Saturday, January 07, 2012

காஞ்சி மஹா பெரியவாளின் ஆருத்ரா விளக்கம்


காஞ்சி மஹா பெரியவாளின் ஆருத்ரா விளக்கத்தைக் கேட்டு குருவின் ஆசியை பெறவும் கிழே "கிளிக்" செய்யவும்

Kanchi Sri Maha Periva: Sri Maha Periva on Aardra Darsanam:

திருவாதிரையும் களியும்

அன்பர்கள் அனைவர்க்கும் 2012 புத்தாண்டு வாழ்த்துக்கள்

இன்று ஆருத்ரா தரிசனம். அம்பலகூத்தன் நடராஜனுக்கு மிகவும் உகந்த நாள். மார்கழிப் பௌர்ணமியுடன் கூடிய திருவாதிரை நாளில் நடைபெறும் திருவாதிரை விழாவை `ஆருத்ரா தரிசனம் என்பர். `ஆருத்ரா' என்ற சொல் `ஆதிரை' என்று மாறியது


வீட்டில் திருவாதிரைக் களியும் கதம்பகூட்டும் தயார் செய்து சாப்பிடுவார்கள். ஒருமுறை சேந்தனார் அளித்த களியை சிவன் ஏற்றுகொண்டார். அன்றிலிருந்து திருவாதிரைக்கு களியும் ஏழுவகைக்கூட்டும் அவித்த வள்ளிக்கிழங்கும் நைவேத்யமாகக் கொள்ளப்பட்டது. களி' என்றால் `ஆனந்தம்' என்பது பொருள். இறைவன் சச்சிதானந்த வடிவினன். அவனுக்கு ஆனந்த நடனப் பிரகாசம், ஆனந்த நடராஜன் என்ற ஒரு பெயரும் உண்டு. களி நடனம் புரியும் அவனுக்குக் களியைப் படைத்து நாமும் களிப்படைவதும் பொருத்தமே.
 மஹா பெரியவா குரலில் ஆருத்ரா தரிசனம் பற்றி கூறியதை கேளுங்கள் கீழே "கிளிக்" செய்து
Kanchi'>http://blog.periva.org/2012/01/sri-maha-periva-on-aardra-darsanam.html?spref=bl">Kanchi Sri Maha Periva: Sri Maha Periva on Aardra Darsanam:




நாட்டில் நடராஜருக்கு முக்கியமாக ஐந்து நடனசபைகள் உண்டு.

திருவாலங்காடு(ரத்தின சபை),சிதம்பரம்(கனக சபை),திருநெல்வேலி(தாமிர சபை),மதுரை(வெள்ளி சபை),குற்றாலம்(சித்ர சபை) ஆகும்.

சிதம்பரத்துக்கு கனகசபை என்று பெயர்வரக் காரணம் அங்கே நடராஜர் எழுந்தருளியிருக்கும் மண்டபம் பராந்தக சோழனால் பொன்னால் வேயப்பட்டது.நடராஜர் எட்டுகைகளுடன் இடது பதம் தூக்கி ஆடுவார் மதுரையைத்தவிர மற்ற இடங்களில். மதுரையிலோ வலது பாதம் தூக்கி ஆடுகின்றார் பத்து கைகளுடன்.

கோபலகிருஷ்ண பாரதியார் தனது நந்தானார் சரித்திரத்தில் பல அருமையான பாடல்களில் தில்லை நடராஜனின் குணங்களையும் நந்தனாரது எளிமையான திட பக்தியையும் போற்றிப் பாடியுள்ளார். இவர் தியாராஜஸ்வாமிகளின் சமகாலத்தவர்.நந்தன் தாழ்த்தப்பட்ட குலத்தில் பிறந்தவர்.நடராஜனை ஆருத்ராதரிசனத்தன்று பார்க்கவேண்டும் என்று பல வருடங்களாக காத்திருப்பவர்.அவருடைய எஜமான் உத்தரவு தரவில்லை.அப்படிப்பட்ட வரை நடராஜன் தன் கருணையால் இந்த ஆருத்ரா அன்று ஆட்கொண்டு தன்னோடு ஐக்கியமாக்கிக் கொள்கிறான். தில்லை

வாழ் அந்தணர்களுக்கும் கிடைக்காத பேரின்பத்தை வழங்குகிறான்.உண்மையான பக்தி ஒன்றுக்கு மட்டும்தான் அவன் வசப்படுவான் என்ற உண்மையையும் நமக்கு புலப்படுத்துகிறான்

நந்தன் கனவில் கனகசபேசன்வந்து நான் உன்னை பொன்னம்பலத்திற்கு வரச்செய்து தரிசனம் தருகிறேன் என்று உறுதி மொழிகொடுத்தும் நந்தனுக்கு சந்தேகம் தீரவில்லை.ஏனென்றால் இத்தனை நாள் தன்னை கோவிலுக்குள் நுழையவிடாத சமூகமும் எஜாமனரும் அனுமதிபார்களா என்ற பயம். அதைப் பாட்டாக வெளிப்படுத்துகிறான். கோபலகிருஷ்ண பாரதியாரும் ஒரு அடிமையின் உணர்ச்சிகளுக்கு ஏற்றவாறு கருணாரசம் பொங்கும் மாஞ்சி ராகத்தை சமயத்திற்கு ஏற்ற மாதிரி அமைத்துள்ளார்.

ராகம்:- மாஞ்சி தாளம் :- மிஸ்ர சாபு
பல்லவி
வருகலாமோ ஐய்யா--- நான் உந்தன் அருகில்

நின்று கொண்டாடவும் பாடவும் நான் அங்கே வருகலாமோ
அனுபல்லவி
பரமகிருபாநிதி அல்லவோ----நீ

இந்த நந்தன் உபசாரம் சொல்லவோ

உந்தன் பரமானந்த தாண்டவம் பார்க்காவே நான் அங்கே (வருகலாமோ)
சரணம்
பூமியில் புலையனாய் பிறந்தேனே-- நான்

ஒரு புண்ணீயம் செய்யாமல் இருந்தேனே

என் ஸ்வாமி உந்தன் சந்நிதி வந்தேனே

பவசாகரம் தன்னையும் கடந்தேனே

கரை கடந்தேனே

சரணம் அடைந்தேனே

தில்லை வரதா பரிதாபமும் பாவமும் தீரவே -----(வருகலாமோ)

திரு தண்டபாணி தேசிகர் நந்தனாராக நடித்து பாடும் பாட்டைக் கேளுங்கள்கிளிக்

சரி நம் தமிழ்த்தியாகைய்யா திரு பாபநாசம் சிவன் மட்டும் சும்மா இருந்து விடுவாரா என்ன. ஆருத்ரா தரிசனத்தன்று நடராசன் ஆடும் ஆட்டத்தையே தன் பாட்டில் அழகான தமிழில் கொஞ்சவைக்கும் யதுகுலகாம்போதியில் குழைந்தும் குழைத்தும் அளிக்கிறார். பாட்டை முதலில் பார்த்துவிட்டு பிறகு கேட்போம்.
ராகம்:-யதுகுலகாம்போதி தாளம்:- ஆதிஅஹா என்ன ஒரு வர்ணனை.பாட்டைக் கேட்கும்போதே நடராஜரை முழுமையாகப் பார்த்துவிடலாம்.ஏம்பா நடராஜா நீ காலைத்தானே தூக்கிக் கொண்டு இருக்கிறாய் கை சும்மாதானே இருக்கு என்னை அதாலே தூக்கிவிடேன் என்கிறார்.முருகனைப் பெற்றதால்தான் உனக்கு பெருமை என்கிறார்.உடம்பெல்லாம் என்ன இருக்கு தெரியுமா கையில் மான் மற்றொரு கையில் நெருப்பு, கருத்த சடையில் கங்கை,சந்திரன் இதெல்லாம் போறாதுன்னு உன்னோடு இரண்டறக்கலந்து இருக்கும் பார்வதியை சதாசர்வகாலமும் தூக்கிக்கொண்டு இருக்கிறாயே. எந்தகாலைதூக்கி ஆடுகிறாய் தெரியுமா பிரும்மாவும் விஷ்ணுவும் தேடித் தேடி பாதளத்திற்கும் ஆகயத்திற்கும் இங்கும் அங்குமாய் ஓடி கண்டு பிடிக்க காண முடியாமல் இருக்கும் அந்தக் கால் அல்லவா அது. ஹரி ஐயனும் காணா அரிய ஜோதி ஆதி அந்தம் இல்லாத பழமனாதி.
பல்லவி
காலைத்தூக்கி நின்றாடும் தெய்வமே---
என்னை கைதூக்கி ஆட்கொள் தெய்வமே ஒரு....................(காலைத்தூக்கி)
அனுபல்லவி

