Tuesday, January 22, 2008

முப்பெரும் விழா



தென்பழனி முருகனுக்கு அரோஹரா வெற்றி வேல் முருகனுக்கு அரோஹரா




நாளை தைப் பூசம். இது முருகனுக்கு உகந்த நாள் என்றுதான் நமக்குத் தெரியும். ஆனால் இன்று முப்பெரும் விழா எனபது நம்மில் பல பேருக்கு தெரியாது. என்ன அந்த மூன்று விழாக்கள் பார்க்கலாமா?

தைப்பூசத்தன்று தான் உலகம் தோன்றியதாக ஐதீகம்.

சிவபெருமான் உமாதேவியுடன் இருந்து சிதம்பரத்தில் ஆனந்த நடனம் ஆடி, தரிசனம் அளித்த நாள் தைப்பூசம் என்பர்.

சிதம்பரத்திற்கு வந்து அரும்பெரும் திருப்பணிகள் செய்து, நடராஜரை இரணியவர்மன் என்னும் மன்னன் நேருக்கு நேராகத் தரிசித்தது இந்நாளிலேயே. இக்காரணங்களுக்காகவே சிவன் கோயில்களில் தைப்பூசத்தன்று சிறப்பு அபிஷேகங்களுடன் பூஜைகள் நடத்தப்படுகின்றன.


சிவனின் ஆனந்த நடத்தை நம்மால் நேரில் பார்க்க முடியாமா? அதனால்தான் நீலகண்ட சிவன் அவர்களின் பாடல் மூலமாக பார்க்கலாமா.நாம் எல்லோருக்கும் ஒரு ஆதங்கம் உண்டு கர்நாடக சங்கீதத்தை எதிர்காலத்தில் எப்படி இளம்தலைமுறையினர் காப்பாற்றப் போகிறார்கள் என்று.அந்தக் கவலையே வேண்டம் இந்த ஒன்பது வயது சிறுவன் என்ன போடு போடுகிறான் பாருங்கள். பக்க (பக்கா) வத்தியம் வாசிப்பவர்களும் சிறுவர்களே.

ராகம்:- பூர்விகல்யானி தாளம் :-ரூபகம்

பல்லவி

ஆனந்த நடமாடுவார் தில்லை
அம்பலம் தன்னில் அடிபணிபவருக்கு அபஜெயமில்லை....(ஆனந்த......)

அனுபல்லவி

தானந்தமில்லாதா ரூபன்
தஜ்ஜம் தகஜம் தகதிமி தளாங்கு தகதிமி என.. (ஆனந்த.....)

சரணம்

பாதி மதி ஜோதி பளீர் பளீரென
பாதச்சிலம்புகள் கலீர் கலீரென
ஆதிகரை உண்ட நீலகண்டம் மின்ன
ஹரபுர ஹரசிவ ஹரசங்கரா அருள்பர குருபரா என
அண்டமும் பிண்டமும் ஆடிட
எண்திசையும் புகழ் பாடிட..... (ஆனந்த
...)






தேவர்களில் குருவாகிய பிரகஸ்பதியின் நட்சத்திரம் பூசம் என்பதால் தைப்பூசத்தன்று குருவழிபாடு செய்வது மிகுந்த பலனைத் தரும் என்பர்.

தந்தைக்கு ஞானகுருவாக இருந்து பிரணவ உபதேசம் செய்த ஞானபண்டித தென்பழனிவளர் முருகன் தேர் பவனி வ்ரும் நாளும் தைப் பூசத்தன்றுதான்.நகரத்தார்களின் செல்லப்பிள்ளையான முருகனைப் பார்பதற்காக நடைப்பயணமாக் கூட்டம் கூட்டமாக குடும்பத்துடன் செட்டி நாட்டிலிருந்து கால் நடையாக காவடி எடுத்துக்கொண்டு ஆடல் பாடலுடன் வருவது கண்கொள்ளாக் காட்சி. பணி நிமித்தமாக 1972 களில் கரைக்குடியில் இருந்தபோது கண்டு அனுபவித்த காட்சி இன்னும் கண்ணில் நிற்கிறது.சிறுவர் சிறிமிகள் கூட
மகிழ்ச்சியுடன் கல்ந்து கொள்வார்கள்.காலில் செருப்புகூட இல்லாமல் பழனி வரை செல்வது எளிதான காரியமில்லை. நம்பிக்கைதான் வழ்வு. அது வந்துவிட்டால் பலம், சக்தி தானே வந்துவிடும்.

