Sunday, September 30, 2007

கந்தசாமி(2)


திரு.சுசி கணேசனுடையமுழுஈடுபாட்டையும் இந்த "டைடில்" விளம்பரத்தில் காணலாம். பஸ் டிக்கெட்டைப் பாருங்கள். படத்தின்
பெயரை அதில் காணலாம். மிகவும் சரியாக டிக்கெட்டில் பின் இருக்கும் இடத்தில் கோணல் மாணலாக கிழிந்திருக்கிறது."ஸ்டேஜ்' கிழிக்கப்பட்டிருக்கிறது.நெம்பரும் தலைகீழாகத் தெரிகிறது. இரண்டக மடிக்கப்பட்டு இருக்கிறது.இது போன்ற சிறிய விஷயங்களைக்கூட நேர்த்தியாக கவனித்து செய்து இருக்கிறார்.

நானும்தங்கமணியும்விழாவுக்கு5.30 மணிக்கேகிளம்பிவிட்டோம்.தேவி பராடைஸ் அரங்கமே அதிர்ந்து கொண்டு இருந்தது.கணேசனின் குடும்பத்தினரோடு எங்களுக்கு இருக்கை. அமர்ந்து கொண்டு வந்தவர்களை கணக்கெடுத்துக்கொண்டு இருந்தேன்.வந்தவர்கள் டைரெக்டர்கள் ஷங்கர்,ஸ் ஏ சந்திரசேகர்,கே ஸ் ரவிகுமார், ராமநாரயாண்,மற்றும் வைரமுத்து,ஒய் ஜி மஹேந்திரா,அப்பாஸ், அருண்விஜய்,திரையுலக பிரமுகர்கள் கூட்டம்தான்.சுசி. கணேசன் டென்ஷனோடு பரபரப்போடு அங்கும் இங்கும் அலைந்து கொண்டு இருந்தார். சரியாக 6.30 மணிக்கு ஆனந்த கண்ணனும் சுப்பிரியாவும் சன் டி வி சார்பில் வணக்கம் சொன்னார்கள்.

கந்தசாமி என்று பலத்த சப்தத்துக்கு இடையில் வ்ந்தார் கதாநாயகன் விக்ரம் சூட்டும் கோட்டும் அணிந்து மிகவும் இளையவராக டெரைலர் பாட்டை பாடியவண்ணம். பின்பு ஷெரேயாவும் ஒருபாடலுக்கு ஆடினார்.டிஜிடல் பானரில் விக்ரம் வானத்துக்கும் பூமிக்குமாக பல வேடங்களில் தூள் கிளப்பினார்.


இந்த விழாவில் பேசும்போது சுசி. கணேசன் கூறினார். படத்தின் சிறப்பு அம்சமே ஏழை பணக்காரன் வித்தியாசத்தின் விளவுகளை புதிய பார்வையில் சொல்லுவதுதான்.இதில் சிறப்பாக நடிக்கவும் பாத்திரத்தோடு ஒன்றி இருப்பதாற்கும் மிகக்கடுமையாக கட்டுப்பாட்டுடன்இருந்து தனது எடையில் 15 கிலோவைக் குறைத்தாராம் விக்ரம்(Professional commitment). மற்றும்ஒரு பாரட்டுக்குரியவிஷயம் கந்தசாமி படப்பிடிப்புக் குழுவினர் உசலம்பட்டிக்கு பக்கத்தில் இருக்கும் சங்கம்பட்டி- காந்திநகர் ஆகிய கிராமங்களைத் தத்துஎடுத்துக்கொண்டுஅவர்களுக்கு நல்ல ரோடு, பள்ளிக்கு சமையல்கூடம்,வசதியான மயானம் ஆகியவற்றை செய்து கொடுத்தார்கள்.பாரதிராஜா போன்ற இயக்குனர்கள் கிராமத்தை மறந்து நகரத்துக்கு வந்த மனிதர்களை மறுபடியும் கிராமத்துக் கூட்டிக்கொண்டு போனார். ஆனால் எதயும் புதுமையாகச் செய்யும் சுசி கணேசனோஒரு கிரமத்து மக்களையே தேவி பரடைஸுக்கு கூட்டிக்கொண்டு வந்தார். ஆமாம் சங்கம்பட்டி-காந்திநகர் மக்களையே கொண்டு வந்துவிட்டார் நன்றி சொல்லுவதற்கு.கிரமசேவையைப்பற்றி எல்லோரும் பேசுவார்கள் ஆனால் சிலரே செய்வார்கள்.

"சொல்லுதல் யார்க்கும் எளிய அரியவாம் சொல்லிய வண்ணம் செயல்" ..........வள்ளுவன் சொன்னது.

