Sunday, May 27, 2007

சபாபதிக்கு வேறு தெய்வம் சமானமாகுமா.....

61 ஆவது பதிவு சபாபதிக்கு 61 ஆவது வயது உமபதிக்கு>


கீதா மேடம்(பொற்கொடி கவனிக்க) தன் பதிவில் மிக அழகாக சிதம்பர ரகஸியத்தைப் பற்றியும் தில்லை நடராஜரைப் பற்றியும் ஓர் சிறப்பு பதிவு
போட்டிருந்தார்.பின்னுட்டத்தில் நான் அதற்கு ஏற்ப ஒரு பாடல் போடுவதாகச் சொல்லியிருந்தேன்.சபாபதியின் பாடல்தான் இந்தப் பதிவின் சபாநாயகன்.
பதிவு போட ஆரம்பித்து இது 61ஆவது பதிவு.இது என்ன பெரிய விஷயம்
நாங்க எல்லாம் 350/300/100 பதிவுகள் போட்டாச்சு என்று கீதா மேடம்(Grrrrrr),
கார்திக்,அம்பி எல்லோரும் மார்தட்டிக் கொள்ளலாம். ஆனால் என் விஷயம்
கொஞ்சம் வேறு. இன்று எனக்கு 61 வருடங்கள் முடிந்து பிறந்தநாள். இரண்டும்
சேர்ந்தது ஒரு எதிர்பாராத நிகழ்வு.


நல்ல குடும்பத்தில் பிறப்பு, நல்ல உயர் கலவி, கல்விகேற்ற வேலை,வேலையில் உயர் பதவி,ஓய்வு பெற்ற பின்பும் மறுபடியும்
நல்ல பதவி, கௌரவம்,இனிய இல்லாள்,பணிவான மகன்கள்,மகள்,பாசம் மிக்கமருமகள், உறவினர்கள்,நண்பர்கள்,எல்லாவற்றிற்கும் மேலாக என்னை தன் குடும்பத்தில் ஒருவராக நினைத்து மரியாதை செலுத்தும் பதிவுலக நண்பர்கள்.


இவற்றை இங்கனமே யான் பெறவே என்ன புண்ணியம் செய்து விட்டேன் என்று நினைத்துப் பார்த்தால் ஒன்றுமே செய்யவில்லை என்பது நிதர்சனமாக
தெரிகிறது.ஆனால் இத்தனைக்கும் காரணமானவன் யார் என்று மட்டும் தெரிகிறது. அது வேறு யார்/ என் குலதெய்வமான திருத்தணி முருகன்தான்.
அவனுக்கு வணக்கமும் நன்றியுமாக இந்தப் பாடலை அவன் தாள்களில்
சமர்ப்பணம்.


ராகம்:- ஆரபி தாளம்:-ஆதி


பல்லவி


திருத்தணி முருகன் திருவருள் புரிவான்
திருமால் மகிழும் அருமை மருகன் (திருத்தணி)


அனுபல்லவி

அறுபடை வீட்டின் நாயகனே
குறவஞ்சி வள்ளியின் காவலனே (திருத்தணி)


சரணம்

குறுநகை புரிந்திடும் அருள்முகமும்

பரிவுடன் உதவும் பன்னிருகரமும்

வீருடன் தோன்றும் வெற்றி வடிவேலும்

என்றென்றும் என்னைக் காத்திடுமே (திருத்தணி)





இதோ கீதாமேடத்துக்காக இட்ட பாடல்

ராகம்:- ஆபோஹி தாளம்:-ரூபகம்

பல்லவி

சபாபதிக்கு வேறு தெய்வம் சமானமாகுமா
தில்லை சபாபதிக்கு வேறு தெய்வம் சமானமாகுமா( சபாபதிக்கு)

அனுபல்லவி

கிருபாநிதி இவரைப்போல கிடைக்குமோ
இந்த தரணி தன்னில் (சபாபதிக்கு..)