இனி மும்பை ஜெயஸ்ரீ பாடிய முருகனின் மறுபெயர் அழகு என்ற பெஹாஹ ராகப் பாடலை பார்க்கவும் கேட்கவும்
ராகம்:- பெஹாஹ் தாளம்:- ஆதி

பல்லவி

முருகனின் மறு பெயர் அழகு
அந்த முறுவலில் மயங்குது உலகு

அனுபல்லவி

குளுமைக்கு அவன் ஒரு நிலவு
குமரா என சொல்லி பழகு

சரணம்

வேதங்கள் போற்றிடும் ஒலியே
உயர் வேலோடு விளையாடும் எழிலே
துறவிக்கும் விரும்பிடும் துறவே
துறவியாய் நின்றிடும் துறவே




-

வள்ளலார் இராமலிங்க சுவாமிகள் ஒரு தை மாத வெள்ளிக்கிழமை புனர்பூச நட்சத்திரத்தன்று தான் சமாதியானார். இதனைக் குறிக்கும் விதமாக அவர் சமாதியான வடலூரில், தைப்பூசத்தன்று லட்சக்கணக்கானோர் கூடி வள்ளலார் விழாவைக் கொண்டாடுகிறார்கள்.. அருட்பெரும் ஜோதி தனிப்பெரும்கருணை வள்ளலாரின் ஜோதி தரிசனமான நாளும் இன்றுதான்.. வள்ளலாரின் "ஒருமையுடன் நினது திருமலரடி" என்ற பிலஹரி ராகப் பாடல்
கொஞ்சும் சலங்கை படத்தில் திருமதி. ஸ் ஜானகி குரலில் காருக்குறிச்சி அருணாசலம் அவர்களின் நாதஸ்வரத்துடன் வெற்றி நடை போட்டு சாகாவரம் பெற்றது.இதோ அந்தப் பாடல்




-

Thursday, January 17, 2008

படைத்ததில் பிடித்தவை

சும்மா இருக்கிற சங்கை ஊதி கெடுத்தவர் வல்லியம்மா. நான் பாட்டுக்கு ஏதோ எனக்கு தெரியாத விஷயங்களைத் தெரிந்த மாதிரி எழுதிக்கொண்டு இருக்கிறேன், இருந்தாலும் ஏதோ பிளாக் உலகினர் பெரிய மனது செய்து படித்து வருகின்றனர். இதிலே எழுதினதிலே நல்லதா மூன்று தேர்ந்து செய்து போடனுமாம்.


இதைவிட நான் போட்டதிலேயே மோசமான பதிவு போடச்சொல்லியிருந்தால் மொத்தப் பதிவையும் ஒட்டு மொத்தமா போட்டிருப்பேன். போடம இருந்தலும் நம்மளை போட்டுருவாங்க போல இருக்கு. சரி போட்டு விடுகிறேன்.


முதல் பதிவு இரு குருவிகளைப் பார்த்ததும் மனதில் எழுந்த எண்ணங்களைபதிவாக பதித்தேன். சுமராக வந்தது. வலை உலகில் எனக்கு ஒரு நுழைவைத் தந்தது. ஆகவே இதுதான் முதல் தேர்வு.நம்ப முடியவில்லை ஆனால் உண்மை அதற்குப் பிறகு நான் சென்னையில் குருவிகளையே பார்க்கமுடியவில்லை. செல்போன்களின் எண்ணிக்கை அதிகமானதால் அதனுடைய கதிர் வீச்சில் பாதிக்கப்பட்டு பறக்க முடியாமல் அழிந்து விட்டன என்கிறார்கள்.

