Monday, January 30, 2012

பீஷ்மாஷ்டமி





தன்னைக் கொல்ல ஆயுதம் ஏந்தி வருகின்றவனையும் முகமலர்ச்சியுடன் யாராவது வா.. வா.. என்று வரவேற்பவர்கள் உண்டா?

பின்னால் அவனால் கொல்லப்படும் நிலை வந்தும் அவன் தன்னைப் பார்க்க வரும்போது அவனை துதித்து 1000 பெயர்களால் புகழ்ந்து பாடியவர் யார்?ஆமாம் அப்படி வரவேற்றவரும் பாடியவரும் ஒருவர்தான்.

யார் அவர்? மேலே படியுங்கள்.







மஹாபாரதத்தில் கண்ணன் ஆயுதம் ஏந்தி போராடமாட்டேன் என்று பஞ்சபாண்டவர்களுக்கு உறுதி அளித்தார். அதன்படியே போர்க்களத்தில் இருந்தும் வந்தார். பாண்டவர்களுக்கும் கௌவுரவர்களுக்கும் பயங்கர யுத்தம் நடந்தது. கௌவுரவர்களின் சேனாபதியான பீஷ்மர் மிகவும் உக்கிரமாக போரிட்டார்.

அவ்ருடைய அம்பு மழைக்கு பார்த்தனால் பதில் சொல்ல முடியவில்லை. இப்படியே விட்டால்அவர் பாண்டவர்களை காலி செய்துவிடுவார் என்று நினைத்த கண்ணன் பார்த்தனிடம் சொன்னார்.

"அர்சுனா தாத்தாவை உடனே எப்படியாவது நிறுத்தப் பார்". தனஞ்ஜயன் சொன்னான் "என்னுடைய முழு முயற்சியும் பலனளிக்கவில்லை. என்னுடைய அம்புகளால் தாத்தாவை ஒன்றும் செய்ய முடியவில்லை.அவருடைய பராக்கிரமம் மேலும் மேலும் வளர்ந்து கொண்டே இருக்கிறது" என்றான். (நீங்கள் படித்துக்கோண்டு இருப்பது மஹாபாரதம். வேறு எதையும் நினத்து குழப்பிக் கொண்டால் நான் பொறுப்பல்ல)

பார்த்தனின் சோர்வைப் பார்த்த கண்ணனுக்கு கோபம் வந்து உன்னால் முடியாவிட்டால் இதோ நானே ஆயுதம் எடுக்கிறேன் என்று கூறி தேர்தட்டிலிருந்து இறங்கி தன் சக்கராயுதத்தை பீஷ்மர் கையில் எடுத்துக் கொண்டு பீஷ்மரை நோக்கிச் சென்றார்.

கண்ணனைக் கண்டதும் மலர்ந்த முகத்துடன்ஆயுதங்களை கீழே போட்டுவிட்டு வரவேற்றார் பீஷ்மர் "வா.. வா.. கண்ணா..வா...வா...உன்கையால் மரணமடைய காத்திருக்கிறேன்." நீயே ஆயுதம் எடுத்து வந்தபின் எனக்கு என்னகுறை" என்றார். உடனே கண்ணனுக்கு தன் சத்தியம் ஞாபகம் வந்து தேர்தட்டுக்கு வந்து சாட்டையை கையில் எடுத்துக் கொண்டான்.

பின்பு யோசித்து சிகண்டியை பார்த்தனுக்கு முன்னால் உட்காரவைத்து இருவரையும்அம்புகளைஎறியச் சொன்னார். ஆனால் பீஷ்மர் தன் சத்தியத்தை(சிகண்டிக்கு எதிராக ஆயுதம் ஏந்துவதில்லை என்பதை) மனதில் நிறுத்தி வில்லையும் அம்பையும் கீழேபோட்டுவிட்டு ,பார்த்தனது பாணங்களை ஏற்றுக்கொண்டு உடம்பெல்லாம் அம்பு பாய்ந்து கீழே விழுந்தார். வானவர்கள் பூமாரி பொழிந்தனர்.மரணப்படுக்கையில் மிகுந்த வலியுடன் கஷ்டப்படுகின்ற பீஷ்மரை பார்க்க வந்த கண்ணனை கண்டதும் பீஷ்மர் எந்த விரோதமும் பாராட்டாமல் கண்ணனை 1000 பெயர்களால் துதி செய்தார்.