சரணம்

ஒருதரம் சிவசிதம்பரம் என்றால் சொன்னால் போதுமே
பரகதிக்குயடைய வேறே புண்ணியம் செய்யவேண்டாமே
அரிய புலையர் மூவர் பதம் அடைந்தார்
என்றே புராணம் சொல்லக்கேட்டோம்
கோபலகிருஷ்ணன் பாடும் (சபாபதிக்கு)






'இதே பாடலை பிரியா சகோதரிகளின் குரலில் இங்கே கேளுங்கள்">


கோபலகிருஷ்ண பாரதியார் முதலில் பாடல் எழுதும்போது
ஒருதரம் சிவசிதம்பரம் என்று சொன்னால் போதுமா?
பரகதிக்கு அடைய வேறே புண்ணியம் பண்ண வேண்டாமா?
என்றுதான் எழுதினார்.தியகராஜரும் பாரதியும் சமகாலத்தவர்கள்.
ஒருமுறை சந்தித்தபோது தியாகராஜர் இந்தப் பாட்டைக் கேட்ட பிறகு
இறைவன் நாமத்தை ஒரு தரம் சொன்னாலே போதுமே வேறே புண்ணியம் ஏதாவது பண்ண வேண்டுமா என்ன. நாமத்திற்கு அவ்வளவு மகிமை உண்டே என்று சொன்னதாகவும்அதன் பிறகுதான் மாற்றி எழுதினார்.தியகராஜரும் ஆபோகி ராகப் பாட்டில் மகிழ்ந்து பாரதியை பாராட்டி தானும் அதே ராகத்தில் " மனசு நில்ப சக்திலேகபோதே" என்ற ஒரு பாட்டை இயற்றினார்
என்ற ஒரு சொல் வழக்கும் உண்டு.

53 comments:

SKM said...

adeppdi may 27th innum varalaiyae,adhukkulla ungalukku mattum may 27th vandhuduthu? may 27th dhaan birthday aa? Vazhththukkal.60th kalyanam panreengala?Happy birthday to you.:)

கபீரன்பன் said...

பிறந்த நாளின் அன்பான வாழ்த்துக்கள். நன்றி உள்ள நெஞ்சில் ஈரம் இருக்கும். அதையே அன்பு என்கிறோம்.ஆகையால் இறைவன் அருள் பூரணமாக இருப்பதில் ஆச்சரியமில்லை. உங்கள் மனதில் இருப்பதை உங்கள் எழுத்து பிரதிபலிக்கிறது. தொடரட்டும் சிறப்பான பணி.

தி. ரா. ச.(T.R.C.) said...

ஸ்கேஎம் வேறு ஒன்றுமில்லை.கைத்தவறுதலாக பபிலஷ் அழுத்திவிட்டேன் அதான்.சகோதரியின் வாழ்த்துக்கு நன்றி.

தி. ரா. ச.(T.R.C.) said...

கபீரன்பன் மிகவும் நன்றி உங்கள் வாழ்த்துக்கு.தொடர்ந்து எழுதுவேன் உங்கள் ஆதரவு உள்ளவரை எனக்கென்ன மனக்கவலை.என் ஆசிகள்

Kannabiran, Ravi Shankar (KRS) said...

மீண்டும், பிறந்த நாள் வாழ்த்துக்கள் திராச!
சென்ற ஆண்டு தங்கள் மணிவிழாப் பதிவு இன்னும் கண் முன் நிற்கிறது!
அதற்குள் ஓராண்டு ஓடி விட்டதே!

//திருத்தணி முருகன் திருவருள் புரிவான்// எழுதியது யார் திராச ஐயா?

//ஒருதரம் சிவசிதம்பரம் என்றால் சொன்னால் போதுமே//

ஓ...போதுமா? போதுமே ஆன கதை இது தானா? அருமை! அருமை!
கோபாலகிருஷ்ண பாரதியும், தியாகராஜரும் சமகாலத்தவர் என்று இன்று தான் அறிந்து கொண்டேன்! நன்றி திராச!

தி. ரா. ச.(T.R.C.) said...

@ரவி அன்புடன் தொலபேசியில் அழைத்து வாழ்த்துக்களை அளித்ததற்கு நன்றி.

வல்லிசிம்ஹன் said...

மனம் நிறைந்த வாழ்த்துக்கள் தி.ரா.ச.

பரமாச்சாரியார் கிருபையில் நீங்கள் நிறைய ஆண்டுகள் சீரும் சிறப்புமாக இருக்க வேண்டும்.

இலவசக்கொத்தனார் said...

பிறந்தநாள் வாழ்த்துக்கள் ஐயா. மேன்மேலும் பெருமைகள் பெற வேண்டும் என்ற பிரார்த்தனையோடு எனது நமஸ்காரங்கள்.