விக்ரம்பலவேடங்களில்வந்தாலும் பெண்மணியாக நடித்த வேடம் மிகவும் பொருந்துகிறது.படத்தைப்பார்த்துவிட்டு சொல்லுங்கள்

இனி விக்ரம் பெண்களிடம் மாத்திரம் அல்ல ஆண்களிடமும் ஜாக்கிரதையாக இருக்கவேண்டும்.



மிகப் பிரபலமான டைரெக்டரான மணிரத்தினத்தின் மிகச் சிறந்த படைப்புக்களில் சில மௌனராகம்,நாயகன்,தளபதி,மற்றும் திரு. சுசி கணேசன் என்றெல்லாம் வந்தவர்கள் பேசினார்கள்ஆனால் ஆசானைக் காணவில்லை.

All that begins well must also end well.

படப்பிடிப்பு பூஜைக்கே இந்த பில்டப்ன்னா 100 ஆவது வாரம் பட விழாவுக்கு எப்படி இருக்குமோ?

Welldone Susi Ganesan Best of Luck





















Monday, September 24, 2007

கரியவனைக் காணாத கண் என்ன கண்ணே(2)



ஆலமரத்துக்கு வருவோமா . மஞ்சுளா என்ற ஒரு பெண் தன் வாழ்ககையில் தலையாகிய கடமையாக தினமும் கண்ணனுக்கு மலர்மாலை கட்டி கொண்டு போய் அர்ச்சகரிடம் கொடுத்து அணிவித்து அழகுபார்க்கும் வேலை செய்து வந்தாள். அதற்கு அப்புறம்தான் சாப்பாடு மற்றவை எல்லாம். ஒரு நாள் மலர்களை பறித்து கட்டி மாலை செய்வதற்கு சிறிது நேரமாகிவிட்டது.
கொண்டுபோய் அர்ச்சகரிடம் கொடுத்தால் நடை சாத்தும் நேரமாகி விட்டது இன்று சாத்தமுடியாது என்று கூறி கோயிலை பூட்டிவிட்டார்கள். மனமுடைந்த மஞ்சுளாவும் மிகவும் வருத்தத்துடன் மாலையை எடுத்துக்கொண்டுகண்ணனின் நாமத்தை உச்சரித்துக்கொண்டே மாலையை என்ன செய்வது என்று யோஜித்துக்கொண்டே வந்தாள். வழியில் இருந்த ஆலமரத்தின் இருந்த கிருஷ்ணன் படத்தை பார்த்து கண்ணனாக பாவித்து மாலையை அதற்கு சாத்திவிட்டு கண்ணனை நினைத்த வண்ணம் உருகி கண்ணீர்மல்க மரத்தடியிலேயே உறங்கிவிட்டாள்.

மறுநாள் காலை3.00 மணிக்கு நிர்மால்ய தரிசனம் காண கூட்டம் வாயிலில
காத்து நின்றது. மஞ்சுளாவும் கண்ணனைப் பார்ப்பதற்கு வந்து காத்து நின்றாள். மேல்சாந்தியும் பழைய மலர்களை களைவதற்கு கதவைத் திறந்தார். அவர் கண்ட காட்சி அவரை வியப்பில் ஆழ்த்தியது. ஆமாம் முதல்நாள்அவரால் நிராகரிக்கப்பட்ட மஞ்சுளாவின் மல்ர்மாலை கண்ணனின் கழுத்தில்கம்பீரமாக காட்சிஅளித்தது. ஆமாம்உண்மையான் பக்திக்கு கட்டுப் பட்ட கண்ணன் ஆலமரத்தடியில் தனக்கு ஹிருதயபூர்வஅன்போடு மஞ்சுளா சாத்தியமாலையை அங்கிகரித்துக் கொண்டுவிட்டான். அதன் நினைவாக இன்றும் ஆலமரத்தினடியிலுள்ள கண்ணனுக்கு மல்ர் மலை சாத்துகிறர்கள்

கடைசியாக ஒரு போட்டி. சமீபகாலத்தில் குருவாயூருக்கு மிகப் பெரிய அளவில் ஒரு முக்கியத்வம் கொடுத்து மக்களுக்கு தெரிய வைத்தவர்கள் மூன்று பேர்கள். அவர்கள்யார் என்பதை கீழே இருக்கும் சுட்டியின் கிளிக் மூலம் குரலை வைத்துக் கண்டு பிடியுங்கள்.

இவர் நாராயணீய உபன்யாசம் சிறப்பு வாய்ந்தது.