தன்னைக் கொல்ல வந்த கண்ணனை யுத்தகளத்தில் பீஷ்மர் எப்படி வரவேற்றார் என்பதை ஊத்துகாடு வேங்கட கவியின் பாடல் மூலமாகக் கேளுங்கள்

பாடல் வடமொழியில் இருந்தாலும் சொற்கட்டும் தாளக்கட்டும் வர்ணணையும் மிகுந்தது. நடையும் யுத்தநடை.

ராகம்:- மோஹனம் தாளம்:- ஆதி

பல்லவி

ஸ்வாகதம் கிருஷ்ணா சரணாகதம் கிருஷ்ணா

மதுராபுரி ஸதனா ம்ருது வதனா மதுசூதனா இஹ....(ஸ்வாகதம்)





அனுபல்லவி

போகதாப்த ஸுலபா ஸுபுஷ்ப கந்த களபா

கஸ்த்தூரி திலக மஹிபா மம காந்த நந்த கோப கந்த..(ஸ்வாகதம்)





சரணம்

முஷ்டிகாசூர சாணுர மல்ல

மல்ல விசாரத குவலாயபீட

மர்த்தன களிங்க நர்த்தன

கோகுலரக்ஷ்ண ஸகல ஸுலக்ஷ்ண தேவ

ஸிஷ்ட ஜன பால ஸ்ங்கல்ப கல்ப

கல்ப ஸதகோடி அஸமபராபவ

தீர முனி ஜன விஹார மதனஸூ

குமார தைத்ய ஸ்ம்ஹாரதேவ

மதுர மதுர ரதி ஸாஹஸ ஸாஹஸ

வ்ரதயுவதி ஜன மானஸ பூஜித

இந்தப் பாடலின் மற்றொரு பொருத்தம் பாடலின் நடையும் யுத்த நடையில் உள்ளது.





இன்று பீஷ்மாஷ்டமி. பிதுர்வாக்கியபரிபாலனத்தில் ராமாரையே வென்றவர். வாழ்நாள்முழுவதும் எந்தசுகத்தையும் அனுபவிக்கதவர்.இன்று அவரை வணங்கி அவருக்கு நீர்க்கடன் அளிப்போம்

Sunday, January 15, 2012

பொங்கல் வாழ்த்துக்கள்

தைத்திங்கள் முதலாம் நாள் தான் பொங்கல் திருநாள். அந்நாளில் தான் அறுவடை செய்த புது அரிசியைக் கொண்டு பொங்கலிட்டு இயற்கையை வழிபடுவார்கள்.

பொங்கல் திருநாளுக்கு முன்பே பழைய பொருட்களை சுத்தம் செய்தும், தேவையற்ற பொருட்களை நீக்கியும், வீடுகளை சுத்தம் செய்தும், புது வர்ணம் தீட்டியும் அழகு பார்ப்பார்கள்.

இந்த நிகழ்வு ஒரு சம்பிரதாய நிகழ்வாக இருந்தாலும் கூட அது ஒரு மருத்துவத்தோடு சம்பந்தப்பட்டதாகவும் உள்ளது.

தை மாதமானது முன்பனிக் காலமாகும். மழைக்காலம் முடிந்த பின்பு பனிக்காலம் ஆரம்பிப்பதால் புதுவகையான பூச்சிகள், பாக்டீரியாக்கள், வைரஸ்கள் நோய்களை உண்டாக்கும் கிருமிகள் பல்கிப் பெருகும். இதனால் மனிதர்களுக்கும், விலங்குகளுக்கும் தொற்று நோய்களின் தாக்குதல் அதிகரிக்கும்.

வீட்டின் உள்ளேயும், வீட்டைச் சுற்றிலும் சுத்தம் செய்து, வர்ணம் பூசுவதால் மேற்கண்ட நோய்க் கிருமிகள் அழியும்.

பழங்காலங்களில் மாட்டுச் சாணத்தைக் கொண்டு வீட்டின் தரையிலும், சுவர்களிலும் பூசுவார்கள். பொதுவாக மாட்டுச்சாணம் ஒரு சிறந்த கிருமி நாசினியாகும்.

பொங்கல் அன்று வீடுகளில் அரிசிமாவுக் கோலம் இடுவார்கள். இவை எறும்புகளுக்கு உணவாகப் பயன்படுகின்றது. பொதுவாக எறும்புகள் எத்தகைய நோய்களையும் ஏற்படுத்துவதில்லை. ஆனால் அவை கண்ணுக்குத் தெரியாத பல நுண்ணுயிர்களை அழிக்கின்றன.
மாவிலைத் தோரணம்  கட்டுகின்றனர். மாவிலை ஒரு கிருமி நாசினியாகும். பனிக்காலத்தில் உண்டாகும் நோய்களைத் தடுக்கும். சுவாசம் சம்பந்தப்பட்ட நோய்களை உருவாக்கும் கிருமிகளை அழிக்கும். அதுபோல் மஞ்சள் கலந்த நீரும் நோய் தடுக்கும் பொருளாகும்,.

