Friday, May 24, 2013

பக்தர்களுக்கு பற்று அற்றவர் (பரமாச்சாரியார்) பிரதேசத்திலும் துணை--- இது கதை அல்ல நிஜம் 5


இவர்களுக்கு பயம் எனக்கு இந்த மாதிரி சமயங்களிலில் ரத்தம் திக்காகி உறைந்து மயக்கம் வந்துவிடும். வர ஆரம்பித்தது. மகனோ சரி வரும் வண்டியை பிடித்து இண்டர்லேகன் போய் புகார் கொடுக்கலாம் என்றான். வேறு ஒன்றும் செய்ய முடியாத நிலை.

எனது மனம் கவலை எனும் இருள் சூழ்ந்தால் எவரிடம் எப்போதும் இப்போதும் முறையிடுவேன் அவர்தான் பரமாச்சாரியார் .

வாய் என்னை அறியாமல்" ஸ்ருதி ஸ்மிருதி புராணானாம் ஆலயம் கருணாலயம் நமாமி பகவத்பாத சங்கரம் லோக சங்கரம்.ஜகதாம் குருவர்யஞ்சகாமகோடிதிவம் சிவம் ஸ்ரீ சந்தரசேகரம் குரும் ஸ்மராமி."

என்ற ஸ்லோகத்தை ஜபம் செய்ய ஆரம்பித்தது

சற்று நேரத்தில் நாங்கள் செல்ல வேண்டிய ரயிலும் வந்தது. ஒரு நிமிஷம்தான் நிற்கும்.எல்லார் முகத்திலும் ஒருவித நெருக்கம், பயம்.விசா பாஸ்போர்ட் பணம் இல்லாமல் எப்படி பயணத்தை தொடருவது என்று .எனக்கும் என்மேலேயே நம்பிக்கை குறைத்து.எனது கர்வம் மறையத்துவங்கியது . ஸ்விஸ்ர்லேண்டில் பரமாச்சார்யார் நம்மை காப்பாத்துவாரா. எப்படி முடியம் இத்யாதி யோசனைகள்.மனதில் ஓடியது .அப்போது அந்த அதிசயம் நடந்தது..

அந்த ரயிலின் கார்ட் எங்களை நோக்கி வண்டியை விட்டு இறங்கி வந்து . நிங்கள் இந்தியர்கள்தானே என்றார். . ஆமாம் என்றோம் . நிங்கள் எதையாவது தொலைத்து விட்டீர்களா என்றார். ஆமாம் என்றோம். அவர் உடனே சீக்கிரம் ஏறிக்கொள்ளுங்கள் வண்டி கிளம்பிவிடும் என்று அவசரப்படுத்தினார்..நாங்கள் அனைவரும் வண்டியில் ஏறிக்கொண்டோம் . எங்களது சீட்டில் அமர்ந்த பிறகு அந்த கார்ட் எங்களிடம் வந்தார். வந்தவுடன் .நீங்கள் தொலைத்தா பொருள் என்னது என்று கே ட்டார். நான் சொன்னேன் கைப்பை என்று. அடயாளம் சொல்ல முடியுமா என்றவுடன் நான் கருப்பு நிற ஹான்ட் பேக் இண்டியன் பேங்க் .என்று போட்டு இருக்கும் என்றும் சொன்னேன்.அவர் உடனே எங்களிடம் என்னுடைய கைப்பையை காண்பித்து இது உங்களுடையதா பாருங்கள் என்றார்.அவர் காட்டியது பை மட்டும் அல்ல என்னுடைய உயிரையே காண்பித்தது போல இருந்தது .பையை என்னிடம் கொடுத்துவிட்டு எல்லா சரியாக இருக்கிறதா என்று பார்த்துக்கொள்ளுங்கள் என்றார்.. பார்த்ததில் எல்லாம் சரியாக இருந்தது வேறு எப்படி இருக்கும் . எனக்கு ஒன்றுமே புரியவில்லை.மயக்க நிலையில் இருந்தேன்.என் கண்களுக்கு அவர் GUARD ஆக தெரியவில்லை நான் வணங்கும் GOD பரமசார்யார் ஆகத்தான் தெரிந்தார்.மகானிடம் பரிபூரண சரணாகதி அடைந்தவர்களை அவர் என்றுமே மறந்ததுமில்லை, கைவிட்டதுமில்லை.

மகானிடம் பரிபூரண சரணாகதி அடைந்தவர்களை அவர் என்றுமே மறந்ததுமில்லை, கைவிட்டதுமில்லை.

அன்று என்னைக் காத்ததோடு இல்லாமல் எனக்குள் இருந்த என் மமதையும் கர்வத்தையும் அடக்கினார்

மகானிடம் பரிபூரண சரணாகதி அடைந்தவர்களை அவர் என்றுமே மறந்ததுமில்லை, கைவிட்டதுமில்லை.மகானிடம் பரிபூரண சரணாகதி அடைந்தவர்களை அவர் என்றுமே மறந்ததுமில்லை, கைவிட்டதுமில்லை.

 


மீதி அடுத்த பகுதியில்

2 comments:

இராஜராஜேஸ்வரி said...

மகானிடம் பரிபூரண சரணாகதி அடைந்தவர்களை அவர் என்றுமே மறந்ததுமில்லை, கைவிட்டதுமில்லை.

சத்தியமான வரிகள்..!

kannabiran, RAVI SHANKAR (KRS) said...

இருள் சூழின்
அருள் வேண்டி
முறையிட்டுத் தானே ஆக வேண்டும்?

உங்கள் முறையீடு,
வண்டி உறையீடு பெற்று,
அலுவலர் உரையீடும் பெற்று,
குறையீடு களைந்து,
நிறையீடு பெற்றது நன்று!

வாழ்க சுவாமிநாதன் முறையீடு திராச!

//வாய் என்னை அறியாமல்
ஸ்ருதி ஸ்மிருதி புராணானாம்
ஆலயம் கருணாலயம் நமாமி
பகவத்பாத சங்கரம் லோக சங்கரம்
ஜகதாம் குருவர்யஞ்ச காமகோடிதிவம்
சிவம் ஸ்ரீ சந்தரசேகரம் குரும் ஸ்மராமி//

இதுக்குப் பொருள் என்ன? -ன்னு அறியத் தாருங்களேன்.