்னவோ என்வரை உண்மைதான்.எனக்கு எந்தவிதமான கவலையும் கிடையாது இந்த குடும்ப வியாபாரத்தில்.வீட்டை கவனிப்பது,குழந்தைகளை வளர்ப்பது,படிக்க வைப்பது,காலேஜில் சேர்ப்பது எல்லாம் "மேஜர்" பார்ட்னர் வேலைதான். வேலைக்கும் போய்க்கொண்டு, கூட்டுக்குடும்பதில் இருந்துகொண்டு எல்லோரிடமும் அநுசரித்து கொண்டு, வீட்டையும் கவனித்துக் கொள்வது மிகவும் சிரமமான வேலை.இதில் என் உபஹாரமாக எனக்கு ஐந்துஆக்சிடென்ட்,இரண்டு தடவை இதயக்கோளாறு ஹாஸ்பிடலுக்கும் வீட்டிற்கும் அலைச்சல்,கவலை, இப்போது சர்க்கரை கோளாறு முதலியவற்றை போனஸாகக் கொடுத்ததுதான்.

இதையெல்லாம் பார்க்கும்போது என் நினைவுக்கு வருவது நம் பாரதியின் கவிதை வரிகள்தான் சில மாற்றங்களுடன்.

 இவளாள் பெற்றுவரும் நன்மையெல்லாம் பேசி முடியாது கண்ணை இமையிரண்டும் காப்பதுபோல், என் குடும்பம் வண்ணமுறக் காக்கின்றாள் வாய்முணுத்தல் கண்டிறியேன் வீதி பெருக்குகிறாள்; வீடு சுத்த மாக்குகிறாள்; தாதியர்செய் குற்றமெல்லாம் தட்டி யடக்குகிறாள்; மக்களுக்கு வாத்தி, வளர்ப்புத்தாய், வைத்தியனாய் ஒக்கநயங் காட்டுகிறாள்; ஒன்றுங் குறைவின்றிப்
 பண்டமெலாம் சேர்த்துவைத்துப் பால்வாங்கி மோர் வாங்கிப் பெண்டுகளைத் தாய்போற் பிரியமுற ஆதரித்து நண்பனாய், மந்திரியாய், நல்ல சிரியனுமாய், பண்பிலே தெய்வமாய்ப் பார்வையிலே சேவகனாய், எங்கிருந்தோ வந்தாள், பெண்சாதியென்று சொன்னாள்.
 இங்கிவளை யான் பெறவே என்னதவஞ் செய்து விட்டேன்! இவள் என தகத்தே கால்வைத்த நாள்முதலாய் எண்ணம் விசாரம் எதுவுமவள் பொறுப்பாய்ச் செல்வம், இளமாண்பு, சீர், சிறப்பு, நற்கீர்த்தி, கல்வி, அறிவு, கவிதை, சிவ யோகம், தெளிவே வடிவாம் சிவஞானம், என்றும் ஒளிசேர் நலமனைத்தும் ஓங்கிவரு கின்றன காண்! இவளை நான் ஆட்கொண்டேன்! கண்கொண்டேன்! கண்கொ ண்டேன்! இவளையாட்கொள்ளக் காரணமும் உள்ளனவே!


இவளும் நானும் ஒரே ஊர், என்னுடைய தாத்தாவும் அவள் தாத்தாவும் தோழர்கள்,இருவரும் படித்தது தி நகரில் ராமகிருஷ்ணா  பள்ளிதான் சி ஏ படித்ததும் தி நகரில்தான் திருமணமாகும்போதும் பின்பும் வாழ்ந்தது திநகர்தான். ஆனால் திருமணத்திற்கு முன்னால் பார்த்ததுகூட கிடையாதுஇதை எல்லாம் வைத்துப்பார்க்கும்போது   ஒருவேளை கடவுளுக்கே ஒருவேளை என்மீது பரிதாபம்வந்து இவனிடமிருந்து தந்தையையும்  தாயையும் சிறுவயதிலேயே பிரித்துவிட்டோமே தாயை திருப்பி தாரத்தின் வடிவில் அனுப்பிவிட்டானோ என்று எண்ணத்தோன்றுகிறது.