அதுபோல் பொங்கல் அன்று பொங்கல் வைத்து முடிந்தபின் ஒருவருக்கொருவர் அன்பு பரிமாறிக்கொள்வார்கள். இது மன அழுத்தத்தை நீக்கி மனதிற்கு உற்சாகத்தை அளிக்கும் செயலாகும்.

பொங்கல் திருவிழா ஏதோ விழா என நினைத்துவிடாதீர்கள். அது உள்ளத்தையும், உடலையும் செம்மைப்படுத்தும் விழாவாகும்.
பொங்கலை நாமும் இனிதே கொண்டாடி ஆனந்தம் அடைவோம். ஆரோக்கியம் பெறுவோம்.



பொங்கல் போனஸ் கீழே


Monday, January 09, 2012

பரோபகாரம்





மெட்ராஸ் ராணிப்பேட்டையை சேர்ந்த பக்தர்களிடம், காமாக்ஷிக்கு பாச, அங்குசம் பண்ணித் தரும்படி பெரியவா சொன்னார். எத்தனை நல்ல தெய்வீக பணியானாலும், "நிதி" என்று வரும்போதுதான் அதை திரட்டும் கஷ்டம் தெரியும்!
"காஞ்சிபுரம் காமாக்ஷிக்கு..ன்னா அந்த ஊர்லேயே வசூல் பண்ணிக்கலாமே! இங்க வந்து யாசகம் கேக்கணுமா என்ன?"


"அவனவன் சோத்துக்கு வழி இல்லாம திண்டாடிண்டு இருக்கான்.......அம்பாளுக்கு பாசமாம், அங்குசமாம்"
மக்கள் சேவையே மகேசன் சேவை...ஆஸ்பத்திரி, பள்ளிக் கூடம், அனாதை ஆஸ்ரமம், முதியோர் இல்லம்...ன்னு செலவுக்கு குடுத்தா, மக்களுக்கு அது பிரயோஜனப்படும். அதை விட்டுட்டு, அம்பாளுக்கு பாசம், அங்குசம் இல்லேன்னா ஏதும் நஷ்டமா என்ன?"


இன்னும் இதைவிட மஹா மோசமான வார்த்தைகளை கேட்க வேண்டியிருந்தது. ஆனாலும், ஒன்றே ஒன்றுதான் மஹா பலத்தையும் குடுத்துக் கொண்டிருந்தது...........அது,
"பெரியவாளுக்காக பண்ணுகிறோம்" என்ற சந்தோஷம்! பெரியவாளுடைய சங்கல்பம் நடக்காமல் போகுமா? பாசாங்குச கைங்கர்யம் நினைத்ததை விட மிகச் சிறப்பாக நடந்தது. அதை முக்கியமாக முன்னின்று நடத்திய ஒரு பக்தரிடம் பெரியவா சொன்னார்......"பண வசூலுக்காக ரொம்ப பேர்கிட்ட போயிருப்பே....எல்லாரும் மனசார குடுத்திருப்பா...ன்னு சொல்ல முடியாது. சில பேர் ரொம்ப தாறுமாறாக் கூட பேசி ஒங்க மனஸை ரொம்ப புண்படுத்தியிருப்பா......"ஏண்டாப்பா இந்த வேலைய ஏத்துண்டோம்? பேசாம ஆயிரமோ, ரெண்டாயிரமோ யதா சக்தி குடுத்துட்டு ஒதுங்கிண்டிருக்கலாமோ?...ன்னு கூட தோணியிருக்கும்......


