விடிய..... விடிய.....இராமாயணம் ....
இந்த வருஷம் ராமநவமிக்கு அந்த பெரிய வித்வானின் கதாகாலட்சேஷபம் என்று சங்கீத சபை முடிவெடுத்தது.அந்த ஊர் பெரிய மனிதரும் செல்வந்தருமான சபைத்தலைவர் தாமாகவே முன்வந்து முழுச்செலவையும் ஏற்றுக்கொண்டார்.மொத்தம் ஒன்பது நாள் இராமாயணம் விரிவாக சொல்ல ஒத்துக்கொண்டார்.
நாளும் வந்தது. பாகவதரும் வந்து சேர்ந்தார்.அவருக்கு எல்லாரையும் அறிமுகம் செய்து முக்கியமாக சபைத்தலைவரையும் அவரது பெரிய மனதையும், தாராளகுணத்தையும்பற்றி எடுத்துச் சொன்னார்கள். பாகவதரும் தலைவரை மெச்சி அவர் ஒன்பது நாளும் வரவேண்டும் என்று விண்ணப்பித்தார்.தலைவரும் தானும் தன் மனைவியும் 9 நாளும் வருவதாகச் சொன்னார்.
முதல்நாள் மாலை நல்ல கூட்டம். தலைவரும் மனைவி சகிதம் 6.30 வந்து முதல் வரிசையில் நடுவில் அமர்ந்து கொண்டார்.பாகவதர் இராமாயண்த்தை ஆரம்பித்து விமரிசையாக பிரசங்கம் செய்தார். கூட்டமும் அவ்வப்போது கரகோஷத்தையும் அளித்தது. தலைவரும் ஒரு வினாடிகூட விரயம் செய்யாமல் முழுவதும் தன்னை ஈடுபடுத்திக்கொண்டு கதையை கேட்டுக்கொண்டு வந்தார்.இப்படியே எட்டு நாட்கள் கதை விமரிசையாக சென்றது.தலைவரும் தம்பதி சமேதராய் தினமும் ஆரம்பத்திலிருந்து கடைசிவரை உன்னிப்பாக கேட்டுவந்தார்.
ஒன்பதாம் நாள் வந்தது. அன்றுதான் கடைசிதினம்.பாகவதரும் பட்டாபிஷேகத்தோடு கதையை முடித்தார்.எல்லோரும் பாகவதரை புகழ்ந்து பேசினார்கள். பாகவதரும் தன் பங்குக்கு இந்த 9 நாட்கள் சொன்ன கதையில் யாருக்கவது ஏதாவது சந்தேகம் இருந்தால் கேட்கலாம் என்று சொன்னார்.
நமது தலைவர் உடனே மெதுவாக எழுந்து பவ்யமாக "அய்யா நான் ஒரு சிறு சந்தேகம் கேட்கலாமா" என்றார்.பாகவதரும் மிகவும் சந்தோஷமடைந்து சொன்னார்"யார் கேட்டாலும் சொல்லுவேன் அதுவும் நீங்கள் தினமும் ஆரம்பமுதல் கடைசிவரை 9 நாளும் வந்திருந்து ரொம்ப சிரத்தையோடு கேட்டு இருக்கீங்க உங்களுக்கு தெளியவைப்பதை விட வேறு நல்ல காரியம் உண்டா" அப்படின்னார்.தலைவர் கேட்டார் "இத்தனை நாளா கேட்ட ராமாயணத்திலே ஒரே ஒரு சந்தேகம்தான். இதிலே ராமன் ராட்சஷனா?இல்லை ராவணன் ராட்சஷனா? அது ஒன்னுதான் புரியலை." பாகவதர் இதைக் கேட்டவுடன் மயக்கம் போட்டு விழாத குறைதான், இருந்தாலும் சாமாளித்துக்கொண்டு கூறினார் "ராமாயணத்திலே ராமரும் ராட்சஷன் இல்லை,ராவணனும் ராட்சஷன் இல்லை. இத்தனை நாளும் உங்களுக்கு ராமாயணம் சொன்னேன் பாருங்கோ நான் தான் ராட்சஷன்"
கொசுறு
அரசியல்வாதிக்கு என்ன ராகம் பிடிக்கும்.இந்த இரண்டு ராகமும் சேர்ந்தது .
நாட்டை, சுருட்டி
42 comments:
இது ஒரு பதிவு. இதுக்கு பின்னுட்டம் வேறயான்னு யாரும் கேட்கக்கூடாது.கமென்ட்ஸ் இப்பொ வருதுங்கோ பொற்கொடி.
