இறந்தும் பிறந்தும் இளைத்தேன் இனியான்
மறந்தும் பிறவா வரம்தா - சிறந்தபுகழ்
ஞாலவா யாமுடிக்கு நாட்டுஞ்சூ ளாமணியாம்
ஆலவாய்ச் சொக்கநா தா.
இந்த உலகத்தில் மறுபடியும் பிறந்தும் இறந்தும் அலுப்பில்லாமல் செய்து இளைத்தேன்
ஆகையால் ஸூலாயுதத்தை அணியாகக் கொண்ட அளப்பிலா புகழுடைய நடராஜனே
இனிமேல் மறந்தும்கூட நான் பிறக்காமல் இருக்க வரமருளுவாய் திரு ஆலவாய் என்று அழைக்கப்படும்
மதுரையில் வாழும் சொக்கநாதா
உண்ணினும் பசிப்பினும் உறங்கினும் நின்ஒண்மல ரடியலால் உரையாதென்நாக்
கண்ணனுங் கடிகமழ் தாமரைமேல்
அண்ணலும் அளப்பரி தாயவனே
இதுவோ எமையாளுமா றீவதொன்றெமக் கில்லையேல்
...அதுவோ வுனதின் னருள் ஆவடுதுறை யரனே,,, தேவாரம்.
உணவருந்தினும் இல்லை பட்டினியாக கிடப்பினும்
தூக்கத்தின் பிடியில் இருந்தாலும்
உன்னுடைய மலர்ப்பாதங்களைப் பற்றி பெருமையாக
சொல்லும் பதங்களைத் தவிர வேறு சொற்களை என் நாக்கு மறந்தும் பேசாது
அன்று திருமாலான கண்ணனும் அவனுடைய நாபி கமலத்தின்
தாமரையில் அமர்ந்து இருக்கும் நான்முகனும்
உன்னுடைய அடி முடிகாணாமல் தோற்றுப் போகும் வண்ணம் அளவறியாத நெடியோனே
அப்படிப்பட்ட நீ எனக்கு அருள்புரியாத வண்ணம் இருப்பதுதான் உனக்கு நீதி உன் உள்ளத்தின் அருள் என்றால் அதையும் நான் மகிழ்வுடன் ஏற்றுகொள்வேன்
ஒற்றி யூரு மொளிமதி பாம்பினை
ஒற்றி யூருமப் பாம்பும் அதனையே
ஒற்றி யூர வொருசடை வைத்தவன்
ஒற்றி யூர்தொழ நம்வினை யோயுமே
...வானத்தில் ஒளிரும் சந்திரன் ஒரு பாம்பை பிடிப்பதற்காக அதன் பின்னே ஒற்றி செல்லும்
அந்தப்பாம்பும் அந்த சந்திரனைப் பிடிப்பதற்காக ஊர்ந்து ஒற்றி செல்லும்
இப்படி ஒன்றுகொன்று விரோத மனப்பான்மை உடைய சந்திரன் மற்றும் பாம்பையும் தன் சடையில் வைத்த திருவொற்றியூரில் குடிகொண்டு இருக்கும்
ஆதிசிவனைத் நாம் தொழுதால் நம்முடைய வினைப்பயன்கள் நம்மை விட்டு ஓடும் என்பதில் அச்சம் உண்டோ.