வேலைத்தூக்கும் பிள்ளைதனைப் பெற்ற தெய்வமே

மின்னும் புகழ்சேர் தில்லை பொன்னம்பலத்தில் ஒரு..(காலைத்தூக்கி)

சரணம்

செங்கையில் மான் தூக்கி சிவந்த மழுவும் தூக்கி

அங்கம் சேர் ஒரு பெண்ணை அனுதினமும் தூக்கி

கங்கையை திங்களை கருத்த சடையில் தூக்கி

இங்கும் அங்குமாய்த் தேடி இருவர் கண்டறியாத........(காலைத்தூக்கி)

நந்தி மத்தளம் கூட்ட நாரதர் யாழ் தூக்க

தோம் தோம் என்று என் தாளம் சுருதியோடு தூக்க

சிந்தை மகிழ்ந்து வானோர் சென்னிமேல் கரம் தூக்க

முந்தும் வலியுடைய முயலகன் உன்னைத் தூக்க


சரி இத்தனையும் தூக்கிகொண்டு சும்மாவாய் இருக்கிறாய். இல்லையே நந்தியின் தாளத்திற்கும் நாரதரின் யாழிசைக்கும் தோம் தோம் என்று என்னுடய (பாபநாசம் சிவனுடைய) தாளம் சுருதியோடு தூக்க உன்னுடைய அஜபா நடனத்தின் தன்மையை அறிந்த தேவர்கள் மகிழ்ச்சியோடு தாங்கள் தலைக்குமேல் இருகைகளையும் தூக்கிக்கொண்டு இருக்க உன்காலின் கீழ் அகப்பட்டுக் கொண்டு இருக்கும் அரக்கனான முயலகன் வலியோடு உன்னைத்தூக்க நீ ஆடும் ஆட்டம் எப்படி இருக்கிறது தெரியுமா? என்று மகிழ்ந்து போகிறார். சிறிது ஹாஸ்யபாவத்தையும் இங்கே காட்டுகிறார்.மான், மழு,கங்கை,சந்திரன்,பார்வதி இத்தனை பேரை தூக்குகின்றாயே என்னை கைதூக்கி ஆட்கொள்ளுவது உனக்கு ஒரு பெரிய விஷயமா என்றும் கேட்பதுபோல் உள்ளது


சரி இப்போது திருமதி. சுதா ரகுநாதன் அனுபவித்து பாடிய பாட்டைக் கேட்கலாமா?

கிளிக் href="http://www.musicindiaonline.com/p/x/ZqK2pqqMHd.As1NMvHdW/%3C"><"இங்கே">

சிதம்பரத்துக்குப் போய் திரும்பாதவர்கள்  நால்வர்
மாணிக்கவாசகர் நந்தனார், அப்பைய தீக்ஷதர் மற்றும் ராமலிங்க சுவாமிகள் . இவர்கள் நால்வரும்  தில்லை நடராஜனை சிதம்பரத்தில் தரிசனம் செய்து இரண்டறக் கலந்து முக்தி அடைந்தவர்கள்



Thursday, January 05, 2012

வைகுண்ட ஏகாதசி


வைகுண்ட ஏகாதசியான இன்று ஸ்ரீரங்கநாதரை வணங்குவதற்குரிய ஸ்தோத்திரத்தைப் படியுங்கள்.

காவிரியின் நடுவில் ஏழு திருமதில்களால் சூழப்பட்ட ஸ்ரீரங்கநாதனே! தாமரை மொட்டு போன்ற விமானத்தில் குடிகொண்டவனே! ஆதிசேஷன் என்னும் கட்டிலில் துயில்பவனே! யோகநித்திரையில் அனைத்தையும் அறிந்தும் அறியாதது போல இருப்பவனே! இடது கையை இடுப்பில் வைத்திருப்பவனே! ஸ்ரீதேவியும் பூதேவியும் வருடுகின்ற திருப்பாதங்களைக் கொண்டவனே! ஸ்ரீரங்கநாதா! உன்னைப் போற்றுகிறேன்.

கஸ்தூரி திலகமிட்ட நெற்றி கொண்டவனே! காது வரை நீண்டிருக்கும் அகன்ற கண்களைப் பெற்றவனே! முத்துக்கள் இழைத்த கிரீடம் அணிந்தவனே! பக்தர்களின் மனதை அபகரிக்கும் தேக காந்தி கொண்டவனே! தாமரைமலருக்கு ஈடான அழகுமிக்கவனே! ஸ்ரீரங்கநாதா! உன்னைக் காணும் பாக்கியம் எப்போது எனக்கு கிடைக்கும்!

மது என்னும் அரக்கனைக் கொன்றவனே! நாராயண மூர்த்தியே! முரனை வென்ற முராரியே! கோவிந்தராஜனே! உன் திருநாமங்களை உரக்கச் சொல்லி வாழ்நாளை எல்லாம் ஒரு நிமிஷம்போல கழிக்கும் பாக்கியம் எனக்கு கிடைக்குமா? காவிரிக்கரையோரம் வாழ்பவனே! இந்திர நீலமணி போன்ற பேரழகுடன் ஆதிசேஷ சயனத்தில் படுத்திருப்பவனே! உன் அருகில் வாழும் பாக்கியத்தை தந்தருள வேண்டும்.

பெருமானே! புனிதமான காவிரியில் நீராடும் பாக்கியம் எனக்கு வேண்டும். அடர்ந்த பசுமரங்கள் நிறைந்த அழகுமிக்க காவிரி நதிதீரத்தில் நான் வசிக்கும் பேறு பெற வேண்டும். மங்கலம் நிறைந்தவனே! தாமரை மலர் போன்ற கண்களைப் பெற்றவனே! உன்னை பக்தியோடு வணங்கும் பாக்கியத்தை அருள்புரிவாயாக.

ரங்கநாதனே! பாக்கு மரங்கள் நிறைந்ததும், தெளிந்த நீரால் நிரம்பியதும், வேதகோஷத்தால் சூழப்பட்டதும், கிளி, குருவி போன்ற பறவைகள் ஒலியெழுப்புவதும், தரிசித்தவர்க்கு வைகுண்டம் தந்தருளி மோட்சத்தைக் காட்டுவதுமான லட்சுமிகடாட்சம் நிறைந்த ஸ்ரீரங்கத்தை தரிசிக்கும் பாக்கியம் எனக்கு என்று கிடைக்குமோ?

எம்பெருமானே! தேவலோக நந்தவனத்தில் அமிர்தம் அருந்தும் பாக்கியம் எனக்கு வேண்டாம். தேவர்களில் ஒருவராகவும் நான் மாற வேண்டாம். ஸ்ரீரங்கத்தில் ஒரு நாயாக வாழும் பாக்கியத்தைக் கொடுத்தால் போதும்.

அம்மா! எனக்கு மிகவும் பசிக்கிறது. உடல் நடுங்குகிறது,' என்று சொல்லும் குழந்தையிடம் தாய் எப்படி பாசத்தோடு ஓடி வந்து அணைத்து ஆகாரம் தருவாளோ அதுபோல...ரங்கநாதா! என் துயரத்தைப் போக்க வந்தருள்வாயாக.

Monday, January 02, 2012

மார்கழி மாதக் கச்சேரி கேட்கலாமா? 2



கச்சேரியா கேண்டீனா?