வணக்கம் தி.ரா.ச
//அரசியல்வாதிக்கு என்ன ராகம் பிடிக்கும்.இந்த இரண்டு ராகமும் சேர்ந்தது//
அரசியல்வாதிக்கு ராகம் கூட ரெண்டு ரெண்டு தானா? :-)
விடிய விடிய இராமாயணம் கேட்டு சீதைக்கு ராமன் சித்தப்பா கதையாக்கும் நினச்சேன். நீங்க version 2 சொல்லிட்டீங்க ஹிஹி :-)
இதுவும் பதிவு தானெ தி.ரா.ச.
செவிடன், சங்கு எல்லாம் ஞாபகத்துக்கு வருது.இது போல நிறைய எழுத வேண்டும்.
நல்ல ஒரு ஆராய்ச்சி. விழலுக்கு இரைத்த நீர் ;)
hehe..Tail piece was superb !
நாட்டை சுருட்டி...ஆகாகா! என்ன கண்டுபிடிப்பு....சூப்பர்.
Good one Sir. I have also been to these discourses with my father during my childhood days and remember asking Sengalipuram Dikshidhar after one of his discourses in Lalgudi'if Prahlada can argue with his father and be protected by Lord why am I supposed to listen always to my parents'
U can add Raga 'mughari'to the list which is the outcome of all the political ragas for people of the country.
என்ன ஆராய்ச்சி! சீதையை ராமர் தீக்குளிக்கச் சொன்னதால அவருக்கு அப்படி சந்தேகம் வந்ததோ என்னாவோ.. ;)
நானும், என் இளவலும் மிகவும் ரசித்தோம்! :)
நாட்டை, சுருட்டி - அதுவா கொசுறு ..? :)
aaha... nan kooda seethaikkku raman chithappa kadhaiyo nu nenachen. kosuru excellent! enaku pudicha ragam kaapi. :P :D
super sir!
Super TRC. :-)))
//enaku pudicha ragam kaapi. //
appavum saapdra/kudikara item thaana? :)
Ambi- mandu! sonnadhe adhukku dhane! matha padi pudicha ragam kalyaani, kambhodhi, reethi gowlai, sahaana, Sri, arabhi nu nerayaa irukku... :)
வாருங்கள் ரவி வரவுக்கு நன்றி. ஒன்றை இரண்டாக்குவதுதானே அவர்களின் வேலை
அம்பி விஜி பேசர சப்ஜெக்டு சங்கீதம். நாம கொஞ்சம் அடக்கி வாசிக்கிறதே நல்லது.ஏற்கனவே ஒருதரம் ஊத்துகாடுலே மாட்டின்டியே ஞாபகம் இருக்கா.
பொற்கொடி புதுப்பார்வையில் மிளிர்கிறது உங்கள் கருத்து
திரு. குமரன்,ஜி.ராகவன்,ஆர்.நடேஷன்,இளா.அம்பி,அருண்.ராம் ஆகியோருக்கு நன்றி.
திருமதி.வல்லி, Mஸ்.வேதா(ளம்), விஜி,பொற்கொடி உங்கள் வருகைக்கும் நன்றி
//ஏற்கனவே ஒருதரம் ஊத்துகாடுலே மாட்டின்டியே ஞாபகம் இருக்கா//
sari, sari... :)
//திருமதி.வல்லி, Mஸ்.வேதா(ளம்), விஜி,பொற்கொடி உங்கள் வருகைக்கும் நன்றி //
ha haaaa :)) ipdi kooda aapu veikalaamaa?
வேதா, எய்தவள் இருக்க நான் வில்லு அம்பி அம்பு எங்களை நோவானேன்.தில் இருந்தால் எங்கள் தலைவி திக்விஜயம் முடித்து வரும்போது காண்பிக்கவும்.
எப்படி அம்பி.?
கிழிஞ்சுது என் அண்ணாவ ஏன் உங்க கட்சித் தாவல்ல சேர்த்துக்கறீங்க? அண்ணா என்ன கம்முனு இருக்கீங்க?
//தில் இருந்தால் எங்கள் தலைவி திக்விஜயம் முடித்து வரும்போது காண்பிக்கவும்.
எப்படி அம்பி.?
//
superrrrrr. i think veda(lathu)ku antha peru vechathee antha paatti thaan! :)
arumai sir romba nalla ezhudiirukeenga! kosuru seydhi adha vida top!
அரசியல்வாதி joke அருமை.
பொற்கொடி comment superb.. ராமனும் afterall ஒரு சராசரி ஆண் தானா என்று என்னை யோசிக்க வைத்த, அவன் மீது மதிப்பிழக்க வைத்த சம்பவம் அது. (No offence..)
