Wednesday, August 23, 2006

சும்மா இருப்பதே சுகம்

அருணகிரியாருக்கு முருகன் உபதேசம் செய்ததுமாதிரியாக இருக்கு என்று
எண்ணவேண்டாம்.அதெல்லாம் திரு.ஜி.ராகவன்,திரு.ஸ்.கே மற்றும்திரு.ராமநாதன் பார்த்துக்கொள்வார்கள்.கீதா மேடம் சொன்ன மாதிரி நம்மாலே சாதாரண பதிவே போடமுடியாது. அண்மையில் மறைந்த ஷெனாய் மாமேதை தன்னுடைய தொன்னுறாவது வயதில் மிகச்சிறந்த கச்சேரியை நமது பாரளுமன்றத்தில் நிகழ்தினார்.ஆனால் இதெல்லாம் சின்ன பொண்ணுக்கு தெரிய வாய்ப்பில்லை.
மாலை நேரம் யாரோ கொடுத்த கோகுலாஷ்டமி சீடை,முருக்கு,தட்டை ஆகியவற்றை நொருக்கு தீனியாக தின்று கொண்டிருந்தேன். (விஜிக்கு படிக்கவே கஷ்டமாக இருக்கும்) ஏதோ சண்டை போடுகிறமாதிரி கேட்டது.சரி நானும் இது ஏதோ அம்பி கீதா சண்டை என நினைத்தேன்.ஆனால் இது வேறு சண்டை. பேச்சு சத்தம் கேட்டது. மிக கவனமாக உற்றுக்கேட்டேன்.சத்தம் என் வாயிலிருந்துதான் கேட்டது.என் கவனம் அதில் ஈடுபட்டது
என் நாக்கிற்க்கும் பல்லுக்கும்தான் ஏதோ வாக்குவாதம். நாக்கிற்கு எப்பொழுதுமே கொஞ்சம் கர்வம் ஜாஸ்தி.32 பல்லும் அதற்கு வேலைக்காரன் என்ற நினைப்பு.சாப்பிடும் வகைகளை நன்றாக அரைத்துக் கொடுக்க வேண்டியது மட்டும்தான் அதன் வேலை, ஆனால் ருசி மாட்டும்தனக்குதான் சொந்தம் என்ற கர்வம்.இனி சண்டையை கேட்போமா.
நாக்கு:- பற்களே உங்களுக்கு மிக்க நன்றி.இந்த சீடை முருக்கு இவைகளை நன்றாக அரைத்து கொடுத்தீர்களே. அதனால்தான் ருசி மிகவும் அதிகமாக இருக்கிறது.ஆனால் அது உங்களுக்கு தெரிய வாய்ப்பில்லை.அந்த பாக்கியம்தான் உங்களுக்கு கிடையாதே. கடவுள் கொடுக்கவில்லையே.
பல்:நன்றியேல்லாம் வேண்டாம் நாங்கள் எங்கள் வேலையைத்தானே செய்கிறொம்.
நாக்கு:- அப்படியெல்லாம் சொல்லக்கூடாது நான் ஏதாவது உபகாரம் செய்யவேண்டும் உங்களுக்கு.
பல்- நீ ஒன்றும் பெரிய உபகாரம் செய்யவேண்டாம்.சும்மா இருந்தலே போதும் அதுவே நீ செய்யும் பெரிய உபகாரம் என்றன.
நாக்கு- என்ன அப்படி சொல்லிவிட்டீர்கள்
பல்- ஆமாம் நீ பாட்டுக்கு எல்லாரிடமும் துடுக்குத்தனமாகவும்,அதிகபிரசங்கித்தனமாகவும் பேசிவிடுகிறாய். அவர்கள் உன்னை ஓன்றும் சொல்வதில்லை. பல்லு 32 யையும் உடைத்துவிடுவேன்என்று எங்களைத்திட்டுகிறார்கள் அது வேண்டுமா எங்களுக்கு அதனால்தான் சொன்னேன் சும்மா இரு என்று.
.நாக்கு அவமனத்தால் தலை குனிந்து சும்மா இருக்க முயற்ச்சி செய்தது.

30 comments:

நாமக்கல் சிபி said...

//பல்- ஆமாம் நீ பாட்டுக்கு எல்லாரிடமும் துடுக்குத்தனமாகவும்,அதிகபிரசங்கித்தனமாகவும் பேசிவிடுகிறாய். அவர்கள் உன்னை ஓன்றும் சொல்வதில்லை. பல்லு 32 யையும் உடைத்துவிடுவேன்என்று எங்களைத்திட்டுகிறார்கள் அது வேண்டுமா எங்களுக்கு //

:)

இலவசக்கொத்தனார் said...

