Sunday, March 07, 2010

பிரதோஷ மஹிமை-- 4


அன்று பிரதோஷதினம் மாலை நேரம் நெருங்கியதால் நரஹரிக்கு சிவ பூஜைக்கு நேரமாகிறதே என்ற கவலைவேறு வந்து விட்டது.வாடிக்கையாளரின் கெஞ்சலும் அதிகமாகியது.நரஹரிக்கு தொழில்மீது மிகுந்த பக்தி உண்டு. அப்போது அந்த தனிகர் சொன்னார் நரஹரியே கோவிலூக்கு வந்து பாண்டுரங்கனின் இடுப்பின் அளவை எடுத்து செய்தால் சரியாக வரலாம் என்று.அதைக்கேட்டவுடன் எப்படியாவது சிவபூஜைக்கு இடர் வராமல் இருந்தால் சரி என்று நரஹரியும் ஒரு நிபந்தனையுடன் அரைமனதுடன் ஒத்துக்கொண்டார்.

அந்த நிபந்தனை கோவிலுக்குள் வந்தாலும் கண்களை ஒரு கறுப்புத்துணியால் இறுக்கக் கட்டிக்கொண்டு வந்து சில நிமிடங்களே இருந்து அளவை மட்டும் எடுத்துக்கொண்டு சிவபூஜைக்கு திரும்பிவிடுவேன்.பாண்டுரங்கணை கண்களால் பார்க்கமாட்டேன்.சரியென்று எல்லோரும் ஒத்துக்கொண்டனர். நரஹரியும், விட்டல பக்தரும், மற்றும் ஊர் ஜனங்களும் பண்டரிநாதன் கோவிலுக்கு கிளம்பினார்கள்

கோவில் வாசலை அடைந்ததும் நரஹரி தனது கண்களை ஒரு கறுப்பு வஸ்த்திரத்தால் இறுகக் கட்டிகொண்டார்.அவரை விட்டல பக்தர் அழைத்துக்கொண்டு பாண்டுரங்கனின் விக்கிரகத்துக்கு அருகில் நிற்க வைத்து நரஹரி விட்டலனனின் இடுப்பு அளவை எடுத்துக்கொள்ளூங்கள் என்றார்.நரஹரியும் வேண்டா வெறுப்புடன் பண்டரிநாதன் மீது கைகளால் தடவி இடுப்பின் அளவை ஒரு கயிற்றின் மூலமாக எடுக்க முற்பட்டார்.

முதலில் இடுப்பை தடவும் போதுநரஹரியின் கைகளுக்குபுலித்தோல் தென்பட்டது. நரஹரி ஆச்சர்யத்துடன் தன்னை மறந்து மேலே கைகளை கொண்டு சென்று மேலும் தடவினார். இப்போது விக்கிரஹத்தின் கழுத்தில் ருத்ராக்ஷமாலை பட்டது.பின்னர் தேடும்போது வழ வழவென்று பாம்பு போன்ற வஸ்து பட்டது, மேலும் கைகளின் ஒரு புறம் டமருகம்மும், திரிசூலமும் பட்டது, மறுபுறம் மானும்,மழுவும் பட்டது.மேலும் ஆச்சர்யத்துடன் உணர்ச்சியின் மிகுதியாலும் தலையின்மீது தடவும்போது கங்கையும், பாலாசந்திரனும்,ஜடாமுடியும் பட்டது

கூடியுருந்தவர்களுக்கு ஆச்சர்யம் நரஹரி எதற்காக பண்டுரங்கனின் உடம்பு முழுவதும் தேடுகிறார் என்று.நரஹரிக்கோ வேறு விதமான நிலை. கையில் தென்பட்டதெல்லாம் சாக்ஷாத் சிவனின் அம்சங்கள் ஆனால் இவர்களோ இவனை ராமச்சந்திரனாக அவதாரம் எடுத்த
விஷ்ணு என்று சொன்னார்கள். ஒருவேளை இப்போது பிரதோஷ சமயம் அதனால் தனக்கு சிவனின் மீது உள்ள அபார பிரேமையால் மனப்பிரமையோ என்று நினைத்து மீண்டும் ஒருமுறை தடவிப்பார்க்கலாம் என்று பாண்டுரங்கனை தடவினார். ஆனல் இந்த முறையும் ருத்திரனனின் அம்சங்களே கைகளில் பட்டது.என்ன தோன்றியதோ என்னவோ நரஹரிக்கு திடீரென்று தன் கைகளினால் கண்ணைக்கட்டியிருந்த கறுப்புத்துணியை விலக்கி விக்கிரஹத்தைப் கண்களால் உற்றுப் பார்த்தார்.

