Showing posts with label புத்தாண்டு 2008. Show all posts
Showing posts with label புத்தாண்டு 2008. Show all posts

Tuesday, January 08, 2008

புத்தாண்டு சபதம்


புத்தாண்டு சபதம் போடவேண்டுமாம் அம்பத்தூரிலிருந்து ஆர்டர். தலைவி பேச்சைத் தட்டவாமுடியும்.சரி முதலில் நான் என்ன சபதம் எடுக்கவேண்டும் என்று தங்கமனியின் ஆசையைச் சொல்லிவிடலாம்.

இதில் எல்லாமேஎன்நலம் கருதித்தான்

தினமும் காலை 5 30 மணிக்கு எழுந்து எதிரே இருக்கும் ரேஸ்கோர்ஸ் மைதானத்தில் வாக்கிங் போகவேண்டும்..

லேப் அடியில் எப்பொழுதும் அதுவும் ராத்திரி 12 மணிவரை உட்க்காரக்கூடாது.

ஆபீஸ்க்கு ஸ்கூட்டரில் செல்லக்கூடாது..

ஆபீஸிலிருந்து 7 மணிக்குள் வந்து விடவேண்டும்.

டூர் செல்லுவதை குறைத்துக்கொள்ள வேண்டும்.

மாத்திரையை தினமும் மறக்காமல் சாப்பிடவேண்டும்

இதில் ஒன்றைக்கூட நான் சரிவரசெய்வதில்லை. இவை எல்லாம் என்நன்மைக்காக என்றாலும் இனிமேலும் செய்வேனா என்பதும் சந்தேகமே.

நான் எடுக்க நினைக்கும்/செய்யாமல் இருக்கப் போகும் சபதங்கள்.

தினமும் டைரி எழுதவேண்டும்

உள் குத்து இல்லாமல் பின்னுட்டம் இடவேண்டும்.

மகன் மருமகள் அன்பு அழைப்பை ஏற்று சிங்கை சென்று இருக்கவேண்டும்.

தணிக்கை சம்பந்தமாக நல்ல ஆங்கில பதிவுகள் இடவேண்டும்.

பண்டரிபுரமும்,ஷிர்டியும் போகவேண்டும்

பாங்களூர் போகும்போது நிச்சியம் அம்பி வீட்டுக்கு போக வேண்டும்

போதுமா சபதங்கள் .இதையெல்லாம் செய்யவைக்கும்படி இன்று பிறந்தநாள் கொண்ட்டாடும் ஆஞ்சநேயர்தான் நடத்திக் கொடுக்க வேண்டும்..

புத்திர்பலம் யசோதைர்யம்

நிர்பையத்வம் அரோகதா

அஜாட்யம் வாக்படுத்வம்ச

ஹனுமத் ஸ்மரணாத்பவேத்
ராமனைப் போற்றிப் பாடிடும் நேரம் ரகசியமாய் வருவான்
கைத் தாளங்கள் போட்டு ஆனந்தமாக மனங்குளிர்ந்தே மகிழ்வான்
கண் மடல் மூடிமெய் மலர் சூடி செவி மடல் திறந்திடுவான்
நாதனின் காதை யாவும் கேட்டு விழி மழை சொரிந்திடுவான்
கோமகனாக வாழ்ந்திடும் சீலன் கோயில் நாம் அடைவோம்
கோசலை ராமன் நாமத்தைப்பாடி அவனருள் வேண்டிடுவோம்
வீழ்ச்சியை மாற்றி மீட்சிகள் சேர்க்கும் பாடிடு அவன் மகிமை
வான் மழை போல பூமழை வார்க்கும் மாருதி அவன் கருணை





















Monday, December 31, 2007

புத்தாண்டே வருக



நல்லது தீயது நாமறியோமே நல்லதை நாட்டுக, தீயதை ஓட்டுக வாழ்க வளமுடன்


-