அழகு என்ற சொல்லுக்கு ஏகபோக உரிமையாளன் போகரின் முருகன்தான்.அழகென்ற சொல்லுக்கு முருகா. அழகன் முருகனிடம் ஆசை வைத்தேன் போன்ற பாடல்களே சாட்சி.மலை மீது நின்றாலும் அழகு மயில் மீது நின்றாலும் ஆழகு.ஆண்டி அல்ங்காரமும் அழகு அரசன் அலங்காரமும் அழகு.முருகன் கை வேலும் அழகு கைச் சேவலும் அழகு.முருகனுடைய திருப்பாதமும் அழகு அவனைப் பற்றிய கீதமும் அழகு.இத்தகைய ஆறுமுகம் என்னிடம் மட்டும் மாறுமுகமாக இருப்பதுதான் அழகல்ல.
அழகு என்பது என்ன? எத்தனை தடவை பார்த்தாலும் அலுக்காதது அழகு(என் முகத்தை எத்தனை தரம் கண்ணாடியில் அலுக்காமால் பார்த்துக்கொள்கிறேன் அதனால் நான் அழகென்று சொல்ல முடியுமா?) பல ஆண்டுகளுக்கு முன் ஒரு முறை திருப்பதி சென்று பாலாஜியைப் தரிசனம்செய்துவிட்டு காஞ்சி மஹா பெரியவரை சந்தித்தேன்.அவர் சொன்ன அலுக்காத ஐந்து அழகுகள் இவைதான்.
வெங்கடசலபதியை நம்மில் எத்தனைபேர் பார்த்திருக்கிறோம் யாருக்காவது பார்த்ததுபோதும் திரும்பிவிடலாம் என்று தோன்றியிருக்கிறதா? சருகண்டி,சருகண்டி என்று தள்ளி விட்டாலும் தள்ளி நின்று பார்ப்போம்.திரும்பும்போதும் பின்பக்கமாக நடந்துகொண்டே பார்ப்போம் அலுக்காத அந்த அழகை. சார் நாளைக்கு காரில் திருப்பதி போகிறோம் இடம் இருக்கு வருகிறீர்களா என்று யாராவது கேட்டால் இல்லையப்பா ஏற்கனவே நான் பார்த்துவிட்டேன் வேறு ஏதாவது கோயிலுக்கு போனால் வருகிறேன் என்று சொல்வோமா? அதுதானய்யா பாலாஜியின் அலுக்காத ஆகர்ஷ்ண அழகு.
அடுத்தது அழகு யானை . சிறுவயது முதல் யானையை எத்தனையோ தடவை பார்த்திருக்கிறேன்.அலுத்ததே கிடையாது. அத்தனை அழகு. அது தலையை ஆட்டுவது,காதை ஆட்டுவது,
காலைத்தூக்கி பாகனை மேலே ஏற்றிகொள்வது,கம்பீரமாக நடந்து வருவது,
குருவாயூரில் தன்மேல்அந்தக் கண்ணனைத் தூக்கிக்கொண்டு சீவேலி சுத்திவருவது,அவன் முன்பு பிளிறி
நமஸ்காரம்பண்ணுவதுஇப்படி யானையைப் பற்றி அழகான விஷயங்களைப் பற்றிச் சொல்லிகொண்டே போகலாம்
அலை அழகு. பலமுறை கடற்கரைக்கு சென்று கரையோரம் அமர்ந்து அலைகளின் அணிவகுப்பின் அழகை அனுபவித்திருக்கிறேன்.பெரிய அலை வரும் பின்னாலேயே அதைத்தொடர்ந்து வரும் சின்ன அலை.இப்படி தொடர்ந்துவரும் அலைகளின் வரிசை பார்க்க பார்க்க அலுக்காத அழகு.. கடலில் இறங்கிவிட்டால் கேட்கவே வேண்டாம் அலைகள் வரும் தண்ணீரை விட்டு காலை எடுக்க மனமே வராது.இருண்ட பிறகு ஒருவித பயத்துடன் அலைகளின் ஆர்பாட்டமும் அழகுதான்.அது சுனாமியாக சீறும்போதும் அழகுதான்.அதையும் அன்று கடலூரில் இருந்தபோது பார்த்தேன்,
மற்ற இரண்டு அழகுகளை அடுத்த பதிவில் பார்ப்போமா!
21 comments:
ரெண்டு பாகமா? நடக்கட்டும் நடக்கட்டும். ஆனாலும் இப்படி யானையை யாணை யாகிட்ட்டீங்களே?
அம்பி,அன்னபூரணி அழைத்துத்தான் வருவது அழகோ.
எங்கள் பதிவில் பெயரும் போட்டுத் தனி மடலும் போட்டு,
தி.ரா.ச சார் ... ஆனாலும் நான் உங்களை ஒண்ணும் சொல்லலை.
ஸ்ரீராமனுக்கு மங்களம் சொன்னதால்.
பிள்ளையார் அடுத்த பதிவில் வருவாரா?
ok ok, going to all blogs and commenting for them and telling me, (lame excuse) work load. Ithu kooda oru azagu than. :P
முதலில் அழகு முருகன்.வெங்கடேசனின் அழகு பெரும் அழகு.
கம்பீர யானை ஒரு அழகு
ஓயாத அலையும் ஓர் அழகு
இன்னும் இருக்கா?
அழகு ஒரு தொடர்கதைதான்!
நல்லாயிருக்கு சார்.
adada TRC sir kalakiteenga..
enna ithu rendu bagama vera podareengala?? nadathunga.. enaku theriyum...ungaluku ambiyala time illanu..adanala mannichu vidaren..
idu enna annapooraninu periya pattam ellam kuduthuirukeenga.. vekama iruku
Palani muragan azhagu,
Thirupathi vengadaesan azhagu,
Yaanaiyum azhagu,
Oru oru vishyamum azhagu dhaan..