என்ன ஆச்சர்யம் அவர்கண்களில் தென்பட்டவர் சாக்ஷாத் உமாதேவியுடன் சந்திரசேகரனா இல்லை இல்லை. இடுப்பில் கைவைத்துக்கொண்டு,கைகளில் சங்கம், சக்ரம், கதை, சார்ங்கம் ஏந்திக்கொண்டு கழுத்தில் வைஜயந்தி துளசி மாலையையும் அணிந்துகொண்டு ரகுமாயியுடன் பாண்டுரங்க விட்டலன் காட்சி கொடுத்தான். நரஹரிக்கு தன் கண்களையே நம்ப முடியவில்லை. மறுபடியும் கண்களை கட்டிக்கொண்டு விட்டலனைத் தடவினார். இப்பவும் அதே ருத்ர அம்சங்களுடன் சிவன்னாகவே விட்டலன் நரஹரிக்கு காட்சி கொடுத்தார். அந்தக் காட்சி எப்படி இருந்திருக்கும் என்பதை நீங்களும் கீழே உள்ள வீடியோ படத்தில் பாருங்கள் மெய்சிலிர்க்க வைக்கும்.
இப்பொழுதுதான் நரஹரிக்கு புரிந்தது பாண்டுரங்க விட்டலந்தான் தனக்காக பிரதோஷ வேளையில் ருத்திரனாகக் காட்சி அளித்தான் என்பது. கண்கட்டுகளை அவிழ்த்தெறிந்துவிட்டு தரையில் விழுந்து புரண்டு அழுதார். ஆஹா அறியாமையினால் பாண்டுரங்கன் வேறு சிவன் வேறு என்று நினைத்து பாண்டு ரங்கனை காணாமல், வணங்காமல் வாழ்க்கையை வீணடித்துவிட்டேனே.நான் பாவி என்று அலறினார்.
உடனே பாண்டுரங்கன் அசிரீரியாக நரஹரி உன்மூலமாக உலகத்துக்கு நான் வேறு சிவன் வேறு இல்லை என்பதை உணர்த்தவே இந்த என்னுடைய லீலையை நடத்தினேன்.. நீ சிவனுக்கு என்று நினைத்து செய்த பூஜை எல்லாம் என்னிடத்தில் வந்து சேர்ந்து விட்டது. எனக்குச் செய்யும் பூஜையும் சிவனுக்குப் போய்சேரும் என்றருளினார்.

(இதை எழுதுபோதுதான் அர்த்தமே சரியாகத் தெரியாமல் தினம் செய்யும் சந்தியாவந்தனத்தில் வரும் திக்தேவதா வந்தனத்தில் வரும் ச்லோகத்தின் பொருள் புரிந்தது. "ஆகாசாத் பதிதம் தோயம் யதா கச்சதி சாகரம் சர்வ தேவ நமஸ்காரம் கேசவம் பிரதி கச்சதி" எப்படி ஆகாயத்திலிருந்து வரும் தண்ணீரானது சமுத்திரத்தை சென்று அடைகிறதோ அதே மாதிரி எல்லா தெய்வங்களுக்குச் செய்யும் நமஸ்காரங்கள் கேசவனைச் சென்று அடையும் என்பதுதான் அது)உடனே அவர் செய்த அரைஞாண்கயிறு விட்டலன் விக்கிரஹத்தில் சரியாகக் பொருந்தியது.நரஹரியும் விட்டலனனின் பரம பக்தனாகி விட்டார்.பாண்டு ரங்கன் மீது நெறைய அபங்கங்கள் பாடினார். ஒரு அபங்கத்தில் கூறுகிறார் "இந்த விக்கிரஹத்தில் நீ சிவனா விஷ்ணுவா என்ற கவலையெல்லாம் எனக்கு கிடையாது எல்லா ஐஸ்வர்யங்களும் எனக்கு வேண்டாம் எனக்கு வேண்டுவதெல்லாம் உன்னுடைய அளவற்ற கருணயும் அபிமானமும் மட்டும்தான்".கீழே பாருங்கள் நரஹரி பாண்டுரங்க பக்தனாகி அபங்களைக் பாடுகிறர்


நாமும் அதே மாதிரி பாண்டுரங்கணையும் சிவனையும் போற்றும் பாடல்களைக் கேட்கலாம். முதலில் திரு. ஓ. ஸ் அருண் பாடிய பக்தஜன வத்ஸலே என்கிற நாமதேவரின் பிருந்தாவன சாரங்கா ராகத்தில் அமைந்த அபங்கம்இதோ மஹாதேவ சிவசம்போ என்ற ரேவதி ராகத்தில் அமைந்த தஞ்ஞாவூர் சங்கரன் எழுதியபாடல்.17 comments:

மதுரையம்பதி said...