ஆனா, இந்த மாதிரியான பொதுக் கார்யங்கள்ள ஈடுபடரப்போ, நாலு பேர் நாலு விதமா சொல்லத்தான் சொல்லுவா. அதையெல்லாம் லக்ஷியமே பண்ணப்டாது. அம்பாளுக்கு பண்ற கைங்கர்யம்..ன்னு மனஸ்ல உறுதி இருக்கணும். இந்த எண்ணம் வந்துடுத்துன்னா....மனஸ் சமாதானம் ஆய்டும்"
எத்தனை சத்யமான உபதேசம்! இது பொது சேவையில் ஈடுபடும் [சுயநலமில்லாத சேவை] எல்லாருக்குமான உபதேசம்தான் இது!
தெய்வத்தின் குரல்..........
"பரோபகாரம் பண்ணறவாளுக்கு ஊக்கமும், தைர்யமும் அத்யாவச்யம். மான அவமானத்தை பொருட்படுத்தாத குணம் வேணும். "பொழுதுபோக்கு" ன்னு சொல்லி, வாய்க்கு ருசியா திங்கற எடத்லேயும், கண்ணை கவர்ற காட்சிசாலைகள்ள பொழுத வீணாக்கறது தப்பு. இந்த நேரத்த, பொறத்தியாருக்கு சேவை பண்ணறதில் கழிக்கணும். "லைப்...ல ஏகப்பட்ட அக்கப்போருக்கு நடுவுல கொஞ்சம் உல்லாசமா பொழுத கழிக்கறது ஒரு தப்பா?..ன்னு பலபேர் கேக்கலாம். அப்பிடி கேக்கறவாளுக்கு சொல்றேன்.....பரோபகாரமா சேவை பண்ணினாலே போறும், அதுவே பெரிய உல்லாசம் ன்னு தெரிய வரும். அதுதான் வெளையாட்டு. அதுதான் சந்தோஷம். ஈசாவாஸ்ய உபநிஷத் மொதல் மந்த்ரத்லேயே "த்யாகம் பண்ணி அனுபவி" ன்னு சொல்றது.
காந்தி கூட இதுலதான் தன்னோட பிலாசபி முழுக்க இருக்குன்னு அந்த உபநிஷத்தை தலைக்கு மேல வெச்சுண்டு ச்லாகிச்சுண்டு இருந்தார்.
தானம் பண்ணிட்டு நாம் நம்ம பேரை பேப்பர்ல போட்டுக்காம இருக்கலாம். ஆனாலும், "எப்டியாவது நாலு பேருக்கு நாம தானம் பண்ணினத நைஸா தெரியப்படுத்திடணும்"..ங்கற எண்ணம் உள்ளூர இருந்தா..........பேப்பர்ல போட்டுக்கறத விட மஹா தோஷமாயிடும்.
"பண்ணின தானத்த வெளில சொல்லிக்காம இருக்காரே! எத்தன உத்தமமான குணம்" ன்னு பத்து பேர் ஸ்தோத்ரம் பண்ணுவா. அந்த மாதிரி ஆசைகள் தலையை கூட தூக்க வொட்டாம அதை சம்ஹாரம் பண்ணனும்னா....என்ன பண்ணணும்?
"தானம் வாங்கறவன், தனக்கு அந்நியன் இல்லே"..ங்கற ஞானத்த நன்னா ஸ்திரமாக்கிண்டுட்டா.......குடுத்தத வெளில சொல்லிக்கவே தோணாது. நம்ம பந்துக்களுக்கோ, நம்ம கொழந்தைகளுக்கோ ஏதாவது குடுத்தா, அத வெளில சொல்லி பெருமைப் பட்டுப்போமா? அதே மாதிரி லோகத்ல சகல ஜீவ ஜந்துக்களுக்கும் அப்பா அம்மா அந்த பார்வதி பரமேஸ்வராள்தான் ! "தானம்" ங்கற வார்த்தைகூட தப்புதான். "பகவான் நம்மளை கொடுக்க வெச்சான்" ன்னு பவ்யமா இருக்கணும். --

Saturday, January 07, 2012

காஞ்சி மஹா பெரியவாளின் ஆருத்ரா விளக்கம்


காஞ்சி மஹா பெரியவாளின் ஆருத்ரா விளக்கத்தைக் கேட்டு குருவின் ஆசியை பெறவும் கிழே "கிளிக்" செய்யவும்

Kanchi Sri Maha Periva: Sri Maha Periva on Aardra Darsanam:

திருவாதிரையும் களியும்

அன்பர்கள் அனைவர்க்கும் 2012 புத்தாண்டு வாழ்த்துக்கள்

இன்று ஆருத்ரா தரிசனம். அம்பலகூத்தன் நடராஜனுக்கு மிகவும் உகந்த நாள். மார்கழிப் பௌர்ணமியுடன் கூடிய திருவாதிரை நாளில் நடைபெறும் திருவாதிரை விழாவை `ஆருத்ரா தரிசனம் என்பர். `ஆருத்ரா' என்ற சொல் `ஆதிரை' என்று மாறியது


