Tuesday, May 01, 2012

திருத்தணிகைப் பதி



நினைத்த தெத்தனையிற் ...... றவறாமல்
நிலைத்த புத்திதனைப் ...... பிரியாமற்

கனத்த தத்துவமுற் ...... றழியாமற்
கதித்த நித்தியசித் ...... தருள்வாயே
...
மனித்தர் பத்தர்தமக் ...... கெளியோனே
மதித்த முத்தமிழிற் ...... பெரியோனே

செனித்த புத்திரரிற் ...... சிறியோனே
திருத்த ணிப்பதியிற் ...... பெருமாளே.

நினைத்தது எந்த அளவும் தவறாமல் கைகூடவும்,

நிலையான ஞானத்தை விட்டு யான் பிரியாமல் இருக்கவும்,

பெருமை வாய்ந்த தத்துவங்களைக்* கடந்து அப்பாலான நிலையை யான் அடைந்து அழியாமல் இருக்கவும்,

வெளிப்படுகின்ற நிரந்தரமான சித்தநிலையை நீ அருள்வாயாக.

மனிதர்களுக்குள் அன்புடையார்க்கு மிக எளியவனே,

மதிக்கப்படுகிற இயல், இசை, நாடகமாகும் முத்தமிழில் சிறந்தவனே,

. சிவ மூர்த்தியிடம் தோன்றிய குமாரர்களுள் இளையவனே,

திருத்தணிகைப் பதியில் எழுந்தருளியுள்ள பெருமாளே.
See More