Tuesday, August 28, 2007

லக்ஷ்மி வந்தாள் நம் இல்லத்துக்கு(3)மும்பை நகரின் செல்வச் செழிப்புக்கு காரணம் மேலே இருக்கும் மஹாலக்ஷ்மிதான் என்று கூறுவார்கள். ஆனால் மஹாலக்ஷ்மி அவதரித்த இடங்களோ தமிழ்நாடுதான்.வில்லிப்புத்தூரில் ஆண்டாளாகவும்,நச்சியார் கோவிலில் ஸ்ரீதேவியாகவும், ஒப்பு இல்லா அப்பன்(உப்பிலியப்பன்) கோவிலில் பூதேவியாகவும் திருப்பதியில் திருச்சானூரில் பத்மாவதியாகவும் அவதாரம் எடுத்தாள். அதுபோல பசுமாட்டின் பின்புறத்தில் லக்ஷ்மி வாசம் செய்கிறாளம் என்று புராணம் கூறுகிறது


திரு. பாபநாசம் சிவன் அவர்கள் அன்னை மஹாலக்ஷ்மியின் மீது இரண்டு பாடல்கள் பாடியுள்ளார். இரண்டுமே மிகவும் பிரசித்தி பெற்றது.

முதல் பாடல்


ராகம்:- அடாணா தாளம்:- ஆதி


பல்லவி


நீ இரங்காயெனில் புகலேது---அம்பா


நிகில ஜகன் நாதன் மார்பில் உறை--திரு.........(நீ இரங்காயெனில்)


அனுபல்லவி


தாயிரங்காவிடில் சேய் உயிர் வாழுமோ?


சகல உலகிற்கும் தாயல்லவோ----அம்பா.....(நீ இரங்காயெனில்)


சரணம்


பாற்கடலில் உதித்த திருமணியே--சௌ


பாக்யலக்ஷ்மி என்னைக் கடைக்கணியே


நாற்கவியும் பொழியும் புலவோர்க்கும்--மெய்


ஞானியர்க்கும் உயர் வானவர்க்கும்.....அம்பா........(நீ இரங்காயெனில்)


