Monday, January 30, 2012

பீஷ்மாஷ்டமி





தன்னைக் கொல்ல ஆயுதம் ஏந்தி வருகின்றவனையும் முகமலர்ச்சியுடன் யாராவது வா.. வா.. என்று வரவேற்பவர்கள் உண்டா?

பின்னால் அவனால் கொல்லப்படும் நிலை வந்தும் அவன் தன்னைப் பார்க்க வரும்போது அவனை துதித்து 1000 பெயர்களால் புகழ்ந்து பாடியவர் யார்?ஆமாம் அப்படி வரவேற்றவரும் பாடியவரும் ஒருவர்தான்.

யார் அவர்? மேலே படியுங்கள்.







மஹாபாரதத்தில் கண்ணன் ஆயுதம் ஏந்தி போராடமாட்டேன் என்று பஞ்சபாண்டவர்களுக்கு உறுதி அளித்தார். அதன்படியே போர்க்களத்தில் இருந்தும் வந்தார். பாண்டவர்களுக்கும் கௌவுரவர்களுக்கும் பயங்கர யுத்தம் நடந்தது. கௌவுரவர்களின் சேனாபதியான பீஷ்மர் மிகவும் உக்கிரமாக போரிட்டார்.

அவ்ருடைய அம்பு மழைக்கு பார்த்தனால் பதில் சொல்ல முடியவில்லை. இப்படியே விட்டால்அவர் பாண்டவர்களை காலி செய்துவிடுவார் என்று நினைத்த கண்ணன் பார்த்தனிடம் சொன்னார்.

"அர்சுனா தாத்தாவை உடனே எப்படியாவது நிறுத்தப் பார்". தனஞ்ஜயன் சொன்னான் "என்னுடைய முழு முயற்சியும் பலனளிக்கவில்லை. என்னுடைய அம்புகளால் தாத்தாவை ஒன்றும் செய்ய முடியவில்லை.அவருடைய பராக்கிரமம் மேலும் மேலும் வளர்ந்து கொண்டே இருக்கிறது" என்றான். (நீங்கள் படித்துக்கோண்டு இருப்பது மஹாபாரதம். வேறு எதையும் நினத்து குழப்பிக் கொண்டால் நான் பொறுப்பல்ல)

பார்த்தனின் சோர்வைப் பார்த்த கண்ணனுக்கு கோபம் வந்து உன்னால் முடியாவிட்டால் இதோ நானே ஆயுதம் எடுக்கிறேன் என்று கூறி தேர்தட்டிலிருந்து இறங்கி தன் சக்கராயுதத்தை பீஷ்மர் கையில் எடுத்துக் கொண்டு பீஷ்மரை நோக்கிச் சென்றார்.

கண்ணனைக் கண்டதும் மலர்ந்த முகத்துடன்ஆயுதங்களை கீழே போட்டுவிட்டு வரவேற்றார் பீஷ்மர் "வா.. வா.. கண்ணா..வா...வா...உன்கையால் மரணமடைய காத்திருக்கிறேன்." நீயே ஆயுதம் எடுத்து வந்தபின் எனக்கு என்னகுறை" என்றார். உடனே கண்ணனுக்கு தன் சத்தியம் ஞாபகம் வந்து தேர்தட்டுக்கு வந்து சாட்டையை கையில் எடுத்துக் கொண்டான்.

பின்பு யோசித்து சிகண்டியை பார்த்தனுக்கு முன்னால் உட்காரவைத்து இருவரையும்அம்புகளைஎறியச் சொன்னார். ஆனால் பீஷ்மர் தன் சத்தியத்தை(சிகண்டிக்கு எதிராக ஆயுதம் ஏந்துவதில்லை என்பதை) மனதில் நிறுத்தி வில்லையும் அம்பையும் கீழேபோட்டுவிட்டு ,பார்த்தனது பாணங்களை ஏற்றுக்கொண்டு உடம்பெல்லாம் அம்பு பாய்ந்து கீழே விழுந்தார். வானவர்கள் பூமாரி பொழிந்தனர்.மரணப்படுக்கையில் மிகுந்த வலியுடன் கஷ்டப்படுகின்ற பீஷ்மரை பார்க்க வந்த கண்ணனை கண்டதும் பீஷ்மர் எந்த விரோதமும் பாராட்டாமல் கண்ணனை 1000 பெயர்களால் துதி செய்தார்.

தன்னைக் கொல்ல வந்த கண்ணனை யுத்தகளத்தில் பீஷ்மர் எப்படி வரவேற்றார் என்பதை ஊத்துகாடு வேங்கட கவியின் பாடல் மூலமாகக் கேளுங்கள்

பாடல் வடமொழியில் இருந்தாலும் சொற்கட்டும் தாளக்கட்டும் வர்ணணையும் மிகுந்தது. நடையும் யுத்தநடை.

ராகம்:- மோஹனம் தாளம்:- ஆதி

பல்லவி

ஸ்வாகதம் கிருஷ்ணா சரணாகதம் கிருஷ்ணா

மதுராபுரி ஸதனா ம்ருது வதனா மதுசூதனா இஹ....(ஸ்வாகதம்)





அனுபல்லவி

போகதாப்த ஸுலபா ஸுபுஷ்ப கந்த களபா

கஸ்த்தூரி திலக மஹிபா மம காந்த நந்த கோப கந்த..(ஸ்வாகதம்)





சரணம்

முஷ்டிகாசூர சாணுர மல்ல

மல்ல விசாரத குவலாயபீட

மர்த்தன களிங்க நர்த்தன

கோகுலரக்ஷ்ண ஸகல ஸுலக்ஷ்ண தேவ

ஸிஷ்ட ஜன பால ஸ்ங்கல்ப கல்ப

கல்ப ஸதகோடி அஸமபராபவ

தீர முனி ஜன விஹார மதனஸூ

குமார தைத்ய ஸ்ம்ஹாரதேவ

மதுர மதுர ரதி ஸாஹஸ ஸாஹஸ

வ்ரதயுவதி ஜன மானஸ பூஜித

இந்தப் பாடலின் மற்றொரு பொருத்தம் பாடலின் நடையும் யுத்த நடையில் உள்ளது.





இன்று பீஷ்மாஷ்டமி. பிதுர்வாக்கியபரிபாலனத்தில் ராமாரையே வென்றவர். வாழ்நாள்முழுவதும் எந்தசுகத்தையும் அனுபவிக்கதவர்.இன்று அவரை வணங்கி அவருக்கு நீர்க்கடன் அளிப்போம்

4 comments:

இராஜராஜேஸ்வரி said...

மதுர மதுரமாய் அழ்கான பயனுள்ள பகிர்வு. பாராட்டுக்கள்..

RAMA RAVI (RAMVI) said...

அருமையாக இருக்கு பதிவு. பீஷ்மர் கண்ணனை வர்வேற்ற பாடல் சிறப்பு.ஒ.எஸ்.அருண்,யேசுதாஸ் இரண்டு பேர்களுடைய குரலில் இந்தப்பாட்டை கேட்டது அருமையாக இருக்கு.

தி. ரா. ச.(T.R.C.) said...

நன்றி ராஜராஜேஸ்வரி தங்கள் வருகைக்கும் கருத்துக்கும்

தி. ரா. ச.(T.R.C.) said...

வாங்க ஆரெம்வி. இதேபாட்டை அருணாசாஇராம், சுதாரகுநாதன், சௌம்மியா எல்லோரும் பாடியிருக்கிறார்கள். எனக்கு மிகவும் பிடித்த பாட்டு.