
நவராத்திரியின் 9 நாள் பண்டிகையில் முக்கியமானதாக கருதப்படுவது சரஸ்வதி பூஜை.நான்முகன் பிரம்மாவின் மனைவி சரஸ்வதி. சரஸ்வதி கல்விக்கு அதிபதி. வெண்பட்டு உடுத்தி, கைகளில் வீணையும், ஏட்டுச்சுவடியும் ஏந்தி கல்விக்கும், ஏனைய கலைகளுக்கும், அதிபதியாக வெண் தாமைரையில் வீற்றிருக்கும் அம்பாள் சரஸ்வதி.அள்ள அள்ள குறையாத கல்வி செல்வத்தை வழங்கி அருள்பவள் சரஸ்வதி. எந்த செல்வங்களையும் விட கல்விச் செல்வம் மிக அவசியமானது. 'செல்வம் செல்வோம் என்று வரும், ஆனால், அழியாது நிலைத்து நிற்பது கல்வி செல்வம் தான்' . அவள் இருக்குமிடம் எதுவோ? பாரதியைப் பற்றி பாரதியின் பாடல் மூலமாகவே கேட்டுப்பாருங்கள்வெள்ளைக் கமலத் திலே-அவள்
வீற்றிருப் பாள்,புக ழேற்றிருப் பாள்,
கொள்ளைக் கனியிசை தான்-நன்கு
கொட்டுநல் யாழினைக் கொண்டிருப் பாள்,
கள்ளைக் கடலமு தை-நிகர்
கண்டதொர் பூந்தமிழ்க் கவிசொலவே
பிள்ளைப் பருவத் திலே-எனைப்
பேணவந் தாளருள் பூணவந்தாள்.
வேதத் திருவிழி யாள்,-அதில்
மிக்கபல் லுரையெனுங் கருமையிட் டாள்,
சீதக் கதிர்மதி யே-நுதல்
சிந்தனையே குழ லென்றுடை யாள்,
வாதத் தருக்க மெனுஞ்-செவி
வாய்ந்ததற் றுணிவெனுந் தோடணிந் தாள்,
போதமென் நாசியி னாள்,-நலம்
பொங்கு பல்சாத்திர வாயுடை யாள்.
கற்பனைத் தேனித ழாள்-சுவைக்
காவிய மெனுமணிக் கொங்கையி னாள்,
சிற்ப முதற்கலை கள்-பல
தேமலர்க் கரமெனத் திகழ்ந்திருப் பாள்,சொற்படு நயமறி வார்-இசைதோய்ந்திடத் தொகுப்பதின் சுவையறி வார்விற்பனத் தமிழ்ப்புல வோர்-அந்தமேலவர் நாவெனும் மலர்ப்பதத் தாள்.
வாணியைச் சரண்புகுந் தேன்;-அருள்
வாக்களிப் பாளெனத் திடமிகுந் தேன்;
பேணிய பெருந்தவத் தாள்;-நிலம்
பெயரள வும்பெயர் பெயரா தாள்,
பூணியல் மார்பகத் தாள்-ஐவர்
பூவை,திரௌபதி புகழ்க் கதையைமாணியல்
தமிழ்ப்பாட்டால்-நான்
வகுத்திடக் கலைமகள் வாழ்த்துக வே!
வெள்ளைத் தாமரைப் பூவில் இருப்பாள்
வீணை செய்யும் ஒலியில் இருப்பாள்;
கொள்ளை யின்பம் குலவு கவிதை கூறு பாவலர் உள்ளத் திருப்பாள்!
உள்ள தாம்பொருள் தேடியுணர்ந்தே ஓதும் வேதத்தின் உள்நின் றொளிர்வாள்;
கள்ள மற்ற முனிவர்கள் கூறும் கருணை வாசகத் துட்பொருளாவாள். (வெள்ளைத்)
மாதர் தீங்குரற் பாட்டில் இருப்பாள்,
மக்கள் பேசும் மழலையில் உள்ளாள்;
கீதம் பாடும் குயிலின் குரலைக் கிளியின் நாவை இருப்பிடங் கொண்டாள், கோத கன்ற தொழிலுடைத் தாகிக் குலவு சித்திரம் கோபுரம் கோயில் ஈதனைத்தின் எழிலுடை யுற்றாள்இன்ப மேவடி வாகிடப் பெற்றாள். (வெள்ளைத்)
வெள்ளைத் தாமரை பூவிலிருப்பாள் பாட்டை நித்யஸ்ரீயின் குரலில் கேட்க செல்லவும் இங்கே
இன்று கொண்டகடலை சுண்டல்.

வாணி நீ அருள்வாய்! சரஸ்வதிக்கு உகந்த மலர் வெள்ளைத் தாமரை. சரஸ்வதிக்கு 'தூயாள்' என்ற சிறப்புப் பெயரும் உண்டு. வெண்மை தூய்மைக்கு சான்று. சரஸ் என்றால் பொய்கை, நீர். வெள்ளம் போன்று கல்வியைப் பெருக்குவதால் சரஸ்வதி என்று அழைக்கப் பட்டாள். சரஸ் என்றால் அறிவு, ஒளி என்றும் பொருள். சூரியனுக்கு 'சரஸ்வான்' என்று பெயருண்டு





சங்கீத மும்மூர்த்திகளின் ஒருவரும் சிறந்த ஸ்ரீவித்யா உபசகருமான திரு. முத்துஸ்வாமி தீக்ஷ்தரும் லக்ஷ்மியின் மீது லலிதா ராகத்தில் "ஹிரண்மயிம்" என்ற கீர்த்தனத்தை இயற்றியுள்ளார்.லலிதா ராகமும் வசந்தா ராகமும் இரட்டைபிறவி சகோதரிகள் ஒரே ஒரு ஸ்வரம்தான் ப என்கிற பஞ்சமம்தான் கிடையாது லலிதாவில். அதைப்பற்றி பின்னால் விரிவாகப் பார்க்கலாம். ஒருசமயம் தீக்ஷ்தரை அவ்ர் மனைவி தனக்கு செல்வம் வேண்டும் என்பதாற்காக தஞ்சை மன்னரைப் புகழ்ந்து அவர் மீது கீர்த்தனை இயற்றிப் பாடி செல்வத்தைக் கேளுங்கள் என்று கேட்டாளாம். அதற்கு அவர் மறுத்து மனிதரைப் பாடமாட்டேன் என்று கூறி லக்ஷ்மியின் மீது இந்தக் கீர்த்தனையை பாடினார்