யரோ சொன்னார்கள் நண்பகல்கச்சேரிக்ககெல்லாம் கூட்டம் வருவதில்லை என்று.அதெல்லாம் தப்பு சரியாக சரியான இடத்தில் பார்க்காமல் சொன்ன வார்த்தை அது.நான் நாரத கான சபா மத்யான கச்சேரிக்கு போயிருந்தேன் கூட்டம்னா அப்படி ஒரு கூட்டம் . நானும் சுத்தி சுத்திப் பார்த்தேன் ஒரு சீட் கூட கிடைக்கவில்லை உட்காருவதற்கு. ஸ்பீக்கரில்கச்சேரி பாடிக்கொண்டு இருந்தது.யாரும் சீட்டை விட்டு எழுவதாக இல்லை.ஒரு ஐடம் முடிஞ்சவுடன் அடுத்த ஐடம் ரெடியாக வந்துகொண்டிருந்தது.ரசிகர்களும் அப்படியே லயித்து அநுபவித்துக் கொண்டு இருந்தார்கள். ஆஹா பேஷ் பேஷ்ன்னு அங்கீகாரம் வேறே.


சரி இத்தனையும் எங்கே சபாஹாலுக்குள்ளேன்னு சொல்லுவேன்னு நீங்க நினச்சா அது உங்க தப்பு. இதெல்லாம் சபா ஹாலுக்கு வெளியே பின்னாடி ஞானம்பிகா கேடரிங் ஸ்டாலுக்குள்.ஹாலுக்கு உள்ளே 1000 பேர் அமரும் சபையிலொரு 20 அல்லது 25 பேர் (வித்வான்கள் கோஷ்டியும் சேர்த்து) சங்கீதத்திற்கு தங்களை அர்பணித்துக்கொண்டு இருந்தார்கள்

இனி என்னுடைய தங்கமணியின் நண்பியின் மகன் பாரத் சுந்தரின் கச்சேரியை கேக்கலாமா? இடம் நாரத கானசபா,மினி ஹால்,நேரம் மதியம் 2 மணி முதல் 4 மணி வரை.


பரத் சுந்தரைப் பற்றி ஒரு அறிமுகம். ஜெயா டி வி நடத்திய கர்நாடக இசைப் போட்டியில் முதல் பரிசை அள்ளிச்சென்றவர். வளர்ந்து வரும் கலைஙர்களில் தனக்கென்று ஒரு இடத்தை பிடித்துள்ளார்.அமைதியாக ஆனால் அனவரையும் கவரும் வண்ணம் பாடும் திறமையுடையவர். சரி இனி கச்சேரியை கேட்க போகலாம்.


மினிஹால் நிரம்பி வழிந்தது.சில பேர் நின்று கொண்டு கூட கேட்பதற்கு காத்திருந்தார்கள் என்றால் பார்த்துக்கொள்ளுங்கள். பக்க வாத்யம் திரு பரூர் அனந்த கிருஷ்னன், மிருதங்கம் திருவநந்தபுரம் பாலாஜி.



நாளை  தொடரும்

Thursday, December 29, 2011

மார்கழி மாத கச்சேரிக்கு போகலாமா 1


இன்று காலை அவசர அவசரமாக ஹைதராபத்திலிருந்து காலை பிளைட் பிடித்து வந்ததின் முக்கிய காரணமே நண்பர் சஞ்சை சுப்ரமணியத்தின் கச்சேரி கேட்கவேண்டும் என்பதற்காகத்தான்.உள்ளே நுழைந்ததுமே என் தங்கமணிஉமா இன்னிக்கி என் fரண்டுடோட பையன் பரத்சுந்தர் கச்சேரி இருக்கு நான் போகணும் என்று தீர்மானமாக சொல்லிவிட்டாள். நான் மத்திரம் என்ன லேஸ்பட்டவனா நானும் என் Fரண்டோட பொண்ணு சுஷ்மா சோமா பாடுகிறாள் அப்பறம் 4 மணிக்கு சஞ்சய் கச்சேரி அதுக்கும் போகனும்.நல்லவேளை எல்லாமே நாரதகான சபாவில்தான் அதனால் அதிசயமாக சமாதானமாக காரில் கிளம்பினோம்




முதல் கச்சேரி சுஷ்மாவினுடையது மதியம் 12.30 லிருந்து 2 .00 மணிவரை. நாங்கள் போகும்போதே கச்சேரி ஆரம்பித்து பாதி ஆகிவிட்டது.காம்போதி ராகத்தின் ஆலாபனை ஆரம்பமாகியது, சுஷ்மா சிங்கபூரில் பிறந்து வளர்ந்தாலும் ந்மது கலாசரத்தைவிடாமல் அனுசரிக்கும் சார்ட்டர்டு அக்கௌண்டன்ட் சோமசேகரனின் மகள். 1980 வருடத்திலிருந்து நான் சிங்கப்பூர் செல்லும்போதெல்லாம் தவறாமல் என்னை கவனித்துக்கொள்ளும் குடும்ப நண்பர்.


கதைக்கு வருவோம். சுஷ்மா முறையாக சங்கீத பையிலும் மாணவி இப்போது சங்கீத கற்றுக்கொள்ளுவதற்காக சென்னை வாசம்.


காம்போதி ராகத்தை கொஞ்சம் கொஞ்சமாக எடுத்து ராக ஸ்வரூபம் கெடாமல் பாடிய ள்விதம் அபாரமாக இருந்தது. பெரிய வித்வான்கள் எடுத்து ஆளும் ராகத்தை மெருகு குலையாமல் ரசிகர்களுக்கு கொண்டு சேர்த்த விதம் ரம்யமாக இருந்தது. ஸ்வரபிரஸ்தாரங்களும் ரசிகர்கள்களின் ஏகோபித்த கரகோஷத்தை அள்ளிச்செண்றது. தனி ஆவர்த்தனம் வாசித்த ரிஷிகேஷ் சிறுவயதிலேயே தன் தனியை சிறப்பாக அளித்தார். சுஷ்மா பின்னர் சாருமதி ராகத்தில் ம்ன சாரமதி என்ற தஞசாவூர் சங்கர ஐய்யர் கீர்த்தனையை அளித்து தில்லானாவுடன் கச்சேரியை நிறவு செய்தார்.


அடடா சொல்ல மறந்து விட்டேனே! வயலின் வாசித்த பொடியன் ச்ரிராம் ச்ரிதர் அபார வாசிப்பு.பொடியனுக்கு 15 வயசுதானம் சுஷ்மா பாட்டுக்கு ஈடுகொடுத்து பிடிகளையும்,ஸ்வரங்களையும் அப்படியே திருப்பிக் கொடுத்த விதத்தைப் பார்த்தால் பிற்காலத்தில் வயலினில் வில்லாதி வில்லானக வர வாய்ப்புண்டு. முடிவில் அவனிடம் விசாரித்தபோது வெட்கத்துடன் சொன்னான் லால்குடி யுனிவெர்சிடியில் வயலின் பயில்கிறானாம். பின் கேப்பானேன் எப்படி இருக்கும் வாசிப்பு !கச்சேரியை கேட்டு அடுத்த கச்சேரிக்கு தயார் செய்துகொள்ளும் போது மனதில் ஒரு நிம்மதி கர்நாடக சங்கீதம் இன்றைய இளையசமுதாயத்தினரிடம்


கையில் பத்திரமாக் இருக்கிறது என்ற உணர்வுதான் அது.


நாளை அடுத்த கச்சேரி கேட்கலாமா?








Wednesday, December 21, 2011

பரம கிருபாநிதி அல்லவோ

யாதனின் யாதனின் நீங்கியான் நோதல்

அதனின் அதனின் இலன்.