சிவன் அவ்ர்கள் இந்த அடாணா ராகத்தை கையாண்டவிதமே அலாதி.அடாணா ராகம் மிகவும் கம்பீரமான ராகம். அதிகாரம் த்வனிக்கும் பாடல்களுக்கு ஏற்ற ராகம். கோபலகிருஷ்ண பாரதியார் மிகவும் அதிகாரமாக" கனக சபாபதிக்கு நமஸ்காரம் பண்ணடி பெண்ணே"என்று ஆர்டரே போடுவார்(சீர்காழி.சிதம்பரம் அருமையாகப் பாடி இருக்கிறார்). இது ஒரு ராஜ ராகம்.ஆனால் சிவன் அவர்கள் தெலுங்கு தியாகைய்யாவை பின் பற்றி இந்த ராகத்தில் தயாரசத்தையும் காருண்ய ரசத்தையும் கொண்டு வருகிறார். தியகராஜஸ்வாமிகள் தனக்கு ராமரின் தரிசனம் கிடைத்தபின் மறுபடியும் அதேபோல் கிடைக்க வேண்டும் என்று மிகவும் கெஞ்சலுடன் படுகிறார்"ஏலா நீ தயராது பரா குசேலா......' அண்ணல் ராமச்சந்திர மூர்த்தியே என்னிடம் ஏன் தயை காட்ட மாட்டேன் என்கிறாய் நான் ஏழை என்பதாலா.... என்று அதனுடையதாக்கத்தாலோ என்னவோ நம்தமிழ்தியாகைய்யாவானசிவனும் அதே அடாணாவில்"நீ இரங்காயெனில் புகலேது" என்கிறார். அடாணாவின் ஜீவஸ்வரமான 'நீ"யை உயர்த்தி வைத்து அரோஹணமாக மேல்ஸ்தாயியில் ஆரம்பித்து மஹாலக்ஷ்மியை மற்ற தெய்வங்களுக்கும் மேலாக உயர்த்திவிடுகிறார். நீயே இரங்கவிட்டால் வேறு யார் இரங்குவார்கள்?அவள்எங்குஇருக்கிறாள்என்று சந்தேகமறமேல் உலகத்திற்கும்பூலோகத்திற்கும் நாயகனானதிருமாலினின் மார்பில் சதா வசம் செய்பவள் என்று "ஹரிவத்ஸசலஸ்திதாம்" என்று முன்பு லலிதா ராகப் பாடலில் தீக்ஷ்தர் சொன்னாரே அதே மதிரி சொல்கிறார்சரி இரக்கம் யாரிடம் அதிகம் இருக்கும். சந்தேகமே இல்லாமல் தாயிடம்தான்.அம்மாதான் தன் குழந்தைகளிடம் அதிக இரக்கம் காட்டுவாள். அதனால்தானே சொன்னார் "தடித்த ஒர் மகனைத் தந்தை ஈண்டு அடித்தால் தாய் அணைப்பாள்'என்று.அதனால்தானோ என்னவோ தாயிரங்காவிடில் குழந்தை உயிர் வாழமுடியுமா என்ற கேள்வியும் கேட்டுவிட்டு சகல உயிர்களுக்கும் நீ தான் தாய் என்று ஐஸும் வைத்துவிடுகிறார். பாற்கடலில் இருந்து பிறந்த தாயே என்னை உன் முழுக்கண்ணாலும் கூட பார்க்கவேண்டாம், கடைக்கண் வைத்தென்னை ஆதரி என்று ஆதி சங்கரர் கனகதாரஸ்தவ்த்தில் சொன்னாரே அதுபோல் இறைஞ்சுகிறார்.சரஸ்வதி காடக்ஷ்த்தால் நான்குவிதமான கவிகளைமழைபோல வர்ஷிக்ககூடிய வல்லமைபடைத்தபுலவர்களுக்கும். ஸ்ரீவித்யாவான பராசக்தியை உபாசனை செய்யும் மெய் ஞானியர்களான முனிவர்களுக்கும்,எல்லா சக்திகளையும் பெற்ற வானவர்களுக்கு கூட அம்மா லக்ஷ்மிதேவியான நீ இரங்கா விட்டால் வேறு புகலிடம் கிடையாது என்று கூறுவது போல் இருக்கிறது இந்தப் பாடல்சரி இனி பாடலை கேட்கலாமா. யார் பாடியிருக்கிறார்கள். வேறு யார் இந்த பட்டுக்கு உயிர் கொடுத்து சிவனை பட்டி தொட்டிகளில் எல்லாம் புகழ் பெறச்செய்த எம் ஸ் அம்மாவின் குரலில் இங்கேகேட்கவும்திரு. மஹாராஜபுரம் சந்தானத்தின் குரலில்<"இங்கே கேட்கவும்"> ">அடுத்த பாடலை அடுத்த பதிவில் பார்க்கலாம்Saturday, August 25, 2007

வரலக்ஷ்மி வந்தாள் நம் இல்லத்துக்கு(2)


வரலக்ஷ்மி நோன்பு அன்று எல்லார் வீட்டிலேயும் பாடும் ஒரு பாட்டு" பாக்யாத லக்ஷ்மி பாரம்மா'" என்ற புரந்தர தாசரின் கன்னட மொழியில் வரும் பாட்டு. என் அம்மாவும் இந்த பாட்டைப் பாடுவார்கள் இதை தமிழில் போட வேண்டும் என்று நினத்து தேடிப் பார்த்தேன் கிடைக்க வில்லை. பிறகு பாட்டைகேட்டுஎனக்குத்தெரிந்தவரை பாட்டையும் விளக்கத்தையும் எழுதுகிறேன் விவரம் தெரிந்தவர்கள் தவ்றுகளைச் சுட்டிக்காட்டினால் திருத்திக் கொள்ள முடியும்

