Tuesday, June 12, 2012

சங்கீத ஜாதி முல்லை

 சங்கீதத்தைப் பற்றி எழுதி ரொம்ப நாள் ஆச்சு.எனக்கு பிடித்த ராகங்களில் இரட்டை பிறவியான லலிதா வசந்தாவைபற்றி பார்க்கலாம். முன்பெல்லாம் இரட்டை பெண் குழந்தைகள் பிறந்தால் வைக்கும் பெயராக மட்டும் இருந்த ராகம் இது.இரண்டுக்கும் வித்தியாசம் கண்டு பிடிப்பது சற்று கடினமான விஷயம்
முதல் ராகம்  லலிதா
 இதன்
 ஆரோஹனம்    ஸ ரி க ம த நி ஸ
 அவரோஹனம்   ஸ நி த ம க ரி ஸ


அருமையான வர்ஜ்ய ராகம் இது.பாடும் போது சுகமாக இருக்கும் கேட்பவர்களுக்கும் ஆனந்தம் தரும்.இதில் வசந்தா ராக சாயல் இல்லாமல் பாடுவது கஷ்டம். இதுனாலேயே ரொம்பபேர் "ரிஸ்க்" எடுக்கத் த்யங்கும் ராகம்.
இதில் மிகவும் பிரபலமாக இருக்கும் கீர்த்தனை ஹிரண்மயீம் லக்ஷிமீம் என்ற முத்துஸ்வாமி தீக்ஷதருடையது.

ஒருசமயம் தீக்ஷ்தரை அவ்ர் மனைவி தனக்கு செல்வம் வேண்டும் என்பதாற்காக தஞ்சை மன்னரைப் புகழ்ந்து அவர் மீது கீர்த்தனை இயற்றிப் பாடி செல்வத்தைக் கேளுங்கள் என்று கேட்டாளாம். அதற்கு அவர் மறுத்து மனிதரைப் பாடமாட்டேன் என்று கூறி லக்ஷ்மியின் மீது இந்தக் கீர்த்தனையை பாடினார்
ராகம்: லலிதா தாளம்: ரூபகம்

பல்லவி

ஹிரண்மயிம் லக்ஷ்மீம் சதா பஜாமி

ஹீன மானவ ஆஸ்ரியம் த்வஜாமி-----(ஹிரண்மயீம்)

அனுபல்லவி

கிரதர சம்பிரதாயம் க்ஷிராம்புதி தனயாம்

ஹரிவத்ஸ்தலாலயாம் ஹரிணீம் கரனகிஸலயாம்

கரகமலத்ருத குவலயாம் மரகத மணிமய நிலயாம்------(ஹிரண்மயீம்)
சரணம்
ஸ்வேத தீபவாஸிணீம் ஸ்ரீகமலாம்பிகாம் பராம்
பூதபவ்ய விலாசணீம் பூசுர பூஜிதாம் வராம்
மாதராம் அப்ஜமாலினீம்
மாணிக்ய ஆபரணாதராம்
சங்கீத வாத்ய விநோதினீம்
கிரிஜாம் தாம் இந்திராம்
சீதகிரண நிபவதனாம்
ஸ்ருதசிந்தாமணி சதனாம் பீடவஸனாம்
குருகுஹ மாதுலகாந்தாம் லலிதாம்---- (ஹிரண்மயீம்)