 எப்படிப் பார்த்தாலும்

இந்த நாள் ஒரு இனிய நாள்தானே

ஆனாலும், இவ்வளவு நாள் இல்லாத ஒரு பயம்,அல்லது வருத்தம் இப்பொழுதெல்லாம்  மனதில் வந்துபோயிக்கொண்டு இருக்கிறது. அது இன்னும் எவ்வளவு நாள் நீடிக்கும் இந்த நிலை?நாட்கள் எண்ணப்படுகின்றவோ என்ற எண்ணம்.முருகன் அறிவான்.
இந்ததடவை என்மகனும் மருமகளும் பேரனும் சிட்னியிலிருந்து வந்திருக்கிறார்கள் பையன் சென்றாகிவிட்டது ,
பேரனும் மறுமகளும் திருமணநாள் அன்று செல்லுகிறர்கள்..இரண்டாவது மகனும் ,மகளும் இருக்கிறார்கள் மகிழ்ச்சியை தெரிவிக்க.

பிளாக் , fஸ்புத்தக,மற்றும் கூகிள் உலக நண்பர்கள் நமக்கு ஆதராவுக்கு இருக்கிறார்கள் என்பது மகிழ்ச்சியையும் நம்பிக்கையையும்  தருகிறது


தங்கமணியைக் கேட்டால் என்னுடன் வாழ்வது
 இப்படித்தான் இருக்கிறது என்பாளோ


அனைவருக்கும் நல் ஆசிகள்

19 comments:

அப்பாவி தங்கமணி said...

Happy Anniversary to a wonderful Couple...:)) I'm not old enough to wish, so aasirvaadham vaangikkaren... and pray to god for many more anniversaries to come

தி. ரா. ச.(T.R.C.) said...

வாங்க அப்பாவி. முதல் வாழ்த்து உஙகளுடையதுதான்.எங்களுடைய பரிபூரண ஆசிகள்

இலவசக்கொத்தனார் said...

நமஸ்காரம் அண்ணா!

Vasudevan Tirumurti said...

Happy Anniversary!
namaskaram!

Vasudevan Tirumurti said...

சமீபத்து பஸ் பேச்செல்லாம் இந்த தெகிரியம்தானா? :-))))

தி.தமிழ் இளங்கோ said...

//ஆனாலும், இவ்வளவு நாள் இல்லாத ஒரு பயம்,அல்லது வருத்தம் இப்பொழுதெல்லாம் மனதில் வந்துபோயிக்கொண்டு இருக்கிறது. அது இன்னும் எவ்வளவு நாள் நீடிக்கும் இந்த நிலை?நாட்கள் எண்ணப்படுகின்றவோ என்ற எண்ணம்.முருகன் அறிவான்.//

அனுபவமான வரிகள்.இதுதான் வாழ்க்கை.இதுதான் உண்மை.

வாழ்த்துக்கள்!

வல்லிசிம்ஹன் said...

மனம் நிறைந்த நல்வாழ்த்துகள் அண்ணா.
மன்னியும் நீங்களும் எப்பொழுதும் ஆனந்தமாகவும் ஆரோக்கியமாகவும் இருக்க்க நம் சங்கர குருவும், முருகனும், ஸ்ரீராமனும் இருக்க கவலை ஏன்.
நல்லதே நடக்கும் .சந்தோஷமாக இருங்கள்.அன்பான் இல்லறம் நீண்ட நெடுநாள் நிறைவோட நடக்க எங்கள் வாழ்த்துகள்.

கோவி.கண்ணன் said...

//ஆனாலும், இவ்வளவு நாள் இல்லாத ஒரு பயம்,அல்லது வருத்தம் இப்பொழுதெல்லாம் மனதில் வந்துபோயிக்கொண்டு இருக்கிறது. அது இன்னும் எவ்வளவு நாள் நீடிக்கும் இந்த நிலை?நாட்கள் எண்ணப்படுகின்றவோ என்ற எண்ணம்//

கருவின் முதல் இதயத் துடிப்பு அன்றே மனித உயிரின் கவுண்டவுன் துவங்கிவிடும், கவலை கொள்ளாதீர்கள், எந்த செயலுக்காக / காரணத்திற்காக இந்த வாழ்க்கைக் கிடைக்கிறதோ, அதற்கான காரணம் எப்போதும் இருந்து கொண்டு தான் இருக்கும் அல்லது உருவாகும்.

