Friday, February 16, 2007

தமிழ்த் தியாகைய்யா திரு. பாபநாசம் சிவன்(6)

)






இன்று சிவராத்திரி. சந்திரசேகரனான சிவனைப் பற்றி பேசுவது நினைப்பது அல்லது அவனுடைய சமபாதியான உமாவைப் பற்றிய பாடல்களை கேட்பது நல்லது.

பாபநாசம் சிவனுக்கு பிறந்த ஊர் நாகப்பட்டினம். அந்த ஊர்க்கோயிலின் அம்மன் பெயர் நீலாயாதாக்ஷி. அந்தச்சொல்லைத் தன் பாடல்களில் நிறைய இடங்களில்உபயோகித்து இருக்கிறார். கல்யாணி ராகத்தில் அமைந்த இந்த "உன்னை அல்லால் வேறே கதி இல்லை அம்மா. உலகெலாம் ஈன்ற அன்னை" பாடலில்
அருமையாக உருகி பாடியுள்ளார்.கல்லும் கரையும் இந்தப்பாட்டை திரு. சஞ்சய்சுப்ரமணியன் தன் இனிய இளமையான குரலில் அள்ளிவழங்கியிருக்கிறார்.பாட்டின் வரிகளைப் பார்ப்போமா

ராகம்:- கல்யாணி தாளம் :- ஆதி.

பல்லவி

உன்னை அல்லால் வேறேகதி இல்லை அம்மா உலகெலாம் ஈன்ற அன்னை(உன்னை)


அனுபல்லவி

என்னையோர் வேடமிட்டு உலக நாடக அரங்கினில் ஆடவிட்டாய்
என்னால் இனி ஆடமுடியாது திருவுளமிரங்கி ஆடினது போதுமென்று ஓய்வளிக்க (உன்னை)


சரணம்

நீயே மீனாக்ஷி காமாக்ஷி நீலாயதாட்க்ஷி
எனப் பல பெயருடன்
எங்கும் நிறைந்தவள் என் மனக்கோயிலிலும் எழுந்தருளிய தாயே
திருமயிலை வளர் (உன்னை அல்லால்)


கல்யாணி ராகத்தின் ஆரோகணம் ஸ ரி க ம ப த நி ஸ
அவரோகணம் ஸ நி த ப ம க ரி ஸ
ரொம்ப சங்கீதமா இருக்குன்னு பயப்படவேண்டம். அறிந்து கொள்வதில் தவறு இல்லை. இதில் கல்யாணியின் ஜீவஸ்வரம் நி . இதை வைத்துகொண்டு சிவன் இந்தக்கீர்த்தணையில் சரணத்தில் விளையாடியிருக்கிறார்
நீயே மீனாக்ஷி காமாக்ஷி நீலாயதாட்க்ஷி என்ற வரிகளில் நிஷாதத்தை உயர்த்தி நி த ம க ரி ச என்று ஷட்சமத்தை கடைசியில் இறக்கி முடிக்கிறார்.

இன்னொறு சிறப்பு இதில் நீ என்று ஆரம்பித்து மீனாக்ஷி காமாக்ஷி தரிசனத்தை முடித்துக் கொண்டு தன்னுடைய பிறந்த ஊரின் நாயகியான
நீலயதாட்க்ஷியின் பாதாரவிந்தங்களில் சரணமாகி ஷட்சமத்தில் முடிப்பது அவருடையமேதா விலாசத்தையும்அபரிமிதமான சங்கீத ஞானத்தையும் புலப்படுத்துகிறது.

அதற்காக தன்னைஆதரித்தகற்பகாம்பளையும்மறக்கவில்லை. கடைசியில் மேலே சொன்ன மூன்றுபேரும் வேறு யாரும் இல்லை திரு மயிலை வளர் கற்பகாம்பாள்தான் என்று முடிக்கிறார்.பாடல் வரிகளையும் பாட்டையும் சேர்த்து மறுமுறை கேளுங்கள் சிறப்பாக இருக்கும். திரை இசையிலும் கல்யாணியை விட்டு வைக்கவில்லை.மன்னவன் வந்தானடி தோழி எனற பாடல் திருஅருட்ச்செல்வர் படத்தில் சக்கை போடு போட்டது. அதேமாதிரி அமுதும் தேனும் எதற்கு நீ அருகினில் இருக்கையினிலே (பாவம் அம்பி பாடமுடியாது) தை பிறந்தால் வழிபிறக்கும் என்ற படத்தில் சீர்காழி கோவிந்தராஜன் குரலில் மனத்தை அள்ளும்.

