Monday, February 23, 2009

சம்போ மஹாதேவன்சங்கர கிரிஜா ரமணன்




இன்று சிவராத்ரி.சிவனைப் பற்றி சிந்திக்கவும் அவன் புகழைபாடுவதும் அல்லது பாட்டைக் கேட்பதும் விசேஷம்.ஒரே ஒரு வில்வ இலையை ஆத்மசுத்தியோடு அர்ப்பணித்தால் போதும் ஹரண் மகிழ்ந்து விடுவான்.வேடன் கண்ணப்பனுக்கு அவனளித்த உமிழ்நீரையும்,இறைச்சியையும், அவன் காலால் செருப்படியும் பெற்றுக்கொண்டு அவனுக்கு முக்தி அளித்தநாள்.ராமானையே சிறப்பித்து வாழ்நாள் முழுவதும் பாடிய திரு.தியகராஜஸ்வாமிகள் சிவன் மீது பல பாடல்கள் பாடியுள்ளார். தருமமிகு சென்னக்கும் அவர் வந்திருந்தார்.சென்னை பிராட்வே அருகில் ஐகோர்ட்டுக்கு எதிரில் உள்ள பந்தர் தெருவில் உள்ள(இப்பொழுதும் உள்ளது)சத்திரத்தில் தங்கி இருந்தார்.அங்கிருந்து திருவெற்றியூர் போய் திருபுரசுந்தரியாகிய வடிவுடைய அம்மனின் மீது ஐந்து பாடல்கள் பாடியுள்ளார்.அதே மாதிரி குன்றத்தூருக்கு அருகில் உள்ள போரூரில் உள்ள சிவன் கோவிலில் எழுந்தருளியிருக்கும் சுந்தரேஸ்வரனின்மீது ஐந்து பாடல்களைப் பாடியுள்ளார். அவற்றில் ஒன்றுதான் பந்துவராளி ராகத்தில் அமைந்த"" சம்போ மஹாதேவ சங்கர கிரிஜா "" என்ற பாடல்.
ராகம்:-பந்துவராளி. தாளம்:சாபு

பல்லவி

சம்போ மஹாதேவ சங்கர கிரிஜாரமண...(சம்போ)

அனுபல்லவி

சம்போ மஹாதேவ சரணகத ஜனரக்ஷக
அம்போ ருஹலோசன பாதம்புஜ பக்திம்....(சம்போ)

சரணம்

பரமதயாகர ம்ருகதர தரகங்கா தரதணீ
தரபூஷண த்யாகராஜ வரஹ்ருதய நிவேச

ஸுரபிருந்த கிரீடமணி வர நீராஜிதபத கோ
புரவாஸ் ஸுந்தரேச கிரீச பராத்பர பவஹர ...(சம்போ)
சம்போ மஹாதேவா! சங்கரா! மலைமகளான பார்வதியின் அழகியமணவாளா!
கமலக்கண்ணனே, உன்னைச் சரணமடைந்தவர்களை காப்பவனே எனக்கு உன் திருவடியைதொழும் பக்தியைத் தா.

நீ பக்தர்களிடம் மட்டுமல்லாது மிருகங்களிடம் கூடதயவுடையவன்.அதனால்தான் பாம்பை தலையின் மீது ஆபரணமாக அணிந்திருக்கிறாய்.சந்திரனையும் கங்கயையும் முடி மீது வைத்து ஆனந்தத்தில் அமிழ்ந்திருக்கிறாய்.அது மட்டுமல்ல இந்த எளிய தியகராஜனின் தூய உள்ளத்திலும் நிறைந்து உறைகின்றாய்.

தேவர்களின் மணிமுடிகளில் உள்ள ரத்தினம், வைரம்,போன்ற நவரத்தினங்கள் தங்களது பாதராவிந்தங்களை சேவிப்பதால் எழும் ஒளியே தங்களுக்கு தீபராதனையாகும்,கோவூரில் கோவில் கொண்டவன்,ஸுந்தரேசனென்ற பெயருடன் விளங்குபவன்,ஆதியுமந்தமும் இல்லாத பராத்பரன்,மாயப்பிறப்பறுக்கும் மஹாதேவன்.சம்போ மஹாதேவா

பாடலை மும்பை ஜெயஸ்ரீ குரலில் இங்கே கேளுங்கள் ">

3 comments:

மெளலி (மதுரையம்பதி) said...

நல்ல பாடல் வழங்கியமைக்கு நன்றி ஐயா...

Kannabiran, Ravi Shankar (KRS) said...

சிவனிரா (சிவராத்திரி) வாழ்த்துக்கள் திராச ஐயா!
தியாகராஜர் தெலுங்கில் பாடாமல் வடமொழியில் பாடியுள்ளாரே? கோவூர் பஞ்சரத்னம் முழுதும் அப்படித் தானா?

குமரன் (Kumaran) said...

பாடலைப் படித்தேன் தி.ரா.ச. ஐயா. கேட்க முயல்கிறேன். சுட்டியிலிருந்து மிக மெதுவாக வந்து கொண்டிருக்கிறது. :-)