திருகடவூரில் காலசம்ஹாரமூர்த்தியின் சக்தியாகத் திகழ்பவள்பாலம்பிகை. அமுதகடேஸ்வரரின் ஷக்தியாக்த் திகழ்பவள் அபிராமி.திருக்கடவூர் என்பதுஅஷ்ட விரட்டத் தலங்களுள் ஒன்று. சிவன் வீரச்செயல் புரிந்த இடங்கள் எட்டு. அவற்றுள் காலனை காலால் உதைத்து அவனுடைய மமதையை ஸ்ம்ஹரித்துக் காலஸம்ஹார மூர்த்தியாக வடிவெடுத்த தலம் திருக்கடவூர். பாற்கடலைக் கடைந்து எடுத்து அமிர்தத்தைப் பகிர்ந்துகொள்வதற்காகத் தேவர்களும் அசுரர்களும் மாஹேஸ்வரனிடம் விண்ணப்பிக்க மஹாதேவனும் அமிர்தகடத்தை மானும் புலியும் பகையின்றி நட்புறவோடு நீர் உண்ணும் நிலையில் வைத்துப் பின்ண்ணக் கட்டளையிட , அவர்களும் அவ்வாறே பிஞ்சிசிலவனம் எனும் தலத்தில் அதனை வைத்துவிட்டு அனுஷ்டானத்திற்காகச் சென்றனர். திரும்ப வந்து பார்த்தபோது அமிர்தகடமானது சிவலிங்கமாக உருவெடுத்துப் பிஞ்சில வனத்திலேயே அமிர்தகடசே மூர்த்தியாகப் பிரதிஷ்டையானது அமுதம் தேவர்களும் அசுரர்களுக்கும் மட்டுமின்றி பக்தியுடன்வந்து தொழும் அடியவர்களுக்கும் பகிர்ந்தளிக்கப்படவேண்டும் என்பதே அவன்நோக்கம்.பிஞ்சிலம் என்றால் ஜாதிப் பூ என்று பொருள். இதுவே அமிர்தகடம் ஸ்தாபனம் ஆனதால் திருகடவூர் என்று ஆனது.
மிருகண்டு முனிவருக்கு பல காலம் மகப்பேறு இல்லாமல் இருக்க அவர் சிவனிடம் வேண்டியபோது 16 ஆண்டுகளே வாழக்கூடிய மார்க்கண்டேயரைப் மகனாகப் பெற்றார். அமுதகடேஸ்வரரிடம் அகலாத பக்திகொண்ட மார்கண்டேயரைப் பதினாறு வயதான பின்பு இழுத்துச்செல்ல காலதேவன் வந்தபோது மார்கண்டேயர் அமிர்தகடேஸ்வரரை கட்டிக்கொண்டார்.பாலகன் மீது காலன் பாசக்கயிற்றை வீச அது அமிர்தகடேஸ்வரரையிம் சேர்த்து பிணத்தது.அதனால் வெகுண்டெழுந்த சிவபெருமான் அர்த்தநாரீஸ்வரர் கோலத்தில் தமது இடது காலால் காலனை உதைத்து ஸ்ம்ஹாரம் புரிந்து மார்க்கண்டேயரைக் காத்தார். மார்க்கண்டேயருக்கு "என்றும் பதினாறு" என்ற சிரஞ்சீவி வரன் அளித்த தலம் திருக்கடவூராகும்.
காலன் தனக்கிட்ட கட்டளையைத்தான் செய்தான் பின்பு அவனுக்கேன் இந்த முடிவு.அவன்செய்த தவறு பாசக்கயிற்றை மார்கண்டேயன் மட்டுமல்லாது சிவனின் மீதும் பினைத்ததால் வந்த துன்பம் அது.அதிகார துஷ்பிரயோகத்தால் வந்த வினை.சுப்ரமணிய சர்மாவின் கதையை அடுத்த பதிவில் பார்ப்போம்.