மன்னவன் வந்தானடி பாடல் கேட்க'><"இங்கே க்ளிக் செய்யவும்">

அமுதும் தேனும் எதற்கு பாடல் கேட்க'><"இங்கே க்ளிக் செய்யவும்">

இத்துடன் பாபநாசம்சிவன் தமிழ்த்தியகைய்யா முடிவுபெறுகிறது.

65 comments:

SKM said...

//சந்திரசேகரனான சிவனைப் பற்றி பேசுவது நினைப்பது அல்லது அவனுடைய சமபாதியான உமாவைப் பற்றிய பாடல்களை கேட்பது நல்லது.//
:D :D
The way you have inserted these lines here, too good.Marapoma??Marakka mudiyuma??

The song is so sweet.

//அமுதும் தேனும் எதற்கு நீ அருகினில் இருக்கையினிலே (பாவம் அம்பி பாடமுடியாது)//
pavam.vittudungo.V-Day andru neengalae patheenga illaya,Yevaloo thanimaiyila rendu perum aaladuranga endru.ippo they are counting the days.appuram hours count panna aarambicha thaangadhu saami.Ungalaidhan varupanga rendu perum.

தி. ரா. ச.(T.R.C.) said...

ஸ்..கே.எம் முதலாவதாக வந்துட்டீங்க.காபி சாப்பிட்டுதானே வந்தீங்க/
ஆமாம் வேறு எந்த பொருத்தம் இருக்கோ இல்லையோ பெயர்ப் பொருத்தம் நிறைய இருக்கு

அதெப்படி அம்பியை விடமுடியும் அவனும் தம்பியும் வறுதெடுத்ததற்கு
ஆப்பு வெச்சிகிட்டே இருக்கனும். போரலேன்னா மேடத்துக்கிட்டே கடன் வாங்கியாவது வைக்கமாட்டேனா
உண்மையாகவே மிக அருமையானபாடல். இதை மஹாரஜபுரம் சந்தானம் மிக அழகாகப் பாடி இருக்கிறார்.அதையும் முடிந்தால்போடுகிறேன்.காலைத்தூக்கி நின்றாடும் பாட்டை மறுபடியும் கேளுங்கள் நன்றாக கைதூக்க முடியும்
உடல் நலம் காக்க.

Cogito said...

Nice song. Sanjay looks so young . What programme is this (DD) ?

Porkodi (பொற்கொடி) said...

:-) arumaiya irukku. sanjays sister was my sanskrit teacher at school, romba rasanaiyana person, idhu extra info! :-) apram niraya per profile la irukra madri unga profilelayum age 250 nu irukke, is it anything with the blogger or ellarum ore maadri yosikringla??!

யோகன் பாரிஸ்(Johan-Paris) said...

திராச ஐயா!
இந்தக் காட்சிகள் சின்னக்குட்டியண்ணர் பதிவில் பார்த்துள்ளேன். ஆனாலும் கேட்கத் தெவிட்டாதவை!
சஞ்சை மிக இளமையாக உள்ளார்; அத்துடன் சங்கீதத்தாத்தாவும் உள்ளார். இது மிகப் பழையது.
எனக்கு சங்கீதம் பற்றி எதுவும் தெரியாது;ஆனால் மணிக்கணக்கில் ரசிப்பேன். இந்த இயல்பைத் தந்த இறைக்கு நன்றி

Story Teller said...

you have excellent taste for tamil .. nice . . keep it up.. i have added u on my favorites so that i can read your old post as well.. ;)

தி. ரா. ச.(T.R.C.) said...

skm marakka mutiy uma

அட எங்கேயோ போயிட்டீங்க

தி. ரா. ச.(T.R.C.) said...

@cogito.
Yes this is from pothikai tv where we get quality stuff

thanks for visiting despite u r busy home work

தி. ரா. ச.(T.R.C.) said...

@பொற்கொடி ரொம்ப ரசனைன்னு சொல்லிட்டு அம்போன்னு நிறுத்திட்டியே. எந்த ரசனைன்னு சொல்லு.
என்னுடைய மிக நெருங்கிய நண்பன்.அவரும் ஒரு Chartered accountant
250 என்னைச் சொல்லி குற்றமில்லை பிளாக் செய்த குற்றமடி
கூகுல் செய்த குற்றமடி.(குலமகள் ராதை பாட்டுபோல. மற்றபடி உன்னை டி சொல்லவில்லை)
வருகைக்கு நன்றி.வரவிட்ட் ரங்கமனிக்கும் நன்றி

தி. ரா. ச.(T.R.C.) said...