சும்மா அருணகிரிநாதர் லெவலில் சும்மா இருன்னு மெசேஜ் சொல்ல தட்டை, முறுக்குன்னு எங்க லெவலில் வந்து விளையாட்டு காமிக்கறீங்க.

நல்லா இருங்க சாமீன்னு வாழ்த்த வயதில்லை. வணங்குகிறேன். சும்மா இருக்க முயற்சி பண்ணறேன்.

ambi said...

//சீடை,முருக்கு,தட்டை ஆகியவற்றை நொருக்கு தீனியாக தின்று கொண்டிருந்தேன்.//

விஜிக்கு என்ன, நிறைய சீடைகள் கணக்கு வழக்கில்லாம உள்ள தள்ளிட்டா. :)

நானும் என் உடன்பிறப்பும் தான் பாவம். ஏதோ நெல்லை அல்வாவோடு அன்று திருப்திபட்டு கொண்டோம்.

நன்றாக ரசித்தேன். பிலாக் உலக கலைவாணர்!னு வாழ்த்தி உங்களுக்கு பட்டம் வழங்க வயதில்லை, வணங்குகிறேன். :D

நன்மனம் said...

அருமையான, அழகான, சிக்கனமான, ஆழமான கருத்துள்ள பதிவு.

//பிலாக் உலக கலைவாணர்!//

வழி மொழிகிறேன்.

Unknown said...

Sir!!!!! Neenga Engayaoooooooo Poiteenga...... Sir

Unknown said...

Sir!!!!! Neenga Engayaoooooooo Poiteenga...... Sir

SP.VR. SUBBIAH said...

பதிவு போடத்தெரியாதுன்னு நல்ல பதிவாய்ப் போட்டிருக்கேளே ஸ்வாமி!
பகவான் மனுஷாளுக்குக் கொடுத்தவரம் மூன்று
1. தூக்கம்
2. மறதி
3. சும்மா இருக்கக் கூடிய மனப்பக்குவம்
இந்த இளவட்டங்களுக்கெல்லாம் அது தெரிய வாய்ப்பில்லை
கண்ணதாசன் சொல்லுவார் - "அனுபவம் என்பது சீப்பு - தலை வழுக்கையான பிறகே அது கிடைக்கும்"

rv said...

:))

அருமை தி. இரா. ச

ILA (a) இளா said...

நல்ல கருத்துங்க, அத அனுபவிச்சாதான் புரியும். நேத்து ஒரு பதிவு போட்டு இருந்தேன். அப்போ துளசியக்கா ஒரு பின்னூட்டம் போட்டு இருந்தாங்க, இதே தலைப்புல, அப்போ புரியல இப்போதான் புரியுது. உணர்ச்சி வசப்படுற நேரத்துல மனசுல வெச்சுக்க வேண்டிய மந்திரம் இது.

VSK said...

நாவினால்தான் பேசுகிறோம் என்றாலும்,
"பல்லு போனால் சொல்லு போச்சு"
என்றொரு சொல்லடை இருக்கிறது.

அதை வைத்துதான் பல்லை உடைத்து விடுகிறார்களோ?!!
:)

சுருங்கச் சொல்லி, சிரிக்கச் சொல்லி, நன்கு விளங்க வைத்திருக்கிறீர்கள்!

நாகை சிவா said...

சும்மா இருப்பது என்றால் சும்மாவா என்ன?

RK said...

Superb TRC Sir! simple but beautifully brougt out the essence of the golden kural
ya kavarayinum naa kakka ,kavakkal sogappar sollizhukkapattu'

Chinnakutti said...

நல்ல கருத்து, சொன்ன விதம் அருமை.

rnatesan said...

அருமையான சிந்தனை!!இப்படி எல்லோராலும் சிந்திக்க முடியுமா!!வாழ்த்துக்கள்!!உங்களுக்கும் உங்கள் சிந்தனைக்கும்!!

Geetha Sambasivam said...

யாரும் எப்போவும் மறக்கவே கூடாத வார்த்தைகள். என்றும் நினைவில் வைத்துக் கொள்ள வேண்டியது. சரியான சமயத்திலும் சொல்லி இருக்கிறீர்கள். கருத்துக்களுக்கும், பகிர்ந்து கொண்டதற்கும், வழி நடத்தலுக்கும் நன்றி.

Geetha Sambasivam said...

உண்மையில் "சும்மா இரு" என்பதன் அர்த்தம் அப்படி இருக்கிறவர்களுக்குத் தான் புரியும்.

தி. ரா. ச.(T.R.C.) said...

