Thursday, October 18, 2012

பக்தர்களுக்கு பற்று அற்றவர் (பரமாச்சாரியார்) பிரதேசத்திலும் துணை--- இது கதை அல்ல நிஜம்--3

அடுத்த ரயிலை பிடித்து Engelberg போய் சேர்ந்தாகிவிட்டது.


ஒன்பது பேரும் விஞ்சை பிடித்து டிட்லிஸ் என அழைக்கப்படும் ...

பனிமலைக்கு போய் சேர்ந்தோம். மைனஸ் நான்கு டிகிரி. குளிரான குளிர். நாங்கள் கூட பரவில்லைஆறுமாத குழந்தை எந்த விதமான தொல்லையும் தராமல் ஜாலியாக இருந்தான்.எங்களுக்கு
குளிருக்காக பிரத்யேக உடை, பூட்ஸ் எல்லாம் அளித்தார்கள். கூடவே ஒரு கண்ணாடியும் கொடுத்தார்கள்.
அதன் உபயோகம் என்னவென்று அப்போது தெரியவில்லை.பாதுகாகப்பட்ட ஏரியாவிலிருந்துகதவுகளைத் திறந்து பனிக்கட்டி ஏரியாவில் நுழைந்தோம் . அம்மாடி குளிர்காற்று அப்படி அடித்தது.
முகம் விரைத்துவிட்டது .சென்னை வெய்யிலில் வதங்கிப்போன எங்களுக்கு புதிய அனுபவம்.

பக்கத்தில் நின்ற தங்கமணி,பையன்,யாரையும் காணவில்லை.
சந்திரமுகி வடிவேலு மாதிரி ஆப்பு வெச்சுட்டானேன்னு கத்தலாமான்னு பார்த்தேன்.அப்போ அசீரிரியாக மருமகள் குரல் கேட்டது .
அப்பா அவா கொடுத்த கண்ணாடியைப் போடுங்கோன்னு. என்னோட கண்ணாடியை கழட்டிவிட்டு ஸ்பெஷல் கண்ணாடியைப் போட்டபின்தான் எல்லோரும் என் பக்கத்திலேயே இருப்பது தெளிவாக தெரிந்தது.

சூரியனின் ஒளி பனியின் மீது பட்டு நாலாபக்கமும் ஒளிக்கதிர்கள் வீசியதால் கண்கள் பார்க்கும்சக்தியை

இழந்துவிட்டது.ஆனால் பனியின் மீது சறுக்கி ,பனி பந்துகளை ஒருவர் மீது ஒருவர் ஏறிந்தும் விளையாட்டுதான்.


அங்கு இருந்து வரவே மனம் இல்லை.
ஒருவாழியாக முடித்துக்கொண்டு Engelbergலிருந்து ரயிலை பிடித்து Hergiswil
வருவதற்கு பயணத்தைத் தொடங்கினோம்.

எல்லோரும் சந்தோஷமாக பேசிக்கொண்டும் ரயில் பயணத்தை அனுபவித்துக்கொண்டு இருந்தோம்

நானும் தங்கமணியும் பேரன் சாரங்குடன் தனியாக விளையாடிக் கொண்டு இருந்தோம் .

கையில் என் பைபத்திரமாக இருந்து . மனதுக்குள் எனக்கு பெருமை பிடிபடவில்லை எப்படி எல்லோருடைய முக்கிய உடைமைகளை

என்னுடைய பொருப்பினாலும் புத்திசாலிதனத்தாலும்தானே காப்பாற்றிக்கொண்டு வருகிறோம் மண்டையில் கணம் வந்தது.

என்ன பயணக் கட்டுரைதானே இதுலே பரமாச்சாரியார் எங்கே வரவில்லையே என்று கேட்கப் போகிறவர்கள் நாளை வரை காத்திருங்கள்

.

Sunday, October 14, 2012

பக்தர்களுக்கு பற்று அற்றவர் (பரமாச்சாரியார்) பிரதேசத்திலும் துணை--- இது கதை அல்ல நிஜம்--2

ஒருவழியாக சுவிஸ் இன்டர்லேகேன்வந்து சேர்ந்தாகிவிட்டது .


அங்கிருந்து டிட்லிஸ் எனப்படும் பனி மலைக்கு ரயிலில்

செல்வதாக ஏற்பாடு,டிட்லிஸ் போக முதலில் இண்டர்லேகனிலிருந்து HERGISWIL போக வேண்டும் அங்கே வேறு ரயில் மாறி ENGELBERG போய்

அங்கிருந்து வின்ச மூலமாக் பனிமலை போகவேண்டும்

ஒன்பது பேரும் ரயிலில் ஏறிக்கொண்டோம் ரயில்ன்ன சாதாரண ரயிலா அது. கீழே உள்ள படத்தில் உள்ளது.




மொத்த ரயிலில் எங்கள் ஒன்பது போரையும் சேர்த்து பதினைந்து பேர்கள்தான்.நான் நினைத்துக்கொண்டேன் நாங்கள் ஒன்பது பேர் தான்
என்று ஆனால் பாத்தாவதாக ஒரு ஆள் என்னிடம் இரண்டரை வருடமாக இருந்து படுத்திக்கொண்டு இருப்பவரும் சேர்ந்துகொண்டார்.

ரயில் கிளம்பிவிட்டது ரம்யமான பயணம்.கம்பார்ட்மெண்டில் ஒரு அதிசயம் கண்டேன் .

பயணிகளுக்கு உண்டான விளக்கப்பலகையில் பன்னாட்டு மொழிகளில் இருந்தன.

