Monday, July 04, 2011

பாலகிருஷ்ணன் பாதமலர்




வியாசர் முதல் கண்ணதாசன் வரை கண்ணன்மீது படாதவர்களே கிடையாது.இதில் தமிழ்த்தியகய்யாவான பாபநாசம் சிவனும் விதிவிலக்கல்ல. சினிமா இசையிலும் சரி கர்நாடக இசையிலும் சரி முத்தான பாடல்களை வாரி வழங்கியுள்ளார்.எளிமையான தமிழில் உள்ளத்தை உருக்கி அவனிடத்தில் வசப்படும் விதத்தில் இருக்கும் அவரது பாடல்கள்.அந்த முத்துக்களில் எனக்கு பிடித்த ஏன் கேட்ட பிறகுஉங்களுக்கும்பிடிக்கும் பாடல் ஒன்றைப்  பார்ப்போமா .என்னைவிட இந்தப்பாடலை மிகவிரும்பிக் கேட்டவர் சமீபத்தில் அகல மரணத்தைதழுவிய என் மைத்துனியின் கணவரான திரு.ரகுராமன் அவர்களின் ஆத்மா சாந்தியடைய அர்பணிக்கிறேன் . கடந்த 30 வருடங்களாக என்னுடன் கச்சேரிக்கு வந்து இசையை ரசித்துக்கொண்டு இருந்தவர்.

சிவன் அவர்களுக்கு மிகவும் பிடித்த வார்த்தை இறைவனின் பதத்தைப் பற்றி பாடுபவது. பாதமே கதி பரமசிவா, பார்த்த சாரதி உன் பாதமே கதி, ஏழையாகிலும் உன் பாதம் பணியும் என் பவ வினைகள் தீரும் கருணைக்கண் பாரும் சம்போ...இப்படி பல பாடல்கள்.அந்த  வரிசையில்தான் இந்த பாலகிருஷ்ணன் பாதமலர் பணிவோர்க்கிடரில்லை பாடலும்

கண்ணன் எங்கே இருப்பான் கோகுலத்தில் ஆயர்குல சிறுவர்களோடு ,ராதையோடு பிருந்தாவனத்தில் , காளிங்கநின்மீது நடமாடிக்கொண்டு யமுனையின் நதியின் நடுவில் ,பசுக்களை மேய்த்துக்கொண்டு கோகுலத்தில் இப்படி எங்கும் இருப்பான்.
அது மட்டுமா தன்னையே கண்ணனிடம் அர்பணித்துக்கொண்ட கோபிகைகளுக்காக அவர்களின் மனதை மயக்கும் வண்ணம்
மாம்பழ வாயினிலே கண்ணன் குழல் இசைத்திடுவான் . நம்மைப்போன்ற மனிதர்களுக்காக நமது துன்பத்தையெல்லாம் தவிர்த்துவாழவைக்கும் கருணை கொண்ட பாலன். சரி பாலன் என்றால் குழந்தையாக இருப்பானே அவன் எப்படி கடினமான வேலைகள் செய்து நம்மைக் காப்பாற்றுவான் என்ற கவலை வேண்டாம். பக்தர்களுக்கு கஷ்டம் என்றால் கோவர்த்தன மலையையே எடுத்து மழையிலிருந்து காப்பாற்றும் சக்தி படைத்த திண்மையான தோள்வலிமை படைத்தவன். அன்பர்களின் பிழைகளை பொறுத்து அருள் மழை பொழியும் தயாளகுணம் படைத்தவன். பிரும்மா வணங்கும் பூப்போன்ற பாதங்களை உடையவன்.

 இப்படி பாதங்களின் புகழைப் பற்றி பாடுகிறார். பாலகிருஷ்ணனின் பாதங்களின் மஹிமையைப் பற்றி ஆதி சங்கரர் சொல்லும் பொழுது கண்ணனே இந்தப் பாதத்தில்தனே பக்தர்கள் தலைவைத்து வணங்கி பக்தி
செலுத்துகிறார்கள் அவர்களுடைய பக்தி சுவை எப்படி இருக்கும் என்று தாமரைப் போன்ற கையினால் தாமரைப் போன்ற சிறிய பாதங்களை எடுத்து தாமரைப் போன்ற முகத்தில் இருக்கும் அழகிய வாயினில்
வைத்து சுவைத்துக் கொண்டு இருக்கும் ஆலிலையின் நடுவில் படுத்துக்கொண்டு இருக்கும் பாலகிருஷ்ணனை மனத்தால் வணங்குகிறேன் என்கிறார்

பாதத்தையே வணங்கிக்கொண்டு இருந்தால் போதுமா
 அவன் முகம் எப்படி இருக்கும் என்பதையும் விவரிக்கிறார்
நீலவானம் போன்ற நிறத்தழகன் அதில் முழுநிலவு போன்ற முகத்தில் சந்திர ஒளியோடு புன்னகை பூத்து உள்ளம் கவர்கள்வன்.

இப்படிப்பட்ட பாலகிருஷ்ணனின் பாதங்களை பணிகின்றவர்களுக்கு எந்தவித துன்பங்களும் கிடையாது என்று அடித்துக் கூறுகிறார்

இனி பாடலைப் பார்ப்போமா.

பாடல்களைப் பாடியவர்கள் திருமதி மும்பை ஜெயஸ்ரீ மற்றும் திருமதி.வித்யாவும். இருவருமே வயலின் மேதை திரு லால்குடி ஜெயராமனின் சீடர்கள்.

ராகம் :தன்யாசி தாளம் : ரூபகம்

பல்லவி

பாலகிருஷ்ணன் பாதமலர் பணிவோர்க்கு இடரில்லை

வரகுண பாலகிருஷ்ணன் பாதமலர்.....

அனுபல்லவி

நீலமுகில்போலழகன் நிறைமதி வதனமதனில்

இளநகை நிலவருள் ஒளி தவழும்....... (பாலகிருஷ்ணன்)

சரணம்

கோகுலம் பிருந்தாவனம் யமுனாவிஹாரி கோபாலன்

கோபிஜன மன மோஹன முரளி கான விலோலன்

வியாகுலம் தவிர்த்து அன்பர் மனதில் வாழ் கருணாளால பாலன்

மழை தடுக்க கோவர்தனமலை எடுத்த திண்தோளன்

பிழைபொறுத்தருள் தயாளன் பிரமன் பணி மலர்த்தாளன்...(பாலகிருஷ்னன்)