இவருடைய சிஷ்யன் மிகப் பிரபல பின்னனிப் பாடகர். கண்ணனிடம் அபரிமிதமான பக்தியுடைய இவர் கடைசியாக கிருஷ்ணன் கோவிலில் பாடிகொண்டு இருக்கும்போதே தன் சரீரத்தை நீத்தார்.
இவர் மேலே சொன்னவரின் சிஷ்யர். திரைஇசையிலும் கர்நாடக இசையிலும் கொடிகட்டிப் பறப்பவர். இன்னும்குருவாயூர் கோவிலுக்குள் நுழையாதவர்
குருவாயூருக்கு கோவிலுக்குபோனால் என்ன செய்யவேண்டும் என்பதை





















































































































Saturday, September 22, 2007

கந்தசாமி (1)






எனது அடுத்த வீட்டுக்காரரும் அருமை நண்பருமான திரு. சுசி. கணேசன் அவர்கள் தனது நான்காவது படத்தை டைரெக்ட் செய்து "கந்தசாமி" என்ற பெயரில் வெளியிடுகிறார்.இதுவரை மூன்று வெற்றிப்படங்களை "விரும்புகிறேன், 5 ஸ்டார் மற்றும் திருட்டு பயலே" எடுத்தவர். இந்த மூன்று படங்களுமே தமிழக அரசின் சிறந்த படத்துக்கான விருது பெற்றவை.ஒவ்வொரு படத்திலும் ஒரு கருத்தை மையப்படுத்தி அதை சொல்லும் விஷயத்தில் புதுமையைப் புகுத்தி மற்றவர்களிடமிருந்து தன்னை வேறுபடுத்திக்கொண்டவர்.
புதுமைகள் செய்வதில் வல்லவர். இந்த முறை பட வெளியீட்டு விழாவின் வரவேற்பு மடலில் புதிய உத்தியைக் கையாண்டுள்ளார். மடலையே இ மடலாக ஒரு சிறிய கணிப்பொறி மடலாக தன்னுடைய மெட்ராஸ் இன்ஸ்டியுட் ஆF டெக்னாலஜியின் படிப்பை நிலைநிறுத்தும் வண்ணம் படைத்தது இவருடைய இளமை இனிமை புதுமை முயற்சியை காட்டுகிறது.ஒரு மடலின் விலையே பதினெட்டாயிரம் ரூபாய்களாம்.எனக்கு அந்த வரவேற்பு மடலை அனுப்பி விழாவிற்கு வருமாறு அழைத்திருக்கிறார்.நல்ல வேளை பரிசு வரியை எடுத்துவிட்டார்கள் இல்லை என்றால் மடல் அனுப்பியவர்களுக்கு எல்லாம் வருமானவரித்துறையினர் மடல் அனுப்பியிருப்பார்கள் தங்கள் அலுவலகத்திற்கும் வந்து போகும்படி.

விக்ரம் அவர்களை புதியகோண்த்திலும் அவருடைய விஸ்வரூபத்தையும் காட்டப்போகும் படமாக இருக்கும். மேலே உள்ள "கந்தசாமி" படத்தின் "டிரைலர்" அறிமுகபடத்தைப் பார்த்துக்கொண்டு இருங்கள் அதற்குள் நான் நாளை விழாவிற்கு சென்று படத்தைப் பற்றி மற்ற செய்திளை அடுத்த பதிவில் அளிக்கிறேன்