ராகம்:- மத்யமாவதி(ஸ்ரீ) தாளம்;-ஆதி
பல்லவி
பாக்யாத லக்ஷ்மி பாரம்மா
நம்மம்மா நீ சௌபாக்யாத லக்ஷ்மி பாரம்மா

சரணம்
ஹெஜ்ஜேமேலே ஹெஜ்ஜேயனிகுட
கெஜ்ஜகாலனி த்வனியன டோருட
சஜ்ஸன சாது பூஜய வேளகே
மஜ்ஜிக வொளகின பெண்ணையன்டே.................(பாக்யாத)

கனகவிருஷ்டியா கரயுதபாரே
மனகே மானவ சித்திய டோரே
தினகர கோடி தேஜடி ஹெளயுவா
ஜனகராயன குமாரி வேத...............................................(பாக்யாத)


அட்டிதகலத பக்தர மனயளி
நித்ய மஹோத்ஸ்வ சுமங்கல
சத்யவடோருவ சாது சஜ்ஜன
சிட்டடி ஹோளுவ புட்டலி மொம்பே.....................(பாக்யாத)

சங்கே இல்லத பாக்யவ கொட்டு
கங்கண கைய திருவுடபாரே
குங்குமாங்கித பங்கஜ லோசன
வெங்கட ரமணன பெங்கட ராணீ ..................................(பாக்யாத)

சக்ரே துப்பர காலுவே ஹரிசுத
சுக்ரவாரதா பூஜய் வேளகே
அக்கரயுள்ள அளகிரி ரங்கன
சொக்க புரந்தர விட்டலன ராணீ.................................(பாக்யாத)

பாக்கியங்களைத் தரும் லக்ஷ்மியே வருவாய்,எங்களுடைய தாயே நீ சகல சௌபாக்கியங்களை அள்ளித்தர வருவாய் அம்மா.

இரண்டுகால்களிலும் சலங்கையும் கொலுசுவும் கலீர் கலீர் என்று ஒலிக்கும் சப்தத்துடன் நல்ல சாது ஜனங்கள் பூஜை செய்யும் வேளையில் தயிர் கடையும்போது வரும் வெண்ணயைப்போல் வருவாய் அம்மா
உன் கைகளில் தங்கமழை பொழிந்து எங்களின் விருப்பத்தைத் தீர்ப்பாய்
கோடி கோடி சூர்யனுக்கு ஒப்பான காந்தியுடன் கூடிய ஜனகமஹாராஜனின் மகளாக மண்ணில் அவதரித்த லக்ஷ்மிதாயே வாருவாய் அம்மா. எங்கள் வீட்டுக்கு வந்த நீ வேறு எங்கும்போகமல் இங்கேயே இருந்து தினசரி நடக்கும் மகோன்னத பூஜையில்கலந்து சாது ஜனங்ளை காத்தருள்வாய் அம்மா.கைகளில் தங்க கங்கணங்களை அணிந்து சப்தத்துடன் குங்குமத்தினால் சிவந்த முகத்தில் சிவந்த தாமரை புஷ்பங்கள் பூத்திருப்பதுபோல் அழகிய கண்களுடனுடைய அந்த திருப்பதி மலை மேல் இருக்கும்வெங்கட்ரமணனுடைய ராணீயாகிய எங்கள் அம்மாவே வருவாய்.வெள்ளிக்கிழமையன்று உனக்கு சக்கரையுடன் பாலும் அரிசியும் கலந்து சக்ரபொங்கல் செய்து உனக்கு படைத்து பூஜைகள் செய்யும் வேளயில் இந்த புரந்தர தாசனால் பாடப்படும் அளகிரி மலை மேல் இருக்கும் ரங்கன்னனின் மனதிற்குகந்த ராணீயே வருவாய் எங்கள் வீட்டிற்கு.

இப்பொழுதுஇந்தப்பாடலைமூன்றுபேர்களுடைய குரலில் கேட்க்கலாம்.

