Friday, February 15, 2008

கேள்வியும் பதிலும் பரிசும்(2)

தங்கமணிக்கு கோபம். தான் பரிசு வங்கிய நிகழ்ச்சியை பற்றி பதிவு போடாமல்
தன்னுடையதை மட்டும் போட்டுக்கொண்டதால்.ஒரு வாரமா டிபன் கட்.

விஜய் சிவாவின் கச்சேரிதான் கடைசி கச்சேரி.அன்று தலைப்பு காவேரிக் கரையினிலே.
வழக்கம்போல் நானும் தங்கமணியின் ஆஜர் ஆகிவிட்டோம். ஏற்கனவே எனக்கு வரவேண்டிய
2 ஆவது பரிசு போனதடவை யாருக்கோ போய் 3 பரிசுதான் எனக்கு வந்தது. அதுவும் கோல்டு காயினை கோட்டை விட்டது மனசே ஆறவில்லை.இந்ததடவை எப்படியும் அதை பிடித்துவிடவேண்டும் என்ற முடிவு செய்யதாகி விட்டது. ஆனால் இந்த தடைவை தங்கமணியின் அதிர்ஷ்டத்தை சோதிப்பது என்று நினைத்து செயல் படுத்தப்பட்டது.

கேள்வி இதுதான். கர்நாடக சங்கீதம் என்றாலே தமிழ்நாடு முழுவதும் பேசப்படும்போது ஏன் காவேரிக்கரைக்கு மட்டும் இத்தனை மஹிமை. எல்லா வாக்கேயர்களும், வித்வான்களும், ஆதரிப்போரும், மற்றும் ரசிகர்களும் மிகுதியாக அங்கேதான் காண்ப்படுகிறார்கள்.

தங்கமணிக்கு அடிச்சது அதிர்ஷ்டம் இரண்டாவது பரிசாக.ஒரு கோல்டு காயின்,F M ரேடியோ,டூர் பேக்,திருக்குறள் புத்தகம்.


கேட்ட கேள்வியும்,விஜய் சிவாவின் பதிலையும் தங்கமணி பரிசு வாங்குவதையும் கீழே பாருங்கள்.தங்கமணியின் அமோக ஆதரவாளர்களான அம்பி,வல்லியம்மா,வேதா,கீதாமேடம் கொஞ்சம் தலையைக் காட்டுங்கள் இல்லாவிட்டால் என் தலை அவ்வளவுதான்.

-

15 comments:

Sumathi. said...

ஹல்லோ சார்,

அட, சபாஷ். நீங்க விட்ட கோல்டு காயின தங்கமணி புடிச்சுட்டாங்க.வெரி குட். என்னோட வாழ்த்துக்களையும் சொல்லிடுங்க.

சரி, டூர் பேக்கேஜ்ல எந்த பக்கம் செலக்ட் ஆகியிருக்கு?

இலவசக்கொத்தனார் said...

நீங்க டூர் எல்லாம் போங்க. காயினை இந்தப் பக்கம் அனுப்பிடுங்க. நல்லாப் பார்த்துக்கறேன்...
;))

தி. ரா. ச.(T.R.C.) said...

@சுமதி தேங்ஸ்ம்மா! டூர் போக பைதான் கொடுத்தார்கள். நீ என்ன தானம் வாங்கிய புடவையை முழம் போட்டு பாக்கச் சொல்லுவ போலிருக்கே.தங்கமணிக்கு ரொம்ப சந்தோஷம் சுமதி உங்களுக்கு கூட சொல்லலே எனக்குச் சொன்னாங்களேன்னு.திருப்தியா? பாங்களூர்ல மின்னல்னா சென்னைலே இடி

தி. ரா. ச.(T.R.C.) said...

கொத்ஸ் காயின் வாங்குவதறக்கு நான் எவ்வளவு கஷ்டப்பட்டேன்.உனக்கு யு. ஸில் இல்லாத காயினா,கோல்டா? மங்காய்ப் பால் உண்டு மலை மேல் இருப்பவர்க்கு தேங்காய்ப் பால் ஏதுக்கடி

ambi said...

Superrrrrrrr. we saw that programme in Jaya TV also. :)))


//பாங்களூர்ல மின்னல்னா சென்னைலே இடி
//

:))))

தி. ரா. ச.(T.R.C.) said...

