Monday, January 02, 2012

மார்கழி மாதக் கச்சேரி கேட்கலாமா? 2



கச்சேரியா கேண்டீனா?




யரோ சொன்னார்கள் நண்பகல்கச்சேரிக்ககெல்லாம் கூட்டம் வருவதில்லை என்று.அதெல்லாம் தப்பு சரியாக சரியான இடத்தில் பார்க்காமல் சொன்ன வார்த்தை அது.நான் நாரத கான சபா மத்யான கச்சேரிக்கு போயிருந்தேன் கூட்டம்னா அப்படி ஒரு கூட்டம் . நானும் சுத்தி சுத்திப் பார்த்தேன் ஒரு சீட் கூட கிடைக்கவில்லை உட்காருவதற்கு. ஸ்பீக்கரில்கச்சேரி பாடிக்கொண்டு இருந்தது.யாரும் சீட்டை விட்டு எழுவதாக இல்லை.ஒரு ஐடம் முடிஞ்சவுடன் அடுத்த ஐடம் ரெடியாக வந்துகொண்டிருந்தது.ரசிகர்களும் அப்படியே லயித்து அநுபவித்துக் கொண்டு இருந்தார்கள். ஆஹா பேஷ் பேஷ்ன்னு அங்கீகாரம் வேறே.


சரி இத்தனையும் எங்கே சபாஹாலுக்குள்ளேன்னு சொல்லுவேன்னு நீங்க நினச்சா அது உங்க தப்பு. இதெல்லாம் சபா ஹாலுக்கு வெளியே பின்னாடி ஞானம்பிகா கேடரிங் ஸ்டாலுக்குள்.ஹாலுக்கு உள்ளே 1000 பேர் அமரும் சபையிலொரு 20 அல்லது 25 பேர் (வித்வான்கள் கோஷ்டியும் சேர்த்து) சங்கீதத்திற்கு தங்களை அர்பணித்துக்கொண்டு இருந்தார்கள்

இனி என்னுடைய தங்கமணியின் நண்பியின் மகன் பாரத் சுந்தரின் கச்சேரியை கேக்கலாமா? இடம் நாரத கானசபா,மினி ஹால்,நேரம் மதியம் 2 மணி முதல் 4 மணி வரை.


பரத் சுந்தரைப் பற்றி ஒரு அறிமுகம். ஜெயா டி வி நடத்திய கர்நாடக இசைப் போட்டியில் முதல் பரிசை அள்ளிச்சென்றவர். வளர்ந்து வரும் கலைஙர்களில் தனக்கென்று ஒரு இடத்தை பிடித்துள்ளார்.அமைதியாக ஆனால் அனவரையும் கவரும் வண்ணம் பாடும் திறமையுடையவர். சரி இனி கச்சேரியை கேட்க போகலாம்.


மினிஹால் நிரம்பி வழிந்தது.சில பேர் நின்று கொண்டு கூட கேட்பதற்கு காத்திருந்தார்கள் என்றால் பார்த்துக்கொள்ளுங்கள். பக்க வாத்யம் திரு பரூர் அனந்த கிருஷ்னன், மிருதங்கம் திருவநந்தபுரம் பாலாஜி.



நாளை  தொடரும்

6 comments:

இராஜராஜேஸ்வரி said...

யாரும் சீட்டை விட்டு எழுவதாக இல்லை.ஒரு ஐடம் முடிஞ்சவுடன் அடுத்த ஐடம் ரெடியாக வந்துகொண்டிருந்தது.ரசிகர்களும் அப்படியே லயித்து அநுபவித்துக் கொண்டு இருந்தார்கள். ஆஹா பேஷ் பேஷ்ன்னு அங்கீகாரம் வேறே.


சுவையான பகிர்வு..
பாராட்டுக்கள்..

RVS said...

மாமா! ம். ஸ்டார்ட் ம்யூசிக்.... :-)

RVS said...

புத்தாண்டு நல்வாழ்த்துகள். :-)

RAMA RAVI (RAMVI) said...

நன்றி பகிர்வுக்கு.தொடருங்கள் கேட்க காத்திருக்கிறேன்.

Geetha Sambasivam said...

ஓட்டுப் போடுங்கப்பா! எல்லாரும்!
எங்கள் ப்ளாக் கின் இடப்பக்க மூலையில் இருக்கும் ஓட்டுப்பெட்டியிலே போய் எல்லாரும் உங்க வாக்குகளை எனக்கே, எனக்கு மட்டுமே அளிக்கும்படி கேட்டுக்கொள்கிறேன். ஒருத்தர் எத்தனை ஓட்டு வேணாப் போடலாம்னு சொன்ன எங்கள் ப்ளாக் என்னை ஒரு ஓட்டுக்கு மேல்(ஹிஹிஹி, எனக்குத்தான் அந்த ஒரு ஓட்டையும் போட்டேன், இன்னொரு ஓட்டும்போட்டுக்கலாம்னு பார்த்தா விடலை, அல்பம்)போட அனுமதிக்கவில்லை. இந்தப் பாரபட்சத்தை வன்ன்ன்ன்ன்ன்ன்ன்ன்ன்ன்ன்ன்ன்மையாகக் கண்டிக்கிறேன்.

வோட் ஃபார் எனக்கே!

சீக்கிரமாப் போய் வரிசையிலே நின்னு ஓட்டுப் போடுங்க!

”ஆரண்ய நிவாஸ்”ஆர்.ராமமூர்த்தி said...

கச்சேரியில் மிருதங்கத்திற்கு ரவை இல்லையென்றால் கூட சகித்துக் கொண்டு விடலாம்..ஆனால், காண்டீனில் ரவை(ரவா கேசரி) இல்லை என்றால் சகிக்க முடியுமா?