நாம் இதுவரை ஒரு பணம் முதலீடு செய்த பங்குதாரராக மட்டும்தான் இருந்தோம் என்பது.அது மட்டும் இல்லை கூட்டு வியாபாரத்தில் சேர்த்துக் கொண்ட "மைனர்" பங்குதாரர் மாதிரிதான் இருந்தோம் என்பதும் தெரியவருகிறது.அதில்"மைனருக்கு' லாபத்தில் மட்டுமே பங்கு உண்டு,நஷ்டம் வந்தால் அதை மற்ற "மேஜர்' பார்ட்னர்தான் ஏற்றுக்கொள்ளவேண்டும். அதுதான் சட்டம்.
அது என்னவோ என்வரை உண்மைதான்.எனக்கு எந்தவிதமான கவலையும் கிடையாது இந்த குடும்ப வியாபாரத்தில்.வீட்டை கவனிப்பது,குழந்தைகளை வளர்ப்பது,படிக்க வைப்பது,காலேஜில் சேர்ப்பது எல்லாம் "மேஜர்" பார்ட்னர் வேலைதான். வேலைக்கும் போய்க்கொண்டு, வீட்டயும் கவனித்துக் கொள்வது மிகவும் சிரமமான வேலை.இதில் என் உபஹாரமாக எனக்கு ஐந்துஆக்சிடென்ட்,இரண்டு தடவை இதயக்கோளாறு ஹாஸ்பிடலுக்கும் வீட்டிற்கும் அலைச்சல்,கவலை,எல்லாம் போனஸாகக் கொடுத்ததுதான்.
இதையெல்லாம் பார்க்கும்போது நினைவுக்கு வருவது நம் பாரதியின் கவிதை வரிகள்தான் சில மாற்றங்களுடன்.
பெற்றுவரும் நன்மையெல்லாம் பேசி முடியாது கண்ணை இமையிரண்டும் காப்பதுபோல், என் குடும்பம் வண்ணமுறக் காக்கின்றான் வாய்முணுத்தல் கண்டிறியேன் வீதி பெருக்குகிறான்; வீடு சுத்த மாக்குகிறான்; தாதியர்செய் குற்றமெல்லாம் தட்டி யடக்குகிறான்; மக்களுக்கு வாத்தி, வளர்ப்புத்தாய், வைத்தியனாய் ஒக்கநயங் காட்டுகிறான்; ஒன்றுங் குறைவின்றிப்
பண்டமெலாம் சேர்த்துவைத்துப் பால்வாங்கி மோர் வாங்கிப் பெண்டுகளைத் தாய்போற் பிரியமுற ஆதரித்து நண்பனாய், மந்திரியாய், நல்ல சிரியனுமாய், பண்பிலே தெய்வமாய்ப் பார்வையிலே சேவகனாய், எங்கிருந்தோ வந்தான், இடைச்சாதியென்று சொன்னான்.
இங்கிவனை யான் பெறவே என்னதவஞ் செய்து விட்டேன்! கண்ணன் என தகத்தே கால்வைத்த நாள்முதலாய் எண்ணம் விசாரம் எதுவுமவன் பொறுப்பாய்ச் செல்வம், இளமாண்பு, சீர், சிறப்பு, நற்கீர்த்தி, கல்வி, அறிவு, கவிதை, சிவ யோகம், தெளிவே வடிவாம் சிவஞானம், என்றும் ஒளிசேர் நலமனைத்தும் ஓங்கிவரு கின்றன காண்! கண்ணனைநான் ஆட்கொண்டேன்! கண்கொண்டேன்! கண்கொ ண்டேன்! கண்ணனை யாட்கொள்ளக் காரணமும் உள்ளனவே!இதில் கண்ணனுக்குப் பதிலாக நம்ப 'மேஜர் பார்ட்னர்" பெயரைபோட்டுவிட்டால் சரியாக இருக்கும் என்று நினைக்கிறேன்
இந்த நாள் இனிய நாள்தானே.
இந்த நாளுக்காக என்மகனும் மருமகளும் சிங்கப்பூரிலிருந்து வாழ்த்தி அனுப்பித்த விநாயகரைப் பார்த்ததும் எழுந்த நினைவு அலைகள்.......