வள்ளுவர் துறவு அதிகாரத்தில் இந்தக் குறளை வைத்துள்ளார். இதனுடைய பொருள் எந்த எந்த பொருள்களினாலோ அல்லது அதன் மீது பற்றுவைப்பதாலோ நமக்கு துன்பம் வருமோ அந்த அந்த பொருள்களயோ அல்லது அதன் மீது உள்ள பற்றையோ நீக்கிவிட்டால் நமக்கு அந்தப் பொருள்களினால் வரும் துன்பம் வராது. புரியும்படிச் சொல்லவேண்டும் என்றால் சர்க்கரை வியாதி உள்ளவர்கள் சர்க்கரையையோ அல்லது அதன் மீது உள்ள அதீதப் பற்றை விட்டுவிட்டால் அவர்களுக்கு அந்தவியதியால் வரும் துன்பம் வராமல் போகும். பற்று என்று கூறும்போது வாயில் உள்ள இரண்டு உதடுகளும் சேரும் இது இயற்கை. இதோ இந்தக் குறளை கூறிப் பாருங்கள்

பற்றுக பற்றற்றான் பற்றினை அப்பற்றைப்

பற்றுக பற்று விடற்கு

ஆண்டவனிடத்தில் பற்று வைக்கவேண்டும் என்று கூறும்போது அது நல்ல பற்று என்பதை உணர்த்து வண்ணம் பலமுறை உதடுகள் சேரும்படி பற்று என்ற வார்த்தையை அதிகமாக் கையண்டிருக்கிறார் வள்ளுவர். ஆனால் இந்த "யாதனின்" குறளைக் கூறிப் பாருங்கள் உதடுகள் ஒட்டவே ஒட்டாது. பற்றை முற்றிலும் விடவேண்டிய இடத்தில் அறவே விட்டுவிட்டார்.

சரி அப்படி பற்று வைக்காமல் வாழ இன்றைய உலகத்தில் ஒரு மனிதனால் வாழமுடியுமா? முடியும் என்பதற்கு ஆதர்ச புருஷராய் திகழ்ந்தவர் ஒருவர் உண்டு.

அவர்தான் இவர்


பெரியவா என்றும் பரமாசாரியார் என்றும் உலகத்தாரால் பெரிதும் வணங்கப்பெற்ற காஞ்சி காமகோடி மடத்தின் 68 வது பீடாதிபதியாகத் திகழ்ந்த ச்ரீ சந்திரசேகரேந்திரசரஸ்வதி ஸ்வாமிகள். இன்றோடு அவர் மஹாசமாதி ஆகி 17 வருடங்கள் ஓடி விட்டன. ஆனாலும் அவருடன் இருக்குபடியான சில சந்தர்ப்பங்களைக் கொடுத்த ஆண்டவனுக்கு என் நன்றி. என் வாழ்க்கையில் ஏதாவது ஒரு சாதனை என்று ஒன்று உண்டென்றால் அது அவர் இருந்த காலத்தில் நாமும் வழ்ந்தோம் என்பதே.

அது சரி இந்த மேலே உள்ள படத்தில்  இரண்டு சிறுவர்களுக்கு மேலே நெற்றி நிறைய விபூதியுடன் அரைக்குடுமியுடன் முகத்தில் சந்தோஷம் பொங்க ஆசையோடு பெரியவாளைப் பார்க்கும் சிறுவன்யார்? இன்று கோட்டு சூட்டுப் போட்டுக்கொண்டு கௌசிகம் பதிவில் இருக்கும் இவந்தான் அது.

துறவையும் துறந்த மஹான் அவர். ஒரு துறவி எப்படி இருக்கவேண்டும் எனபதற்கு உதாரணமாய்த் திகழ்ந்தவர்

ஸ்ரீ குருப்யோ நமஹ:

தோடகாஷ்டகம்

1 விதிதாகில ஸாஸ்த்ர சுதா ஜலதே

மஹிதோபநிஷத் கதிதார்த்த நிதே 1

ஹ்ருதயே கலயே விமலம் சரணம்

பவசங்கர தேசிக மே சரணம் 11

விதிக்கபட்ட எல்லா சாஸ்த்ரங்களையும் அதன் பொருளையும்
முற்றிலும் உணர்ந்த அமிர்த கடல் போன்றவரே,
மாபெரும் உபநிஷத் கருத்துக்களின் உட்பொருளை அறிந்த நவநிதியே,

இப்படிப்பட்ட பெருமை வாய்ந்த தங்களின் அப்பழுக்கற்ற திருவடிகளை
என்னுடைய ஹிருதயத்தில் வைத்து பூஜிக்கிறேன்

அவதார புருஷராகிய ஹே காலடி சங்கர குருவே உங்களின் காலடிகளை

சரணடைகிறேன் எனக்கு அடைக்கலம் தாருங்கள்.
பரம கிருபாநிதி அல்லவோ


யாதனின் யாதனின் நீங்கியான் நோதல்


அதனின் அதனின் இலன்.


வள்ளுவர் துறவு அதிகாரத்தில் இந்தக் குறளை வைத்துள்ளார். இதனுடைய பொருள் எந்த எந்த பொருள்களினாலோ அல்லது அதன் மீது பற்றுவைப்பதாலோ நமக்கு துன்பம் வருமோ அந்த அந்த பொருள்களயோ அல்லது அதன் மீது உள்ள பற்றையோ நீக்கிவிட்டால் நமக்கு அந்தப் பொருள்களினால் வரும் துன்பம் வராது. புரியும்படிச் சொல்லவேண்டும் என்றால் சர்க்கரை வியாதி உள்ளவர்கள் சர்க்கரையையோ அல்லது அதன் மீது உள்ள அதீதப் பற்றை விட்டுவிட்டால் அவர்களுக்கு அந்தவியதியால் வரும் துன்பம் வராமல் போகும். பற்று என்று கூறும்போது வாயில் உள்ள இரண்டு உதடுகளும் சேரும் இது இயற்கை. இதோ இந்தக் குறளை கூறிப் பாருங்கள்






பற்றுக பற்றற்றான் பற்றினை அப்பற்றைப்


பற்றுக பற்று விடற்கு






ஆண்டவனிடத்தில் பற்று வைக்கவேண்டும் என்று கூறும்போது அது நல்ல பற்று என்பதை உணர்த்து வண்ணம் பலமுறை உதடுகள் சேரும்படி பற்று என்ற வார்த்தையை அதிகமாக் கையண்டிருக்கிறார் வள்ளுவர். ஆனால் இந்த "யாதனின்" குறளைக் கூறிப் பாருங்கள் உதடுகள் ஒட்டவே ஒட்டாது. பற்றை முற்றிலும் விடவேண்டிய இடத்தில் அறவே விட்டுவிட்டார். சரி அப்படி பற்று வைக்காமல் வாழ இன்றைய உலகத்தில் ஒரு மனிதனால் வாழமுடியுமா? முடியும் என்பதற்கு ஆதர்ச புருஷராய் திகழ்ந்தவர் ஒருவர் உண்டு.


அவர்தான் இவர்













பெரியவா என்றும் பரமாசாரியார் என்றும் உலகத்தாரால் பெரிதும் வணங்கப்பெற்ற காஞ்சி காமகோடி மடத்தின் 68 வது பீடாதிபதியாகத் திகழ்ந்த ச்ரீ சந்திரசேகரேந்திரசரஸ்வதி ஸ்வாமிகள். இன்றோடு அவர் மஹாசமாதி ஆகி 13 வருடங்கள் ஓடி விட்டன. ஆனாலும் அவருடன் இருக்குபடியான சில சந்தர்ப்பங்களைக் கொடுத்த ஆண்டவனுக்கு என் நன்றி. என் வாழ்க்கையில் ஏதாவது ஒரு சாதனை என்று ஒன்று உண்டென்றால் அது அவர் இருந்த காலத்தில் நாமும் வழ்ந்தோம் என்பதே.



துறவையும் துறந்த மஹான் அவர். ஒரு துறவி எப்படி இருக்கவேண்டும் எனபதற்கு உதாரணமாய்த் திகழ்ந்தவர். அவருடைய வாழ்க்கையில் நடந்த ஒரு நிகழ்ச்சியை எனக்கு ஆஞ்சநேய உபாசகரும்,நங்கநல்லூர் மற்றும் பாண்டிச்சேரியிலுள்ள பஞ்சமுக ஆஞ்சநேயர் கோவில்களச் ஸ்தாபித்து வழிநடத்திவரும் திரு ரமணி அண்ணா கூறியதை இந்த நாளில் ஒரு பானை சோற்றுக்கு ஒரு அரிசி பதம் போல இங்கு பதிக்கிறேன் பெரியவாளின் திருவடிகள் வணங்கி..





