சொற்களும் அறியேன் சொற்களின் பொருளும் அறியேன். கவிதையும் அறியேன் உரை நடையும் அறியேன் ஆறுமுகங்களுடைய முருகன் ஒளிவெள்ளமாக என் இதயத்தில் புகுந்து நிலையாக அங்கேயே இருப்பதால் சொல்லும் பொருளும் அவனருளல் தானாகவே வெளிப்படுகிறது தானம்செய்தும் அறிகிலேன் தவங்கள்செய்தும் அறிகிலேன் ஆனவன்பரான பேர்க்கு அன்னமிட்டும் அறிகிலேன் தேனமர்துழாய்கொண்டு உன்னைச் சிந்தைசெய்தும் அறிகிலேன் நானறிந்ததொன்றுமில்லை ராமராமராமனே!
Friday, May 24, 2013
பக்தர்களுக்கு பற்று அற்றவர் (பரமாச்சாரியார்) பிரதேசத்திலும் துணை--- இது கதை அல்ல நிஜம் 4
Hergiswil வந்து இறங்கினோம் அங்கே இருந்து வேறு ரயில் பிடித்து இண்டெர்லேகன் போக வேண்டும். ஸ்டேஷனில் எல்லோரும் இறங்கினால் ஜேஜே என்று கூட்டம் அலை மோதியாதா அதான் இல்லை நாங்க 9 பேர்தான் கூட்டமே .எங்களை இறக்கி விட்ட ரயில் கிளம்பி சென்று விட்டது'. குளிரான குளிர் எனவே அங்கே இருந்த கண்ணாடி அறைக்குள் சென்று அடுத்த ரயிலுக்காக காத்திருந்தோம்.எங்களைத்தவிர ஒரு ஈ காக்கா கிடையாது .அத்வானம்தான்.
உட்காந்து சிரமபரிகாரம் பண்ணாலாம் என்று உட்காரும்போதுதான் எதோ ஒன்று குறைவது போல் ஒரு உணர்வு. அப்போதுதான் தெரிந்தது என் கையில் வைத்திருந்த என்னுடைய கைப்பையைக்காணவில்லை என்று .
அதை எங்களை இறக்கி விட்ட ரயிலிலேயே விட்டுவிட்டேன்.அதில் ஒன்றும் அப்படி முக்கியமான பொருள்கள் இல்லை எல்லாருடைய பாஸ்போர்டுகள், யுரோபியன் விசா ,25000யுரோ டாலர்கள் 15,55 000 ரூபாய்கள்) மட்டும்தான் இருந்தது. அருணிடம் சொன்னேன். எனக்கு கண்கள் இருட்டிக்கொண்டு தலை சுற்ற ஆரம்பித்தது .எல்லாருக்கும் என்ன செய்வது என்று தெரியவில்லை. ஸ்டேஷன் மாஸ்டரிடம் சொல்லலாம் என்று பார்த்தால் அங்கு யாருமே கிடையாது.
இனி நாளை தொடரும்
Subscribe to:
Post Comments (Atom)
2 comments:
ஹிஹிஹி, சஸ்பென்ஸ் வைச்சாலும் நல்லபடியா முடிஞ்சிருக்கும்னு தெரியுது. இல்லாட்டி இதை எழுதி இருக்க மாட்டீஙக்ளே. :))))
அதில் ஒன்றும் அப்படி முக்கியமான பொருள்கள் இல்லை எல்லாருடைய பாஸ்போர்டுகள், யுரோபியன் விசா ,25000யுரோ டாலர்கள் 15,55 000 ரூபாய்கள்) மட்டும்தான் இருந்தது. அருணிடம் சொன்னேன். எனக்கு கண்கள் இருட்டிக்கொண்டு தலை சுற்ற ஆரம்பித்தது .எல்லாருக்கும் என்ன செய்வது என்று தெரியவில்லை. ஸ்டேஷன் மாஸ்டரிடம் சொல்லலாம் என்று பார்த்தால் அங்கு யாருமே கிடையாது.
பை கிடைத்ததா??
Post a Comment