வீட்டில் திருவாதிரைக் களியும் கதம்பகூட்டும் தயார் செய்து சாப்பிடுவார்கள். ஒருமுறை சேந்தனார் அளித்த களியை சிவன் ஏற்றுகொண்டார். அன்றிலிருந்து திருவாதிரைக்கு களியும் ஏழுவகைக்கூட்டும் அவித்த வள்ளிக்கிழங்கும் நைவேத்யமாகக் கொள்ளப்பட்டது. களி' என்றால் `ஆனந்தம்' என்பது பொருள். இறைவன் சச்சிதானந்த வடிவினன். அவனுக்கு ஆனந்த நடனப் பிரகாசம், ஆனந்த நடராஜன் என்ற ஒரு பெயரும் உண்டு. களி நடனம் புரியும் அவனுக்குக் களியைப் படைத்து நாமும் களிப்படைவதும் பொருத்தமே.
 மஹா பெரியவா குரலில் ஆருத்ரா தரிசனம் பற்றி கூறியதை கேளுங்கள் கீழே "கிளிக்" செய்து
Kanchi'>http://blog.periva.org/2012/01/sri-maha-periva-on-aardra-darsanam.html?spref=bl">Kanchi Sri Maha Periva: Sri Maha Periva on Aardra Darsanam:




நாட்டில் நடராஜருக்கு முக்கியமாக ஐந்து நடனசபைகள் உண்டு.

திருவாலங்காடு(ரத்தின சபை),சிதம்பரம்(கனக சபை),திருநெல்வேலி(தாமிர சபை),மதுரை(வெள்ளி சபை),குற்றாலம்(சித்ர சபை) ஆகும்.

சிதம்பரத்துக்கு கனகசபை என்று பெயர்வரக் காரணம் அங்கே நடராஜர் எழுந்தருளியிருக்கும் மண்டபம் பராந்தக சோழனால் பொன்னால் வேயப்பட்டது.நடராஜர் எட்டுகைகளுடன் இடது பதம் தூக்கி ஆடுவார் மதுரையைத்தவிர மற்ற இடங்களில். மதுரையிலோ வலது பாதம் தூக்கி ஆடுகின்றார் பத்து கைகளுடன்.

கோபலகிருஷ்ண பாரதியார் தனது நந்தானார் சரித்திரத்தில் பல அருமையான பாடல்களில் தில்லை நடராஜனின் குணங்களையும் நந்தனாரது எளிமையான திட பக்தியையும் போற்றிப் பாடியுள்ளார். இவர் தியாராஜஸ்வாமிகளின் சமகாலத்தவர்.நந்தன் தாழ்த்தப்பட்ட குலத்தில் பிறந்தவர்.நடராஜனை ஆருத்ராதரிசனத்தன்று பார்க்கவேண்டும் என்று பல வருடங்களாக காத்திருப்பவர்.அவருடைய எஜமான் உத்தரவு தரவில்லை.அப்படிப்பட்ட வரை நடராஜன் தன் கருணையால் இந்த ஆருத்ரா அன்று ஆட்கொண்டு தன்னோடு ஐக்கியமாக்கிக் கொள்கிறான். தில்லை

வாழ் அந்தணர்களுக்கும் கிடைக்காத பேரின்பத்தை வழங்குகிறான்.உண்மையான பக்தி ஒன்றுக்கு மட்டும்தான் அவன் வசப்படுவான் என்ற உண்மையையும் நமக்கு புலப்படுத்துகிறான்

நந்தன் கனவில் கனகசபேசன்வந்து நான் உன்னை பொன்னம்பலத்திற்கு வரச்செய்து தரிசனம் தருகிறேன் என்று உறுதி மொழிகொடுத்தும் நந்தனுக்கு சந்தேகம் தீரவில்லை.ஏனென்றால் இத்தனை நாள் தன்னை கோவிலுக்குள் நுழையவிடாத சமூகமும் எஜாமனரும் அனுமதிபார்களா என்ற பயம். அதைப் பாட்டாக வெளிப்படுத்துகிறான். கோபலகிருஷ்ண பாரதியாரும் ஒரு அடிமையின் உணர்ச்சிகளுக்கு ஏற்றவாறு கருணாரசம் பொங்கும் மாஞ்சி ராகத்தை சமயத்திற்கு ஏற்ற மாதிரி அமைத்துள்ளார்.