ஆஹா யோகன் அவ்ர்களே நம் இருவருக்கும் உள்ளே பொருத்தம் யாருக்கு இங்கே கிடைக்கும்.. ஆமாம் எனக்கும் சங்கீதத்தைப் பற்றி எதுவும் தெரியாது

தி. ரா. ச.(T.R.C.) said...

@delhi tamilan. thanks for first visit.My tamil credit goes to my RKM school(TNagar) tamil teacher Sri lakhmana sarma and Sri Narayanaswamyand Sri Subbudu my guru musical review

ambi said...

//அல்லது அவனுடைய சமபாதியான உமாவைப் பற்றிய பாடல்களை கேட்பது நல்லது.//

ha haaa, ivloo iceaa uma maamikku? :p

nice song. thanks for the link.
intha skm akka micha manathaiyum vaangitaanga.
happy that porkodikum sema aapu. very good, very good.

தி. ரா. ச.(T.R.C.) said...

ஐஸு எல்லாம் இல்லை.பாட்டு முழுக்க பார்வதி,உமா.என்று அம்பாளை நினைத்து உருகி பாடுகிறார்.
அம்பி வந்தவர் போனவர் வைக்கும் ஆப்பெல்லாம் ஆப்பெல்ல;
அம்பிக்கு மேடம் வைக்கும் ஆப்பே ஆப்பு.

அம்பி பெரியாவா கிட்டே எப்படி மரியாதை தரனோம்ன்னு தங்கமணி பிளாக் போயி பாத்து அவுங்க கிட்டே இருந்து கத்துக்கோ.என்ன இருந்தாலும் மேன்மக்கள் மேன்மக்களே.

வேணாம் அப்பறம் நான் கடிகார மானத்தை வங்கிடுவேன்

Geetha Sambasivam said...

ம்ம்ம்ம், என்னென்னமோ நடக்குது? திடீர்னு பதிவு திறந்தது, என்னன்னு பார்த்தா நீங்க உமா, உமா ன்னு உருகறீங்க, இதிலே அம்பிகை பேருன்னு சாக்கு வேறே,
எஸ்.கே.எம். என்னன்னா உடம்பு சரியில்லைனு சொல்லிட்டு இங்கே வந்துட்டுப் போறாங்க. :D
அம்பி கேட்கவே வேணாம், ஆபீஸ் வேலைன்னு சொல்லிட்டு, என்னவோ நடக்குது உலகத்திலே, ஒண்ணுமே புரியல உலகத்திலே!

கண்ணபிரான் பதிவிலே இருந்து இங்கே வந்திருக்கேன். ரொம்ப தூரமா இருக்கு. ரொம்பக் கஷ்டமாயும் இருந்தது பயணம். :-)

Geetha Sambasivam said...

ம்ம்ம்ம், நடுவிலே மஹாபெரியவா பத்தி எழுதினதாச் சொன்னதைக் காணோம். ஜனவரி 19-க்கு அப்புறம் இது தான் வருது. நடுவிலே ஒரு மாசம் அம்பி எழுத வேணாம்னுட்டாரா என்ன? :D

தி. ரா. ச.(T.R.C.) said...

வாங்க மேடம். ரொம்ப சுத்தி சிரமப்பட்டு வந்தீங்க போல.எங்க ஆளுங்களே உங்களாலே ஒன்னும் பண்ண முடியாது.அவ்வளவு ஒத்துமை.
பதிவுக்கு வந்தா பதிவைப் பற்றிய நிறை குறைகளேச் சொல்லனும். திருவிளையாடல் நக்கீரன் மாதிரி குற்றம் குறைகளையேச் சொல்லக்கூடாதுன்னு அம்பிகிட்டேயிருந்து ஒரு மெஸ்ஸேஜ் வந்திருக்கு.
ஆமாம் 19போது அப்பறம் இது தான் போஸ்ட்.
வந்ததற்கு நன்றி.

Geetha Sambasivam said...

ஓகே ஓகே, I give up.

தி. ரா. ச.(T.R.C.) said...

@கீதா மேடம் என்ன give up பண்ணப்போறீங்க? we are all LOOKING UP for your guidence.

ambi said...