Vazhkai rasikarathukku...
நன்றி இலவசம்.தவறுக்கு வருந்துகிறேன்.வருகைக்கும் தவறை சுட்டிக்காட்டியதற்கும் நன்றி.இரண்டாம் பதிவ்வுக்கும் வாருங்கள்
@ராஜி.வாங்க.வாக்கையை ரசித்தால் இன்னும் பல அழகுகள் தெரியவரும்.அடுத்தபதிவையும் பார்த்துச் சொல்லுங்கள்.
@வல்லியம்மா.வங்க.கோபமா வந்திருக்கீங்க. கொஞ்சம் நீர் மோரும் பானகமும் குடிங்க.கவலை வேண்டாம் முதலில் நல்லதை(அழகை) சொல்லிவிட்டு வியார்டுக்கு வருகிறேன். ஆறு அழகுக்குதான் தவிக்கிறேன் ஆனால் ஆயிரம் வியர்ட் இருக்கு என்னிடம்.
@DD.பாருங்க உங்களாலே எனக்கு வல்லியம்மாகிட்ட்டேயிருந்து பூஜை.உங்களுக்கு பெரிய மனசு மன்னிச்சிட்டீன்க.இரண்டு நாளா ரசம் கொழம்பு எல்லாம் செலவாகம இருக்குமே.அம்பியா யார் அது 2 நாளா ஆளையே காணோமே.
அழகு நல்லா இருந்தா அதுக்கு நீங்க பொறுப்பு.வேறே மாதிரி இருந்தா என் தப்பு
@செல்லி. வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.இவ்வளவு பிஸியிலும் நம்பவீட்டுக்கு வந்தது அதிசியம்தான். இன்னும் 2 அழகுகள் இருக்கு அதையும் வ்ந்து பாருங்கள்
@கீதாமேடம். வாங்க.கிர்ர்ர்ர் எங்கே காணோம்.வீட்டிலே ஒர்ரு முக்கிய விருந்தினர் இருக்கார்.அவருக்கு அம்பத்தூர் போகனும்னு ஆசை ஆனா அவ்ருக்கு ரொம்ப வேணுங்கப் பட்டவர்கள் இப்போது இந்தியாவில் இல்லையாம்.அதான் இங்கே வந்தேன் என்றார்.இன்றைய பிளாக்கர் மீட்டிங்கில் 3 பேரும் உங்களைப் பற்றித்தான் பேச்சு.
அதை விடுங்கள் அழகு எப்படி அழகா இல்லை அழுக்கா?
பெருமாளை அழகாக அனுபவித்து சொல்லியிருக்கீங்க திராச!
அலுக்காத அழகுன்னு வேற சொல்லியிருக்கீங்க! அப்படிச் சொன்னதே அழகு!!
//ஆறுமுகம் என்னிடம் மட்டும் மாறுமுகமாக இருப்பதுதான் அழகல்ல//
ஆகா, இது என்ன புதுக்கதை?
கோபத்தில் சில சமயம் அவன் இருந்தாலும், உங்களைப் போன்ற அடியார்களைக் கண்டால், உடனே அக்கோபம் "மாறும் முகம்" அல்லவா அவன்!
கோபம் மாறும் முகம்
இன்பம் ஏறும் முகம்
அன்பு கூறும் முகம்
ஓ, நீங்க சுனாமியை நேராகவே பாத்தீங்களா சார்? அது பற்றி பதிவு போட்டிருந்தீர்களா, அப்போது?
@GeethaMaami:
//Ithu kooda oru azagu than. :P //
Maamiku ippo puriyum nanga yen tanglish la ezhudhurom nu. Inimae thitta matengalae Tamil a ezhudhu nu?!!:D
super!Ungalaiyum vittu vaikalaiya TAG? Azhagu! arumai!
My Mom Loves Murugan.Azhagu na murugandhaan.Beautiful.
Innikkum "chithirai masa pournami " andru beach poreengala?
WoW! that would be so much fun.
வாருங்கள் ரவி.பெருமாள் அழகு என்றுஎனக்குச்சொன்னது,சொல்லிக்கொடுத்தது மஹாபெரியவாதான்.
ஆமாம் ரவி முருகன் மாறுமுகமுடையவன்தான்.முதல் நாள் என்னை அழைத்து தரிசனம் மறுநாள்
கீழே விழ வைத்து கை முறிவு.
சுனாமியன்று கடலூரில் வங்கியின் கூட்டம்.காலை கடற்கரை ஓரமாகவே.
அப்போதும் முருகன்தான் காவல்
@ஸ்கேஎம் நீங்கள் தங்லீஷ் எழுதறத்துக்கு கீதாமேடம் சப்போர்ட்டா.ஒத்துக்கமுடியாது.தப்பாட்டம்.
@ஸ்கேஎம் நீங்கதான் என்னை மறந்திட்டீங்க. அதுக்குன்னு மத்தவங்களும் அப்படியிருக்கனுமா.
எப்படியோ வந்து பாராட்டியதற்கு நன்றி.
@ஸ்கேஎம் ஆமாம் இந்த வருஷமும் போவோம். நீங்களும் வந்து கலந்துண்டு அப்படியே அம்பி கல்யாணத்திலும் கலந்துக்கலாம்.
"அழகே இல்லாதவனை அழகைப் பற்றி எழுதச்சொன்னால் "
too good . Idhu allavo azhagu
Post a Comment