ராகம்:- மாஞ்சி தாளம் :- மிஸ்ர சாபு
பல்லவி
வருகலாமோ ஐய்யா--- நான் உந்தன் அருகில்

நின்று கொண்டாடவும் பாடவும் நான் அங்கே வருகலாமோ
அனுபல்லவி
பரமகிருபாநிதி அல்லவோ----நீ

இந்த நந்தன் உபசாரம் சொல்லவோ

உந்தன் பரமானந்த தாண்டவம் பார்க்காவே நான் அங்கே (வருகலாமோ)
சரணம்
பூமியில் புலையனாய் பிறந்தேனே-- நான்

ஒரு புண்ணீயம் செய்யாமல் இருந்தேனே

என் ஸ்வாமி உந்தன் சந்நிதி வந்தேனே

பவசாகரம் தன்னையும் கடந்தேனே

கரை கடந்தேனே

சரணம் அடைந்தேனே

தில்லை வரதா பரிதாபமும் பாவமும் தீரவே -----(வருகலாமோ)

திரு தண்டபாணி தேசிகர் நந்தனாராக நடித்து பாடும் பாட்டைக் கேளுங்கள்கிளிக்

சரி நம் தமிழ்த்தியாகைய்யா திரு பாபநாசம் சிவன் மட்டும் சும்மா இருந்து விடுவாரா என்ன. ஆருத்ரா தரிசனத்தன்று நடராசன் ஆடும் ஆட்டத்தையே தன் பாட்டில் அழகான தமிழில் கொஞ்சவைக்கும் யதுகுலகாம்போதியில் குழைந்தும் குழைத்தும் அளிக்கிறார். பாட்டை முதலில் பார்த்துவிட்டு பிறகு கேட்போம்.
ராகம்:-யதுகுலகாம்போதி தாளம்:- ஆதிஅஹா என்ன ஒரு வர்ணனை.பாட்டைக் கேட்கும்போதே நடராஜரை முழுமையாகப் பார்த்துவிடலாம்.ஏம்பா நடராஜா நீ காலைத்தானே தூக்கிக் கொண்டு இருக்கிறாய் கை சும்மாதானே இருக்கு என்னை அதாலே தூக்கிவிடேன் என்கிறார்.முருகனைப் பெற்றதால்தான் உனக்கு பெருமை என்கிறார்.உடம்பெல்லாம் என்ன இருக்கு தெரியுமா கையில் மான் மற்றொரு கையில் நெருப்பு, கருத்த சடையில் கங்கை,சந்திரன் இதெல்லாம் போறாதுன்னு உன்னோடு இரண்டறக்கலந்து இருக்கும் பார்வதியை சதாசர்வகாலமும் தூக்கிக்கொண்டு இருக்கிறாயே. எந்தகாலைதூக்கி ஆடுகிறாய் தெரியுமா பிரும்மாவும் விஷ்ணுவும் தேடித் தேடி பாதளத்திற்கும் ஆகயத்திற்கும் இங்கும் அங்குமாய் ஓடி கண்டு பிடிக்க காண முடியாமல் இருக்கும் அந்தக் கால் அல்லவா அது. ஹரி ஐயனும் காணா அரிய ஜோதி ஆதி அந்தம் இல்லாத பழமனாதி.
பல்லவி
காலைத்தூக்கி நின்றாடும் தெய்வமே---
என்னை கைதூக்கி ஆட்கொள் தெய்வமே ஒரு....................(காலைத்தூக்கி)
அனுபல்லவி

வேலைத்தூக்கும் பிள்ளைதனைப் பெற்ற தெய்வமே

மின்னும் புகழ்சேர் தில்லை பொன்னம்பலத்தில் ஒரு..(காலைத்தூக்கி)

சரணம்

செங்கையில் மான் தூக்கி சிவந்த மழுவும் தூக்கி

அங்கம் சேர் ஒரு பெண்ணை அனுதினமும் தூக்கி

கங்கையை திங்களை கருத்த சடையில் தூக்கி

இங்கும் அங்குமாய்த் தேடி இருவர் கண்டறியாத........(காலைத்தூக்கி)