முதலில் திரு. பீம்சிங்ஜோஷி அவர்கள் தன்னிடைய கம்பீரமான குரலில் ஹிந்துஸ்தானி இசையையும் கர்னாடக சங்கீத்த்தையும் கலந்து கலக்கியிருப்பதை இங்கே கேட்கவும்

http://www.kannadaaudio.com/Songs/Devotional/BhimsenJoshi/Bhagyada.ram


இதேபாட்டை எம். எல். வசந்தகுமரியின் குரலில் கேட்க இங்கே கிளிக் செய்யவும் http://www.kannadaaudio.com/Songs/Classical/MLV/BhagyadaLakshmi.ram

ஆயிரம் பாடினாலும் நம்முடைய எம் ஸ் அம்மா பாடிய மாதிரி வருமா. அவரின் குரலில் இந்தப்பாட்டை<"இங்கே கேட்டுப் பாருங்களேன்


இவ்வளவு பேர் லக்ஷ்மியை அழைத்த பிறகு நம் தமிழ்த்தியாகைய்யா
பாபநாசம் சும்மா இருப்பாரா. அவர் எப்படி லக்ஷ்மியை அழைக்கிறார் என்று ம்று பதிவில் நாளை பார்க்கலாம்

Friday, August 24, 2007

வந்தாள் வரலக்ஷ்மி நம் இல்லத்திற்கு

இன்று வரலக்ஷ்மி பூஜை. ஸகல ஸம்பத்துகளையும் அளிக்கும் அன்னை அவள்.ஒரு ஏழை அளித்த நெல்லிக்கனிக்காக ஆதிசங்கரர் கனகமழை பொழியவைத்தார்.அந்த கனதாதராஸ்தவத்தில் இப்படி ஆரம்பிக்கிறார்அங்கம் ஹரே:புனகபூஷன மாச்ரயந்தீ

ப்ருங்காங்கனேவ முகலாபரணம் தமாலம்


அங்கீக்ரு தாகில விபூதி ரபாங்கலீலா


மாங்கல்ய தாஸ்து மம மங்கல தேவதாயா

மலர்களாலாலும் மலர்மொட்டுக்களாலும் அலங்கரிகப்பட்ட மரத்தை எப்படி வண்டுகள் சுற்றிக் கொண்டு மொய்த்துக்கொண்டு இருக்குமோ அதுபோல மஹாவிஷ்ணுவின் மார்பெனும் மணிப்பீடமதில் அமர்ந்துகொண்டு அவரையே எப்பொழுதும் அகண்ட கண்களால் பருகிக்கொண்டு இருக்கும் மஹாலக்ஷ்மிதாயே, நீ முழுக்கண்ணாலும் பார்க்கவேண்டாம்,கொஞ்சம் கடைக்கண்ணால் ஏழை மக்களையும் பார்த்து எல்லா செல்வங்களையும் வழங்குவாய் அம்மா என்று சொல்கிறவர் யார் தெரியுமா முற்றும் துறந்த மஹான் ஆதி சங்கரர். தன் பக்தர்களுக்காக லக்ஷ்மியிடம் கையேந்தி நிற்கிறார்.சங்கீத மும்மூர்த்திகளின் ஒருவரும் சிறந்த ஸ்ரீவித்யா உபசகருமான திரு. முத்துஸ்வாமி தீக்ஷ்தரும் லக்ஷ்மியின் மீது லலிதா ராகத்தில் "ஹிரண்மயிம்" என்ற கீர்த்தனத்தை இயற்றியுள்ளார்.லலிதா ராகமும் வசந்தா ராகமும் இரட்டைபிறவி சகோதரிகள் ஒரே ஒரு ஸ்வரம்தான் ப என்கிற பஞ்சமம்தான் கிடையாது லலிதாவில். அதைப்பற்றி பின்னால் விரிவாகப் பார்க்கலாம். ஒருசமயம் தீக்ஷ்தரை அவ்ர் மனைவி தனக்கு செல்வம் வேண்டும் என்பதாற்காக தஞ்சை மன்னரைப் புகழ்ந்து அவர் மீது கீர்த்தனை இயற்றிப் பாடி செல்வத்தைக் கேளுங்கள் என்று கேட்டாளாம். அதற்கு அவர்
மறுத்து மனிதரைப் பாடமாட்டேன் என்று கூறி லக்ஷ்மியின் மீது இந்தக் கீர்த்தனையை பாடினார்ராகம்: லலிதா தாளம்: ரூபகம்


