அடுத்த அழகு குழந்தை. அதுவும் ஒருவயதுக்கு உட்பட்ட குழந்தையானால் கேட்கவே வேண்டாம். மூன்று அல்லது நான்கு மாதக் குழந்தையை குளிப்பாட்டி, ஜான்சன் பௌடர் போட்டு,கண்ணுக்கு மையிட்டு,ஒரு திருஷ்டிப்பொட்டும் வைத்து கீழே படுக்கவைத்த பின்னர் அதைப் பாருங்கள்.அது கையையும் காலையும் ஆட்டிக்கொண்டு,முகத்தில் எல்லா உணர்ச்சிகளையும் காட்டிக்கொண்டு,அவ்வப்போது பொக்கைவாயால் சிரித்துகொண்டு ஊ... ஆ.. ம்ம்... என்று பேசும்முயற்சியில் ஈடுபடும்போது அதைப் பார்க்கவேண்டுமே. அதுதானய்யா அழகு...! அதுதானய்யா....பூலோக சொர்க்கம். அலுப்புத்தட்டாத அழகு. அதுதானய்யா வாழ்க்கை.. எனக்கு ஒரு எண்ணம் நாம் எல்லோரும் வாழ்க்கையைத் தொலைத்துவிட்டு காசைதேடிச் செல்லுகிறோமோ என்று. நாம் என்றுதான் காசைத்தேடுவதை கொஞ்சம் குறைத்துக்கொண்டு வாழ்க்கையைத் தேடப்போகிறோமோ? அப்படி நாம் தேடும்போது வாழ்க்கை இருக்கும் என்பது என்ன நிச்சியம்?
அடுத்த அழகு முழுநிலா.
முழுநிலா முழு அழகு. கண்ணதாசன் சொல்லியது போல்"சித்திரைமாதம் முத்துரதங்கள் ஊர்வலம் போகும்" அந்த மாதத்தில் வரும் சித்ராபௌர்ணமியன்று கடற்கரைக்குச் சென்று இரவு பத்து மணிக்குமேல் உதிக்கும் முழுநிலவை பார்த்துரசிக்கும்போது அந்த அழகை சொல்லில் சொல்லிமாளாது.எங்கள் குடும்பத்தில் ஒரு வழக்கம். அனைத்து உறவினர்களும்அன்று மெரினா கடற்கரையில் கூடுவோம்.ஒவ்வொருவரும் தங்கள் வீட்டிலிருந்து
செய்து கொண்டுவந்த சித்ராஅன்னங்களைப் பகிர்ந்துஉண்டு மகிழ்ந்து நிலாவை ரசிப்போம்.
பெரியவர்கள் முதல் குழந்தைகள் வரை அனைவரும் பங்கு கொள்ளும் நிகழ்ச்சி. வீடு திரும்ப இரவு ஒரு மணி ஆகிவிடும்.இதனால் உறவினர்களை பார்த்து கலந்து உறவாடும்,உணவைப் பகிர்ந்து கொள்ளும்,மற்றும் இயற்கையை ரசிக்கும் நல்ல எண்ணங்கள் வளரும்.
களங்கமில்லாத முழுச் சந்திரன் அழகுதான். இருந்தாலும் களங்கமுடைய மூன்றாம்பிறைச் சந்திரனை தன் தலையில் அணிந்துகொண்ட சிவபெருமானாகிய சந்திரசேகரனும் அழகுதனே!
29 comments:
kuzhandai azhagunu anegama ellarume solliyachu..
kalakiteenga..
nilavum azhage.. aduvum pournami nilavu neenga solra mathiri romba azhagu..
adutha padivu weirda?? kalukunga.. 50th post veraya... congrats
@DD நன்றி. குழந்தைப் பற்றி எத்தனைபேர் சொன்னாலும் தகும்,அது அலாதி அழகுதான்.
நீங்கள் ரொம்ப பொறுமைசாலி.நாலு நாளே நம்மளாலே தக்குப் பிடிக்க முடியலை. நீ எப்படித்தான் நாள்தோறும்.......
//மூன்றாம்பிறைச் சந்திரனை தன் தலையில் அணிந்துகொண்ட சிவபெருமானாகிய சந்திரசேகரனும் அழகுதனே//
:)
//நாலு நாளே நம்மளாலே தக்குப் பிடிக்க முடியலை//
அடடா! என்ன ஒரு உள்குத்து!
சரி, இந்த சித்ராபவுர்ணமி அன்னிக்கு என்னேன்ன சாதம் மெனு? சொன்னா டிக்கெட் எடுக்க வசதியா இருக்கும். தம்பியவும் கூட்டிண்டு வரலாமா? :)
@அம்பி எனக்கு ஒருசந்தேகம் நீ ஊருக்குபோனாயா இல்லையா என்று.இங்கேயே தங்கமணியோடதங்கிவிட்டாயா? ரயிலில் சென்னை பங்களூர் சீஸன் டிக்கெட் வாங்க்கிட்டயான்ன?
Hmmm
Aamanga TRC ..Mazhazhaiyum azhagu,nilavum azhagu...
Superaa sithira pouranami koondaduveenganu sollunga...
In our family we used to go poombukar..Cauvery kadala serura edathai paarka superaa irukkum..Bt ipa laam poradhu illa..School padikkura varaikkum dhaan...
Apuram cycle gapla "Chandrasekranum" azhagu dhaan solliteengalae;)
50 th postkku advance vazhththukkaL..
Weirdaana postaa ..Poadunga poadunga ..