நந்தி மத்தளம் கூட்ட நாரதர் யாழ் தூக்க

தோம் தோம் என்று என் தாளம் சுருதியோடு தூக்க

சிந்தை மகிழ்ந்து வானோர் சென்னிமேல் கரம் தூக்க

முந்தும் வலியுடைய முயலகன் உன்னைத் தூக்க


சரி இத்தனையும் தூக்கிகொண்டு சும்மாவாய் இருக்கிறாய். இல்லையே நந்தியின் தாளத்திற்கும் நாரதரின் யாழிசைக்கும் தோம் தோம் என்று என்னுடய (பாபநாசம் சிவனுடைய) தாளம் சுருதியோடு தூக்க உன்னுடைய அஜபா நடனத்தின் தன்மையை அறிந்த தேவர்கள் மகிழ்ச்சியோடு தாங்கள் தலைக்குமேல் இருகைகளையும் தூக்கிக்கொண்டு இருக்க உன்காலின் கீழ் அகப்பட்டுக் கொண்டு இருக்கும் அரக்கனான முயலகன் வலியோடு உன்னைத்தூக்க நீ ஆடும் ஆட்டம் எப்படி இருக்கிறது தெரியுமா? என்று மகிழ்ந்து போகிறார். சிறிது ஹாஸ்யபாவத்தையும் இங்கே காட்டுகிறார்.மான், மழு,கங்கை,சந்திரன்,பார்வதி இத்தனை பேரை தூக்குகின்றாயே என்னை கைதூக்கி ஆட்கொள்ளுவது உனக்கு ஒரு பெரிய விஷயமா என்றும் கேட்பதுபோல் உள்ளது


சரி இப்போது திருமதி. சுதா ரகுநாதன் அனுபவித்து பாடிய பாட்டைக் கேட்கலாமா?

கிளிக் href="http://www.musicindiaonline.com/p/x/ZqK2pqqMHd.As1NMvHdW/%3C"><"இங்கே">

சிதம்பரத்துக்குப் போய் திரும்பாதவர்கள்  நால்வர்
மாணிக்கவாசகர் நந்தனார், அப்பைய தீக்ஷதர் மற்றும் ராமலிங்க சுவாமிகள் . இவர்கள் நால்வரும்  தில்லை நடராஜனை சிதம்பரத்தில் தரிசனம் செய்து இரண்டறக் கலந்து முக்தி அடைந்தவர்கள்



Thursday, January 05, 2012

வைகுண்ட ஏகாதசி


வைகுண்ட ஏகாதசியான இன்று ஸ்ரீரங்கநாதரை வணங்குவதற்குரிய ஸ்தோத்திரத்தைப் படியுங்கள்.

காவிரியின் நடுவில் ஏழு திருமதில்களால் சூழப்பட்ட ஸ்ரீரங்கநாதனே! தாமரை மொட்டு போன்ற விமானத்தில் குடிகொண்டவனே! ஆதிசேஷன் என்னும் கட்டிலில் துயில்பவனே! யோகநித்திரையில் அனைத்தையும் அறிந்தும் அறியாதது போல இருப்பவனே! இடது கையை இடுப்பில் வைத்திருப்பவனே! ஸ்ரீதேவியும் பூதேவியும் வருடுகின்ற திருப்பாதங்களைக் கொண்டவனே! ஸ்ரீரங்கநாதா! உன்னைப் போற்றுகிறேன்.

கஸ்தூரி திலகமிட்ட நெற்றி கொண்டவனே! காது வரை நீண்டிருக்கும் அகன்ற கண்களைப் பெற்றவனே! முத்துக்கள் இழைத்த கிரீடம் அணிந்தவனே! பக்தர்களின் மனதை அபகரிக்கும் தேக காந்தி கொண்டவனே! தாமரைமலருக்கு ஈடான அழகுமிக்கவனே! ஸ்ரீரங்கநாதா! உன்னைக் காணும் பாக்கியம் எப்போது எனக்கு கிடைக்கும்!

மது என்னும் அரக்கனைக் கொன்றவனே! நாராயண மூர்த்தியே! முரனை வென்ற முராரியே! கோவிந்தராஜனே! உன் திருநாமங்களை உரக்கச் சொல்லி வாழ்நாளை எல்லாம் ஒரு நிமிஷம்போல கழிக்கும் பாக்கியம் எனக்கு கிடைக்குமா? காவிரிக்கரையோரம் வாழ்பவனே! இந்திர நீலமணி போன்ற பேரழகுடன் ஆதிசேஷ சயனத்தில் படுத்திருப்பவனே! உன் அருகில் வாழும் பாக்கியத்தை தந்தருள வேண்டும்.

பெருமானே! புனிதமான காவிரியில் நீராடும் பாக்கியம் எனக்கு வேண்டும். அடர்ந்த பசுமரங்கள் நிறைந்த அழகுமிக்க காவிரி நதிதீரத்தில் நான் வசிக்கும் பேறு பெற வேண்டும். மங்கலம் நிறைந்தவனே! தாமரை மலர் போன்ற கண்களைப் பெற்றவனே! உன்னை பக்தியோடு வணங்கும் பாக்கியத்தை அருள்புரிவாயாக.