@நாமக்கல் சிபி,@இலவசம், @அம்பி@, @நன்மனம் ,@வேதா, @ஸ்பி.விஆர்.ஸுபு, @கமல்
@இளா, @டாக்டர், @இராமநாதன், @ஸ்.கே,@சிவா,@சின்னகுட்டி@ஆர்.கே,@நடேசன் சார்&@கீதா மேடம். அனைவருக்கும் என் நன்றிகள்.அம்மாவைப்பற்றிச் சொன்னாலும் சும்மாவைப்பற்றி சொன்னலும் வந்து வாழ்த்தும் நல்ல உள்ளங்களை வயதில் மூத்தவன் என்ற முறையில் வாழ்த்துகிறேன் சும்மா இலலை நிஜமாகவே.

Viji said...

Wonderful concept, disguised as a story! I've been meaning to mail u for quite sometime now... aana epdiyo vittu pochu. Will mail today... :)

தி. ரா. ச.(T.R.C.) said...

Thank you Viji for coming from KMU and visiting.

Porkodi (பொற்கொடி) said...

கருத்து எல்லாம் ஒகே தான் ஆனா இப்போ எனக்கு முறுக்கு வேணும் போலிருக்கே எங்க போவேன் :((

Viji said...

http://www.geocities.com/vc_sekaran/Oothukkadu_compositions

:)

Viji said...

adutha post podalame... :)

ambi said...

naan viji sollvathai vazhi mozhigiren. next psot pls. :)

தி. ரா. ச.(T.R.C.) said...

பொற்கொடி முறுக்குதானே வேண்டும். இங்கேதான் பக்கத்தலே அடையார் கிராண்ட் ஸ்னாக்ஸ் போனா முறுக்கு என்ன தட்டை,சீடை எல்லாம் கிடைக்கும். வாங்கிப் போகும்போது மறக்காம எனக்கும் ஒரு கிலோ கொடுத்துட்டு போங்க. அம்பி உடனே குரல் குடுக்காதே உன் பங்கு உண்டு.

தி. ரா. ச.(T.R.C.) said...

அம்பி, வேதா,விஜி இவர்களின் விருப்பம் கூடியவிரைவில் நிறைவேற்றப்படும்.
விஜி ஊத்துக்காடு லின்க் கொடுத்ததற்கு நன்றி. அம்பியிடமிருந்து இரண்டு கோரிக்கைகள் வந்து இருக்கு எதை முதலில் முடிப்பது என்று புரியவில்லை.
வேதா, அம்பி,பொற்கொடி இப்போ நம்ப கிட்டே ஏகப்பட்ட "ஆப்புகள்" வேஸ்டா போரதே யாருக்கு வைக்கலாம். ஆப்புகள் மொத்தமாக வாங்கப்படும் கம்பெனி வேற இப்போ "லே ஆப்பு". இல்லை ஆப்பதனை அசைத்துவிட்ட குரங்கு போல் சும்மா இருக்கலாமா?

ambi said...

//அம்பியிடமிருந்து இரண்டு கோரிக்கைகள் வந்து இருக்கு எதை முதலில் முடிப்பது என்று புரியவில்லை.//

he hee, kootathula solli en manathai vaanga vendaam! ungaluku t'veli alva kandippaga undu! :)

Porkodi (பொற்கொடி) said...

:(( ஏன் ஏன் ஏன் உங்க முல்லை பதிவு(3)க்கு பின்னூட்டம் போட முடியல :( நாட்டாமை வந்து போட்டு புளியோதரை வாங்கின அப்புறம் தான் மத்தவங்களா? :(

G.Ragavan said...

:-))))) இதுதான் சும்மா இரு சொல்லற! ஆனா பல்லு அரையரைன்னு அரைக்கிறப்போ எப்படிச் சும்மாயிருப்பது? :-)

அது சரி, அதென்ன அருணகிரிநாதரை எனக்கும், எஸ்.கேக்கும் ராமநாதனுக்கும் குத்தகைக்குக் கொடுத்துட்டீங்க! :-)

தி. ரா. ச.(T.R.C.) said...

@அம்பி உங்கிட்டே இருந்து வேறே என்ன வாங்கமுடியும்.? அல்வாவா?
@பொற்கொடி என் பதிவுக்கு நான் தான் நட்டாமை. எனக்கே புளியோதரையை கொடுத்துடு.நன்றி.சுட்டிக்காட்டியதற்கு


எப்படியோ கமென்ட்ஸ் பதிவு வேண்டாம் என்று வந்து விட்டது.எல்லாம் கீதா மேடம் சதி.
@ ராகவன் கிளாஸில் வாத்தியார் இருக்கும்போது சும்மா இருப்பதுபெரிய விஷயமில்லை இல்லாதா போது இருப்பதுதான் விஷயமே.

Sasiprabha said...

Naanum seri edho Kandhar Anuboodhi pathi edho prasangam appidinnu nenachen.. "Summa iru sollara endralume.. Amma porul ondrum arindhilane"... Pallukkum naakukkum sandai ellaam varumaa.. (Sun TV adla kekkura maadhiri)..