Showing posts with label நவராத்திரி 10. Show all posts
Showing posts with label நவராத்திரி 10. Show all posts

Sunday, October 21, 2007

கொலு முடிந்தது (10)








மேலே உள்ள மூன்று படங்களும்தான் என்வீட்டு சுடாத கொலு

மேலே உள்ளது என்னை வளர்த்த இந்தியன் வங்கியின் கொலு.


நவராத்திரி என்பது ஒன்பது இரவுகளோடு முடியவில்லை. 10ம் நாளான விஜயதசமியுடன் தான் விழா நிறைவு பெறுகிறது. எனவேஇ அது "தசரா' எனப்படுகிறது. விஜயதசமி என்றால் "வெற்றி தரும் 10ம் நாள்' என தமிழில் கூறலாம். போருக்கு புறப்பட்ட ராமன் ஒன்பது நாட்கள் சக்தி பூஜை செய்துஇ 10ம் நாளான விஜயதசமியன்று போர் துவங்கியதாக கூறப்படுகிறது.

எருமை உருவம் கொண்ட அசுரன் மகிஷன். அவனது தொல்லை தேவலோகத்தையும் விட்டு வைக்கவில்லை. அவனது மிருகத்தன்மை கண்டு மும்மூர்த்திகளும் அஞ்சினர். தேவலோக தலைமைப் பதவிக்கு குறி வைத்து அசுரகுல அரசன் மகிஷன் போரிட்டான். மிருகபல சேனையிடம் தேவர்படை தோல்வியுற்றது. தோல்வியடைந்த இந்திரனும்இ தேவாதி தேவர்களும் பிரம்மனிடம் முறையிட்டனர். அவர் திருமாலிடம் கூட்டிச் சென்றார். அனைவரும் சிவபெருமானை சந்தித்தனர்.மகிஷனின் கொடுமைகளை மும்மூர்த்திகளிடம் விளக்கினர். தேவர்கள் கொடுமைகளை பற்றி கேட்ட சிவபெருமானுக்கு கோபம் பொங்கியது. சாந்த ஸ்வரூபியான மாலவனுக்கும் மகிஷனின் கொடுமைகள் கோபத்தை ஏற்படுத்தியது. கண்கள் சிவந்து கோபாவேசமாக காணப்பட்ட இரு மூர்த்திகளுடன் பிரம்மனும் சேர்ந்து நின்றார். அந்த கோபக் கனல்களும் சாதுக்களின் வயிற்றிலிருந்து புறப்பட்ட தீபமும் ஜோதிவடிவாய் இணைந்து ஒன்றுபட்டது. அனைத்துமாக தேவியாக உருவம் பெற்றது.

சிவபெருமான் சூலமும்இ திருமாள் சக்கரமும் தேவேந்திரன் வஜ்ராயுதமும்இ யமதர்மன் தண்டாயுதமும்இ வருணன் போர் சங்கும்இ அக்னி தேவனின் சத்தாயுதமும்இ வாயு பகவான் காற்றினும் விரைவாக அம்பு வீசும் ஆயுதமும் அளித்தனர். ஆயுதம் தரித்த தேவிக்கு பிரம்மன் ஜபமாலையும்இ பாற்கடல் துõய ஆடைகளும்இ தெய்வசிற்பி அணிகலன்களும்இ சமுத்திர ராஜா பூமாலைகளும் இமயமலை சிம்மவாகனமும் தந்தனர்.
சர்வாலங்கரியாக அன்னை போருக்கு சித்தமானாள். அதையறிந்த மகிஷன் வெறிகொண்ட எருமையாய் தேவியை முட்டித் தள்ள முயன்றான். ஆனால்இ தேவியின் சக்தி முன்பு அவனது பலம் செல்லுபடியாகவில்லை. எருமை முகத்திலிருந்து பாதி வெளிவந்த நிலையில் மகிஷனை தேவி வதம் செய்துஇ "மகிஷாசுரமர்த்தினியாக' மாறினாள். மகிஷனை அழித்த தேவி விரதம் இருந்த காலம் நவராத்திரி. ஒன்பதாவது நாள் மகாநவமி. வெற்றி அளிக்கப் போகும் ஆயுதங்களை வைத்து தேவி பூஜை செய்த நாள் அது. எனவேஇ அதை ஆயுத பூஜை என்கிறோம். அசுரனை வெற்றிக் கொண்ட நாள் விஜயதசமி.

மகிஷாசுரன் போன்ற அசுர கணங்கள்இ இன்னும் உலகில் லஞ்சம்இ ஊழல் போன்ற வடிவங்களில் உள்ளன. அவற்றை அகற்றி அமைதியான வாழ்வு தர நவராத்திரி காலத்தில் தேவியை துதிப்போம்!
விஜயதசமி பண்டிகையன்று பல சுப நிகழ்சிகளும் தொடங்கப்படும். பல நிறுவனங்களில் புது கணக்கு துவங்குப்படும். பல புது நிறுவனங்களும் புதிதாக தொடங்கப்படும்.சரஸ்வதி பூஜை தினத்தன்று பூஜையில் வைக்கப்பட்டிருந்த புத்தகத்தை எடுத்து அம்மனை பிரார்த்தித்து வெற்றி பெற வேண்டும் என்று மாணவ, மாணவிகள் பூஜை செய்வார்கள்.


துர்கா லக்ஷ்மி சரஸ்வதி என்ற ஆரபி ராக சிவனின் பாடல் கீழே
ராகம்:- ஆரபி தாளம்:-ஆதி
பல்லவி
துர்கா லக்ஷ்மி சரஸ்வதி துணையடி பணிவாயே மனமே..(.துர்கா)
அனுபல்லவி
ஸ்வர்காபவர்க இன்பம் தருவாய் சுருதி புகழ்
பொருள் நவராத்ரியில் உள்ளன்போடு....(துர்கா0
சரணம்
முற்பிறப்புகளின் செய்வினை அழியவும்
மோகமும் கல்மனபேய்களும் அழியவும்
பொற்புயர் மங்கல தீபமும் விளங்கும்
புகழ்வுடன் மகிழ்வும் வாழ்வினில் துலங்கும்...(துர்கா)

சரஸ்வதி பூஜை தினத்தோடு நவராத்திரி விழா நிறைவடைந்து விடுவதான காரணத்தால் விஜயதசமி தினத்தன்று அம்மனுக்கு சுண்டல் நிவேதனம் கிடையாது.

இந்த பத்துநாட்களும் ஒரு விரதமாக எடுத்துக்கொண்டு பலவேலைகளுக்கு இடையில் பத்துநாட்களும் தேவியின் மீது பதிவு அமைந்ததற்கு அவளது ஆசியைத்தவிர என்செயல் ஒன்றுமில்லை.

தவறாமல் வந்து அன்னையின் ஆசியைப் பெற்ற அனைவருக்கும் (குறிப்பாக மின்னலுக்கு தினமும்வந்து என்னைஊக்குவித்தற்கு) ) நன்றி.
நாமும் ஆரத்தியுடன்(நன்றி டி டி) முடிப்போம்