பரமாச்சாரியார் ஒருமுறை வெளியூரில் முகாமிட்டிருந்தார். பூஜையை முடித்துக்கொண்டு மதியம் 3 மணியளவில்தான் அவர் உணவு அருந்தும் வேளை. அவருடைய உணவு மிகவும் எளிமையானது. கொஞ்சம் அரிசிசாதம், எதாவது ஒரு கீரைஅனேகமாக அது அகத்தீ கீரையாகத்தான் இருக்கும்,பழம் இவ்வளவுதான். வெகுகாலமாக அவருடன் கூடவேதங்கியிருந்து அவருக்கு கைங்கரியம் செய்துவரும் ஒருவர்தான் வழக்கமாக அவருக்கு உணவு படைப்பார். தங்கியிருந்த இடமோ ஒரு குக்கிராமம் வசதிகள் ஏதும் இல்லாத ஊர்.



முதல்நாள் உணவை அருந்தினார் பெரியவர் அதில் எதோ ஒரு கீரை பதார்த்தம் இருந்தது. மறுநாளும் அதே கீரையைச் செய்து இருந்தார்கள் பெரியவரும் அதைச் சாப்பிட்டார். இப்படி அதே கீரையுடன் இரண்டு நாட்கள் சென்றன. மூன்றாவது நாளும் பெரியவர் சாப்பிட உட்கார்ந்தார். அவருக்கு கைங்கரியம் செய்பவரும் அதே கீரையை இலையில் இட்டார். ஸ்வாமிகள் கேட்டார் "..... என்ன இன்னிக்கும் அதே கீரையா" என்றார். பரிமாறுபவர் சொன்னார் "இல்லே பெரியவாளுக்கு இந்தக்கீரை பிடித்திருக்கிறது போல. முதல் நாளே பெரியவா கேட்டு ரெண்டாம்தரம் போட்டேன். அதான் பெரியவாளுக்கு இந்த கீரை பிடிக்கின்றதுபோல என்ற எண்ணத்தில் அதையே செய்தேன்" என்றார். இதைகேட்டவுடன் பெரியவர் ஒன்றும் சொல்லாமல் பாதி சாப்பாட்டிலேயே எழுந்துவிட்டார். காஷ்ட மௌனத்திலும் (யாருடனும் பேசாத நிலை)சென்றுவிட்டார்.



பெரியவர் சாப்பிட்டபிறகுதான் மற்றவர்கள் சாப்பிடும் வழக்கம் இதைகேள்விப் பட்டதும் யாரும் மடத்தில் சாப்பிடவில்லை. பரிமாறியவரை அவர்தான் ஏதோ தவறு செய்துவிட்டார் என்று அவரைக் கோபித்துக்கொண்டார்கள். அவரும் அப்படியே நினைத்து இரு கண்களிலும் கண்ணீர் தாரை தாரையாக கொட்ட பெரியவாளிடம் காலில் விழுந்து மன்னிப்பு கேட்டார். பெரியவர்களின் மௌனம் தொடர்ந்தது. ஆனால் காரணம் தெரியவில்லை.



மீதியை நாளைப் பார்ப்போமா



ஜய ஜய சங்கரா ஹர ஹர சங்கர

இப்படி மௌனமாகவே ஒரு மாதம் கழிந்தது.கடைசியில் ஒரு மாதம் முடிந்தவுடன் பெரியவர் காலையில் அனுஷ்டானம் முடிந்தவுடன்" அவனைக்கூப்பிடு' என்றார்.




கேள்விப்பட்டவுடன் அவருக்கு பணிவிடை புரிந்து வரும் அந்த நபர் வந்து சாஷ்டாங்க நமஸ்காரம் செய்து

"பெரியவாஎன்னை மன்னிக்கவேண்டும் எனக்கு ஏதாவது தண்டனை கொடுங்கோ" என்றார். மாகான் சொன்னார் "உனக்கு தண்டனை கொடுக்க நான் யாரு? தப்பு செய்தவாதான் தண்டனை அனுபவிக்கனும். நீ ஒரு தப்பும் செய்யலயே." உடனே "இல்லே அன்னிக்கி நடந்ததற்கு நான்தானே காரணம்" என்றர்.



"ஓ அதுவா" என்று புன்சிரிப்புடன் கூறினார் பெரியவர்கள்."நான் ஒரு சன்யாசி.சன்யாஸ தர்மத்தின்படி நாங்கள் எந்தப் பொருளின்மீதும் பற்று வைக்கக்கூடாது.பற்றுவைக்காமல் இருப்பதோடுமட்டுமல்லாமல் அப்படி நாங்கள் இருக்கிறோம் என்பதை உலகுக்கு தெரியப் படுத்தவேண்டும்.சந்யாச தர்மத்தின் படி நாங்கள் ஒரு வேளை சாத்விகமான உணவை உட்கொள்ளவேண்டும். அப்போதுகூட அதன் மீது பற்று இல்லாமல்அருந்தவேண்ண்டும்.அப்பொழுதுதான் நாங்கள் மற்றவர்களுக்கு ஆசையை விட்டொழிக்கவேண்டும் என்றெல்லலாம் உபதேசம் பண்ண ஒரு தகுதி வரும். அன்றும் அதற்கு முதல் நாளும் நீ பண்ண கீரையை நான் சாப்பிடும்போது எனக்கு அதன் மீது ஆசை கிடையாது.ஆனால் நான் சாப்பிட்டவிதமோ. அல்லது என்னுடைய சொல்லோ அல்லது செயலோ அதன் மீது எனக்கு பற்று இருப்பதுபோல ஒரு தோற்றத்தை உருவாக்கிவிட்டது என்று நினைக்கிறேன். அது சன்யாச தர்மத்துக்கு விரோதமான செயல். தப்பு செய்தது நான். அதற்காக நான் எனக்கு தண்டனன கொடுத்துகொண்டேன்" என்றார்.



நீதியைப் பற்றிச் சொல்லும்போது

"நீதியை நிலை நாட்டினால் மட்டும் போதாது நிலை நாட்டிவிட்டதாக எடுத்துக்காட்டவேண்டும்.( It is important to render justice;but it is more important to establish that justice is seems to have been done) இந்த வாசகத்துக்கு உதாரணபுருஷராக வாழ்ந்தவர்தான் ஸ்வாமிகள்











Thursday, December 08, 2011

தோடகாஷ்டகம்



ஸ்ரீ குருப்யோ நமஹ:

தோடகாஷ்டகம்

1 விதிதாகில ஸாஸ்த்ர சுதா ஜலதே

  மஹிதோபநிஷத் கதிதார்த்த நிதே 1

  ஹ்ருதயே கலயே விமலம் சரணம்

  பவசங்கர தேசிக மே சரணம் 11

விதிக்கபட்ட எல்லா சாஸ்த்ரங்களையும் அதன் பொருளையும்

முற்றிலும் உணர்ந்த அமிர்த கடல் போன்றவரே,

மாபெரும் உபநிஷத் கருத்துக்களின் உட்பொருளை அறிந்த நவநிதியே,

இப்படிப்பட்ட பெருமை வாய்ந்த தங்களின் அப்பழுக்கற்ற திருவடிகளை

என்னுடைய ஹிருதயத்தில் வைத்து பூஜிக்கிறேன்

அவதார புருஷராகிய ஹே காலடி சங்கர குருவே உங்களின் காலடிகளை

சரணடைகிறேன் எனக்கு அடைக்கலம் தாருங்கள்.