தி. ரா. ச.(T.R.C.) said...

@ நன்றி குமரன் தங்கள் வாழ்த்துக்கு.நான் பதிவுலகத்திற்கு அறிமுகமாதற்கே நீங்கள்தான் காரணம். ஆரம்பகாலங்களில் பதிவுலகின் தொழில் நுணுக்கங்களை கற்றுத்தந்த ஆசான்.குரு என்பவர் வயது வரம்புக்குள் வராதவர்.

சிவமுருகன் said...

ஐயா,
பிறந்த நாள் வாழ்த்துக்கள்!.

My days(Gops) said...

"பிறந்தநாள் வாழ்த்துக்கள்" sir .....

blog pakka vandhey remba naaal aachi...eppadi sir irukeenga...

rv said...

பிறந்த நாள் வாழ்த்துகள் தி. ரா. ச...


அருமையான பதிவு...

dubukudisciple said...

enna trc sir sollave illaye..
HAPPY BIRTHDAY TO YOU

PADIVU SUPER

Geetha Sambasivam said...

மனமார்ந்த பிறந்த நாள் வாழ்த்துக்கள் சார், நேற்றுப்பூராவும் உங்க ப்ளாகிலேயே சுற்றிச் சுற்றி வந்தேன். இன்னிக்கு உங்க மெயிலோட துணையிலே தான் வர முடிஞ்சது. தாமதத்துக்கு மன்னிக்கவும். இந்த வருஷமாவது சஷ்டிஅப்தபூர்த்தி பண்ணிக் கொண்டிருக்கலாமே? என்னுடைய வணக்கங்களையும் தெரிவித்துக் கொள்கிறேன். என் கணவரும் தன்னோட வாழ்த்துக்களைத் தெரிவிக்கச் சொன்னார். நேற்று உங்கள் பதிவிலே போட்டிருந்த உங்கள் பேரன் படத்தைப் பார்த்துக்கொண்டிருந்தப்போ கூடப் பேசிக் கொண்டிருந்தோம்.

Cogito said...

Happy birthday !

தி. ரா. ச.(T.R.C.) said...

@கேஆர்ஸ் இந்தப்பாடலை எழுதியது
திருமதி.தாரா நடராஜன்.அருமையான பாட்ல்களை அளித்துள்ளார்.

தி. ரா. ச.(T.R.C.) said...

@கேஆர்ஸ் இந்தப்பாடலை எழுதியது
திருமதி.தாரா நடராஜன்.அருமையான பாட்ல்களை அளித்துள்ளார்.

தி. ரா. ச.(T.R.C.) said...

@cogito thank you very much

தி. ரா. ச.(T.R.C.) said...

@ நன்றி வல்லியம்மா. வாழ்த்துக்களுக்கு.பரமாசரியரை நினவு கூர்ந்தது மகிழ்ச்சியளித்தது

தி. ரா. ச.(T.R.C.) said...

@ராஜேஷ். எனது ஆசிகள் உனக்கும் உன் குடும்பத்துக்கும்.ஸ்டார் வார................ம் போல!ஜமாய் ராஜா

தி. ரா. ச.(T.R.C.) said...

@சிவமுருகன் நன்றி. உங்களது பிள்ளையார் பட்டி விநாயகர் அமர்களமாக உள்ளது

தி. ரா. ச.(T.R.C.) said...

@கோப்ஸ் நன்றி வாழ்த்துக்களுக்கு. பிளாக் பக்கம் வரமுடியாமல் அப்படி என்ன ஆணி பிடுங்கனும்.பிளாக் யூனியன் பக்கமே இருக்காமே கொஞசம் இப்படியும் வரனும்

தி. ரா. ச.(T.R.C.) said...

மருத்துவர் ஐய்யா வண்க்கம்.வருகைக்கும் கருத்துக்கும் நன்றி

தி. ரா. ச.(T.R.C.) said...

@வாங்க DD.சொல்லவேயில்லையா? நீங்காதான் அம்பி கல்யாணத்துக்கு அப்பறம் அவன் கொடுத்த ரிவர்சிபில் சாரியை கட்டிண்டு எங்களை மறந்துட்டீன்க.

