சும்மா இருக்கிற சங்கை ஊதி கெடுத்தவர் வல்லியம்மா. நான் பாட்டுக்கு ஏதோ எனக்கு தெரியாத விஷயங்களைத் தெரிந்த மாதிரி எழுதிக்கொண்டு இருக்கிறேன், இருந்தாலும் ஏதோ பிளாக் உலகினர் பெரிய மனது செய்து படித்து வருகின்றனர். இதிலே எழுதினதிலே நல்லதா மூன்று தேர்ந்து செய்து போடனுமாம்.இதைவிட நான் போட்டதிலேயே மோசமான பதிவு போடச்சொல்லியிருந்தால் மொத்தப் பதிவையும் ஒட்டு மொத்தமா போட்டிருப்பேன். போடம இருந்தலும் நம்மளை போட்டுருவாங்க போல இருக்கு. சரி போட்டு விடுகிறேன்.
முதல் பதிவு இரு குருவிகளைப் பார்த்ததும் மனதில் எழுந்த எண்ணங்களைபதிவாக பதித்தேன். சுமராக வந்தது. வலை உலகில் எனக்கு ஒரு நுழைவைத் தந்தது. ஆகவே இதுதான் முதல் தேர்வு.நம்ப முடியவில்லை ஆனால் உண்மை அதற்குப் பிறகு நான் சென்னையில் குருவிகளையே பார்க்கமுடியவில்லை. செல்போன்களின் எண்ணிக்கை அதிகமானதால் அதனுடைய கதிர் வீச்சில் பாதிக்கப்பட்டு பறக்க முடியாமல் அழிந்து விட்டன என்கிறார்கள்.
1) http://trc108umablogspotcom.blogspot.com/2006/07/blog-post_04.html#comments
இரண்டாவது பதிவு மணநாளன்று போட்டது. தங்கமணியின் அருமை தெரிந்த பதிவு. உண்மையை உணர்த்திய பதிவு
(2)http://trc108umablogspotcom.blogspot.com/2006/11/blog-post_16.html
கீதாமேடத்தின் அழைப்பின்பேரில் எட்டு போடப்போய் அதுவே நகைச்சுவையுடன் அமைந்தது அதிசயம்தான்.கீதாமேடமே தேவலைன்னு சொன்ன பதிவு மூன்றாவதாக அமைகிறது
(3)http://trc108umablogspotcom.blogspot.com/2007/06/blog-post_28.html
அமாம்அம்பிநீசொன்னதும்தான் ஞாபகத்துக்க்கு வந்தது. சங்கீத
ஜாதி முல்லை என்ற தலைப்பில் சங்கீத காமெடியும் நல்ல வரவேற்பை ஏற்றது.
(4)http://trc108umablogspotcom.blogspot.com/2006/09/3.html