Wednesday, January 14, 2009

எண்ணத்தால் எழில் மிகும் வண்ணக் கோலங்கள்






மக்கள் மறந்ததால் மறைந்துவரும் கலை இது. பல குழந்தைகளுக்கு ஏன் சில பெரியவர்களுக்குக் கூட கோலங்கள் என்றால் டக்கென்று ஞாபகத்துக்கு வருவது இரவு சன் டீ.வியில் வரும் கோலங்கள் சீறீயல்தான்.ஆனால் இது அது அல்ல. கோலக்கலையைப் பற்றியது.மார்கழி மாதம் வந்துவிட்டாலே மகளிர் அனைவரும் வயது வித்தியாசம் பார்க்காமல் காலையிலேயே எழுந்து அவரவர் வீட்டின் முன்பு அழகிய கலர்ப் பொடிகளுடன் கோலப் போட்டியில் அசத்திவிடுவார்கள். இதில் சில சமயம் ஆண்களும் கலந்து கொள்வார்கள். கோலம்போடுவதற்கு கலர்ப் பொடிகளைவிட பொறுமை,கல்பனாசக்தி,கணக்கில் திறமை,சுறுசுறுப்புபோன்றவைகள் மிக அத்தியாவசியமானது. இது பெரும்பாலும் பெண்களிடம்தான் மிகுதியாகக் காணப்படுகிறது. அதனால்தான் இந்தக்கலையில் அவர்கள் சிறந்து விளங்குகிறார்கள்.இபொழுது இந்தக்கலை மறைந்துவரும் நிலையில் உள்ளது.அடுக்குமாடி கட்டிடங்கள் மிகுந்துவரும் இந்நாட்களில் கோலம் போடும் பெண்களும் இடமும் தட்டுப்பாடாகிவிட்டன.இந்தக்கலை அழிந்துவிடாமல் ஆதரிக்கவேண்டியது இன்றைய சமூகத்தினரின் கடமை. பெரியவர்கள் தங்கள் குழந்தைகளுக்கு இந்தக்கலையை நன்கு கற்பித்து போஷித்தால் பிற்காலத்தில் சிட்னி,ஹுஸ்டன்,டொரான்டோ போன்ற இடங்களிலாவது நம் மக்கள் கோலம் போடுவார்கள்.


8 comments:

கபீரன்பன் said...

நானும் இதைப்பற்றி எழுத யோசித்துக் கொண்டிருந்தேன், வேறொரு கோணத்தில்.

எல்லா கோலமும் நல்லா இருக்கு. இன்னும் சிடியில இவ்வளவு ஆர்வம் இருப்பதே நிலைமை கை மீறவில்லை என்பது தெரிகிறது. ஆண் பெண் வித்தியாசமில்லாமல் பள்ளிக்கூடங்களில் ட்ராயிங் வகுப்பில் இவற்றை சொல்லிக் கொடுத்தால் குழந்தைகளின் மன ஒருங்கிணைப்பு கூடும்.
பொங்கல் வாழ்த்துகள்

Sumathi. said...

ஹலோ சார்,

எல்லா கோலமும் நல்லாவே இருக்கு.நானும் கூட அந்த காலத்துல இதே மாதிரி , இதை விடவும் அழகாகவே நிறைய்ய இடம் இருந்ததால்அழகழகா போட்டு இருக்கேன்.அப்பல்லாம் இப்ப மாதிரி எங்க வீட்டுல போட்டோலாம் எடுக்கலை. (வருத்தம் தான்)ஆனா இப்ப தான் அதுலாம் கனவு மாதிரி ஆயிடுச்சு.எல்லாம் காலத்தின் மாற்றம். ம்ஹும்..

மெளலி (மதுரையம்பதி) said...

இன்றுதான் இந்தப் பதிவினைப் பார்த்தேன் திராச சார். மிக அருமையான கோலங்கள். நன்றி.

தி. ரா. ச.(T.R.C.) said...

ஹலோ சுமதி. போட்டோ எடுக்கவில்லையா? சொல்லியிருக்க கூடாதோ. போன வாரம் நான் பங்களுர் வந்த போது வந்து எடுத்திருப்பேன் இல்லே.அம்பியை வழிகேட்டால் தெரியாது என்று சொல்லிவிட்டான்.

தி. ரா. ச.(T.R.C.) said...

மௌளி. நன்றி. என்ன சார் இப்படி கவுத்துட்டீங்க. ஒரு டம்பிளர் தண்ணீகூட தரவிலை நான் வந்த போது எல்லாம் அம்பியின் போதனையா?

தி. ரா. ச.(T.R.C.) said...

கபீரன்பன். நீங்கள் சொல்வது சரிதான். இந்த கலையார்வம் உள்ளவர்களின் எண்ணிக்கை கூடுகிறது.இன்று இங்கு (சிங்கப்பூர்) சில வீடுகளுக்குச்சென்றேண் .வாசலில் அழகானகோலங்கள் வரவேற்றன.

SKM said...

You are absolutely right. Now a days kids are comfortable with chalk instead of kolapodi.they are trying atleast.thats appreciable. Belated happy New year and Happy Pongal.Forgive me for that.

//இன்று இங்கு (சிங்கப்பூர்) சில வீடுகளுக்குச்சென்றேண் // singapore?!! very good.Enjoy.

திவாண்ணா said...

கோலங்கள் அழகாதான் இருக்கு. அப்பப்ப கோல போட்டிகள் நடத்தி இதை உயிர்ப்பிக்க வேணும்.