Saturday, March 31, 2007

கபாலி நாதனைக் கண்டு சேவித்திடுவோம் வாரீர்

கயிலைக்கு சமானமான மயிலையில் பங்குனித் திருவிழா ஆரம்பித்து இன்று(26/03/07) அதிகார நந்தி சேவை.காலையில் ஆறு மணிக்கு சரியாக கபலீஸ்வரர் கோபுரவாசலில் தரிசனம் அருளுவார்.அதைக் காண்பதற்கு கண் கோடி வேண்டும். வாருங்கள் நாமும் தரிசனம் செய்யலாம்.இதோ காலை மணி 5.50 ஆகிவிட்டது. இந்த சிறிது குளிர்ந்த காலை வேளையிலும் பக்தர்கூட்டம் சந்நிதி தெருவெல்லாம் நிரம்பி வழிகிறதுஇதோ மெதுவாக ஆடி அசைந்து கொண்டு முதலில் வருவது யார் தெரியுமா. வேறுயார் வானவருக்கும் நம்மவருக்கும் முன்னவரான முந்தி முந்தி வினாயகர்தான் மூஷிகவாகனத்தில் வருகிறார்.

அவருக்கு பின்னால் கபலீஸ்வரரை தூக்கிக்கொண்டு கம்பீரத்துடனும் அதிகாரத்துடனும் எழுந்தருளுவார் நந்திகேஸ்வரர் . பிறகு முருகப்பெருமான் கந்தர்வ பெண் வீணைமீட்டிக்கொண்டு இருக்கும் வாகன உருவத்தில் உலாவருவார். அதன் பின்னால் கற்பகநாயகி அதே மாதிரி வாகனத்தில் திருவீதி உலாவுக்கு வந்தருளுவாள்.கடைசியாக சண்டிகேஸ்வரரும் இவர்களைத் தொடர்ந்து உலா வருவார். மலர் அலங்காரமும்,மற்றும் மாணிக்கம்,வைரம் முதல் நவரத்தின அல்ங்காரமும் வார்த்தைகளால் வர்ணிப்பதைவிட நேரில் பார்த்தால்தான் அனுபவிக்கமுடியும்.


இதை ஏன் அதிகார நந்தி என்கிறார்கள் அவர் எல்லோரையும் அதிகாரம் செய்வாரா? இல்லை சிவபெருமானின் சிறந்த பக்தரான அவர் ஏன் அதிகாரம் செய்யப்போகிறார்.இங்கு அதிகாரம் என்பது பரமேஸ்வரனை துக்குவதற்கு அவர்மட்டும்தான் அதிகாரம் பெற்றவர் என்பதைக் குறிக்கிறது.
அதையாருக்கும் விட்டுக்கொடுக்கமாட்டார். அரசாங்க அதிகாரிகளுக்கு வழங்கப் படும் ஒரு அதிகாரம் போல.அவர் முகத்தைப் பாருங்கள் என்ன ஒருபெருமிதம்.வலதுகாலை மடித்துஇடது காலை ஊன்றிஇருகைகளாலும் புவனங்களை ஆட்டிப்படைக்கும் காலசம்ஹாரமுர்த்தியை துக்கிக் கொண்டு ஒரு கர்வம் அவர் முகத்தில் காணலாம்.அந்த செந்நிற நாக்கைச் சுழற்றி பற்கள் வெளியே தெரிய, கண்களில் கோபக்கனல் பொங்க, இருகைகளிலும் மானும், கதையும் ஏந்தி இடுப்பில் அதிகாரபட்டைச் சிகப்புத் துணியுடன் போருக்குச் செல்லும் வீரன்போல்காட்சியளிக்கிறார்.

அவரே ஈஸ்வரன்போல்தான் இருக்கிறார்.அவர் பெயரும் நந்திகேஸ்வரன்தானே. கபாலீஸ்வரரைப் பாருங்கள் அவரும் கையில் அம்பு வைத்துக்கொண்டு இருக்கிறார்.இடது கையை இடது துடை மேல் வைத்து கம்பீரமாக காட்சித்தருவதைக் காண கண் கோடி வேண்டும்

இந்தக்காட்சியை மயிலையில் வாழ்ந்த பாபநாசம் சிவன் எப்படி அனுபவித்தார் என்று பார்க்கலாமா

ராகம்:- காம்போதி தாளம்:- ஆதி.