பல்லவி


ஹிரண்மயிம் லக்ஷ்மீம் சதா பஜாமி


ஹீன மானவ ஆஸ்ரியம் த்வஜாமி-----(ஹிரண்மயீம்)


அனுபல்லவி


கிரதர சம்பிரதாயம் க்ஷிராம்புதி தனயாம்ஹரிவத்ஸ்தலாலயாம் ஹரிணீம் கரனகிஸலயாம்


கரகமலத்ருத குவலயாம் மரகத மணிமய நிலயாம்------(ஹிரண்மயீம்)


சரணம்

ஸ்வேத தீபவாஸிணீம் ஸ்ரீகமலாம்பிகாம் பராம்

பூதபவ்ய விலாசணீம் பூசுர பூஜிதாம் வராம்

மாதராம் அப்ஜமாலினீம்

மாணிக்ய ஆபரணாதராம்

சங்கீத வாத்ய விநோதினீம்

கிரிஜாம் தாம் இந்திராம்

சீதகிரண நிபவதனாம்

ஸ்ருதசிந்தாமணி சதனாம் பீடவஸனாம்

குருகுஹ மாதுலகாந்தாம் லலிதாம்---- (ஹிரண்மயீம்)ஹிரண்யவர்ணாம் ஹரிணீம் என்று தொடங்கும் ஸ்ரீசூக்தத்திலிருந்து முதல் அடியை எடுத்து தொடங்குகிறார்.

பல்லவி


தங்கமயமான வண்ணத்துடன் ஜொலிக்கும் லக்ஷ்மியைத்தான் நான் பாடுவேன் மற்றபடி ஒருபொழுதும் நான் மனிதர்களை பாடமாட்டேன்


அனுபல்லவி


அழிவில்லாத செல்வத்தைத் தருபவளும்

பாற்கடல் பெற்று எடுத்தவளும்

மஹாவிஷ்ணுவின் மார்பில் எப்பொழுதும்

கோவில் கொண்டு இருப்பவளும்

இளம் தளிரைப் போன்ற தனது செம்பஞ்சு சரணங்களை உடையவளும்

தனது கையினில் எப்பொழுதும் இருக்கும் தாமரையினால் அந்த பூவுக்கு அழகு சேர்ப்பவளும் இடுப்பில் மரகத மணி பச்சை ஒட்யாணத்தால் அலங்கரித்துக்கொண்டுஇருப்பவளுமானலக்ஷ்மியை மட்டும் தான்

நான் எப்பொழுதும் பாடுவேன்


சரணம்


வெண்மை ஓளிவிடும் தீபத்தில் வசிப்பவளும்

பூலோகத்தில் ஸ்ரீகமலாம்பிகையாக உருவெடுத்தவளும்

சகலபூதங்களும் அமைதியாக அவளிடத்தில் உறைபவளாகவும்

தேவர்களாலும் மனிதர்களாலும் பூஜிக்கப் பெற்று வரம் தருபவளாகவும்

உலகுக்கே தாயாக விளங்குபவளாகவும் தாமரைப் பூவில் அமர்ந்தவளும்

மாணிக்கம்,வைரம், முதலான நவரத்தினங்களால் அலங்கரித்துக் கொண்டு இருப்பவளும்

சங்கீதத்தையும் வேறு வேறு வத்யங்களயும் கேட்டு சந்தோஷிப்பவளாகவும்

சந்திரனனின் குளிர்ந்த கிரணங்களைப் போன்ற முகமுடையவளும்

அழகிய சிந்தாமணி மண்டபத்தில் இருக்கும் ரத்னபீடத்தில் அமர்ந்திருப்பவளும்

குருகுஹனான முருகனுக்கு மாமனான மஹாவிஷ்ணுவின் அன்பிற்கு உரியவளும் லலிதாதேவியுமான மஹாலக்ஷ்மியைத்தவிர வேறு யாரையும் பாடமாட்டேன்