Sunday, September 16, 2007

வராதுவந்த நண்பன்

உயிர்கள் இடத்தில் அன்பு வேணும் இது வாழும் முறையடி பாப்பா
தோற்றம் 12/12/1995 மறைவு16/09/2004அன்று மாலை எங்கள் வீட்டுக்கு அவள் புதிய வரவு.சிறிய கண்ணை சிமிட்டிக்கொண்டு பயத்துடன் எங்களை பரிதாபாமாக பார்த்தது.அன்றிலிருந்து அவள் எங்கள் குடும்பத்தில் ஒருவராகி விட்டாள்.என் மூன்று குழந்தைகளுக்கும் அவளோடு விளையாடுவதும்,போஷிப்பதும்தான் முக்கிய வேலையாகி விட்டது, அதிலும் என் மூத்த மகனுக்கு அதுவேதான் உலகம் என்று ஆகிவிட்டது. அவளுக்கு டெடி என்று பெயர்வைத்தோம்.அவளும் அவர்களுக்கு சமானமாக விளையாடும்.ஒரு வருடத்தில் நன்றாக வளர்ந்து விட்டாள்,புதிய வரவுகளுக்கு சிம்ம சொப்பனமாகிவிட்டாள்.இருந்தாலும் எங்களுக்கு, காவல் காப்பாது,பேப்பர் கொண்டு தருவது போன்ற சிறுவேலைகளை செய்துவிட்டு பிஸ்கெட்டுக்காக எங்கள் முகத்தையே பார்த்துக்கொண்டு இருப்பாள்.தரவில்லையென்றால் அதிகாரத்தோடு கேட்டு வங்கிக்கொள்ளுவாள். சொந்தப் பெண் போலவே அதற்கும் பிரசவம் பார்த்து அதன் 9 குட்டிகளையும் காலேஜில் முக்கிய பரிக்ஷை இருந்தாலும் மிக நேர்த்தியாகப் பார்த்துக்கொண்டான் என் மகன்.அதன் குட்டிகளை பிரிய மனமில்லாமல் நல்ல ஆளாகப் பார்த்து தானம் செய்தான்.வாடகை வீட்டில் இருந்ததால் சில சமயம் வீட்டு உரிமையாளருக்கும் எங்களுக்கும் சிக்கல் வந்தது.நாங்களும் வீடு மாறிக்கொண்டே இருந்தோம் அவளும் எங்களுடன் வந்து கொண்டே இருந்தாள் நாங்களும் அவளுக்காக சில தியாகங்களைச்செய்ய வேண்டியதாயிற்று. குடும்பத்தில் எல்லொரும் ஒரே சமயத்தில் வேளியே போகமாட்டோம்.அப்படியே போனாலும் மாலை சீக்கிரமெ வந்துவிடுவோம். ஆனால் இதுஎல்லாம் அவள் எங்களிடம் காட்டிய அன்பிற்கும் பாசத்திற்கும் ஈடுஇணை இல்லாதது. அலுவல் காரணமாக இரவு 3 மணிக்கும் 4 மணிக்கும் வீடு திரும்பினாலும் வாசலிலேயே காத்துக்கொண்டு இருப்பாள்.விடுமுறை வந்து விட்டால் டெல்லி,மும்பையிலிருந்து அவளுடன் விளையாட குழந்தைகள் கூடிவிடுவார்கள்.இப்படி அவள் எங்களுடன் ஒருமித்து இருந்தபோது திடீரென்று ஒரு நாள் மாலை எனக்கு வீட்டிலிருந்து போன் "அப்பா டெடிக்கு உடம்பு சரியில்லை என்னமோ பன்னறது சீக்கிரம் வா".மிகமுக்கிய மீட்டிங்கில் இருந்த நான் 8 மணிக்குதான் போக முடிந்தது அதற்குள் எல்லாம் முடிந்து விட்டது.நீண்ட நாள்களுக்கு பிறகு நான் வாய் விட்டு ஓ என்று கதறினேன்.,என் குடும்பத்தாரும் அழுதனர்.அவளூடைய இறுதியாத்திரையை முடித்துவிட்டு கனத்த மனத்துடன் வீடு திரும்பினோம். சிங்கபூரிலிருந்த என் மகனை தேற்ற முடியவில்லை.எனக்கு அன்பு ,பாசம்,விஸ்வாசம் இவைகள் என்னவென்று போதிப்பதாவதற்க்காவே என்னுடன் 8 வருடங்கள் இருந்து விட்டுச் சென்றதோ?இரண்டு வருடங்கள் ஆனாலும் மறக்க முடியவில்லை.டெடி ஆன்மா சாந்தி அடையட்டும்.



இது ஒரு மறு ஓளிபரப்பு இன்று டெடி மறைந்த தினம். மூன்று வருடங்கள் ஓடி விட்டன. ஆனாலும் டெடி மனத்தை விட்டு ஓடவில்லை

Friday, September 14, 2007

வராது வந்த நாயகன் வரம் தரும் விநாயகன்


விநாயகரைப் பற்றிய நினைப்பு வந்தாலே இந்த ஸோத்திரமும் நினைவுக்கு வரும். ஆதி சங்கரரால் புனையப்பட்ட எளிமையான ஸ்லோகங்களுள் இதுவும் ஒன்று. குழந்தைகளுக்கு கற்பிக்கவேண்டிய ஸ்லோகம் இது.சிறுவயதில் பழக்கப்படுத்திக்கொண்டால் நாக்கு நன்கு புரளும் வார்த்தைகள் தெளிவாக வரும்..பக்கவாத நோய் வந்து நாக்கு பேச வராதவர்கள் இந்த ஸ்லோகத்தை சொல்லப் பழகி பேசும் திறன் பெற்றவர்களும் உண்டு. இந்த புனித விநாயக சதுர்த்தியன்று விருப்பமுள்ளவர்கள் சொல்லிப் பழகுங்கள். எம் ஸ் அம்மாவின் குரலில் சேர்ந்து சொல்லிப்பாருங்கள்
கணேஷ பஞ்ச ரத்னம்

முதா கராத்த மோகம் ஸதா விமுக்தி சாதகம்

(சந்தோஷத்துடன் கையினில் மோதகத்தை வைத்திருப்பவரும் தன்னை அண்டியவருக்கு எப்பொழுதும் மோக்ஷத்தை கொடுப்பவரும்)

கலாதராவ தம்ஸகம் விலாஸி லோக ரக்ஷ்கம்

( பாலசந்திரனை விரும்பி அணிந்துகொண்டவரும்,அன்புள்ளம் கொண்டோரை காத்து ரக்ஷிப்பவரும்)

அநாய்கைக நாயகம் விநாசிதேப தைத்யகம்

(ஆதரவுஅற்றவர்களுக்கு நாயகனாய் இருப்பவரும் அடியவர்களின் குறைகளைத் தீர்ப்பவரும்)

