Monday, December 14, 2009

சனி வழி தனி வழி


ஒரு ஆறுமாதமாக எந்த வேலை எடுத்தாலும் தடங்கல், முனைப்பு இல்லை உடம்பு மிகவும் மோசமான நிலை, அலுவலக காரியங்களும் குறித்த நேரத்தில் முடிக்க முடியாமல் போனது. போதாக்குறைக்கு பொன்னியம்மா குறைவேறு என்று ரத்தத்தில் சர்க்கரையின் அளவு திடீரென்று 30௦, 600 என்று தங்கம் விலை மாதிரி ஏறிக்கொண்டு இருந்தது .


அப்பாடா அவ்வளவுதான் என்ற நினைப்பில மண்ணை அள்ளிப்போட்டது மருத்துவ அறிக்கை. உணவுக்குழாயில் இதயத்திற்கு அருகில் மூச்சுக்குழலுக்குமேல் ஒரு சிறிய பை போன்ற குழி இருப்பது கண்டு பிடிக்கப் பட்டது. அதுபாட்டுக்கு இருந்து விட்டு போகட்டுமே என்றால் சாப்பிடும் போது சில சமயம் உணவு அதில் மாட்டிக்கொண்டு மூச்சுக்குழலை மூடி மயக்கம் வந்து கீழேவிழுந்து கிருஷ்ணாம்பேட்டையா பெஸண்ட் நகரா என்ற கேள்விக்கு விடை காணும்படி ஆகிவிடுகிறது. இதனால் என்ன நான் கொஞ்சமும் கவலைப்படவில்லை(வீட்டில் இருப்பவர்களுக்குத்தனே அதெல்லாம்) பையன்,மாட்டுப்பெண், பேரன், மாப்பிள்ளை, பெண் என்று எல்லோரும் வந்து பார்த்துவிட்டு போயகிவிட்டது. பிளாக் உலக நண்பர்கள் நேரிலும் தொலைபேசி மூலமாகவும் விசாரித்தார்கள்.இவ்வளவு ஆகியும் நம்மிடம் இருக்கும் நகைச்சுவை உணர்வு மட்டும் போகவில்லை.
என்னுடைய மைத்துனியின் கணவர் காசியில் வேதம் படித்து என்னை மாதிரி லௌகிகத்தில் இல்லாமல் புனிதமான வைதீகத்தில் இருப்பவர்.ஆஸ்பத்திரிக்கு வந்து என்னைப் பார்த்துவிட்டு கேட்டார்'என்ன அத்திம்பேரே இவ்வளவு சீரியாசாக இருந்தும் எனக்கு சொல்லவே இல்லையே என்றார். நான் சொன்னேன் "அப்படியொன்றும் சீரியஸ்சாக இல்லை அப்படியிருந்தால் முதல் தகவல் உங்களுக்குத்தான் வந்திருக்கும்."

சரி வந்தவர்கள் எல்லோரும் போய்விட்டார்கள் இன்னும் ஏன் நிலைமை சரியாகவில்லை என்று பார்த்தால் வந்தவர்களில் ஒருவர் போகவில்லையாம்

சரி இவ்வளவு தூரம் நம்மை ஆட்டிப்படைப்பவர் யார் என்று விசாரித்தால் அவர் ஒன்பதில் ஒருவர். கடந்த சிலமாதங்களாகவே என்னுடன் என் வீட்டிலேயே தங்கியுள்ளார் என்றும் அவர் பெயர் சனீஸ்வரர் என்றும் தெரிய வந்தது

சரி நாம் கூப்பிடாமலேயே அழையாத விருந்தாளியாக வந்தவரைப் பற்றி அறிந்து கொள்ளலாம் என்று எண்ணம் வந்தது. அதை வலைப்பூவில் பகிர்ந்து கொள்ளவேண்டும் என்ற எண்ணமும் வந்தது.சனீஸ்வரரைப்பற்றி யார் நமக்கு கூறுவார்கள் என்று பார்த்த பொழுது என் தாயரின் நினவு வந்தது. அவள் குளித்துவிட்டு சமையல் செய்யும்போது சொல்லும் ஒரு பாடலில் சில வரிகள் ஞாபகம் வந்தது. " கடன் வேண்டி காத வழி போனாலும் கடனும் இல்லை என்று சொல்லி காலை உடையவைப்பேன் இன்றை வா நாளை வா என்றே இழுக்கடிப்பேன் இப்படியாகப் பட்ட சனீஸ்வர பகாவானின் ஸோத்திரத்தை ஒருநாளும் மறாவாமல் இருதரம் சொன்னவர்க்கு சனியொன்றும் வாரமல் சகலமும் காத்திடுவேன் பசியாது நித்தியம் பார்வதியாள் படியளப்பாள் என்று முடியும்.
இது போதவில்லை வேறு யார் இவரைப்பற்றி துல்லியமாக கூறியிருப்பார்கள் என்று யோசித்தபோது முத்துஸ்வாமி தீக்ஷதர் ஞாபகம் வந்தது. அவரையுமா சனிபகவான் விடவில்லை.