//திடீர்னு பதிவு திறந்தது, என்னன்னு பார்த்தா நீங்க உமா, உமா ன்னு உருகறீங்க, இதிலே அம்பிகை பேருன்னு சாக்கு வேறே,
எஸ்.கே.எம். என்னன்னா உடம்பு சரியில்லைனு சொல்லிட்டு இங்கே வந்துட்டுப் போறாங்க. :D
அம்பி கேட்கவே வேணாம், ஆபீஸ் வேலைன்னு சொல்லிட்டு//

@geetha madam, இன்னுமா புரியலை? எஸ்கேஎம் இப்ப எங்க கட்சியாக்கும்.
:)

//கண்ணபிரான் பதிவிலே இருந்து இங்கே வந்திருக்கேன். ரொம்ப தூரமா இருக்கு. ரொம்பக் கஷ்டமாயும் இருந்தது பயணம்//

வயசு வேற ஆயிடுச்சு! இந்த வரிய விட்டுடீங்களே மேடம்! :)

Story Teller said...

nice to know you still remember your school teacher and giving due credit to them..

தி. ரா. ச.(T.R.C.) said...

அம்பி அவுங்களே எப்படியோ கஷ்டப்பட்டு வராங்க அதையும் கெடுத்திடுவே போல இருக்கு.

Porkodi (பொற்கொடி) said...

enna trc sir, edho paavam samosa kettu kashta padutha vendam nu paatha, romba thaan vaararinga?! ellathulayume rasanai thaan, dress, sapidra saapadu, kekkara isai, ipdi ellame oru range than :)

idhukku ambi enna romba aadarar? idhukku thaan thangamaniya michigan anupchu vechutar ummachi! nanna venum :)

paatiya yaaravadhu kindal pannina naan summa irukka matten! aama.

ambi said...

//idhukku thaan thangamaniya michigan anupchu vechutar ummachi! nanna venum //

eley kodi, enna kozhuppa? ithukku thaan rangamani unnai pointers padikka vechu pazhi vaangraar. :p

//paatiya yaaravadhu kindal pannina naan summa irukka matten! aama.
//
LOL :) ithuku peru thaan double side aapaa? :)

தி. ரா. ச.(T.R.C.) said...

@பொற்கொடி கவலைப்படாதே ரங்கமணியை ஒரு மூனு மாசம் திருவனந்தபுரம் அனுபிச்சுடலாம்.அப்பவாது நீ கம்முன்னு இருக்கியான்னு பார்க்கலாம்.:)

@அம்பி பாட்டியே ஒத்துண்டு பேசாம இருக்காங்க நீ என்ன எம்பி குதிக்கறே.பாட்டிக்கும் பேத்திக்கும் எவ்வளவோ இருக்கும் நீ நடுவுலே போகாதே.பேசாம லைன் வருதான்னு செல்லையேபாத்துண்டு இரு.:)

My days(Gops) said...

25 potaaachi

My days(Gops) said...

sir long time..

eppadi irrukeeenga?

Porkodi (பொற்கொடி) said...

என்ன கோப்ஸ், சமோசா போண்டா ஏதும் சாப்பிடணும் போல இருக்கா? :)

இலவசக்கொத்தனார் said...

கல்யாணி! என்ன சொல்ல. அருமையான ராகம். அதுவும் பெரியவர்கள் பாடினால் கேட்டுக்கொண்டே இருக்கலாம். நிறையா சங்கீத சூட்சுமங்களா எழுதி இருக்கீங்க. இதுக்கெல்லாம் ஒரு ட்யூஷன் எடுத்தா நாங்களும் தெரிஞ்சுக்க முயல்வேமே.

நல்ல பாடல். சிவனைப் பற்றிய தொடர் அதற்குள் முடிந்துவிட்டதா? மேலும் இது போல் தமிழ் பாடல்களைத் தருமாறு ஒரு வேண்டுகோள்.

My days(Gops) said...

@ porkodi :-
//என்ன கோப்ஸ், சமோசா போண்டா ஏதும் சாப்பிடணும் போல இருக்கா? :)//

yen ketka maateeenga....

தி. ரா. ச.(T.R.C.) said...

@கோப்ஸ் உன்னோட திறமைக்கு 25 எல்லாம் ஒரு ஜூஜுபி.50 ஆக்கவேண்டாமா

தி. ரா. ச.(T.R.C.) said...

@இலவசம். வாங்க. கல்யாணி ராகம் நீ சொன்ன மாதிரி 5 நிமிஷமும் பாடலாம் 5 மணி நேரமும் பாடலாம்.
பாபநாசம் சிவனின் பாடல்களைத் தொடருவேன்.அவரைப்பற்றிய வர்ணனை மட்டும்தான் இபோதைக்கு நிறுத்தப்பட்டுள்ளது.

