தைத்திங்கள் முதலாம் நாள் தான் பொங்கல் திருநாள். அந்நாளில் தான் அறுவடை செய்த புது அரிசியைக் கொண்டு பொங்கலிட்டு இயற்கையை வழிபடுவார்கள்.
பொங்கல் திருநாளுக்கு முன்பே பழைய பொருட்களை சுத்தம் செய்தும், தேவையற்ற பொருட்களை நீக்கியும், வீடுகளை சுத்தம் செய்தும், புது வர்ணம் தீட்டியும் அழகு பார்ப்பார்கள்.
இந்த நிகழ்வு ஒரு சம்பிரதாய நிகழ்வாக இருந்தாலும் கூட அது ஒரு மருத்துவத்தோடு சம்பந்தப்பட்டதாகவும் உள்ளது.
தை மாதமானது முன்பனிக் காலமாகும். மழைக்காலம் முடிந்த பின்பு பனிக்காலம் ஆரம்பிப்பதால் புதுவகையான பூச்சிகள், பாக்டீரியாக்கள், வைரஸ்கள் நோய்களை உண்டாக்கும் கிருமிகள் பல்கிப் பெருகும். இதனால் மனிதர்களுக்கும், விலங்குகளுக்கும் தொற்று நோய்களின் தாக்குதல் அதிகரிக்கும்.
வீட்டின் உள்ளேயும், வீட்டைச் சுற்றிலும் சுத்தம் செய்து, வர்ணம் பூசுவதால் மேற்கண்ட நோய்க் கிருமிகள் அழியும்.
பழங்காலங்களில் மாட்டுச் சாணத்தைக் கொண்டு வீட்டின் தரையிலும், சுவர்களிலும் பூசுவார்கள். பொதுவாக மாட்டுச்சாணம் ஒரு சிறந்த கிருமி நாசினியாகும்.
பொங்கல் அன்று வீடுகளில் அரிசிமாவுக் கோலம் இடுவார்கள். இவை எறும்புகளுக்கு உணவாகப் பயன்படுகின்றது. பொதுவாக எறும்புகள் எத்தகைய நோய்களையும் ஏற்படுத்துவதில்லை. ஆனால் அவை கண்ணுக்குத் தெரியாத பல நுண்ணுயிர்களை அழிக்கின்றன.
மாவிலைத் தோரணம் கட்டுகின்றனர். மாவிலை ஒரு கிருமி நாசினியாகும். பனிக்காலத்தில் உண்டாகும் நோய்களைத் தடுக்கும். சுவாசம் சம்பந்தப்பட்ட நோய்களை உருவாக்கும் கிருமிகளை அழிக்கும். அதுபோல் மஞ்சள் கலந்த நீரும் நோய் தடுக்கும் பொருளாகும்,.
அதுபோல் பொங்கல் அன்று பொங்கல் வைத்து முடிந்தபின் ஒருவருக்கொருவர் அன்பு பரிமாறிக்கொள்வார்கள். இது மன அழுத்தத்தை நீக்கி மனதிற்கு உற்சாகத்தை அளிக்கும் செயலாகும்.
பொங்கல் திருவிழா ஏதோ விழா என நினைத்துவிடாதீர்கள். அது உள்ளத்தையும், உடலையும் செம்மைப்படுத்தும் விழாவாகும்.
பொங்கலை நாமும் இனிதே கொண்டாடி ஆனந்தம் அடைவோம். ஆரோக்கியம் பெறுவோம்.
பொங்கல் போனஸ் கீழே
3 comments:
பொங்கல் அன்று வீடுகளில் அரிசிமாவுக் கோலம் இடுவார்கள். இவை எறும்புகளுக்கு உணவாகப் பயன்படுகின்றது. //
தினமும் அப்படித்தான்.
பொங்கல்போனஸ் நல்லா இருக்கு. தீபாவளி மாதிரிப்பொங்கலும் பேரனோடயா? நீங்க பொங்கல் சாப்பிடாமல் கண்காணிக்க இந்த ஏற்பாடோனு டவுட்ட்ட்ட்ட்ட்ட்ட்டு......
பொங்கல் திருவிழா ஏதோ விழா என நினைத்துவிடாதீர்கள். அது உள்ளத்தையும், உடலையும் செம்மைப்படுத்தும் விழாவாகும்.
பொங்கலை நாமும் இனிதே கொண்டாடி ஆனந்தம் அடைவோம். ஆரோக்கியம் பெறுவோம்.
இனிய பொங்கல் திருநாள் வாழ்த்துகள்.
நல்வாழ்த்துக்கள் திராச சார்....
Post a Comment