Wednesday, December 21, 2011

பரம கிருபாநிதி அல்லவோ

யாதனின் யாதனின் நீங்கியான் நோதல்

அதனின் அதனின் இலன்.

வள்ளுவர் துறவு அதிகாரத்தில் இந்தக் குறளை வைத்துள்ளார். இதனுடைய பொருள் எந்த எந்த பொருள்களினாலோ அல்லது அதன் மீது பற்றுவைப்பதாலோ நமக்கு துன்பம் வருமோ அந்த அந்த பொருள்களயோ அல்லது அதன் மீது உள்ள பற்றையோ நீக்கிவிட்டால் நமக்கு அந்தப் பொருள்களினால் வரும் துன்பம் வராது. புரியும்படிச் சொல்லவேண்டும் என்றால் சர்க்கரை வியாதி உள்ளவர்கள் சர்க்கரையையோ அல்லது அதன் மீது உள்ள அதீதப் பற்றை விட்டுவிட்டால் அவர்களுக்கு அந்தவியதியால் வரும் துன்பம் வராமல் போகும். பற்று என்று கூறும்போது வாயில் உள்ள இரண்டு உதடுகளும் சேரும் இது இயற்கை. இதோ இந்தக் குறளை கூறிப் பாருங்கள்

பற்றுக பற்றற்றான் பற்றினை அப்பற்றைப்

பற்றுக பற்று விடற்கு

ஆண்டவனிடத்தில் பற்று வைக்கவேண்டும் என்று கூறும்போது அது நல்ல பற்று என்பதை உணர்த்து வண்ணம் பலமுறை உதடுகள் சேரும்படி பற்று என்ற வார்த்தையை அதிகமாக் கையண்டிருக்கிறார் வள்ளுவர். ஆனால் இந்த "யாதனின்" குறளைக் கூறிப் பாருங்கள் உதடுகள் ஒட்டவே ஒட்டாது. பற்றை முற்றிலும் விடவேண்டிய இடத்தில் அறவே விட்டுவிட்டார்.

சரி அப்படி பற்று வைக்காமல் வாழ இன்றைய உலகத்தில் ஒரு மனிதனால் வாழமுடியுமா? முடியும் என்பதற்கு ஆதர்ச புருஷராய் திகழ்ந்தவர் ஒருவர் உண்டு.

அவர்தான் இவர்


பெரியவா என்றும் பரமாசாரியார் என்றும் உலகத்தாரால் பெரிதும் வணங்கப்பெற்ற காஞ்சி காமகோடி மடத்தின் 68 வது பீடாதிபதியாகத் திகழ்ந்த ச்ரீ சந்திரசேகரேந்திரசரஸ்வதி ஸ்வாமிகள். இன்றோடு அவர் மஹாசமாதி ஆகி 17 வருடங்கள் ஓடி விட்டன. ஆனாலும் அவருடன் இருக்குபடியான சில சந்தர்ப்பங்களைக் கொடுத்த ஆண்டவனுக்கு என் நன்றி. என் வாழ்க்கையில் ஏதாவது ஒரு சாதனை என்று ஒன்று உண்டென்றால் அது அவர் இருந்த காலத்தில் நாமும் வழ்ந்தோம் என்பதே.

அது சரி இந்த மேலே உள்ள படத்தில்  இரண்டு சிறுவர்களுக்கு மேலே நெற்றி நிறைய விபூதியுடன் அரைக்குடுமியுடன் முகத்தில் சந்தோஷம் பொங்க ஆசையோடு பெரியவாளைப் பார்க்கும் சிறுவன்யார்? இன்று கோட்டு சூட்டுப் போட்டுக்கொண்டு கௌசிகம் பதிவில் இருக்கும் இவந்தான் அது.

துறவையும் துறந்த மஹான் அவர். ஒரு துறவி எப்படி இருக்கவேண்டும் எனபதற்கு உதாரணமாய்த் திகழ்ந்தவர்

ஸ்ரீ குருப்யோ நமஹ:

தோடகாஷ்டகம்

1 விதிதாகில ஸாஸ்த்ர சுதா ஜலதே

மஹிதோபநிஷத் கதிதார்த்த நிதே 1

ஹ்ருதயே கலயே விமலம் சரணம்

பவசங்கர தேசிக மே சரணம் 11

விதிக்கபட்ட எல்லா சாஸ்த்ரங்களையும் அதன் பொருளையும்
முற்றிலும் உணர்ந்த அமிர்த கடல் போன்றவரே,
மாபெரும் உபநிஷத் கருத்துக்களின் உட்பொருளை அறிந்த நவநிதியே,

இப்படிப்பட்ட பெருமை வாய்ந்த தங்களின் அப்பழுக்கற்ற திருவடிகளை
என்னுடைய ஹிருதயத்தில் வைத்து பூஜிக்கிறேன்

அவதார புருஷராகிய ஹே காலடி சங்கர குருவே உங்களின் காலடிகளை

சரணடைகிறேன் எனக்கு அடைக்கலம் தாருங்கள்.

7 comments:

இராஜராஜேஸ்வரி said...

"யாதனின்" குறளைக் கூறிப் பாருங்கள் உதடுகள் ஒட்டவே ஒட்டாது. பற்றை முற்றிலும் விடவேண்டிய இடத்தில் அறவே விட்டுவிட்டார்

அழகான அருமையான பகிர்வுக்குப் பாராட்டுக்கள் ஐயா..

Maheshwaran said...

dear Mr. TRC,
you are indeed a noble soul to experience Mahaswamigal's kanagabhishekam stabdubg very near to Him. Thanks for sharing the photo.

Best Regards
Maheshwaran Ganapati

Geetha Sambasivam said...

புரியும்படிச் சொல்லவேண்டும் என்றால் சர்க்கரை வியாதி உள்ளவர்கள் சர்க்கரையையோ அல்லது அதன் மீது உள்ள அதீதப் பற்றை விட்டுவிட்டால் அவர்களுக்கு அந்தவியதியால் வரும் துன்பம் வராமல் போகும்.//

nalla utharanam than. unga padam nalla irukku. anal edutha santharpam? sollave illaiye?

RAMA RAVI (RAMVI) said...

மஹா பெரியவாளைப் பற்றிய அருமையான பதிவு.

நீங்களா அந்த சிறுவன்?பெரியவாளுக்கு மிக அருகில்? நிறைய புண்ணியம் செய்திருக்க வேண்டும் ஆச்சாரியர்களுக்கு கைங்கரியம் செய்ய.

மதுரையம்பதி said...

நேற்று பதிவிட நேரமில்லையே என்று நினைத்திருந்தேன்...ஜெய ஜெய சங்கர...ஹர ஹர சங்கர...

திவாண்ணா said...

கீழே இருக்கிறதுதான் என் பேவரைட் படம்! நீங்க கொடுத்து வெச்சவர்!

தி. ரா. ச.(T.R.C.) said...

பெரியவா அருகில் இருந்து பண்ணும் சேவையும் பாக்யம்தான்! எல்லாரும் அவர் அருகிலேயே இருந்துவிட்டால்............? எப்போதும் நம் உள்ளே இருக்கும் அந்தர்யாமியான மஹா பெரியவாளுக்கு, ஸத்யம், சகல ஜீவதயை, பக்தி என்ற கைங்கர்யத்தை பண்ணுவதும் பாக்யம்தான்