நதாஸுபா பாசுரம் நாமாமிதம் விநாயகம்

(கஜமுகாஸுரனை கொன்றவருமான விநாயகனை நான் வணங்குகிறேன்)

நதேத்ராதி பீகரம் நவோதி துர்க்க பாஸ்வரம்

(வணங்காதவருக்கு பீதியைக் கொடுப்பவரும்,உதய சூரியனுக்கு ஒப்பானவரும்)

நம்த் ஸுராரி நிர்ஜ்ஜரம் நதாதிகாப துத்தரம்


(தேவர்களால் வணங்கப்படுபவரும், வணங்கியவர்களின் துக்கத்தைப்போக்குபவரும்)


ஸுரேஸ்வரம் நிதீஸ்வரம் கஜேஸ்வரம் கணேஸ்வரம்


(தேவர்களுக்கு தலைவரும்,அஷ்டநிதிகளை தருபவரும்,கஜமுகாசுரனுக்கும் தேவகணங்களுக்கும் தலைவராகவும்))


ஹேஸ்வரம் ஸ்மாஸ்ரயே பராத்பரம் நிரந்தரம்


(பரம்பொருளுக்கு நிகரானவரும், சாஸ்வதமாக வீடுபேறு அளிக்கவல்லவருமான விநாயகரை வணங்குகிறேன்)

ஸமஸ்த லோக சங்கரம் நிரஸ்த தைத்ய குஞ்சரம்

(கஜமுகாஸுரனை அழித்து உலகுக்கு நன்மை செய்தவரும்)

தரேதரோதரம் வரம் வரேப வக்த்ரமக்ஷரம்

(அழகிய யானை முகமும் பெருத்ததொந்தியும் உடையவரும்)

கிருபாகரம் க்ஷமாகரம் முதாகரம் யசஷ்கரம்


(கருணை நிறைந்தவரும், குற்றங்களை மன்னிப்பவராகவும், மகிழ்ச்சியையும் புகழையும் அளிப்பவராகவும்)


மனஸ்கரம் நமஸ்கிருதாம் நமஸ்கரோமி பாஸ்வரம்


(தன்னை மனதால் வணங்குபவர்க்கு மகிழ்ச்சியைக் கொடுப்பவரை வணங்குகிறேன்)


அகிஞ்சனார்த்தி மார்ஜனம் சிரந்தனோக்தி பாஜனம்


(வறியவர்களின் துன்பத்தை களைபவரும்,உபநிஷதங்களில் உயர்வாகச்சொல்லப்பட்டவரும்)

புராரி பூர்வபுரா நந்தனம் ஸுராரி கர்வ சர்வணம்

(சிவனின் தலைமகனாய் அஸுரர்களின் கர்வத்தை அடக்கியவரும்)


ப்ரஞ்சநாச பீஷணம் தன்ஞ்ஜயாதி பூஷணம்

(உலகத்தைக் காப்பவரும் நன்கு அலங்கரிக்கப்பட்டவரும்)


கபோலதான வாரணம் பஜே புராண வாரணம்

( மதஜலத்தால் மிளிர்கின்றவரும் புராணங்களுக்கு நாயகருமானவரைத் துதிக்கிறேன்)

நிதந்த காந்த தந்த காந்தி மந்தகாந்த காத்மஜம்

(முகத்திலிருக்கும் தந்தத்தின் ஒளியினால் முகமெல்லாம் பிரகாசிப்பவரும்)

அசிந்த்ய ரூப மந்த ஹீன மந்தராய க்ருந்தனம்

(எண்ணத்தில் பதிக்கவொண்ணா உருவம் கொண்டவரும் யமனை அடக்கிய சிவனின் புதல்வரும்)

ஹிருதந்த்ரே நிரந்தரம் வஸந்தமேவ யோகினாம்

(முனிவர்களின் மனதை ஆனந்தநிலயமாக கொண்டவரும்)


தமேக தந்த மேவதம் விசிந்தாயாமி ஸ்ந்ததம்


(ஒற்றைக் கொம்பனான கணபதியை எப்பொழுதும் மனதில் தியானிக்கிறேன்)

மஹா கணேச பஞ்ச ரத்ன மாதரேயோன் வஹம்

(இப்படிப்பட்ட மஹா கணேச ஐந்து ரதனங்கள் போன்ற ஸோஸ்த்திரத்தை)


பிரஜல்பதி ப்ரபாதிகே ஹிருதி ஸ்மரன் கணேஸ்வரம்


(எவனொருவன் பக்தியுடன் காலைவேளையில் கணபதியை நினைத்து


சொல்லுகிறானோ)



அரோகத மதோஷதாம் ஸூஸாகிதீம் ஸுபுத்ரதாம்


(அவன் நோய் நொடி இலா வாழ்வும்,கலையாத கல்வியும்,தவறாத சந்தனாமும்,மாறாத கீர்த்தியும் மற்றும்)

ஸ்மாஹிதாயுரஷ்ஸ்ட பூதி மப்யுபைதி ஸோசிராத்



(எல்லாச்செல்வங்களையும் வளங்களயும் பெற்று என்னச்சேர்ந்தவன் ஆகிறான்.)