வருகைக்கும் வாழ்த்துக்கும் நன்றி பல
ரங்கமணியை கேட்டதாகச் சொல்லவும்.படங்கள் எல்லாம் பிரமாதம்.

தி. ரா. ச.(T.R.C.) said...

@கீதா மேடம். வாங்க வாங்க. வணக்கம். அப்படியெல்லாம் நாங்க நீங்க ஊர்ல இல்லாதபோது கல்யாணம் எல்லாம் வெச்சுக்க நாங்க என்ன அம்பியான்ன?சாம்பு சாரை கேட்டதாகச் சொல்லவும்.ஜூலை 18 வரை விசேஷம் முடியாது.

யோகன் பாரிஸ்(Johan-Paris) said...

ஐயா!
பிறந்த நாள் வாழ்த்துக்கள்!
" சபாபதிக்கு" அருமையான பாடல் ,இதை சீர்காழியாரின் கம்பீரத்தில் என் இளமையில் கேட்டு அனுபவித்துள்ளேன். பின் ஜெயசிறீ அவர்கள் குரலில் இசைத் தட்டில் கேட்டேன். இந்தக் காட்சி ஏற்கனவே பலதடவை பார்த்து கேட்டுவிட்டேன். திகட்டவில்லை.
நல்லிசையின் அழகே அது தானே!

தி. ரா. ச.(T.R.C.) said...

@வாருங்கள் யோகன் ஐய்யா. இசையினபம்தான் நம்மையெல்லாம் கட்டிப்போடும் கயிறு.எம் ஸ் ஸ் அவ்ர்களும் இந்தப் பாட்டை ரசித்து கேட்கும் வண்ண்ம் பாடியுள்ளார்

நாகை சிவா said...

தாமதமான பிறந்த நாள் வாழ்த்துக்கள்.

வெகு நாள் பிறகு வருகின்றேன். :-(

எல்லாம் சுகமாக இருக்க, அமைய கடவுளை வேண்டுகிறேன்.

நீங்க கொடுத்து லிங்க் வேலையை செய்யவில்லை.

ILA (a) இளா said...

Happy birthday !

Porkodi (பொற்கொடி) said...

adada romba latea vandhuttene! :-( parvailla, belated bday wishes uncle! ungal aasirvadham engalukku undu thaane? :-)

pottadhu thaan pottinga, geetha paati nu potrundha indha pinju ullam sandhosha patrukkum illa? seri freeya vidren :-)

தி. ரா. ச.(T.R.C.) said...

@வாம்மா பாயிண்டர் கொடி.நீவந்து யாரயாவது வம்புக்கு இழுப்பேன்னு தெரியும்.உனக்கு தூக்கம் வராதே.வாழ்த்துக்கு நன்றி.

தி. ரா. ச.(T.R.C.) said...

@என்ன புலி பதுங்கித்தானே வரும்.வந்தா சரி. நன்றி

தி. ரா. ச.(T.R.C.) said...

@வாங்க இளா. நன்றீ. அருண் நலமா?

தி. ரா. ச.(T.R.C.) said...

@வாங்க வேதா.லேட்டா வந்தாலும் லேட்டஸ்டாதானெ வருவீங்க. பரிசு வங்கிட்டுதான் வந்தீங்க.அதென்ன தலைவிக்கும் உங்களுக்கும் எப்பவும் கணிணி பிரப்ளம்.

manipayal said...

என் மகளின் பிறந்த நாள் அன்றே நீங்களும் பிறந்த நாள் கொண்டாடுகிறீர்கள். கூடவே சபாபதியான என் அண்ணனையும் சொந்த ஊரான சிதம்பரத்தயும் நினைவு படுத்தினீர்கள்.வாழ்த்துக்களும் நன்றியும்.வலைக்கு நான் புதுசு.தாங்கள் வந்து விமர்சிக்க வேண்டுகிறேன்

Raji said...

Belated Iniya pirandhanaal vaazhththukkal TRC sir...
Ungala ambi kalayana photola paarthanae..G3 annupuchaanga...

தி. ரா. ச.(T.R.C.) said...