ரங்கநாதனே! பாக்கு மரங்கள் நிறைந்ததும், தெளிந்த நீரால் நிரம்பியதும், வேதகோஷத்தால் சூழப்பட்டதும், கிளி, குருவி போன்ற பறவைகள் ஒலியெழுப்புவதும், தரிசித்தவர்க்கு வைகுண்டம் தந்தருளி மோட்சத்தைக் காட்டுவதுமான லட்சுமிகடாட்சம் நிறைந்த ஸ்ரீரங்கத்தை தரிசிக்கும் பாக்கியம் எனக்கு என்று கிடைக்குமோ?

எம்பெருமானே! தேவலோக நந்தவனத்தில் அமிர்தம் அருந்தும் பாக்கியம் எனக்கு வேண்டாம். தேவர்களில் ஒருவராகவும் நான் மாற வேண்டாம். ஸ்ரீரங்கத்தில் ஒரு நாயாக வாழும் பாக்கியத்தைக் கொடுத்தால் போதும்.

அம்மா! எனக்கு மிகவும் பசிக்கிறது. உடல் நடுங்குகிறது,' என்று சொல்லும் குழந்தையிடம் தாய் எப்படி பாசத்தோடு ஓடி வந்து அணைத்து ஆகாரம் தருவாளோ அதுபோல...ரங்கநாதா! என் துயரத்தைப் போக்க வந்தருள்வாயாக.

Monday, January 02, 2012

மார்கழி மாதக் கச்சேரி கேட்கலாமா? 2



கச்சேரியா கேண்டீனா?




யரோ சொன்னார்கள் நண்பகல்கச்சேரிக்ககெல்லாம் கூட்டம் வருவதில்லை என்று.அதெல்லாம் தப்பு சரியாக சரியான இடத்தில் பார்க்காமல் சொன்ன வார்த்தை அது.நான் நாரத கான சபா மத்யான கச்சேரிக்கு போயிருந்தேன் கூட்டம்னா அப்படி ஒரு கூட்டம் . நானும் சுத்தி சுத்திப் பார்த்தேன் ஒரு சீட் கூட கிடைக்கவில்லை உட்காருவதற்கு. ஸ்பீக்கரில்கச்சேரி பாடிக்கொண்டு இருந்தது.யாரும் சீட்டை விட்டு எழுவதாக இல்லை.ஒரு ஐடம் முடிஞ்சவுடன் அடுத்த ஐடம் ரெடியாக வந்துகொண்டிருந்தது.ரசிகர்களும் அப்படியே லயித்து அநுபவித்துக் கொண்டு இருந்தார்கள். ஆஹா பேஷ் பேஷ்ன்னு அங்கீகாரம் வேறே.


சரி இத்தனையும் எங்கே சபாஹாலுக்குள்ளேன்னு சொல்லுவேன்னு நீங்க நினச்சா அது உங்க தப்பு. இதெல்லாம் சபா ஹாலுக்கு வெளியே பின்னாடி ஞானம்பிகா கேடரிங் ஸ்டாலுக்குள்.ஹாலுக்கு உள்ளே 1000 பேர் அமரும் சபையிலொரு 20 அல்லது 25 பேர் (வித்வான்கள் கோஷ்டியும் சேர்த்து) சங்கீதத்திற்கு தங்களை அர்பணித்துக்கொண்டு இருந்தார்கள்

இனி என்னுடைய தங்கமணியின் நண்பியின் மகன் பாரத் சுந்தரின் கச்சேரியை கேக்கலாமா? இடம் நாரத கானசபா,மினி ஹால்,நேரம் மதியம் 2 மணி முதல் 4 மணி வரை.


பரத் சுந்தரைப் பற்றி ஒரு அறிமுகம். ஜெயா டி வி நடத்திய கர்நாடக இசைப் போட்டியில் முதல் பரிசை அள்ளிச்சென்றவர். வளர்ந்து வரும் கலைஙர்களில் தனக்கென்று ஒரு இடத்தை பிடித்துள்ளார்.அமைதியாக ஆனால் அனவரையும் கவரும் வண்ணம் பாடும் திறமையுடையவர். சரி இனி கச்சேரியை கேட்க போகலாம்.


மினிஹால் நிரம்பி வழிந்தது.சில பேர் நின்று கொண்டு கூட கேட்பதற்கு காத்திருந்தார்கள் என்றால் பார்த்துக்கொள்ளுங்கள். பக்க வாத்யம் திரு பரூர் அனந்த கிருஷ்னன், மிருதங்கம் திருவநந்தபுரம் பாலாஜி.



நாளை  தொடரும்