இப்போது வீடியோவில் எம் ஸ் அம்மாவின் குரலில் காண்டும் கேட்டும் ரஸியுங்கள். பாட்டைக் கேட்டுக்கொண்டே படங்களையும் ரஸியுங்கள்.





கொசுறு: இதே ராகத்தில் ஒரு சினிமா பாட்டு உண்டு. எஸ்.பி.பாலு பாடியது. சொல்லுங்கள் பார்க்கலாம்


சரி எல்லோரும் பூஜை முடிந்து கொழுக்கட்டை, வடை,எல்லாம் சாப்பிட்டுவிட்டு மாலை இந்த பஜனையில் கலந்துகொண்டு வேழமுகத்தானின் ஆசியைப் பெற வாருங்கள். இதில் பக்தி பாடல்களை பாடுபவர்என்நண்பர்திரு.கணேஷ்குமார்அவர்கள். மும்பையில் மிகப் பெரிய தொழில் அதிபர்.மராத்திய அபங்கம்களைப் பாடுவதில் விற்பன்னர். நல்ல சாரீரவளமுடையவர். அதென்ன ஐய்யா அப்படி ஒரு சுருதி சுத்தம். பத்து செகண்டுக்குள் பஞ்சமத்தைப் பிடித்து விட்டு அதில் அப்படியே ஐந்து நிமிடங்களுக்கு மேல் சஞ்சாரிக்கும் வளம் உடனே ஐந்து
செகண்டுக்குள் ஷட்சமத்தை நோக்கி விர்ர்ர்ர் என்று இறங்கும் வண்ணத்தைக் காணலாம்.ஹார்மோனியத்தில் கைவண்ணம் பார்க்கவேண்டுமே விரல்களில் அனல் பறக்கும் போட்டி போட்டு குரலும் கையும் நம்மை அப்படியே தூக்கிச்செல்லும்.இதோ அவருடைய கணேசே கானங்களை கேட்டுவிட்டு சொல்லுங்கள். சொல்ல மறந்து விட்டேனே இவ்வளவு இருந்தும் பழகுவதற்கு மிகவும் எளிமையான மனிதர்.கூடப் பாடுபவர்களும் மிகப் பெரிய பதவிகளில் இருப்பவர்கள்.

கணபதி பூஜை என்றால் மஹாரஷ்ட்ராதான் நினைவுக்கு வரும். அதுவும் மும்பை சித்தி விநாயக் மந்திர் அழகே அழகு.வாருங்கள் பிரபாதேவிக்கு போய் மந்திரில் இருக்கும் விநாயகரை தரிசனம் செய்து கொண்டே
பாடல்களை பார்த்து கேட்டு அனுபவியுங்கள்.








சரி விநாயகரிடம் எப்படி வேண்டிக்கொள்ளவேண்டும்<"எம்.ஸ்.அம்மாவின் வேண்டுதலை இங்கே கேட்கவும்">


விநாயாகர் பதிவுபோட்டவுடன் ஒரு அற்புதம்நிகழ்ந்தது..பக்கத்துவீட்டில் இருக்கும் ஆன்டி கொழுக்க்கட்டை கொண்டுவந்து கொடுத்தார்கள்.இதில் என்ன அற்புதம் என்கிறீர்களா! ஆமாம் அவ்ர்கள் மதத்தால் ஏசுவை வணங்குபவர்கள் ஆனால் மனத்தால் மனிதர்களை நேசிக்கும் பண்புடையவர்கள்.இன்று எனக்கு கொழுக்கட்டை இல்லைஎன்று நினைத்தேன்உண்டு என்றுஆக்கிவிட்டா விநாயகர்

Wednesday, September 12, 2007

கரியவனைக் காணாத கண் என்ன கண்ணே

திருச்சூர் வந்த அலுவலக வேலைமுடிய இரவு மணி 11 ஆகிவிட்டது.சரி என்ன பண்ணலாம்என்றுயோஜித்தபோதுகுருவாயூருக்குப்போகப்போகிறீர்களா என்று வல்லியம்மா கேட்டது ஞாபகம் வந்தது. உடனே என்நண்பரான ஆடிட்டர் நாராயணனைக்கேட்டேன் அவரும் சரி என்று சொன்னார். சரி காலை 1.45 க்கு கிளம்பளாமா என்று கேட்டேன். அவர் என் குடும்ப நண்பர் என்றதால் என் உடல்நிலை பற்றித் தெரியும் ஆதலால் காலை 7 மணிக்கு போகலாமேஎன்றார். நான் சொன்னேன்இந்த மாதிரி சமயம் வருவது கஷ்டம் இன்னும் ரொம்ப நாளைக்கு கிடைக்காது இது எனக்கு என்று தெரியும் ஆதலால் 3.00 மணி நிர்மால்ய தரிசனமும் தைல வாகைசார்த்தும் பார்க்கவேண்டும் என்றேன்.