Ambi, ungalukku indha ragamlam illa pidikkumnu ninachen: Kalyani, Bhairavi, ShanmukaPriya, lathangi etc...
agreement ellam thalaivi irukkum pothu thaan! ithu idaikaala therthal. athu MP election. namakku katchiyin kolgaikal thaan mukkiyam. enna kolkai?nu ellam ketka padathu! coz me also dono! he hee :)
@priyaavin varukaikku nandri.aana payama irukku unka ethiparppukku ezhutha mutiyumaa ennaal.ampikku pitichha ragam ASAAVERI athu thaan konjam neruki varathu.Vethaa thaan sonnanka.
inthiya thevathaiye neenkal intha pakkam kuta varuveerkalaa.adikati varunkal vanthu thiruthunkal kuraikalai.
@priya, enakku sahana, neelambari, sivaranjani, karakarapriya, ithellam kooda pidikum. ofcourse i'm a sudha dhanyaasi!
he hee, naan raagam pera thaan sonnen. :)
//priyaavin varukaikku nandri.aana payama irukku unka ethiparppukku ezhutha mutiyumaa ennaal.//
TRC sir.. enna periya vaarthailam solringa.. edhavadhu kuthala?
//priya, enakku sahana, neelambari, sivaranjani, karakarapriya, ithellam kooda pidikum. ofcourse i'm a sudha dhanyaasi!//
@ambi.. en message la etc.. pottirukkene... samayathukku ella perum nyabagam varala..analum neenga clear a irukkinga
Vanakkamunga.. Appidinna sugar patientukku pudikkaadhadhu kaapi ragamungalaa.. Eppidi .. Ennoda entrye kalakkala illa.. (Illanna oru aarudhalukkavadhu aamaannu sollidunga).. Palar namma thalaivar maadhiri thaan.. Purpose illaama edho sabaila kekkanumnu edhaavadhu ketuvechi vaangi kattikkiradhu..
Ambi.. Enga ponaalum yaarkittayavadhu vaangi kattikkireenga.. Anega unga kooda samadhaanama irukkura ore aal naan thaannu nenaikkire..
வாங்க...வாங்க... சசிபிரபா வரும்போதே கலக்கிண்டேதான் வரீங்க! அப்படித்தானே வரணும்.. பேசர சப்ஜெக்ட் காபியாச்சே கலக்கினாதானே காபி கிடைக்கும்.அதுவும் கலாய்க்கிறது வேறு காபி சம்பந்தப்பட்ட பால் வடியும் முகம் அம்பி. 23 ஆம் தேதி சென்னையில் பாலாறு ஓடப்போகிறது ஏன் என்று கண்டுபிடியுங்கள்
@priya பயம்ன்னு சொன்னது நீ பின்னி எடுக்கிற பின்னுட்டங்களைப் பார்த்துதான்
சென்னையில பாலாறா... ஆஹ்ஹ்ஹ் தலை வெடிக்குதே :((
தலைவலி எப்போ தான் திரும்புறாங்களாம் :(
தலைவி எப்போ வந்தா என்ன இப்போதான் தலைவலி போய் திருகுவலி(பொற்கொடி) வந்தாச்சே.
இரண்டு பேரும் சேர்ந்த பாவம் அம்பி கதி அதோகதிதான்
Chennaila paal aaraa.. illa jollu aaraa.. adha neenga sollunga
ithan ambi kuta samaathaanamaa irukkuuree azhakka?ambi unakku ithelam thevaithanaa.summa nachunu
oru reply potu.
ithan ambi kuta samaathaanamaa irukkuuree azhakka?ambi unakku ithelam thevaithanaa.summa nachunu
oru reply potu.
Neenga thappa artham pannitta naan enna pannuradhu.. Neengale enga rendu perukkum sandaiya kelappi viduveenga pola irukke..
@Ambi.. Jollu aaru endrudhaan sollapattadhu.. Urpathi idam Ambi endru sollappadavillai..
@TRC.. note the point..
அம்பி எல்லார் கிட்டேயும் வாங்கிக் கட்டிக்கிறதைப் பார்க்காமல் ஊருக்குப் போயிட்டேனேன்னு வருத்தமாஇருக்கு. அதே சமயம் நான் இல்லாட்டியும் இத்தனைப் பேர் ஆப்பு வைக்கிறதைப் பார்த்தால் சந்தோஷமாயும் இருக்கு. ரொம்ப டாங்ஸு நண்பர்களே!
Post a Comment