50 வயதைக் கடந்தால் பொதுவாக எல்லோருமே வெறுமை அடைகிறார்கள், தாத்தா என்ற நிலைக்கு தள்ளப்படும் போது உறைக்கும் உண்மைகளில் 'வாழ்நாட்களுக்கும்' எல்லை உண்டு என்பதே.

*****

உங்கள் மணநாளுக்கு தங்களுக்கும் தங்கள் துணைவியாருக்கும் இனிய நல்வாழ்த்துகள்

:)

G3 said...

வாழ்த்த வயதில்லை.. அதனால சாஷ்டாங்கமா கால்ல விழுந்துடறேன் :))

வெறும் ஆசி பத்தாது.. ஒரு 1000 ரூபா நோட்டாவது குடுத்தா தான் எழுந்துப்பேன் :)))

Ramya Bharath said...

Hello Mama & Mami, Wishing you a very Happy Anniversary!!!

Our Namaskarams to you!!!

Mama, kavidhai super!!!!

priya.r said...

நல்ல உடல் நலம் ,நீள் ஆயுள் ,நிறை செல்வம் ,உயர்பொருள் ,மெய்ஞானம் பெற்று ஓங்கி வாழ்க !
வாழ்க வளமுடன் ..

RAMVI said...

வாழ்த்த வயது தகுதி ஏதும் இல்லை.வணங்குகிறேன்.ஆசிர்வாதம் பண்ணுங்கோ சார்.

raji said...

ஆசிர்வாதம் பண்ணுங்கோ மாமா!மாமி கூட சேர்ந்து.

மாமியும் நீங்களும் ஆரோக்கியத்தோடயும் சகல சௌக்யங்களோடயும் பெருமாள் அனுக்ரஹத்தோட இருக்கணும்னு பிராத்திச்சுக்கறேன்

தக்குடு said...

அற்புதமான தம்பதிகளுக்கு அண்ணா & தம்பியின் பணிவான நமஸ்காரங்கள்!

ஊர்ல மட்டும் இருந்திருந்தா தக்குடுவுக்கு உமா மாமி கையால அருமையான சாப்பாடு பால்பாயசம் சஹிதமா கிட்டியிருக்கும் & மாமாவுக்கும் வடை அவியலோட சாப்பாடு போட்டுருப்பா...:))

மதுரையம்பதி said...

உள்ளம் கனிந்த நல்வாழ்த்துக்கள் + நமஸ்காரங்கள் உங்களுக்கும் மாமிக்கும்.

குமரன் (Kumaran) said...

ஆசிகளுக்கு நன்றி ஐயா. இன்னுமொரு நூற்றாண்டிரும் என்று இருவரையும் வாழ்த்தி வணங்குகிறேன்.

sumathi said...

ஹலோ சார், வணக்கம். இப்போ தான் இங்க கடை பக்கம் வந்தேன்.அப்பா 36 வருஷம்.. என்னால உங்களை வாழ்த்த வயசில்லை. ஆனா ஆசிர்வாதம் வாங்க வயசிருக்கு.அதுக்காக ஜி3 மாதிரி பெரிய்ய நோட்டெல்லாம் கேக்க மாட்டேன். நீங்கலெல்லாம் மனதார வாழ்த்துங்களேன் அதுவே பெருசு. நீங்களும் மறுபாதியும் எப்பொழுதும் ஆனந்தமாகவும் ஆரோக்கியமாகவும் இருக்க முருகனிடமும், ஸ்ரீராமனிடமும் வேண்டுகிறேன். வாழ்த்துக்கள்.

தி. ரா. ச.(T.R.C.) said...

thank you all

Thanai thalaivi said...

சார்! முடிந்தால் என் தளத்தில் வந்து பார்க்கவும். தக்குடு கல்யாண பதிவிற்கு.

ungal thirumana nalirkku belated namaskarams.