காலை 1 15 க்கு எழுந்து குளித்துவிட்டு வேஷ்டி மேல்வஸ்திரத்துடன் காரில் கிளம்பி நண்பரின் வீட்டிக்குச்சென்று அவரையும் அழைத்துக்கொண்டு குருவாயூரை 2.30 க்கு அடைந்தேன். அப்பொழுதே அங்கு நல்ல கூட்டம் நல்ல வேளை கல்யாண நாள்இல்லை. வரிசையில் நின்று கொண்டோம். சரியாக

3.00 மணிக்கு நடை திறக்கப்பட்டது. கூட்டம் முண்டி அடித்துக் கொண்டு ஓடியது.

முதல் நாள் செய்த அலங்காரங்களையும் மல்ர்மாலைகளியும் 15 நிமிடம்தான் வைத்து இருப்பார்கள். இரவில் இந்திரன் உள்ளிட்ட தேவர்கள் வந்து அப்பனுக்கு பூஜை செய்துவிட்டு போவதாக ஐதீகம். அதனால்தான் ஒட்டம் அதைப் பார்பதற்கு.கிட்ட தட்ட திருப்பதிமாதிரிதான் கூட்டம்.நான் போகும் போது சந்தனத்தை கலைத்துகொண்டு இருந்தார்கள். நிர்மால்ய தரிசனம் முடிந்து தைல அபிஷேகம். குழந்தை கிருஷ்ணனுக்கு எண்ணை தேய்த்து குளிப்பாட்டுவார்கள் அதையும் கண்குளிர தரிசனம் செய்தேன்.மறுபடியும் குட்டி கண்ணனுக்கு கையில் ஒரு வழைப்பழத்தைக் கொடுத்து (எண்ணை தேய்க்கும்போது குழந்தை அழுமே அதை சமாதானப்ப்டுத்த வேண்டுமே அதான் வழைப்பழம்) வெறும் சிலா ரூபமாக ஒரு சிகப்பு கௌபீனத்தைமட்டும் கட்டி

இளமுறுவலுடன் தரிசனம். பார்க்கும் போது மனதில் ஓடிய வரிகள்"கரியவனைக் காணாத கண் என்ன கண்ணே கண்ணிமைத்து காண்பார்தம் கண் என்ன கண்ணே. " இளங்கோவடிகள் சரியாகத்தான் சொல்லியிருக்கிறார்.

கண்ணிமைக்கும் நேரம் கூட பார்ப்பதை குறைத்துக்கொள்ளக் கூடாத அழகு அவ்னுடைய தரிசனம். எனக்கு பிரசாதமாக கிருஷ்ணனுக்கு சாத்திய சந்தணம், அன்று சாத்திய சிகப்பு கௌபீனம் நிர்மால்ய மலர்கள் ஆகியவைகளை என் நண்பர் கஷ்டப்பட்டு வாங்கிக்கொடுத்தார். பிரிய மனமில்லாமல் திருச்சூருக்குக் கிளம்பினோம். வரும் வழியில் கோயிலுக்கு வெளியில் ஒரு ஆலமரம், அதற்கு மல்ர்கள் சாத்தி பூஜை செய்து இருந்தார்கள். அது என்ன என்று என் நண்பரைக் கேட்டேன் அவ்ர் சொன்னது அடுத்த பதிவில்





அதற்கு முன் அம்புஜம் கிருஷ்ணா அவ்ர்களால் குருவாயூரப்பன்மேல் பாடிப்பெற்ற பாடலை மும்பை ஜெயஸ்ரீ அவர்கள் குரலில்/<"இங்கே கேட்கவும்".


இதே பாடலை திருமதி. சௌமியாவின் குரலில்<"இங்கே கேட்கலாம்'>
குருவாயூர் சென்று வந்தால் என்ன வரும் என்று அம்பி கேட்கலாம் இந்தப்பாடலையும் கேட்டுப்பாருங்கள் /<"இங்கே">

Tuesday, September 11, 2007

நெஞ்சு பொறுக்குதிலையே............