மீதி அடுத்த பதிவில்

14 comments:

மதுரையம்பதி said...

ennathu onnum illa post-la?

தி. ரா. ச.(T.R.C.) said...

Mauli you can read it now

தி. ரா. ச.(T.R.C.) said...

Mauli you can read it now

கீதா சாம்பசிவம் said...

அருமையான பதிவு, இவ்வளவு கஷ்டம் அநுபவிச்சிருக்கீங்க. ஒண்ணுமே புரியலை உலகத்திலே, சர்க்கரை தான் விலை ஏறினது உங்களாலேனு நினைச்சால் புதுசு புதுசாச் சொல்றீங்க. நன்கு கவனித்துக் கொள்ளவும். எங்கள் பிரார்த்தனைகள் உங்களுக்காக எப்போதும் தொடரும். வணக்கங்களுடன் அடுத்த பதிவுக்குக் காத்திருக்கேன்.

கீதா சாம்பசிவம் said...

பையில் உணவு அடைக்காமல் மூடிக் கொள்ளப் பிரார்த்திக்கிறோம்.

ambi said...

ஷுகருக்கு காலை வேளையில கொஞ்ச நேரமாவது நடந்தா தேவலைன்னு சொல்லி சொல்லி எங்களுக்கு அலுத்து போயாச்சு. கேட்டா தானே..? :p
முன்னுரையே அட்டகாசம். வலை பதியாமல் இருந்த உங்களையே எழுத வெச்சுட்டாரே, ரியலி கிரேட். (எல்லாம் பயம் கலந்த மரியாதை தான்). :))

இங்கயும் அதே situation தான். தங்கமணியை ஆட்டி படைக்கிறது. அதே ஹஸ்தம் தான். :(

திவா said...

நாளை ஹனுமத் ஜயந்தியா? அவர் ஒத்தரதான் ஒண்ணும் செய்ய முடியலே. அவரோட ரெகமென்டேஷன் பிடிங்க முதல்ல.
பிரார்த்னைகள் தொடரும்.
பி.கு இவ்வளோ நாள் எழுதாம இருந்தவர எழுதவெச்சாரே ஒரு நன்னி சொல்லனும் அவருக்கு! :-))

குமரன் (Kumaran) said...

அடடா. No News is good news -னு இருந்துட்டேன். இப்போது உடல் நலம் பரவாயில்லையா ஐயா?

தி. ரா. ச.(T.R.C.) said...

கீதமேடம் நன்றி. ஆனா இன்னும் கஷ்டம் முடியலை. முழுவதும் படித்துப் பாருங்கள்.

தி. ரா. ச.(T.R.C.) said...

அம்பி காத்தாலே சாயங்காலம் 2 வேளையும் நடைதான். ஒரு 50000 ரூபாய் செலவழித்து டாக்டர் சொன்னாதான் கேக்கறகுதுன்னு ஆயிடுத்து என்ன பண்ணறது. நன்றி வரவுக்கு

தி. ரா. ச.(T.R.C.) said...

வாங்க திவா சார். ஆபீஸ் பக்கத்தில் 5 ஆஞ்சனேயர் கோவில்கள் உள்ளது. அடிக்கடி போய் வருகிறேன். நன்றி தங்களின் வருகைக்கும் என் மீது உள்ள கரிசனத்துக்கும்

தி. ரா. ச.(T.R.C.) said...

குமாரன் நன்றி இப்போ தேவலாம் இருந்தாலும் இன்னும் இன்சுலின் ஊசிதான்.உணவுக்கட்டுப்பாடு, நடைப்பயணம்.இருந்தாலும் சனீஸ்வரனைப் பற்றி எழுத ஒரு வாய்ய்ப்பு

SKM said...

OMG!Ivvalo aanadhuku piragum nakkal kuraiyalai. Adhudhaan ungal trade mark.I like it. No one can beat you and geetha maami in this nakkal.Keep it up. Appdiyae nalla pillaiya do some walking and also listen to your thangamani maami,that is more important. our prayers are with you.Please take care.

தி. ரா. ச.(T.R.C.) said...

What a surprise! Sandai kozhi eppo samaathana kozhi aachu!Nakkai karanan maathiri kootavee piranthathu! walking i have not done for the past 34 years So now i started. Butsecond one "nallapillaya listen to thangamani mami" That is what I am doing for the past 34 years.athaivena niruthiralaamaannu yigikkaren. How are you and your family? Glad to note that people are interested in my welfare. thank you very much.