தி. ரா. ச.(T.R.C.) said...

@கோப்ஸ் நான் நல்லா இருக்கேன். நீங்க எப்படி இருக்கீங்க. அடுத்த சமோச மீட் எப்போ வெச்சுக்கலாம்.பொற்கொடியோட பங்கையும் சேர்த்துச் சாப்பிடலாம்.

Syam said...

//கோப்ஸ் உன்னோட திறமைக்கு 25 எல்லாம் ஒரு ஜூஜுபி.50 ஆக்கவேண்டாமா //

அதான...கோப்ஸ் நீங்க மனசு வெச்சா..நூறே அடிக்கலாம் :-)

Syam said...

////idhukku thaan thangamaniya michigan anupchu vechutar ummachi! nanna venum //

eley kodi, enna kozhuppa? ithukku thaan rangamani unnai pointers padikka vechu pazhi vaangraar//


@பொற்கொடி & அம்பி,

சபாஷ்...சரியான போட்டி :-)

Syam said...

//என்ன கோப்ஸ், சமோசா போண்டா ஏதும் சாப்பிடணும் போல இருக்கா? //

கோப்ஸ்க்கு இருக்கோ இல்லயோ எனக்கு போண்டா எல்லாம் வேண்டாம்...சமோசா போதும் :-)

Syam said...

சார் 35... ஏதாவது சமோசா மிச்சம் ஆனா பாத்து போட்டு குடுங்க :-)

தி. ரா. ச.(T.R.C.) said...

@கோப்ஸ், ஸ்யாம் அதெல்லாம் முடியாது 50 போட்டா ஆளுக்கு ஒரு அரிசி பெப்பர்மின்ட்,அதுவும் அம்பிக்கு பாதிதான்

ambi said...

//ஆளுக்கு ஒரு அரிசி பெப்பர்மின்ட்,அதுவும் அம்பிக்கு பாதிதான்
//

@TRC sir, naan uma madam kitta vendiyatha kettu vaangigaren. :p

My days(Gops) said...

//அடுத்த சமோச மீட் எப்போ வெச்சுக்கலாம்.//
year end வெச்சுக்கலாம் sir...

//பொற்கொடியோட பங்கையும் சேர்த்துச் சாப்பிடலாம். //
kandipaaaa, aaana 'Aval vikatan, kungumam books ellathaium olichi vatchirunga....

My days(Gops) said...

//...கோப்ஸ் நீங்க மனசு வெச்சா..நூறே அடிக்கலாம் :-) //

syam brother, edhir katchi'naaalum semaia aadharavu thareeenga.. thanks...

My days(Gops) said...

//கோப்ஸ்க்கு இருக்கோ இல்லயோ எனக்கு போண்டா எல்லாம் வேண்டாம்...சமோசா போதும் :-) //


ippa thaaan nalla pulla nu sonnen, adhukulla oru samosa'ku ippadi'a brother.... unga katchi he he he

My days(Gops) said...

//கோப்ஸ், ஸ்யாம் அதெல்லாம் முடியாது 50 போட்டா ஆளுக்கு ஒரு அரிசி பெப்பர்மின்ட்//

solliteeenga illa.... start the music...

My days(Gops) said...

//,அதுவும் அம்பிக்கு பாதிதான் //

avarau oooru special alwa'ku munaadhi indha pepperment jeichaaganum..... so, me giving my share to ambi :))

My days(Gops) said...

43 neeenga comment moderation vachi irrukira naala, ethanavudhu spot'la me ipppa standing'nu enakku theriala....

My days(Gops) said...

44 thappppo, right'o commit aaagiten.... so innum oru 6 adichitu escape aagiren

My days(Gops) said...

45, indha blog thaan urupadia irrundhuchi, ingaium vandhutia'nu yaaaru paa anga enna ketkuradhu...

My days(Gops) said...

47 katchi'la irruken.. idhu koooooda sei'aaati eppadi....

My days(Gops) said...

48 enna sir right thaaney naaan soluradhu..?

My days(Gops) said...

49 aiey pesikittey kanakkka vuttuten...

My days(Gops) said...

50 potaachi sir., ippa edhaachum paarthu pottu kodunga...

My days(Gops) said...

50 udhiri katchi sorry, edhiri katchi syam paavam remba neram Q'la nikkiraaar, avaruku koduthudunga first.... :))

varta sir...