Congratulations for the 50th post. mmmmmmmmm sappadu romba balam polirukku unga disciplekku? rombave penathurar? illatti thangamani kitte poorikattaile vanga pora kushiyama? pavam sir ninga, 4, 5 days ellam eppadithan prothingalo?
@ambi shame shame. enna irunthalum sarai ippadiya padutharathu? thaniya oru mail koduthu azuthirukkar. :D
dubukku disciple sudha unga disciple 'aappu ambi" peru mathalamo?
azagu nall irunthathu. innum viriva ezuthi irukkalam. mmmmmm ambi venamnu solli iruppaar. avar pechu kedkathinga Sir.
he he he he ambiyoda sernthathukku appuramum ninga innum weird agalaiya? I wonder :))))))))))
@ராஜி வாழ்த்துக்களுக்கு நன்றி.
சைக்கிள் கேப்பும் இல்லை மோட்டர்சைகிள் கேப்பும் இல்லை.நீயும் அம்பி மாதிரி தவறாகவே புரிந்துகொண்டாய்.நான் சொல்லுவது சிவபெருமனாகிய சந்திரசேகரன்.
@கீதா மேடம் வாழ்த்துக்களுக்கு நன்றி.
அம்பி முதல் நாள் அன்னிக்கி பாத்ததுதான். அப்பறம் பார்க்கவே இல்லை
@கீதா மேடம் அம்பியோட சேர்ந்ததுதானல மட்டும் வியர்ட் ன்னு சொல்ல முடியாது.
@கீதாமேடம் அம்பி நான் சொன்னத்துக்கே உள்குத்து என்கிறான்.நீங்க கொடுக்கற வெளி குத்துக்களுக்கெல்லாம் என்ன சொல்லப்போகிறானோ
அழகு பற்றிய பதிவில், தலைவி பின்னூட்டத்தில் பிச்சு உதற்ராங்க!
அதுவும் அழகு தான்:-)
அம்பி, அடிக்க வராதீங்க!! :-))
திராச,
பதிவில் இப்பல்லாம் கிழே மார்க்வீ ஓட விடறீங்க! கலக்கல்!
குழந்தையின் படம் கொஞ்சும் அழகு!
யார் என்று சொல்லவில்லையே, அந்த மைக்கண்ணனை!
ஆறு அழகுக்கு ஆறு அழகுகள் பதிவா?
இந்த ஐடியா சூப்பர்!
பெருமாளையும் யானையையும் எத்தனை முறை பார்த்தாலும் அலுக்காதுதான்.
கண்ணாடியில் மூஞ்சு நானும் எழுதிட்டு எடிட் செஞ்சுட்டேன்:-))))
ரொம்ப அழகா இருக்கு உங்க அழகுகள். யாரும் இல்லைன்னு மறு வார்த்தை பேச முடியாது.
மூச்......:-)
ingae poda vendiya comment previous post la pottu ten.
Kutties always #1. adhuvum 2 yrs varai mattumae.
//நாலு நாளே நம்மளாலே தக்குப் பிடிக்க முடியலை//
adadaa! Nan romba careful a irukkanum pola.;D
50 th postkku advance vazhththukkaL..
//நான் சொல்லுவது சிவபெருமனாகிய சந்திரசேகரன்.//
:D Unga perum avar perum onna ponadhaalae advantage unga pakkam.Paavam avardhaan.
@geetha Maami:
Tanglishla dhool kilapureenga.:D
@ரவி அந்தக் குழந்தை வேறு யாரும் இல்லை சிட்னியில் இருக்கும் என் பேரன் நிமல்தான்(நிமலனடி போற்றி)
மைவண்ணம் மட்டும்தான் இப்படி கைவண்ணம் வேறு மாதிரி.என் லேப் டாப்,கண்ணாடி,பேனா இதெல்லாம் காலி.
@ரவி கீதாமேடம் அம்பி கணக்கு வழக்கு எல்லாம் தினத்தந்தி சிந்துபாத் கதைமாதிரி முடிவே கிடையாது.
@ரவி மார்கீ எல்லாம் ழ்ம்பி கத்துக்கொடுத்தது.கிரிட் கோஸ் டு அம்பி.
Kuti papa unga paeraan...Super aa irukkadhu papa ...
@டீச்சர் சொன்னா சரியாத்தான் இருக்கும்.
கண்ணாடி முன்... ஆமாம் நீங்க போடமுடியாதுதான் அழகா இருப்பவர்கள் போடமுடியது. அதான் அழிச்சிட்டீங்க
இவையெல்லாம் ஆறு அழகுகள் மட்டும் இல்லை மனதுக்கு ஆறுதல்தரும் அழகுகள்.
@ஸ்கேம் வயசாகும் போது இதெல்லாம் சகஜம். அப்படித்தான் மாறிப் போகும்.
கீதாமேடம் எப்பவுமே அப்படித்தான் குறையெல்லாம் மற்ற பதிவில்தான்
பாராட்டுக்கு நன்றி
azhago azhagu unga peran :-) suthi poda sollunga auntya :D
ungalukkum yanai pidikkuma?? seri seri :-)
அம்மா பொர்கொடி உங்களுக்கும் இந்த "ம்" இழிவா அல்லது சிறப்பு "ம்" அப்படின்னு சொன்னா மேடம் கொஞ்சம் சந்தோஷப்படுவாங்க
நேத்திக்கே சுத்திபோடச் சொல்லிட்டேன் சிட்னிக்கு உடனே அவ்ர் லூஸு பொண்ணே பாட்டுக்கு டான்ஸ் ஆடி கமிக்கிறார் கேம்லே
Post a Comment