ஒரு கவியின் சகாப்தம் முடிந்த நாள் இன்று.உணர்ச்சிகளை தொட்டு சிலிர்த்து எழுப்பி கவிதை பாடியவன் கவிதையாகப் போனநாள் இன்று. வெறும் 11 பேர்கள்மட்டும் தன் சவ ஊர்வலத்தில் சங்கமித்து அக்னியோடு சங்கமித்தவன் சமூகத்திலும் நாட்டிலும் தனக்கு கிடைக்கவேண்டியமரியாதையை அளிக்காமல்போனவர்களைப் பற்றி கவலைப்படாதவன்
ஒரு பரலி நெல்லையப்பரையும்,வ ராமஸ்வாமி ஐயங்காரையும் மட்டும் பக்கத்தில் வைத்துக்கொண்டு
அவர்கள் ரசித்தது போதும் என்று எழுதிக்குவித்தவன்.தன் கவிதையை யார் ரஸிக்கிறார்கள் என்று தெரியமாலேயே அவன் பாடினான்.அதனால்தான் அவன் பாடல்கள் இறவாவரம் பெற்றது. கம்பனுக்கு பிறகு பாரதி ஒருவன்தான் அப்படி பாடினான். பின்னால் வந்த காவியங்கள் எதுவும் பரதிக்குப் பக்கத்தில்கூட நிற்கமுடியவில்லை.அந்த இடத்தை நிரப்ப ஒருவனும் வரவில்லை வரவும் முடியாது.இன்றைக்குச் சொல்லவேண்டிய பல விஷ்யங்களை பாரதி அன்றைக்கே சொன்னான்.அவனது சிந்தையில் அவ்வளவு தெளிவு.எவ்வளவு நம்பிக்கை.பாரதி ஒருஜாதி, ஒரு மதத்துக்கு சொந்தமானவன் அல்ல.அவன் சர்வசமயவாதி. அரசியல் சட்டத்தில் மதசார்பின்மை வருவதற்கு முன்பே அதை கடைபிடித்தவன்.அவன் வங்காளத்தில் பிறந்திருந்தால் நோபல் பரிசு அவனுக்குத்தான் போயிருக்கும்
பாரதியைத் தமிழகம் விமரிசையாகக் கொண்டாட வேண்டும். பாரதியைக் கொண்டாடினால் பாரதத்தை கொண்டாடுகிறோம். தேசபக்தியைக் கொண்டாடுகிறோம். தெய்வ பக்தியைக் கொண்டாடுகிறோம்.
தமிழ் மொழியைக் கொண்டாடுகிறோம். பாரதியைக் கொண்டாடாதவனுக்கு
தமிழன் என்று சொல்லிக்கொள்ளும் உரிமை கிடையாது
நன்றி: கவியரசு கண்ணதாஸன்

Saturday, September 08, 2007

லக்ஷ்மி வாந்தாள் நம் இல்லத்துக்கு(4)


















மஹாலக்ஷ்மியின் அருள் இருந்தால் போதுமே வேறு என்ன வேண்டும் நமக்கு.திரு. சிவன் அவர்கள் தனது சங்கராபரண ராகத்தில் அமைந்த "மஹாலக்ஷிமி ஜகன்மாதா" என்ற பாடலில் உள்ளம் உருகி அழைக்கிறார். பாடலைப் பார்ப்போமா

ராகம்:-சங்கராபரணம் தாளம்:- மிஸ்ர சாபு

பல்லவி

மஹாலக்ஷ்மி ஜகன்மாதா
மனமிரங்கி வரமருள்...............(மஹாலக்ஷ்மி)



அனுபல்லவி


மஹாவிஷ்ணுவின் மார்பெனும்
மணிபீடமதனில் அமர்ந்திடும்
மன்மதனை ஈன்றருளும் தாயே
தயாநிதியே மஹா மாயே........(மஹாலக்ஷ்மி)



சரணம்


பாற்கடல் தரும் கிருபாகரி
பரிந்துவந்தென்னை ஆதரி
பங்கஜ மலர் வளர் அன்னையே-- கடைக்கண்
பார் ராமதாஸன் பணியும்......(மஹாலக்ஷ்மி)


இந்தப் பாடலை மிக இளம் வயிதேலேயே இசை உலகை தன் குரலினால் கவர்ந்த அதே மாதிரி இளம் வயதிலேயே மறைந்த திருமதி.வஸந்தகோகிலத்தின் குரலில் <"இங்கே கேட்கவும்">">

சங்கராபரணம் ராகம் சிங்கார வேலன் படத்தில் "புதுச்சேரி கச்சேரி உன்னு பிடிச்சேன்" பாட்டில் வெளுத்துக்கட்டியிருக்கிறார் திரு.SPB

சரி நாங்கள் மஹாலக்ஷ்மியின் நாலுபதிவுக்கும் வந்து கண்டும் ,கேட்டும் படித்தும் போனோமே எங்களுக்கு என்ன கிடைக்கும் அப்படின்னு அம்பி கேட்பான் இதோ கீழே பாருங்கள் உங்களுக்காக மஹால்க்ஷ்மி தன் இருகைகளாலும் தங்கக் காசுகளை தாரளமாக அள்ளித்தருகிறாள் அள்ளிக்கொண்டுபோங்கள்.