அருமை திராச சார்.

நாம் வணங்குகையில் சங்கரமடத்து யதிகள் செய்யும் நாராயண ஸ்மரணையும் 'கேசவம் ப்ரதிகச்சதி' என்பதன் அடிப்படையே என்று சொல்லுவார் மஹாபெரியவர். குருவானவருக்குச் செய்யும் நமஸ்காரத்தை அவர் கேசவனுக்கு, கேசவனுக்கு என்று எடுத்துக் கொள்ளவேண்டும். அப்போதுதான் அந்த யதிக்கு கர்வம் இல்லாது இருக்கும், என்பது நியதி என்பார்.

தக்குடுபாண்டி said...

//'கேசவம் ப்ரதிகச்சதி' என்பதன் அடிப்படையே என்று சொல்லுவார் மஹாபெரியவர். குருவானவருக்குச் செய்யும் நமஸ்காரத்தை அவர் கேசவனுக்கு, கேசவனுக்கு என்று எடுத்துக் கொள்ளவேண்டும். அப்போதுதான் அந்த யதிக்கு கர்வம் இல்லாது இருக்கும்// அவருக்குத்தான் என்ன ஒரு தீர்க்கதரிசனம்!!!!!!!!

G3 said...

//இடுப்பில் கைவைத்துக்கொண்டு,கைகளில் சங்கம், சக்ரம், கதை, சார்ங்கம் ஏந்திக்கொண்டு கழுத்தில் வைஜயந்தி துளசி மாலையையும் அணிந்துகொண்டு ரகுமாயியுடன் பாண்டுரங்க விட்டலன் காட்சி கொடுத்தான். நரஹரிக்கு தன் கண்களையே நம்ப முடியவில்லை. மறுபடியும் கண்களை கட்டிக்கொண்டு விட்டலனைத் தடவினார். இப்பவும் அதே ருத்ர அம்சங்களுடன் சிவன்னாகவே விட்டலன் நரஹரிக்கு காட்சி கொடுத்தார். அந்தக் காட்சி எப்படி இருந்திருக்கும்//

Karapanai panni paakkumbodhae mei silirkkudhu.. chancae illae :))

தி. ரா. ச.(T.R.C.) said...

@மௌலி சார் நீங்க சொல்லுவது மிகவும் சரி.ஒரு துறவி எப்படி இருக்கவேண்டும் என்பதற்கு உதாரண புருஷர். யுக புருஷர். பெரியவா.

தி. ரா. ச.(T.R.C.) said...

@G3 வரவுக்கு நன்றி. விடியோ கிளிப்பை சரி செய்தாகி விட்டது. இப்போ பார் சிவனும் திருமாலும் மாறி மாறி வருவதை

தி. ரா. ச.(T.R.C.) said...

@தக்குடு இந்த போஸ்டில் ஒரு விசேஷம் என்னவென்று சொல்லு. பேர் பெற்ற போஸ்ட்.

தக்குடுபாண்டி said...

//தக்குடு இந்த போஸ்டில் ஒரு விசேஷம் என்னவென்று சொல்லு//

//பாலாசந்திரனும், ராமச்சந்திரனாக, உமாதேவியுடன் சந்திரசேகரனா, ஐஸ்வர்ய, அருண், பிருந்தா, சாரங்,//

எனக்கு தெரிஞ்ச ஒரு அன்பரோட குடும்பத்துல இவா எல்லாரும் உண்டு!!!....:)

ambi said...

அருமையான பதிவு சார்.

இசை பத்தியும் இதே மாதிரி ஒரு சீரீஸ் பதிவு போடுவீங்களா? உதாரணமா இந்த பதிவுல அபங்க் பத்தி சொல்லி இருக்கீங்க.

அபங்குக்கு இலக்கணம் என்ன?
கர்நாடக சங்கீதத்தோடு எப்படி தொடர்புடையது..?
கபீரின் தோஹாக்கள் இந்த அபங்க் கேட்டகரில வருமா..?