Thursday, October 06, 2011

நவராத்ரி நாயகி 10






இன்றைய பெயர்கள்
நித்யதிருப்தா
எப்பொழுதும் திருப்தி அடைந்து சந்தோஷமாக இருப்பவள். ஆன்மாக்களாகிய தன் பக்தர்களிடத்தில் குறைகள் இருந்தாலும் அதை மனதில் கொள்ளாது அவர் செய்யும் வழிபாடுகளால் சாஸ்வதமாக திருப்தி அடைபவள்.அவளுக்கென்று எந்த ஆசைகளும் இல்லாததால் மட்டும் நித்ய திருப்தாவாக இருப்பவள்.அது மட்டுமல்ல அவளது அடியார்களின் ஆசைகளையும் தீர்த்து வைத்து அவர்களையும் நித்யதிருப்தாவாகச் செய்பவள்.அவள் அதற்குமேலும் அடியயார்களுக்கு ஆசையே வரதாவண்ணம் அவர்களை வழிப்படுத்தி அவர்களையும் வசப்படுத்துபவள். ஆசையை தீர்த்து வைப்பதைவிட ஆசையே ஏற்படமல் செய்வது மிகவும் உத்தமம். திருமூலர் அதனால்தான் அடித்து கூறினார்" ஆசை அறுமின் ஆசை அறுமின் ஈசனோடுயாயினும் ஆசை அறுமின்" இன்றைய காலகட்டத்தில் அப்படி நித்யதிருப்தாவாக ஒரு மனிதன் இருக்க முடியுமா?
ஆம் இருந்தார் ஒருவர் நம்முடைய காலகட்டத்திலேயே. அவர்தான் மஹாகவி பாரதியார்.நாம் இன்றைக்கு எந்த விஷயங்கள் எல்லாம் சந்தோஷம் என்று நினைத்து திருப்தி அடைவது போல் நினைக்கிறோமோ அவைகள் ஒன்றுமே இல்லாமல் இருந்தும் நித்யதிருப்தாவாக இருந்தார் . வீடு வாசல் கிடையாது, உனவுக்கு வசதி கிடையாது உடுக்க துணிவகைகள் கிடையாது ஆங்கிலேயன் தொல்லை தாங்காமல் பாண்டிச் சேரிக்கும் சென்னைக்கும் அலைந்துகொண்டிருந்தார் . . இருந்தாலும் அவர் என்ன சொன்னார் தெரியுமா" எத்தனை கோடி இன்பம் வைத்தாய் இறைவா" நாமாக இருந்திருந்தால் என்ன சொல்லியிருப்போம்.அம்பிகையை முழுவதும் நம்பிவிட்டாவர்களுக்குத்தான் இது சாத்தியம்
பக்தநிதி

பக்தர்களுக்கு மிகப்பெரிய நிதியாக விளங்குபவள். அடியவர்கள் எதை கேட்டாலும் அதை அவர்களுக்கு அளித்து என்றும் குறையாத நிதியாக விளங்குபவள்.மற்ற நிதிகள் எல்லாம் ஒருகாலத்தில் அழிந்துவிடும் திருப்தியளிக்காமல் போனாலும் போகலாம் ஆனால் பக்தர்களுக்கு அவள் அளிக்கும் பக்தி என்ற நிதி இருக்கிறதே அது அள்ள அள்ள குறையாது திருப்தியளிக்காமலும் போகாது.  
நிகிலேஸ்வரி
இந்த அண்ட சராசரத்துக்கும் ஈஸ்வரியாக இருப்பவள். அகிலமென்றால் உலகம். நிகிலம் என்றால் இந்த உலகத்தையும் சேர்த்து உள்ள ஈரேழு பதிநான்கு உலகத்திற்கும் ஈஸ்வரியாகவும் தலைவியாகவும் இருந்து காப்பவள்.மனித வர்கம்மட்டுமல்லாமல் புல், பூண்டு,புழு,மரம்,செடி, கொடி,பறவைகள்,பாம்பு,கல்,கணங்கள்,அசுரர்கள்,முனிவர்கள் மற்றும் ஒரு செல் உள்ள தாவரங்கள் ஆகிய எல்லாப் பதிநான்கு பிறப்புக்களுக்கும் அவள்தான் தாயாக இருந்து காக்கும் நிகிலேஸ்வரி.
ஸிஞ்ஜான மணிமஞ்ஜீர மண்டித ஸ்ரீ பதம்புஜா !
மராளி மந்த கமனா மஹாலாவண்ய சேவதி:!!
அம்பாளுடைய பாதமும் அவளுடைய நடை அழகயையும் வர்ணிக்கும் வரிகள்.அவள் மிகவும் மெதுவாக அன்னப்பட்சியைப் போல் நடந்து செல்கிறாள். அப்படி நட்ந்து செல்லும்போது பாதங்களில் இருக்கும் கொலுசுகளில் இருக்கும் மணிகள் கிணி கிணி என்று ஓசை எழுப்புகிறது.அந்தப் பாதங்களை வணங்குவோம்.
ஸ்ரீ சக்ரராஜ நிலயா ஸ்ரீ மத் திருபுரசுந்தரி!!
அம்பிகைக்கு ஆயிரம் நாமங்கள் இருந்தாலும் கடைசியாக முடிவது அவள் யார் என்ற விளக்கத்துடன். அவள்தான் திருபுரசுந்தரி.இதையே"" அபிராமி பட்டரும் திரிபுரசுந்தரியாவது அறிந்தனமே" என்கிறார். எந்த திருபுர சுந்தரி பிரும்மத்தையும் இந்த ஜீவனையும் ஒன்றாக சேர்க்கக்கூடியவள். அவள் எங்கு இருப்பாள். ஸ்ரீ சக்ரத்தின் மத்தியில் இருப்பவள் அப்படிபட்ட லலிதாவை வணங்கி இப்பொழுது விடைபெறுவோம் பின்பு ஒரு சமயம் அம்பாளின் அருளோடு தொடருவோம்

இன்றைய ஆவர்ணம் ஒன்பதாவது கடைசி பாடல்.

ராகம்:  ஆஹிரி             தாளம்: ரூபகம்

பல்லவி
ஸ்ரீ கமலாம்பா ஜயதி அம்ப
ஸ்ரீ கமலாம்பா ஜயதி ஜகதம்பா
ஸ்ரீ கமலாமந்திரஸ்த
ம்பா ஜயதி
ஸ்ருங்காரரஸ கதம்பா மதம்பா
ஸ்ரீ கமலாம்பா ஜயதி சித்பிம்பா
பிரதி பிம்பேந்து பிம்பா
ஸ்ரீ கமலாம்பா ஜயதி
ஸ்ரீ புர பிந்து மத்ய்ஸ்த சிந்தாமணி மந்திரஸ்த
ஸிவாகார மஞ்சஸ்தித  ஸிவாகாமேஸாங்கஸ்த...(ஸ்ரீ கமலாம்பா....)

அனுபல்லவி

ஸூகராநநாத்-யர்சித மஹாத்ரிபுரசுந்தரீம்
ராஜராஜேஸ்வரீம்
ஸ்ரீு புர சர்வநந்தாமய-சக்ர- வாஸினீம்
ஸுவாஸினீம் சிந்தயேஹம்...(ஸ்ரீ கமலாம்பா.....௦
திவாகர ஸீதகிரண பாவகாதி விகாஸகரயா
பீகர தாபத்ரயாதி பேதந துரீணதரயா
பாகரிபு ப்ரமுகாதி ப்ரார்தித ஸுகளேபரயா
ப்ராகட்ய பராபரயா பாலிதோ தயாகரயா...  (ஸ்ரீ கமலாம்பா)

சரணம்
ஸ்ரீ மாத்ரே நமஸ்தே சிந்மாத்ரே ஸேவித
ரமா-ஹரீஸ விதாத்ரே
வாமாதி சக்தி பூஜித
பரதேவதாயக: ஸ்கலம் ஜாதம்
கமாதி  த்வாதஸபிரூபாசித காதி ஹாதி
ஸாதி மந்த்ர ரூபிண்யா:
ப்ரேமாஸ்பத ஸிவ குருகுஹ ஜநந்யாம்
பிரீதியுக்தமச்சித்தம் விலயது
ப்ரஹ்மமய ப்ரகாஸிநி நாமரூப விமர்ஸிநி
காமகலா ப்ரதர்யாதி ஸாமரஸ்ய நிதர்ஸிநி,......(ஸ்ரீ கமலாம்பா..0  