மெளலி (மதுரையம்பதி) said...

சார் இப்போதான் இந்த பதிவைப் பார்த்தேன். அருமை. அதுவும் மகாராஜபுரம் அவர்கள் "நீயே மீனாஷி, காமாஷி' என்று ஸ்வர பிரஸ்தாரம் எல்லாம் பண்ணி பாடியது இப்போதும் காதில் கேட்கிறது....

Adiya said...

Dear T.R.C

just now come across ur blog .. simply awesome explanation about kalyani ragam, papanasam sivan and his songs. kudos to u. super.
will read rest and post my comments.

romba nice.

Thanks

தி. ரா. ச.(T.R.C.) said...

முதல்தடவையாக வருகை தந்திருக்கும் ஆதித்யாவுக்கும் அவருடைய பின்னுட்டத்திற்கும் நன்றி.

செல்லி said...

வணக்கம் தி.ரா.ச. ஐயா

எனக்கு பித்த பாடல்கள் எல்லாம் போட்டிருக்கிறீங்க
//மன்னவன் வந்தானடி ,
அமுதும் தேனும் எதற்கு// என்ன இருந்தாலும் பழைய பாடலுக்கு நிகர் ஏது?
நன்றி, ஐயா.

Porkodi (பொற்கொடி) said...

nalla kadhaiya irukke! en pangayum serthu amukradhavadhu? courier anupchu naarinalum naaralame thavira, en pangai ellam yaarukkum vittu thara mudiadu! :) adutha post eppo sir? adhu seri neenga enna paatiyai pola mokkai podubavara? matter kidaikkanum illiya? :)

தி. ரா. ச.(T.R.C.) said...

வணக்கம் செல்லி.இன்னும் நிறையப் பாடல்கள் உண்டு திரைஇசையும் கர்நாடக இசையும் கலந்து கொடி கட்டிப் பறந்த பாடல்கள் இன்னும் தொடரும்

தி. ரா. ச.(T.R.C.) said...

@பொற்கொடி மேடத்தை வம்புக்கு இழுக்காதே அங்கேதான் வரப்போறாங்க ஜாக்கிரதை.மேட்டர் ரெடி.சீக்கிரம் வரும்

Porkodi (பொற்கொடி) said...

varattum, paarkalam! por nu mudivagiduchu, oru kai paarthudanum :)

SKM said...

aaahaaa!ungalai oru Vazhi sairadhunnu yellorum mudivu eduthuttanga pola.Pavam!Uma Maami.

yeppo pudhu post?Romba busyo?Nidhanama podunga.

Adiya said...

sir
kalyani is one of favorite ragam :) very nice explanation of that. thanks for that. i red it some 10times to get into my head. konjam music weak. but learning

Raji said...

Vanakkam TRC sir...
En blog visit panninathukku romba nandringa...Thodarundhu vaanga...
En office la irundhu paatu laam kaetka mudiyadhu...So neenga vaarthaiyaala sonnadhai padichaen..Romba nalla irundhuchunga sir....

Chinna chinna kadhai yum koodavae serthu sollunga sir...

Raji said...

Kousigam na meaning yennanga sir?

Geetha Sambasivam said...

ம்ம்ம்ம்ம், என்னமோ வரதே இல்லையேன்னு நினைச்சா இங்கே எல்லாருமா ஒரு ரகசிய மீட்டிங்கே போட்டு என்னைக் கவுக்கப் பார்க்கிறீங்களா? :)))))))))) நல்ல சதி வேலை!:D
போர்க்கொடி, நான் மொக்கை போஸ்ட் போடறேனா? புரியலைன்னு சொல்லிட்டுப் போங்க! நல்ல தமிழ் படிச்சிருந்தாத் தானே! இது எல்லாம் புரியப் போகுது! என்னமோ சொல்வாங்களே, எதுக்கோ தெரியுமா கற்பூர வாசனைன்னு! அது மாதிரித்தான். க்ர்ர்ர்ர்ர்ர்ர்........ நான் எழுதறது புரியும்.

Geetha Sambasivam said...

என்ன சார், புது போஸ்ட் போட்டிருக்கீங்களான்னு பார்க்க வந்தால் போஸ்டே இல்லை. ஆனால் பேச்சு, வார்த்தை மட்டும் நடக்குது!
அது சரி, என்ன அம்பி கல்யாண வேலையை உங்க தலைலே கட்டிட்டு ஜாலியா இருக்காராக்கும்! அதான் நகர முடியலை உங்களுக்கு :P