மன்டோதரி மாதிரி பாயிண்ட் எடுத்து குடுத்ருக்கேன். உங்களுடம் இருக்கும் அந்த புக்கையும் Refer பண்ணி எழுதுங்கோ. :))

தி. ரா. ச.(T.R.C.) said...

@தக்குடு கரெக்டா சொல்லிட்டயே. யார் அந்த மஹானுபாவன்?

தக்குடுபாண்டி said...

// யார் அந்த மஹானுபாவன்?// 'கிண்டி'விட்டு வேடிக்கை பாக்கர்துல அந்த மகானுபாவருக்கு யாரும் ஈடு கிடையாது. இப்பொ புரிஞ்சுதா???....:)

தி. ரா. ச.(T.R.C.) said...

@அம்பி. நீ பாட்டுக்கு சொல்லிட்டே. ஒருகேள்வி கேட்டதற்கே 2 பதிவு போடும்படியா ஆகி விட்டது. எழுதலாம் ஆனா யார் படிப்பா? தம்பி டான்ஸ் முடிஞ்சுதா இல்லையா? அதைபடிக்கும்போது நம்ப ரணடக்க ரண்டக்க பதிவு மாதிரி இருக்கு. ஓஅதைஎழுதியதே தம்பிதனோ?

தி. ரா. ச.(T.R.C.) said...

@தக்குடு இந்த கிண்டறது,சீற்றது,கிர்ர்ர்ர்ர்ங்குகரது இதெல்லாம் நார்த் சென்னை வேலை. மேலும் அவர் இப்போ கிண்டி விட்டு சிங்கப்பூரில் செட்டில் ஆகிவிட்டதா ஒரு செய்தி.

தக்குடுபாண்டி said...

//மன்டோதரி மாதிரி பாயிண்ட் எடுத்து குடுத்ருக்கேன். உங்களுடம் இருக்கும் அந்த புக்கையும் Refer பண்ணி எழுதுங்கோ//

மஹாபெரியவா ஒரு தடவை சதஸ் நடத்தினாராம், அப்போ சில்ப சாஸ்திரம் பத்தி ஒரு நாள் சதஸ்-ல விவாதிக்கனும்னு ஒரு பெரிய ஸ்தபதியை கூட்டிண்டு வந்தாளாம், அந்த ஸ்தபதி, நான் படிப்பறிவு இல்லாத ஆளு, என்னால மேடைல எல்லாம் பேச முடியாது அதுவும்போக இந்த சபைல பேசர அளவுக்கு எனக்கு சரக்கும் கிடையாதுனாராம். பெரியவா விடாம, நான் கேக்கர கேள்விக்கு எல்லாம் பதில் சொல்லுப்பா போறும்னு சொன்னாராம். ஒரு ஒரு கேள்வியா கேட்டு கேட்டே ஒரு சதஸுக்கு தேவையான எல்லா விஷயத்தையும் வரவச்சுட்டு, அந்த ஸ்தபதிக்கு மரியாதை செய்ய சொல்லிட்டு, அவர் ஆஞ்சனேயர் மாதிரி!னு சொல்லிட்டு சிரிச்சாராம்.

தக்குடுபாண்டி said...

//அவர் இப்போ கிண்டி விட்டு சிங்கப்பூரில் செட்டில் ஆகிவிட்டதா ஒரு செய்தி.// என்னமோ சிங்கை சிட்டிசனாவே ஆனது மாதிரி பேசரேள்! எப்படினாலும் கிண்டி வந்துதானே ஆகனும்.....:)LOL

தி. ரா. ச.(T.R.C.) said...

தக்குடு சிஙகப்பூரிலே பி ஆர்க்கு அப்பிளை பண்ணியாச்சு.கிண்டி இனிமே கெஸ்ட் ஹவுஸ்தான்.

தி. ரா. ச.(T.R.C.) said...

@தக்குடு உன்னோட பிராத்ரு பக்தியை நினைச்சா புல்லரிக்குது அதுக்குன்னு ஆஞ்சனேயரோட ஒப்பிடரது கொஞ்சம் ஓவரா தெரியலை.

மதுரையம்பதி said...

பின்னூட்டத்தை எல்லாம் பார்க்கறப்போ ஏதோ கூகிள் பஸ் செஷனுக்குள் நுழைந்த மாதிரி இருக்கு...ஹிஹிஹி