1) http://trc108umablogspotcom.blogspot.com/2006/07/blog-post_04.html#comments

இரண்டாவது பதிவு மணநாளன்று போட்டது. தங்கமணியின் அருமை தெரிந்த பதிவு. உண்மையை உணர்த்திய பதிவு

(2)http://trc108umablogspotcom.blogspot.com/2006/11/blog-post_16.html

கீதாமேடத்தின் அழைப்பின்பேரில் எட்டு போடப்போய் அதுவே நகைச்சுவையுடன் அமைந்தது அதிசயம்தான்.கீதாமேடமே தேவலைன்னு சொன்ன பதிவு மூன்றாவதாக அமைகிறது

(3)http://trc108umablogspotcom.blogspot.com/2007/06/blog-post_28.html

அமாம்அம்பிநீசொன்னதும்தான் ஞாபகத்துக்க்கு வந்தது. சங்கீத
ஜாதி முல்லை என்ற தலைப்பில் சங்கீத காமெடியும் நல்ல வரவேற்பை ஏற்றது.

(4)http://trc108umablogspotcom.blogspot.com/2006/09/3.html

Sunday, January 13, 2008

நிஜம் நிழலாகுமா?

சாதரணமாக சினிமாவில் டாக்டராகவும், வக்கீலாகவும், இன்ஜினயராகவும்,ஆடிட்டராகவும் நடிகர்கள் நடிப்பார்கள். ஆனால்ஒருநிஜ ஆடிட்டரே ஆடிட்டராக நடிக்க சந்தர்ப்பம் வருமா? வரும். வந்தது.

இந்த கணினி உலகத்தில் எல்லாமே கணினிதான். அதுவும் வங்கித்துறையில் கேட்கவே வேண்டாம். ஏடிம், ஆன்லைன்பேங்கிங், மொபைல் பேங்கிங், ஈ' பேங்கிங், சி பிஸ் என்று கணினியுடன்வங்கித்துறையும் பிரிக்க முடியாதது ஒன்றாய் ஆகிவிட்டது.

வங்கித் தணிக்கைத்துறையும் இதற்கு விதி விலக்கு அல்ல கணினிப் பொறி உதவியுடன் கணினிமயமாக்கபட்ட வங்கியை எப்படி தணிக்கை செய்வது என்று விளக்கும் வகையில் ஒரு ஈ புத்தகம் சி டி வடிவில் எல்லா வங்கிகளுக்கும், தணிக்கையாளர்களுக்கும் அதுவும் கணினியை அதிகம் பயன்படுத்தாத தணிக்கையாளர்களுக்கு பயன் படும் வகையில் தயாரிக்கப்படுகிறது.

சரி அதுக்கு என்ன என்று கேட்கிறீர்களா. ஒன்றுமில்லை அதில் அடியேன்தான் ஆடிட்டராக நடிக்கிறேன்.வங்கி தணிக்கைச் செல்லும் ஆடிட்டர் எவ்விதம் வங்கி அதிகாரிகளிடம் கேள்வி கேட்கவேண்டும்,
எவ்வாறு கணினியை உபயோகித்து தணிக்கையை சுலபமாகவும் சீக்கிரமாகவும்,அகில உலகில் உள்ள தணிக்கை நடைமுறைக்கும் வரைமுறைக்கும் உட்பட்டு தணிக்கையை முடிக்க முடியும் என்பது போன்ற விஷயங்கள ஒளி ஒலி அமைப்பில் சி டியாக வெளி வர இருக்கிறது.

இரண்டு நாள் ஷூட்டிங் முடிந்து விட்டது.

புது வருடத்தில் போட்ட சபதம் நினைவுக்கு வருகிறது"தணிக்கை சம்பந்தமாக நல்ல ஆங்கில பதிவுகள் இடவேண்டும்" . ஆஞ்சநேயர் அருள்தான்.

வாங்க எல்லோரும் வரிசையாக வந்து உள் குத்து வெளிக்குத்து எல்லாம் வைத்து குத்துங்க


Tuesday, January 08, 2008

புத்தாண்டு சபதம்


புத்தாண்டு சபதம் போடவேண்டுமாம் அம்பத்தூரிலிருந்து ஆர்டர். தலைவி பேச்சைத் தட்டவாமுடியும்.சரி முதலில் நான் என்ன சபதம் எடுக்கவேண்டும் என்று தங்கமனியின் ஆசையைச் சொல்லிவிடலாம்.