 ஸ்ரீ  கமலாம்பா ஜெயிக்கட்டும் . அகில  உலகத்துக்கும் அன்னையான   ஸ்ரீ கமலாம்பிகா ஜெயிக்கட்டும் .சிருங்கார ரசத்தின் மலர்க்கொத்தாக விளங்கும்
என்னுடைய தாயான ஸ்ரீ கமலாம்பா ஜெயிக்கட்டும் .ஞான சொருபத்தின் பிரதிபிம்பமாக சவ்திரனுக்கு சமானமாக  விளங்கும்  ஸ்ரீகமலாம்பா ஜெயிக்கட்டும். ஸ்ரீ புரம் என்னும்  ஸ்ரீ சக்ரத்தின் பிந்து ஸ்தானத்தின் மத்தியில் உள்maள சிந்தாமணி கிருஹத்தில் இருக்கும் சிவாகார மஞ்சத்தில் கோயில் கொண்டுள்ள சிவகாமேச்வரரின் அங்கமான அவரின் மடிமீது அமர்வது காட்சிதரும் ஸ்ரீ கமலாம்பா ஜெயிக்கட்டும். வராஹா முகம் கொண்ட திருமால் முதலியவர்களால் அர்ச்சிக்கப்பட்ட மஹாத்ரிபுரசுந்தரியை,
ராஜ ராஜேஸ்வரியை ஸ்ரீ சக்ரத்தின் சர்வாவந்தமைய  சக்ரத்தில்    உறையும்   சுவாசின்யுமான ஸ்ரீ கமலாம்பாவை நான் த்யாநிக்கிறேன் . ஸூர்யன், சந்திரன் அக்னி போன்றோருக்கு பிரகாசம் அளிப்பவளால் ,பயத்தை கொடுக்கின்ற தாபத்ரயங்களால் உண்டாகும் இடர்ப்பாடுகளை  நீக்குவதில் வல்லமை உள்ளவளால் , இந்திரன் முதலிய பிரமுகர்களால் பிரார்த்திக்கப்பட்ட மங்கள சொறுபம் கொண்டவாளால், தன்னை வெளிப்படுத்திக்கொண்ட பராபரியாக விளங்குபவளால், கருணை செய்பஅவளால், ஸ்ரீ கமலாம்பாவால் நான் காப்பாற்றபட்டிருக்கிறேன். ஸ்ரீ மாதாவிற்கு, ஞானசொருபிக்கு, லக்ஷ்மி, திருமால், ஈஸ்வரன், பிரும்மா, ஆகியோரால் நமஸ்காரம் செய்யப்படுபவளுக்கு என் நமஸ்காரங்கள் .ப்ரும்ம,விஷ்ணு ருத்ர திருமூர்த்திகளின்  சக்திகளான வாமா,ஜ்யேஷ்டா , ரௌத்ரி, ஆகிய தேவதைகளால் பூஜிக்கும் பரதேவதேவதையிடமிருந்து அனைத்தும் தோன்றின. மன்மதன் முதலிய பன்னிருவரால் உபாசிக்கப்பட்ட ககாரத்தை ஆதியாகக் கொண்ட காதிவித்யை,ஹகாரத்தை ஆதியாகக்கொண்ட ஹாதி வித்யை,ஸகாரத்தை ஆதியாகக் கொண்ட ஸாதிவித்யை ஆகியவற்றின் மந்தர ஸ்வரூபமாக இருப்பவளுடைய அன்புக்கு பாத்ரமானவரும்சிவாம்ஸமானவருமான குருகுஹனின் அன்னையிடத்தில் பிரியத்தோடு கூடியஎன் மனம் லயிக்கட்டும் ப்ரம்மமயமாக பிரகாசிப்பவளே, பெயர்களையும் உருவங்களையும் கொண்டு அறியப்படுபவளே. ஸ்ரீ வித்யா ஸம்ப்ரதாயத்தில் காமகலை என்ற வழிபாட்டு முறையைக் காட்டியவளே.ஸமத்துவத்தை கடைபிடித்து காட்டுபவளே.என் மனது எப்போதும் உன்னிடத்திலேயே நிலைத்து நிற்கட்டும்  ஸ்ரீகமலாம்பிகையே.

ல

கடைசி நவாவர்ண  மங்களகிருதி
ராகம்: ஸ்ரீ   தாளம்: கண்டஏகம்
பல்லவி
ஸ்ரீ கமலாம்பிகே ஸிவே பாஹிமாம் லலிதே
ஸ்ரீ பதிவிநுதே ஸிதாஸிதே ஸிவஸஹிதே... ஸ்ரீ கமலாம்பிகே)
சரணம்
ராக சந்த்ரமுகீ ரக்‌ஷித கோலமுகீ
ரமா  வாணீ ஸகீ  ராஜயோகஸுகீ
ஸாகம்பரி ஸாதோதரி சந்த்ரகலாதரி
ஸங்கரி  ஸங்கர  குருகுஹ பக்த வசங்கரி
ஏகாச்ஷரி புவனேச்வரி ஈஸப்ரியகரி
ஸ்ரீகரி  ஸுககரி ஸ்ரீ மஹாத்ரிபுரசுந்தரி....(ஸ்ரீ கமலாம்பிகே)
ஸ்ரீ லக்‌ஷிமியின் பதியான விஷ்ணுவினால் துதிக்கப்பட்டவளே,
வெண்மை, கருப்புநிறம் ஆகிய இரண்டு நிறங்களன துர்கை கௌரியாய் காட்சியளிப்பவளே, சிவனோடு இரண்டறக்கலந்தவளே.லலிதாதேவியாகக் காட்சியளிப்பவளே, ஸ்ரீ கமலாம்பிகையே மங்களத்தை அருளுபவளே என்னைக் காப்பாற்று.

பௌர்ணமி நிலவைப்போன்ற முகத்தையுடையவளே, வராஹ முகமுடைய திருமாலை ரக்‌ஷித்தவளே,  லக்‌ஷிமியையும் ஸரஸ்வதியையும் தோழியாகக் கொண்டவளே,ராஜயோக சுகத்தில் திளைப்பவளே,ஸாகம்பரீ எனப்பெயர்பெற்ற ஸ்ரீ தூர்கையே ,மெல்லிடையாளே,சந்திரனுடையகலையை ஆபரணாமாகக் கொண்ட ஸங்கரியே, சங்கரன் ,குருகுஹன் மற்றும் பக்தர்களுக்கு வசப்படுபவளே,ஹரீம் என்ற ஓரேழுத்து மந்திரத்தில் விளங்குபவளே,உலகிற்கு ஒரே தலைவியே  சிவனுக்கு பிரியமானவற்றை செய்பவளே,ஐஸ்வர்யத்தையும் சுகத்தையும் அருளும் காரயங்களைச் செய்பவளே, ஸ்ரீ மஹாத்ரிபுரசுந்தரியே, ஸ்ரீ கமலாம்பிகையே என்னை ரக்‌ஷிப்பாயாக:      

இங்கே பாடுபவர்களைப் பற்றி ஒரு வார்த்தை 
 ஸ்ரீ முத்துஸ்வாமி தீக்ஷதரின் கிருதிகள் எல்லாமே ஸ்ரீ வித்யா உபாசனை மந்திரங்கள்தான் . அவருடைய கிருதிகளை பாடம் செய்வது பாடுவதும் மிகக் கடினம். ஸ்ரீ ராகத்தில் அமைந்த இந்த நவாவர்ண கிருதிகளில் ஒன்பதாவது கிருதியான இது மிகவும் விசேஷம் வாய்ந்தது.நம்மவர்களையே ஒரு கை பார்த்துவிடும். கீழே காணும் இந்த அயல்நாட்டு கல்லூரியில் படிக்கும் மாணவர்கள் எவ்வளவு அருமையாகப் பாடியுள்ளனர்.எடுத்த எடுப்பில் இரண்டு நிமிட ராக ஆலாபனையில் ஸ்ரீ ராகத்தின் லக்ஷ்ணத்தை பிழிந்து கொடுத்து விடுகிறாள் அந்தப் அமெரிக்கப் பெண்.என்ன கம்பீரமான குரல், சுருதி சுத்தம். அதேபோல் எல்லோரும் சேர்ந்து பாடும்போது ஒரேகுரலில் ஒலிப்பது, தாளக்கட்டுப்பாடு, ..அக்ஷரசுத்தம். அட! இங்குள்ள சங்கீத வித்வான்கள் குறித்துக்கொண்டு கவனம் செய்யவேண்டும். நீங்களும் கேட்டு விட்டு என்னுடன் அனுசரித்துப் போவீர்கள்