என்ன ஒரு வார்த்தை ஜாலம். இதை எனக்கு தெரிந்தவரை மொழிபெயர்த்துள்ளேன். ஆஹா எப்படிப்பட்ட வர்ணனை. இதில் முக்கியமாக கவனிக்கவேண்டியது ஓம் என்ற பிரணவகார மந்திரத்திலிருந்து "ம்" (சங்கீதத்தில் முக்கியமான) மத்யம ஸ்வரமான (ம) என்ற அம்பாளுக்கு உகந்த பீஜாக்ஷ்ர மந்திரத்தை " ஹிரண்மயீம், ஹரிணீம்,தீபவாஸிணீம்,என்று எல்லாவார்த்தைகளும் "ம்" என்று முடிவு பெறும் வண்ணம் அமைத்துள்ளது மிக விசேஷமாகும்.ஸ்ரீ சூக்தத்திலும் இதே மாதிரி "ம்" என்ற ஸ்வரம் எல்லா இடத்திலும் வரும்
லலிதா ராகத்திற்கே உரிய சுத்த தைவதத்தை முக்கியமாக வைத்து விளையாடி இருக்கிறார்.பாட்டைக்கேட்டாலே லலிதா சஹஸ்ரநாமம் கேட்டால் போல் இருக்கும்

முருகனின்பக்தரான தீக்ஷதர் இதில்முருகனின் மாமனான விஷ்ணு என்று முத்திரை வைத்துள்ளார். மற்றும் கீர்த்தனையின் ராகமான லலிதாவையும் கடைசியில் கொண்டுவ்ந்து வைத்து முத்தாய்ப்பு வைத்துள்ளார்


இனி பாடலை திருமதிகள் ராதா ஜெயலெட்சுமி அவர்களின் குரலின் மூலமாகக் <" இங்கே கேட்டு ரசியுங்கள்>"
நாளை புரந்தர தாசரின் பாக்யாதா லக்ஷ்மி பாரம்மா

கொசுறு
இந்த லலிதா ராகத்தில் நமது இளையராஜா அவர்கள் உன்னால் முடியும் தம்பி என்றபடத்தில் போட்ட இதழில் கதை எழுதும் நேரமிது பாட்டையும்

Tuesday, August 14, 2007

பாரத நாடு பழம்பெரும்நாடு நீர் அதன் புதல்வர் இந்நினைவு அகற்றாதீர்


இன்று நமது 60 வதாவது சுதந்திர தினம்.இந்தியவில் மற்றும் வெளிநாடுகளில் இருக்கும் நமது பிளாக் உலக நண்பர்கள் சேர்ந்து கொண்டாடவேண்டிய தினம். இந்த தினத்தை பாரதியாரின் இரண்டு பாடல்களுடன் அனுபவித்துக் கொண்டாடுங்கள்.


தாயின் மணிக்கொடி பாரீர்
(பாரத நாட்டுக் கொடியினைப் புகழ்தல்)

பல்லவி

தாயின் மணிக்கொடி பாரீர்! -

அதைத் தாழ்ந்து பணிந்து புகழ்ந்திட வாரீர்!

சரணங்கள்

ஓங்கி வளர்ந்ததோர் கம்பம் - அதன் உச்சியின் மேல் வந்தே மாதரம்

என்றே பாங்கின் எழுதித் திகழும் - செய்ய பட்டொளி வீசிப் பறந்தது பாரீர்! (தாயின்)

பட்டுத் துகிலென லாமோ? - அதில் பாய்ந்து சுழற்றும் பெரும்புயற் காற்று

மட்டு மிகுந்தடித் தாலும் - அதை மதியாதவ் வுறுதிகொள் மாணங்க்கப் படலம் (தாயின்)

இந்திரன் வச்சிரம் ஓர்பால் - அதில் எங்கள் துருக்கர் இளம்பிறை ஓர்பால் மந்திரம் நடுவுறத் தோன்றும் - அதன் மாண்பை வகுத்திட வல்லவன் யானோ? (தாயின்)