ஹிரண்யவர்ணாம் ஹரிணீம் என்று தொடங்கும் ஸ்ரீசூக்தத்திலிருந்து முதல் அடியை எடுத்து தொடங்குகிறார்.
பல்லவி
தங்கமயமான வண்ணத்துடன் ஜொலிக்கும் லக்ஷ்மியைத்தான் நான் பாடுவேன் மற்றபடி ஒருபொழுதும் நான் மனிதர்களை பாடமாட்டேன்
அனுபல்லவி
அழிவில்லாத செல்வத்தைத் தருபவளும்
பாற்கடல் பெற்று எடுத்தவளும்
மஹாவிஷ்ணுவின் மார்பில் எப்பொழுதும்
கோவில் கொண்டு இருப்பவளும்
இளம் தளிரைப் போன்ற தனது செம்பஞ்சு சரணங்களை உடையவளும்
தனது கையினில் எப்பொழுதும் இருக்கும் தாமரையினால் அந்த பூவுக்கு அழகு சேர்ப்பவளும் இடுப்பில் மரகத மணி பச்சை ஒட்யாணத்தால் அலங்கரித்துக்கொண்டுஇருப்பவளுமானலக்ஷ்மியை மட்டும் தான்
நான் எப்பொழுதும் பாடுவேன்
சரணம்
வெண்மை ஓளிவிடும் தீபத்தில் வசிப்பவளும்
பூலோகத்தில் ஸ்ரீகமலாம்பிகையாக உருவெடுத்தவளும்
சகலபூதங்களும் அமைதியாக அவளிடத்தில் உறைபவளாகவும்
தேவர்களாலும் மனிதர்களாலும் பூஜிக்கப் பெற்று வரம் தருபவளாகவும்
உலகுக்கே தாயாக விளங்குபவளாகவும் தாமரைப் பூவில் அமர்ந்தவளும்
மாணிக்கம்,வைரம், முதலான நவரத்தினங்களால் அலங்கரித்துக் கொண்டு இருப்பவளும்
சங்கீதத்தையும் வேறு வேறு வத்யங்களயும் கேட்டு சந்தோஷிப்பவளாகவும்
சந்திரனனின் குளிர்ந்த கிரணங்களைப் போன்ற முகமுடையவளும்
அழகிய சிந்தாமணி மண்டபத்தில் இருக்கும் ரத்னபீடத்தில் அமர்ந்திருப்பவளும்
குருகுஹனான முருகனுக்கு மாமனான மஹாவிஷ்ணுவின் அன்பிற்கு உரியவளும் லலிதாதேவியுமான மஹாலக்ஷ்மியைத்தவிர வேறு யாரையும் பாடமாட்டேன்
என்ன ஒரு வார்த்தை ஜாலம். இதை எனக்கு தெரிந்தவரை மொழிபெயர்த்துள்ளேன். ஆஹா எப்படிப்பட்ட வர்ணனை. இதில் முக்கியமாக கவனிக்கவேண்டியது ஓம் என்ற பிரணவகார மந்திரத்திலிருந்து "ம்" (சங்கீதத்தில் முக்கியமான) மத்யம ஸ்வரமான (ம) என்ற அம்பாளுக்கு உகந்த பீஜாக்ஷ்ர மந்திரத்தை " ஹிரண்மயீம், ஹரிணீம்,தீபவாஸிணீம்,என்று எல்லாவார்த்தைகளும் "ம்" என்று முடிவு பெறும் வண்ணம் அமைத்துள்ளது மிக விசேஷமாகும்.ஸ்ரீ சூக்தத்திலும் இதே மாதிரி "ம்" என்ற ஸ்வரம் எல்லா இடத்திலும் வரும்
லலிதா ராகத்திற்கே உரிய சுத்த தைவதத்தை முக்கியமாக வைத்து விளையாடி இருக்கிறார்.பாட்டைக்கேட்டாலே லலிதா சஹஸ்ரநாமம் கேட்டால் போல் இருக்கும்
முருகனின்பக்தரான தீக்ஷதர் இதில்முருகனின் மாமனான விஷ்ணு என்று முத்திரை வைத்துள்ளார். மற்றும் கீர்த்தனையின் ராகமான லலிதாவையும் கடைசியில் கொண்டுவ்ந்து வைத்து முத்தாய்ப்பு வைத்துள்ளார்

திருமதி. சௌமியா அவர்கள் மிக அழகாக பாடியுள்ளார் இந்தப் பாட்டை கேளுங்கள்


இந்த அருமையான அரிய ராகத்தை நமது இசைஞானி இளைய ராஜா அற்புதமாக உன்னால் முடியும் தம்பி என்ற படத்தில் கையாண்டு லலிதா ராகத்தின் அழகை செதுக்கி நமக்கு அளித்துள்ளார். ஈடு இணையற்ற படைப்பு, இதுமட்டுமல்ல இதன் சாயலுள்ள வசந்தா ராகத்தையும் இதே படத்தில் கையாண்டு இரண்டு ராகங்களின் சிறப்பையும் அளித்துள்ள பணி மகத்தானது.இப்போது லலிதாவை கேட்டு நாளை வசந்தாவைப் பார்க்கலாம்.
;

4 comments:

இராஜராஜேஸ்வரி said...

பாடும் போது சுகமாக இருக்கும் கேட்பவர்களுக்கும் ஆனந்தம் தரும் ராகமான பதிவுக்குப் பாராட்டுக்கள்..

Geetha Sambasivam said...

அருமையான பதிவு. ஏற்கெனவே இந்த ராகங்கள் குறித்துச் சொன்னாலும், இப்போ சினிமாப் பாட்டும் எடுத்துப் போட்டிருக்கீங்கனு நினைக்கிறேன்.

Suresh said...

Beautiful Shri TRC, very well written.

Shanthi said...

Nalla padhivu. well penned.