பல்லவி

காணக் கண் கோடி வேண்டும்--கபாலியின் பவனி

காணக் கண் கோடி வேண்டும்........(காணக்கண்)

அனுபல்லவி

மாணிக்கம் வைரம் முதல் நவரத்னாபரணமும்

மணமார் பற்பல மலர்மாலைகளும் முகமும்

மதியோடு தாராகணம் நிறையும் அந்தி

வானமோ கமலவனமோ என மன்ம்

மயங்க அகளங்க அங்கம் யாவும் இலங்க

அபாங்க அருள்மழை பொழி பவனி .......(காணக் கண் கோடி..)

சரணம்

மாலோடு ஐயன் பணியும் மண்ணும் விண்ணும் பரவும்

மறை ஆகமன் துதிக்கும் இறைவன் அருள் பெறவே

நமது காலம் செல்லுமுன் கனதனமும் தந்தார்க்கு நன்றி

கருதி கண்ணாரக்கண்டு உள்ளுருகிப் பணியப் பலர்

காண அறுமுகனும் கணபதியும் சண்டேச்வரனும்

சிவகணமும் தொடர கலைவாணி

திருவும் பணி கற்பகநாயகி வாமன்

அதிகார நந்தி சேவைதனைக் (காணக் கண் கோடி வேணும்)

இந்தப் பாடல் அதிகாரநந்தி சேவையன்று திரு பாபநாசம் சிவனால் பாடப்பெற்ற சிறப்புப் பாடல்.

திருமதி.லக்ஷ்மி ரங்கராஜன் பாடியுள்ள இந்தப் பாடலைக் கேட்க

'><"இங்கே கிளிக்"> செய்யவும்

18 comments:

துளசி கோபால் said...

நந்திகேஸ்வரர்தான் இன்றைய சூப்பர் ஸ்டார்.

அருமையான படம்.

சுப்புடு அவர்கள் ஆன்ம சாந்திக்கு வேண்டுகின்றேன்.

என்ன இப்படி ரெண்டு பெரிய விஷயத்தை ஒரே பதிவுலே போட்டுட்டீங்க?

இலவசக்கொத்தனார் said...

அருமையான பாடல் தந்ததிற்கு நன்றி ஐயா.

சுப்புடு அவர்களின் ஆத்மா சாந்தி அடைய எமது பிரார்த்தனைகள்.

Ms Congeniality said...

Sad to know about Subbudu..may his soul rest in peace

Photo arumaiyaa iruku..neenga describe panna vidham romba azhagaa irundhudhu :)

Om Namachivaaya

தி. ரா. ச.(T.R.C.) said...

@துளசி டீச்சர் நன்றி.நீங்கள் சொன்னபடியே தனிப் பதிவு போட்டுவிட்டேன்.

தி. ரா. ச.(T.R.C.) said...

இலவசம். நன்றி.வருகைக்கும் இரங்கலுக்கும்

தி. ரா. ச.(T.R.C.) said...

@MS C நன்றி. பாடலின் வெற்றிக்குக் காரணம் சிவனின் எளிமையான தமிழும் அதைப் பாடியாவிதமும்..

குமரன் (Kumaran) said...

கபாலீஸ்வரர் அதிகார நந்தி வாகனத்தில் வரும் அழகுத் திருக்காட்சியை கண் முன்னால் கொண்டு வந்து தந்துவிட்டீர்கள் தி.ரா.ச. மிக்க நன்றி.

Kannabiran, Ravi Shankar (KRS) said...

காட்சியை அப்படியே கண்முன் நிறுத்தும் பாடல்.
அதிகார நந்தி சேவை அற்புதம்!

