Friday, February 15, 2008

கேள்வியும் பதிலும் பரிசும்(2)

தங்கமணிக்கு கோபம். தான் பரிசு வங்கிய நிகழ்ச்சியை பற்றி பதிவு போடாமல்
தன்னுடையதை மட்டும் போட்டுக்கொண்டதால்.ஒரு வாரமா டிபன் கட்.

விஜய் சிவாவின் கச்சேரிதான் கடைசி கச்சேரி.அன்று தலைப்பு காவேரிக் கரையினிலே.
வழக்கம்போல் நானும் தங்கமணியின் ஆஜர் ஆகிவிட்டோம். ஏற்கனவே எனக்கு வரவேண்டிய
2 ஆவது பரிசு போனதடவை யாருக்கோ போய் 3 பரிசுதான் எனக்கு வந்தது. அதுவும் கோல்டு காயினை கோட்டை விட்டது மனசே ஆறவில்லை.இந்ததடவை எப்படியும் அதை பிடித்துவிடவேண்டும் என்ற முடிவு செய்யதாகி விட்டது. ஆனால் இந்த தடைவை தங்கமணியின் அதிர்ஷ்டத்தை சோதிப்பது என்று நினைத்து செயல் படுத்தப்பட்டது.

கேள்வி இதுதான். கர்நாடக சங்கீதம் என்றாலே தமிழ்நாடு முழுவதும் பேசப்படும்போது ஏன் காவேரிக்கரைக்கு மட்டும் இத்தனை மஹிமை. எல்லா வாக்கேயர்களும், வித்வான்களும், ஆதரிப்போரும், மற்றும் ரசிகர்களும் மிகுதியாக அங்கேதான் காண்ப்படுகிறார்கள்.

தங்கமணிக்கு அடிச்சது அதிர்ஷ்டம் இரண்டாவது பரிசாக.ஒரு கோல்டு காயின்,F M ரேடியோ,டூர் பேக்,திருக்குறள் புத்தகம்.


கேட்ட கேள்வியும்,விஜய் சிவாவின் பதிலையும் தங்கமணி பரிசு வாங்குவதையும் கீழே பாருங்கள்.தங்கமணியின் அமோக ஆதரவாளர்களான அம்பி,வல்லியம்மா,வேதா,கீதாமேடம் கொஞ்சம் தலையைக் காட்டுங்கள் இல்லாவிட்டால் என் தலை அவ்வளவுதான்.

-

Sunday, February 10, 2008

கவலையை போக்க மருந்து


சமீபத்தில் மதுரையம்பதி தன்பதிவில் மனக்கவலையைப் பற்றி எழுதியிருந்தார். இந்த மாதிரி சமயங்களில் என்ன செய்து மனதை பழைய நிலைக்குக் கொண்டு வரலாம் என்றுயோஜித்ததில் திரு. பாபநாசம் சிவனின் இந்தப் பாடல் ஞாபகத்திற்கு வந்தது.
சிவன் அவர்கள் தனக்கே இந்த மாதிரி ஒரு நிலை வந்ததாக நினத்து
அருமையான பாடல் மூலமாக வெளிக் கொணர்கிறார்.கவலைக்கு மருந்தும் சொல்லுகிறார்

அம்மா கற்பாகாம்பிகையே என் மனம் சஞ்சலப்பட்டால் நான் போய் எவரிடம் போய் சொல்லுவேன் நான் என்ன பண்ணுவேன். உலகத்தையே படைத்து காத்து ரட்சிக்கும் அன்னையே என் மீது மட்டும் ஏன் கருணை வைக்கமாட்டேன் என்கிறாய், ஒருவேளை இதுவும் கலியின் விளையாட்டோ,அல்லது உன்னை கருணாநிதி என்று அழைப்பதுகூட தவறோஎன்று நிந்தாஸ்துதியே செய்கிறார்.

ஆனால் கடைசியில் மனம் தெளிந்து சொல்லுகிறர். அம்மா என்ன நடந்தாலும் நான் உன்னுடைய பாதத்தில்தான் விழுவேன்,உன்னை மட்டுமே தொழுவேன் அம்மா அம்மா என்று அழுது உன்னிடத்தில்தான் புலம்புவேன்.நீ என்னை கைவிடமாட்டய். என்ன ஒரு அசையாத சஞ்சலமில்லாத பக்தி. அதைத்தான் நாமும் செய்ய வேண்டும்
சரி இனி பாட்டைப் படியுங்கள்

ராகம் ஹரிகாம்போஜி தாளம் ஆதி

பல்லவி
எனது மனம் கவலை எனுமிருள் சூழ்ந்தால்

எவரிடம் முறையிடுவேன் என் செய்வேன் ........(எனது)

அனுபல்லவி

உனது மலரடியில் விழுவேன் தொழுவேன்

உருகி அம்மா என்றழுவேன் அன்றி.................... (எனது)

சரணம்

உலகுயிரெலாம் ஈன்ற ஜகன் மாதா

உன் உள்ளம் எனக்கு மட்டு மிரந்காதா

கலியின் கொடுமை கண்டுன் கருணை அஞ்சினதோ

கருணாநிதி யென்றுனைப் புகழ்வதும் பழுதோ.....(எனது)

திருமதி. காயித்ரியின் குரலில் <" இங்கே கேட்கவும்">

Sunday, February 03, 2008

கேள்வியும் பதிலும் பரிசும்

சமீபத்தில் திரு.ஒ ஸ் அருண் கச்சேரிக்கு சென்றபோது ஒரு திட்டம் இருந்தது,அதன்படி அன்று வந்திருப்பவர்கள் அன்றைய நிகழ்ச்சியின் தலைப்புடன் சம்பந்தப்படுத்தி ஓருகேள்வி கேட்க வேண்டும் அப்படி வந்த கேள்விகளில் தேர்ந்து எடுத்து பாடகரிடம் கேட்டு விடையையும் அளித்து பரிசையும் வழங்குவார்கள். அப்படிப்பட்ட நிகழ்ச்சியில்
நான் கேட்ட கேள்விக்கு பரிசு கிடைத்தது.அந்தக் கேள்வியும் அதற்கான பதிலும் கீழே பார்த்து கேட்டுச் சொல்லுங்கள்



-



-