அம்பி வருவேன்னுதெரியும். வந்து டிபன் காபி எல்லாம் நிச்சியம் பண்ணியாச்சா! P

//பாங்களூர்ல மின்னல்னா சென்னைலே இடி
//

:))))
ஸ்மலியா போடறே அம்பி
எனக்கு ஒன்னும் இல்லை நான் இங்கே இருக்கேன். உனக்குத்தான் மொத்த கும்மியும் குத்தகை அங்கே.

நிவிஷா..... said...

நைஸ்

நட்போடு
நிவிஷா

கீதா சாம்பசிவம் said...

என்ன சார் இது? இவ்வளவு தாமதமா எழுதி இருக்கீங்க? அதுவும் அவங்க முகத்தையும் காட்டாமல், அதான் டிஃபன் கட் பண்ணி இருக்காங்க, நல்ல வேளை சாப்பாடு கட் ஆகாமல் இருந்ததே! :P

//ஒரு வாரமா டிபன் கட்.//

அம்பி வந்தாலும் இப்படியே இருக்கச் சொல்லுங்களேன், என்ன இப்பவே பிடிச்சு, ரிசர்வ் எல்லாம் பண்ணிட்டு? க்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்

தி. ரா. ச.(T.R.C.) said...

@நிவிஷா நன்றி வருகைக்கு. புது பதிவு சீக்கரம் போடு. நாங்க வருவோம்ல்லே.

தி. ரா. ச.(T.R.C.) said...

கீதா மேடம் முகத்தை டி வி க்காரங்களே மறைச்சுட்டாங்க. அம்பி இப்போ எங்க பேச்சைதட்ட மாட்டான்.வந்தா இங்கேதான் தங்குவான்.நீங்க சொன்னா மாதிரியே ஓருவாரமா சாப்பாடு கட்டு. சாப்பிடவே முடியலை ஒரு வாரமா. டாக்டரிடம் போனால் லிவர் ப்ராப்ளம்ன்னு சொல்லி இன்னிக்கிதான் முழு மெடிகல் செக்கப் பண்ணியாச்சு. நாளைக்கு ரிசல்ட் வந்தாதான் தெரியும் 1/4 லிட்டருக்கு மேல் ரத்தம் எடுத்தாச்சு.

கீதா சாம்பசிவம் said...

அட, இப்போ எப்படி இருக்கு சார்? தெரியவே தெரியாதே? ஏன் என்ன ஆச்சு? இறைவன் அருளால் நல்ல குணம் ஆகி, மீண்டும் நல்லபடியாகச் சாப்பிடப் பிரார்த்திக்கிறேன் சார். ரொம்பவே வருத்தமா இருக்கு!

தி. ரா. ச.(T.R.C.) said...

வாங்க மேடம். நன்றி உங்கள் பரிவான விசாரணைக்கு. இப்பொழுது தேவலாம் ஆனால் மெடிகல் செக்கப் ரிபோர்ட்டுக்காக காத்துக் கொண்டு இருக்கிறார்.ஆனா தங்கமணிக்கு இப்போ பிராப்ளம். இன்று மருத்துவரிடம் சென்று பார்த்தாகி விட்டது. அவரும் மூன்று நாட்களுக்கு மருந்து மெடிகல் கொடுத்து இருக்கிறார் ஆனாலும் செக்கப் போகவேண்டும் என்கிறார்.நமக்கு அதிர்ஷ்டம் கொரியரில் வந்தால் கஷ்டம் ஈ மெயிலில் வருகிறது

கீதா சாம்பசிவம் said...

:(((((((((((((((((((நிஜமா ரொம்பவே வருத்தமா இருக்கு சார், எங்க வீட்டு ரங்கமணி சொல்றார், சார் ரொம்ப அலையறார், அதான் ஒத்துக்கலை போலிருக்குனு சொல்றார். உங்க தங்கமணிக்கும் அதை நினைச்சே உடம்பு வந்துடுச்சோ என்னமோ! :((((((

sury said...

தங்கமணிக்கு -
தாங்க ஒரு மணியிருக்கையிலே
தங்கக் காசு கூட
தூசி பெறாது.

சுப்புரத்தினம்.
தஞ்சை.

மதுரையம்பதி said...

இப்போத்தான் பார்த்தேன்.