ஓ மணி உங்களுக்கு சிதம்பரமா. அப்போ வீட்டில் உங்கள் கைதான் ஓங்கியிருக்கும்.உங்கள் மகளுக்கு என் பிறந்த நாள் வாழ்த்துக்கள்.உங்கள் பதிவைப் பார்த்தேன். வலைக்கு புதியவராகத் தெரியவில்லை. பதிவுகளும் என்னுடயதைவிட நல்லாவே இருக்கு. தொடருங்கள்

தி. ரா. ச.(T.R.C.) said...

வணக்கம் ராஜி.நன்றி வாழ்த்துக்களுக்கு.இதுநல்லா இல்லை. குடும்பத்தில் குழப்பம் விளைவிக்கக் கூடாது. போட்டோவில் நான் தங்கமணியுடன் நிற்கிறேனே. அதைச் சொல்ல வேண்டாமா?உங்களால் எனக்கு இன்று டிபன் கட்.

Raji said...

//போட்டோவில் நான் தங்கமணியுடன் நிற்கிறேனே. அதைச் சொல்ல வேண்டாமா?உங்களால் எனக்கு இன்று டிபன் கட்.//

Ahaha....IPdi aayiduchae..irunga photo paarthuttu varaen.

தி. ரா. ச.(T.R.C.) said...

இனிமே பாத்தா என்ன பாக்காட்டா என்ன. டிபன் போனது போனதுதான்

Avial said...

Belated wishes sir.
Just to add to ur post, this song was composed by Gopalakrishna Bharathy. A small piece of information abt this composition . Gb was a contemprary of Thyagaraja swamigal. Thyagar was known for his devout of Rama . Sri Thyagar had heard abt the greatness of Gb and requested GB to compose one on Rama .
This was composed on that occasion.
Ida sonnadhu ennoda friend whos a chidambara dikshitar .

Happy Birthda again sir. Will come back again and again.

Viji said...

Though I'm an ardent fan of jayashree and I respect and admire her a lot- I feel that this particular rendition lacks bhaavam. I like bombay sisters' rendition better! Just my 2 paise! :-)
-viji

மெளலி (மதுரையம்பதி) said...

சார்,

இன்றுதான் இந்த பதிவினைப் பார்த்தேன்.....

Belated Wishes...

அருமையான பாடல்களைதந்தமைக்கும் நன்றி...

தி. ரா. ச.(T.R.C.) said...

thank you very much Mr. mathusuthan. your views are correct.

தி. ரா. ச.(T.R.C.) said...

Viji you like it or not this blog has brought here. thanks.

தி. ரா. ச.(T.R.C.) said...

என்ன மதுரை. எப்ப வந்தாலும் இங்க கதவு திறந்துதான் இருக்கும்.வாங்க வாங்க

Geetha Sambasivam said...

நீங்க இதைப் பார்க்கிறீங்களா இல்லையா தெரியாது, எட்டு எழுத உங்களை அழைத்திருக்கேன். என் பதிவில் பார்க்கவும்.

Geetha Sambasivam said...

ராத்திரி நேரத்தில் தூக்கத்தில் நானொரு ராட்சசி போல் வருவேன்
நாளைக்கு நீ வந்து "எட்டு" பதிவு போடும்வரை விட மாட்டேன்." :)))))))
எம்.எஸ்.வி. குரலிலே பாடிக்கிட்டே எல்லாரும் எட்டு போடுங்க!

Viji said...

//Viji you like it or not this blog has brought here. thanks. //

hmm.... I don't understand what you're trying to say here.

தி. ரா. ச.(T.R.C.) said...

சாம்பு சார் வேண்டாம் அப்படிச் சொல்லாதீங்க.பெண் பாவம் பொல்லாது. அப்படி என்னதான் சொன்னார்.
'' ஆமாம் ராத்திரி நேரத்தில் ராட்ச்சஸின்னு எழுதீட்டா பகல் நேரத்திலே தேவதைன்னு நினைச்சுப்பாங்களா என்ன.இரவும் பகலும் எல்லாம் ஒன்னுதான் எனக்குத்தானே தெரியும்"

கீதா மேடம் 'எட்டு எட்டு என்று எண்ணி எந்தன் மனம் திண்டாடுதே
எண்ணையறியாமல் மாட்டிக்கொண்டுவிட்டேனே'

தி. ரா. ச.(T.R.C.) said...

@viji "viji you like it or not this blog has brought you here.Thanks"

Viji said...

I like it. Was just suggesting something else. :-)

Adiya said...

இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள் ஐயா.