நந்தி தேவர் இரு விதமாக தரிசனம் அருளுவார்.
அதிகார நந்தி என்பது - மனித உடலும், காளையார் தலையுமாக ஆனது.
கூர்ந்து கவனித்தால் இறைவனுடைய மானும் மழுவும், இன்று மட்டும் நந்திகேஸ்வரரே தாங்கி வருவார்! இப்படி இறைவனின் ஆயுதங்களைத் தாங்கும் அதிகாரம் பெற்றதால் அதிகார நந்தி.

ரிஷப வாகனமும் நந்தியே தான்! ஆனால் காளை-மனித உருவம் அல்லாது முழுதும் காளை உருவத்தில் வருவது ரிஷப வாகன சேவை!

திராச ஐயா,
அறுபத்து மூவர் செல்ல முடிந்ததா?

Geetha Sambasivam said...

நான் இரண்டு பதிவாத் தான் பார்க்கிறேன். சுப்புடுவுக்கு நிகர் சுப்புடு தான். நீங்க அவர் சிஷ்யன் என்று சொல்கிறீர்கள்! ஆனால் அந்தக் குட்டும் வழக்கம் வரவே இல்லையே? ம்ம்ம்ம், தப்புக் கண்டுபிடித்துச் சொல்ல வேண்டாமோ?

கபாலி தரிசனமும் கிடைத்தது. ஒரே பின்னூட்டத்துக்கு மன்னிக்கவும்.

Raji said...

Sir

Romba nalla pathivu sir..
Naan college padichapalaam,1st day of the college anga vandhuduvaen..
Apuram oru pradooshathukkum vandhurukkaen ...Andha kovilae superaa irukkum...Ipa naan romba miss pannuraen sir...

Unga naration nerula paartha maadhiri irundhuchu sir...

Neenga ezhudheenadha paarthu paarthu dhaan maela irukkura pic saami paarthaen..Simply superb...

//அதிகாரம் செய்வாரா//
Ennaku indha doubt irundhuchu..Ipa clear aagituchu nga Sir...

தி. ரா. ச.(T.R.C.) said...

@ராஜி 5 சார் தேவைதானா?நீ மிஸ் பண்ணக்கூடாது என்றுதானே உனக்காக அதிகார நந்தியையே கூட்டிவந்துவிட்டேன் உன்னிடம்

தி. ரா. ச.(T.R.C.) said...

நன்றி குமரன்.என்னால் முடிந்தது செய்துவிட்டேன்.யாம் பெற்ற இன்பம் இவ்வையகம் பெறுக

தி. ரா. ச.(T.R.C.) said...

@கேஆர்ஸ் வருகைக்கும் விளக்கத்துக்கும் நன்றி. எப்போது அம்பத்தூர் விஜயம் போஸ்ட்.என் வீட்டுக்கு வராமல் சென்று விட்டீர்கள்.இது முறையோ? இது தர்மம்தானோ?

தி. ரா. ச.(T.R.C.) said...

@கீதா ம்மேடம் யுஸ் போகிற அவசரத்திலும் வந்ததற்கு நன்றி.தப்பு கண்டுபிடிப்பதா. அது உங்கள் வேலை என்று அம்பி சொன்னதாக ஸ்கேஎம் சொன்னதாகக் கேள்வி

மெளலி (மதுரையம்பதி) said...

நந்திகேஸ்வர வாகனம் அருமை. நன்றி தி.ர.ச சார்.

SKM said...

Beautiful .ரொம்ப நாள் கழித்து வருவதற்கு மன்னிக்கவும்.நிதானமாக படிக்கிறேன்.

தி. ரா. ச.(T.R.C.) said...

@மதுரையாம்பதி நன்றி. மைலாப்பூர் மைலப்பூர்தான். இன்னமும் தனிக் களைதான் நகரவாழ்க்கையிலிருந்து வேறுபட்டு நிற்கின்றது.

தி. ரா. ச.(T.R.C.) said...

@ஸ்கேஎம் ஷென்னை வந்தால் மையிலையில் வீடு பாருங்கள். நன்றாக இருக்கும்.