அதிசயம் என்னவென்றால் அதில் நம் தமிழ் மொழி இருந்ததுதான்
.நம்ப ஊரிலேயே TAMIL VAZHKA என்று எழுதி வைக்கும் போது தூய தமிழில் பார்த்த போது பரவசம்.கீழே உள்ள படத்தைப் பாருங்கள்.




 அடுத்த   ஜன்மம் என்று ஒன்று இருந்தால் ஸ்விசர்லாந்தில் பிறக்கவேண்டும்.

என்ன பிரமாதமான இயற்கை காட்சிகள்.ரயிலும் வயல்வெளி, கிராமங்கள், மலைகள் ,அருவிகள்

என்று அதன் ஊடே புகுந்து புகுந்து செல்லும் போது மனதிற்கு மிகவும் மகிழ்ச்சியாக இருந்தது .

இரயிலில் இருந்து காமிராவில் என்மகன் அருமையாக மலைமுகட்டில் மேகம் தழுவிஅணைத்தது சென்ற காட்சியை படம் பிடித்தான். மிக அருமையான அந்த காட்சியை கீழேபாருங்கள்.

ஒருவழியாக HERGISWIL ஸ்டேஷனை அடைந்தோம். அது ஒரு ஜங்க்ஷன் அங்கெ இறங்கி

அடுத்த ரயிலை பிடித்து ENGELBERG போகவேண்டும்.

தொடரும்



             

Saturday, October 13, 2012

பக்தர்களுக்கு பற்று அற்றவர் (பரமாச்சாரியார்) பிரதேசத்திலும் துணை--- இது கதை அல்ல நிஜம்

திக்கற்றவர்களுக்கு தெய்வமே துணை . பக்தர்களுக்கு பற்று அற்றவர் (பரமாச்சாரியார்) பிரதேசத்திலும் துணை--- இது கதை அல்ல நிஜம்




அப்பா இந்தவருஷம் மேமாதம் யுரோப் போகலாம்னு இருக்கேன் நீயும் அம்மாவும் வரையா? சிங்கபூர் வாழும் மகன் கேட்டான் .எ...னக்கு மேமாதம் ஆடிட் வேலை இருக்கும் நான் வரவில்லை அம்மாவை கூட்டிக்கொண்டு போ என்றேன் . இல்லை அப்பா நீவரவில்லை என்றால் அம்மாவும் வரமாட்டேன் என்கிறாள்.எனக்கும் அப்போதுதான் உறைத்தது நமக்கு சக்தி கிடையாது அங்கெல்லாம் தங்கமணியை அழைத்துச்செல்ல. எதோ பையன் அழைத்துசெல்கிறான் நாம் எதுக்கு அதற்கு தடையாக இருக்கவேண்டும் என்று சரி என்று சொல்லிவிட்டேன்.அப்போது தெரியாது எப்பேர்ப்பட்ட ஆபத்தில் கொண்டுவிடப்போகிறது என்று.

சரின்னு சொன்னவுடனே பையன் மளமளன்னு வேலையை ஆரம்பித்துவிட்டான்.டிக்கெட் புக் பண்ணுவது சர்வீஸ் அபார்ட்மென்ட் புக் பண்ணுவது என்று வேலைகள் ஜருராக அவன் ஒருவனே தனியாக கணிப்பொறியின் மூலம் எல்லாம் செய்ய ஆரம்பித்துவிட்டான்.ஆறுமாத குழந்தை சாரங்கும் வர...ுவதால் சமையல் வசதி உள்ள இடமாக பார்த்து பார்த்துகவனமாகசெய்து வைத்துருந்தான்.


எல்லோரும் துணிமணிகளை குறைத்துக்கொண்டு அரிசி,பருப்பு,ரவை,

கலந்த உணவுகள்,ரெடிமிஸ் உணவுகள் என்று நூற்றி இருபது கிலோ



முதலில் பையன்,மாட்டுபொண்ணு,பேரன்சாரங், எந்தங்கமணியின்

தங்கை, அவள் கணவர் , அவர்கள பையன் ஸ்ரேயாஸ்,தங்கமணி, நான் என்று எட்டு பேர் செல்வதாக திட்டம் . கடைசி நேரத்தில் தங்கமணியின் தம்பிபையன் ராகவையும் சேர்த்துக்கொள்ள மொத்தம் ஒன்பது உருப்படிகள். மேமாதம் இருபதாம் தேதிபயணம். சென்னையிலிருந்து நானும்

தங்கமணியும் ராகவும் சென்னையிலிருந்து கிளம்பி துபாய் செல்லவேண்டும் அங்கு மகன்.மருமகள், பேரன் சிங்கபூரிலிருந்து சேர்ந்து கொண்டு வியன்னா செல்லவேண்டும். மகன் ஏற்பாடெல்லாம் துல்யமானது.வியன்னாவில் மற்ற முன்று பேரும் செர்ந்துகொள்வதாக ஏற்பாடு.அதே மாதிரி நடந்தது.

பயணம் இனிதாக இருந்தது.ஒரு இடத்தில் கூட ஹோட்டலில்

சாப்பிடவில்லை எல்லாம் ரைஸ் குக்கர்தான். சரி இனி நம்ம கதைக்கு வருவோம் . எல்லாருடைய பாஸ்போர்ட், விசா,யுரோ டால்லர்,எல்லாவறையும் தலைவன் என்ற முறையில்

நான்தான் அதி புத்திசாலி என்று வாங்கி வைத்துக்கொண்டேன் . ச்விச்சர்லேன்ட் போய் இண்டர்லேகன் சேர்ந்தாகிவிட்டது.

தொடரும் .See More

.