கம்பத்தின் கீழ் நிற்றல் காணீர் - எங்கும் காணரும் வீரர் பெருந்திருக் கூட்டம் நம்பற்க் குரியர் அவ்வீரர் - தங்கள் நல்லுயிர் ஈந்தும் கொடியினைக் காப்பார். (தாயின்)

அணியணி யாயவர் நிற்கும் - இந்த ஆரியக் காட்சியோர் ஆனந்தம் அன்றோ? பணிகள் பொருந்திய மார்பும் - விறல் பைந்திரு வோங்கும் வடிவமும் காணீர்! (தாயின்)

செந்தமிழ் நாட்டுப் பொருநர் - கொடுந் தீக்கண் மறவர்கள் சேரன்றன் வீரர் சிந்தை துணிந்த தெலுங்கர் - தாயின் சேவடிக் கேபணி செய்திடு துளுவர். (தாயின்)

கன்னடர் ஓட்டிய ரோடு - போரில் காலனும் அஞ்சக் கலக்கும் மராட்டர், பொனகர்த் தேவர்க ளொப்ப - நிற்கும் பொற்புடையார் இந்துஸ் தானத்து மல்லர் (தாயின்)

பூதலம் முற்றிடும் வரையும் - அறப் போர்விறல் யாவும் மறுப்புறும் வரையும் மாதர்கள் கற்புள்ள வரையும் - பாரில் மறைவரும் கீர்த்திகொள் ரஜபுத்ர வீரர் (தாயின்)

பஞ்ச நதத்துப் பிறந்தோர் - முன்னைப் பார்த்தன் முதற்பலர் வாழ்ந்தநன் னாட்டார், துஞ்சும் பொழுதினும் தாயின் - பதத் தொண்டு நினைந்திடும் வங்கத்தி னோரும் (தாயின்)

சேர்ந்ததைக் காப்பது காணீர்! அவர் சிந்தையின் வீரம் நிரந்தரம் வாழ்க! தேர்ந்தவர் போற்றும் பரத - நிலத் தேவி துவஜம் சிறப்புற வாழ்க! (தாயின்) ---

அன்றைய தலைமுறை திருமதி டி.கே பட்டம்மாள் 60 ஆண்டுகளுக்கு முன் பாடிய இந்தப்பாடலை கேட்கஇங்கேசொடுக்கிக்கேட்கவும்ஜய வந்தே மாதரம்

ராகம் - ஹிந்துஸ்தானி பியாக் தாளம் - ஆதி

பல்லவி

வந்தே மாதரம் - ஜய வந்தே மாதரம்.

சரணங்கள்

ஜயஜய பாரத ஜயஜய பாரத

ஜயஜய பாரத ஜயஜய ஜயஜய (வந்தே)

ஆரிய பூமியில் நாரிய ரும் நர

சூரிய ரும்சொலும் வீரிய வாசகம் (வந்தே)

நொந்தே போயினும் வெந்தே மாயினும்

நந்தே சத்தர்உ வந்தே சொல்வது (வந்தே)

ஒன்றாய் நின்றினி வென்றா யினுமுயிர்

சென்றா யினும்வலி குன்றா தோதுவம். (வந்தே) ------

இன்றைய தலைமுறையில் திருமதி பாம்பே ஜெயஸ்ரீ பாடிய இந்தப்பாட்டைக் கேட்க இங்கேசொடுக்கிக்கேட்கவும்

Albert Einstein said: We owe a lot to the Indians, who taught us how to count, without which no worthwhile scientific discovery could have been made.


Mark Twain said: India is the cradle of the human race, the birthplace of human speech, the mother of history, the grandmother of legend, and the great grand mother of tradition. Our most valuable and most structive materials in the history of man are treasured up in India only.


French scholar Romain Rolland said: If there is one place on the face of earth where all the dreams of living men have found a home from the very earliest days when man began the dream of existence, it is India.


Hu Shih, former Ambassador of China to USA said: India conquered And dominated China culturally for 20 centuries without ever having to send a single soldier across her border.