இன்று காலை அவசர அவசரமாக ஹைதராபத்திலிருந்து காலை பிளைட் பிடித்து வந்ததின் முக்கிய காரணமே நண்பர் சஞ்சை சுப்ரமணியத்தின் கச்சேரி கேட்கவேண்டும் என்பதற்காகத்தான்.உள்ளே நுழைந்ததுமே என் தங்கமணிஉமா இன்னிக்கி என் fரண்டுடோட பையன் பரத்சுந்தர் கச்சேரி இருக்கு நான் போகணும் என்று தீர்மானமாக சொல்லிவிட்டாள். நான் மத்திரம் என்ன லேஸ்பட்டவனா நானும் என் Fரண்டோட பொண்ணு சுஷ்மா சோமா பாடுகிறாள் அப்பறம் 4 மணிக்கு சஞ்சய் கச்சேரி அதுக்கும் போகனும்.நல்லவேளை எல்லாமே நாரதகான சபாவில்தான் அதனால் அதிசயமாக சமாதானமாக காரில் கிளம்பினோம்
முதல் கச்சேரி சுஷ்மாவினுடையது மதியம் 12.30 லிருந்து 2 .00 மணிவரை. நாங்கள் போகும்போதே கச்சேரி ஆரம்பித்து பாதி ஆகிவிட்டது.காம்போதி ராகத்தின் ஆலாபனை ஆரம்பமாகியது, சுஷ்மா சிங்கபூரில் பிறந்து வளர்ந்தாலும் ந்மது கலாசரத்தைவிடாமல் அனுசரிக்கும் சார்ட்டர்டு அக்கௌண்டன்ட் சோமசேகரனின் மகள். 1980 வருடத்திலிருந்து நான் சிங்கப்பூர் செல்லும்போதெல்லாம் தவறாமல் என்னை கவனித்துக்கொள்ளும் குடும்ப நண்பர்.
கதைக்கு வருவோம். சுஷ்மா முறையாக சங்கீத பையிலும் மாணவி இப்போது சங்கீத கற்றுக்கொள்ளுவதற்காக சென்னை வாசம்.
காம்போதி ராகத்தை கொஞ்சம் கொஞ்சமாக எடுத்து ராக ஸ்வரூபம் கெடாமல் பாடிய ள்விதம் அபாரமாக இருந்தது. பெரிய வித்வான்கள் எடுத்து ஆளும் ராகத்தை மெருகு குலையாமல் ரசிகர்களுக்கு கொண்டு சேர்த்த விதம் ரம்யமாக இருந்தது. ஸ்வரபிரஸ்தாரங்களும் ரசிகர்கள்களின் ஏகோபித்த கரகோஷத்தை அள்ளிச்செண்றது. தனி ஆவர்த்தனம் வாசித்த ரிஷிகேஷ் சிறுவயதிலேயே தன் தனியை சிறப்பாக அளித்தார். சுஷ்மா பின்னர் சாருமதி ராகத்தில் ம்ன சாரமதி என்ற தஞசாவூர் சங்கர ஐய்யர் கீர்த்தனையை அளித்து தில்லானாவுடன் கச்சேரியை நிறவு செய்தார்.
அடடா சொல்ல மறந்து விட்டேனே! வயலின் வாசித்த பொடியன் ச்ரிராம் ச்ரிதர் அபார வாசிப்பு.பொடியனுக்கு 15 வயசுதானம் சுஷ்மா பாட்டுக்கு ஈடுகொடுத்து பிடிகளையும்,ஸ்வரங்களையும் அப்படியே திருப்பிக் கொடுத்த விதத்தைப் பார்த்தால் பிற்காலத்தில் வயலினில் வில்லாதி வில்லானக வர வாய்ப்புண்டு. முடிவில் அவனிடம் விசாரித்தபோது வெட்கத்துடன் சொன்னான் லால்குடி யுனிவெர்சிடியில் வயலின் பயில்கிறானாம். பின் கேப்பானேன் எப்படி இருக்கும் வாசிப்பு !கச்சேரியை கேட்டு அடுத்த கச்சேரிக்கு தயார் செய்துகொள்ளும் போது மனதில் ஒரு நிம்மதி கர்நாடக சங்கீதம் இன்றைய இளையசமுதாயத்தினரிடம்
கையில் பத்திரமாக் இருக்கிறது என்ற உணர்வுதான் அது.
நாளை அடுத்த கச்சேரி கேட்கலாமா?