சந்திரஜோதி ராகத்தில் அமைந்த இந்த பாடல் மெலடி வர்க்கத்தை சேர்ந்தது . தியாகய்யர் பாடல் எல்லாமே ராமனிடத்தில் கெஞ்சுவது போல்தான் இருக்கும் . அதற்காகவே சஹானா,ஆஹிரி,நீலாம்பரி ,பைரவி போன்றராகங்களை மிகுதியாக கையாண்டார் . கம்பீரமான ராகமான அடாணா, காம்போதி போன்ற ராகத்திலும் பாடல்கள் மென்மையாக ஏலா நீ தயராது....(அடாணா ) எவரிமாட வினாவோ (காம்போதி)என்று இருக்கும் .இதே இவருடைய சமகாலத்தவரான கோபலக்ரிஷ்ண பாரதி அடாணாவில் பாடும்போது கனக சபாபதிக்கு நமஸ்காரம் பண்ணடி பெண்ணேன்னு மிலிடரி கமேண்டர் ஆர்டர்போல் அதிகாரமா ஒலிக்கும்.பாகாயனையா பாட்டில் தியகராஜர் கூறுகிறார் " பிரும்மாதி தேவர்களுக்கும்கூட உன்னுடைய மாயங்கள் தெரியாது என்று எனக்குநல்லா தெரியும் " இந்தபாட்டின் போதே கரகோஷம் வானைப் பிளந்தது .
அடுத்தது வந்தது ஆனந்த பைரவி . இன்னிக்கி ஜெய்ஸ்ரீயின் "சூப்பர் ஸ்பெஷல் ரவுண்டில் " எல்லாமே "மெலடி ரவுண்டு"தான். திருவாசகத்துக்கு உருகார் கூட இன்னிக்கி இவருடைய ஆனந்த பைரவிக்கு உருகிருக்கணும் , அப்படி ஒரு ராக விளக்கம் ஒருதடவை போட்ட சங்கதி மறு படி கிடையாது.கார் வைகளும் , கோர்வைகளும், நாதாஸ்வரபிடிகளும் சமானமாக் கலந்து அவையை அதிரவைத்து விட்டார்.
எடுத்த பாட்டோ " ஓ ஓ ஜகதம்பா" என்ற ஸ்யமாசாஸ்த்ரி கிருதி . கேட்கவா வேண்டும் மெலடிக்கு .சபையில் பூரண நிசப்தம் ,ஆனால் மேடையில் சம்பூர்ணநாத சப்தம். சப்த பிரும்ம மயீம் பராபரமயீம் ஆனந்தபைரவிமயீம்தான்.என்ன ஒரு சமர்ப்பணம் . சிட்ட ஸ்வரங்களும் கல்பனா ஸ்வரங்களும் சேர்த்து கலக்கு கலக்கிவிட்டார். பாடல் முடிந்ததும் சபையோரின் கரகோஷம் முடியவே 5 நிமிஷம் ஆச்சுன்னா எப்படி இருந்து இருக்கும் என்று கற்பனை செய்து கொள்ளுங்கள் . பக்கத்தில் இருந்த சிகப்பு டி ஷர்டைப் பார்த்தேன் . இவ்வளவு கைதட்டலுக்கும் மரியாதை கொடுக்காமல் நல்ல டீப் மெடிடேஷன்
மத்திய நிதி மந்திரி கலந்து கொள்ளும் கூட்டத்துக்கு போக வேண்டும் எனவே நாளைக்கும் வாருங்கள் மீதி கச்சேரியைக் கேட்க !!!!!!!!!
2 comments:
அங்கே ஐரோப்பியப் பயணம் தான் பாதியிலே நிக்கிறதுன்னா இதுவுமா? :P:P:P:P
மேடையில் சம்பூர்ணநாத சப்தம். சப்த பிரும்ம மயீம் பராபரமயீம் ஆனந்தபைரவிமயீம்தான்.என்ன ஒரு சமர்ப்பணம்
அழகான தேவ கான்மாய் ஒரு அருமையான பகிர்வு..பாராட்டுக்கள்..
Post a Comment