மங்களம்





Wednesday, October 05, 2011

நவராத்ரி நாயகி 9





                                                                       சதி

இன்று எடுத்துக்கொள்ளும் நாமம் சதி. அம்பாளுக்கு சதி என்ற பெயர் உண்டு.இது அவளுடைய பதிவிரதா தன்மையை சிறப்பிக்கும் வண்ணம் அமைந்தது. தக்ஷனுக்கு மகளாக பிறந்தபோது அவளுக்கு அவன் சதி என்ற பெயரைத்தான் வைத்தான். பிறகுதான் தாக்ஷயணி என்ற பெயர் வந்தது.சதி என்றால் உடன்கட்டை என்ற வார்த்தையோடு இதை சேர்த்துக்கொள்ளகூடாது.தக்ஷன் இந்த பெயரை வைத்தபோது அவன் நினைக்கவில்லை அவனே பிற்காலத்தில் தன் மகளுக்கே பிரச்சனையை கொடுத்து சிவனையும் அவளையும் பிரித்து வைத்து சிவனை அவமானப்படுத்தி, தன்கணவனுக்கு ஏற்பட்ட அவமானத்தை தாங்கமுடியாத தாக்ஷயணி தந்தையான தக்ஷனை அழித்து அவளும் அக்னி குண்டத்தில் விழுந்து தான் சதி என்பதை நிரூபித்தாள்.சதிஎன்றால் சத்தோடு சேர்ந்தவள் அதாவது சிவப்பரம்பொருளோடு ஐக்கியமானவள்.அதனாலும் சதி என்ற பெயர் வந்தது
ஜனனி
ஜனனிஎன்றால் நாம் ஜனனம் எடுப்பதற்கு காரணமானவள். அப்படியென்றால் நாம் ஜனனம் எடுக்காமல் இருக்கவேண்டும் என்றாலும் அவள்தான் அருளவேண்டும். ஜனனி என்றால் நம்மையெல்லாம் காக்க வேண்டும் எண்ணத்தில் லலிதா பரமேஸ்வரியாக அவதாரம் செய்தவள்.
புதார்ச்சிதா
புதனால் அர்ச்சனை செய்யப்பட்டவள். நவகிரங்களும்தான் அவளை வணங்கி துதிக்கின்றனர். அப்படியென்ன புதனுக்கு மட்டும் சிறப்பு. புதன் தான் ஞானத்தைஅளிப்பவன்.ஆனால் புதனுக்கே ஞானத்தை அளித்தவள் லலிதா பரமேஸ்வரிதான். நாம்யெல்லோரும் ஞானம் வேண்டித்தான் அம்பாளிடம் துதி செய்கிறோம்.அதனால்தான் இருபதாம் நூற்றாண்டில் வாழ்ந்த மிகச்சிறந்த சக்தி உபாசகனான மகாகவி பாரதியார் " நன்றது செய்திடல் வேண்டும் அந்த ஞானம் வந்தால் போதும் வேறேது வேண்டும்" என்று பாடினான். அதன்னால்தான் புதன் அவளை வணங்குகிறான். அப்படி புதனுக்கே ஞானத்தை அளித்த அம்பாளை வணங்கினால் நமக்கும் அவள் ஞானத்தை அருளுவாள்.

இத்தோடு இன்றைய வர்ணனையை முடித்து நாளை மீண்டும் தொடரலாம்

இன்றைய பாடல் எட்டாவது ஆவர்ணம்

ராகம்: கண்டா    தாளம்: ஆதி
பல்லவி
ஸ்ரீ கமலாம்பிகே அவாவ 
சிவே   கர த்ருத ஸுகஸாரிகே.......( ஸ்ரீ கமலாம்பிகே)
அநுபல்லவி
லோகபாலிநி கபாலிநி ஸூலிநி
லோகஜனநீ பகமாலிநி ஸக்ருதா
லோகயமாம் ஸர்வஸித்திப்ரதாயிகே
த்ரிபுராம்பிகே பாலாம்பிகே.....(ஸ்ரீ கமலாம்பிகே)

சரணம்
ஸந்தப்த ஹேம ஸந்நிப தேஹே
ஸதாக்கண்டைக ரஸ ப்ராவாஹே
ஸந்தாப- ஹர த்ரிகோண -கேஹ
ஸ-காமேஸ்வரி ஸக்தி ஸமூஹே
ஸந்ததம் முக்டி கண்டாமணி
கோஷயமான கவாட்த்வாரே
அநந்த குருகுஹ விதிதே கராங்குலி
நகோதய விஷ்ணு தஸாவதாரே
அந்த:கரேணக்ஷு கார்முக ஸப்தாதி
பஞ்ச தந்மாத்ர விஸிகா
அத்யந்தராக பாஸ த்வேஷாங்குஸதரகரே
அதிரஹஸ்ய யோகிநீபரே...ஸ்ரீ கமலாம்பிகே)




மங்கள உருவான் சிவசக்தியே,எட்டு விதமான ஸ்யமளா பேதங்களில் ஒன்றானவளே,கையினில் கிளியோடு இருப்பவளே,ச்ரி கமலாம்பிகையே என்னைக் காப்பாற்று.உலகை காப்பவளே,கபலத்தைக் கையினில் தாங்கியவளே,சூலத்தைக் கையினிலேந்தி சூலினி  துர்கையாக காட்சியளிப்பவளே, உலகனைத்தையும் தோற்றுவித்தவளே,பதினைந்து நித்ய தேவியரில் பதினாங்கவதான பகமாலினியாக விளங்குபவளே,ஸர்வஸித்திப்ரதாயக சக்ரேஸ்வரியாக உள்ள த்ரிபுராம்பிகையே கமலாம்பிகயே ஒருமுறையாவது என் மேல் கருணை வைத்து பார்.தங்க மேனியைக் கொண்ட பங்காரு காமாட்சியாகக் காட்சிதருபவளே,எப்போதும் அகண்ட ரஸ ப்ரவாகமாக பிரும்மானந்தத்தைப் பெருக்குபவளே, தாபத்ரயத்தைப் போக்கியருளும் மஹாகமேஸ்வரி, மஹாவஜ்ரேஸ்வரி, மஹாபகமாலினீ,ஆகிய மூன்று ஆவரண தேவதைகளாக ஸ்ரீ சக்ரத்தின் எட்டாவது முக்கோணத்தில் உளுறைபவளே,காமேஸ்வரியோடு கூடிய ஸக்தி ஸமூகங்களைக் கொண்டவளே,எப்போதும் ப்ரணவநாதமான கண்டா மணி ஓசையை எழுப்பியவண்ணம் முக்திதரும்  சிந்தாமணிக்கு  அழைத்துச்செல்லும் வாயிற்கதவுகளாக இருப்பவளே,ஆதிசேஷேன் குருகுஹன் ஆகியோரால் நன்கு அறியப்பட்டவளே,கை விரல் நகங்களிலிருந்து விஷ்ணுவின் தஸாவதாரங்களைத் தோற்றுவித்தவளே,அந்தகரணமென்னும் கரும்புவில்லில் சப்தம்,-ரூபம்-ரஸம்-கந்தம்-ஸ்பர்ஸம் எஅனப்படும் ஐந்து தன்மாத்ரைகளை அம்புகளாக்கி அங்கு ஏற்படும் மிக அதிகமான பற்றையும், பாசத்தையும்,க்ரோதத்தையும்,நீக்குவதற்காக கையினில் அங்குசம் தரித்திருக்கும் கரங்கள் உடையவளே,அதிரஹஸ்ய யோகினியாகைருப்பவளே கமலாம்பிகையே என்னை ஒருமுறையாவது கடைக்கண்ணால் பார்த்தருள்வாயே