இதில் எல்லாமேஎன்நலம் கருதித்தான்

தினமும் காலை 5 30 மணிக்கு எழுந்து எதிரே இருக்கும் ரேஸ்கோர்ஸ் மைதானத்தில் வாக்கிங் போகவேண்டும்..

லேப் அடியில் எப்பொழுதும் அதுவும் ராத்திரி 12 மணிவரை உட்க்காரக்கூடாது.

ஆபீஸ்க்கு ஸ்கூட்டரில் செல்லக்கூடாது..

ஆபீஸிலிருந்து 7 மணிக்குள் வந்து விடவேண்டும்.

டூர் செல்லுவதை குறைத்துக்கொள்ள வேண்டும்.

மாத்திரையை தினமும் மறக்காமல் சாப்பிடவேண்டும்

இதில் ஒன்றைக்கூட நான் சரிவரசெய்வதில்லை. இவை எல்லாம் என்நன்மைக்காக என்றாலும் இனிமேலும் செய்வேனா என்பதும் சந்தேகமே.

நான் எடுக்க நினைக்கும்/செய்யாமல் இருக்கப் போகும் சபதங்கள்.

தினமும் டைரி எழுதவேண்டும்

உள் குத்து இல்லாமல் பின்னுட்டம் இடவேண்டும்.

மகன் மருமகள் அன்பு அழைப்பை ஏற்று சிங்கை சென்று இருக்கவேண்டும்.

தணிக்கை சம்பந்தமாக நல்ல ஆங்கில பதிவுகள் இடவேண்டும்.

பண்டரிபுரமும்,ஷிர்டியும் போகவேண்டும்

பாங்களூர் போகும்போது நிச்சியம் அம்பி வீட்டுக்கு போக வேண்டும்

போதுமா சபதங்கள் .இதையெல்லாம் செய்யவைக்கும்படி இன்று பிறந்தநாள் கொண்ட்டாடும் ஆஞ்சநேயர்தான் நடத்திக் கொடுக்க வேண்டும்..

புத்திர்பலம் யசோதைர்யம்

நிர்பையத்வம் அரோகதா

அஜாட்யம் வாக்படுத்வம்ச

ஹனுமத் ஸ்மரணாத்பவேத்
ராமனைப் போற்றிப் பாடிடும் நேரம் ரகசியமாய் வருவான்
கைத் தாளங்கள் போட்டு ஆனந்தமாக மனங்குளிர்ந்தே மகிழ்வான்
கண் மடல் மூடிமெய் மலர் சூடி செவி மடல் திறந்திடுவான்
நாதனின் காதை யாவும் கேட்டு விழி மழை சொரிந்திடுவான்
கோமகனாக வாழ்ந்திடும் சீலன் கோயில் நாம் அடைவோம்
கோசலை ராமன் நாமத்தைப்பாடி அவனருள் வேண்டிடுவோம்
வீழ்ச்சியை மாற்றி மீட்சிகள் சேர்க்கும் பாடிடு அவன் மகிமை
வான் மழை போல பூமழை வார்க்கும் மாருதி அவன் கருணை





















Tuesday, January 01, 2008

காற்றினிலே வந்து காற்றினிலே கலந்த கீதம் (2)..

காற்றினிலே வந்து காற்றினிலே கலந்த கீதம்-சென்ற பகுதியை http://trc108umablogspotcom.blogspot.com/2007/10/blog-post_28.html படிக்கவும்

மதுரை மல்லியின் மணத்திற்கும், மகா கவி பாரதியின் கவிதைக்கும்,எம். ஸ் அம்மாவின் பாட்டிற்கும் விளக்கமும் விளம்பரமும் தேவையில்லை. பார்த்து கேட்டு கருத்தைச் சொல்லுங்கள்








.எனக்கு மிகவும் பிடித்த பாட்டு.என் செல் போனில் இந்தப்பாட்டுதான் எடுத்தவுடன் ஒலிக்கும்.எல்லாரும் அது வேண்டும் இது வேண்டும் என்று இறைவனிடம் கேட்கும்போது ஒருவர் மட்டும்தான் குறை ஒன்றும் இல்லை என்று பாடினார். அவர்தான் மூதறிஞர் ராஜாஜி. பாட்டை M. S. அம்மாவின் குரலில் கேட்டு பார்த்து ரசியுங்கள்