Friday, June 29, 2007

எட்டேகால் லட்சணமே எமன் ஏறும் வாகனமே

எட்டேகால் லட்சணமே எமன் ஏறும் வாகனமே என்று நினைத்து என்னை அழைத்த கீதா மேடம் மற்றும் எட்டடுக்கு மாளிகையில் ஏற்றிவைத்த என் தலைவன் கேஆர்ஸ் அழைப்பிற்கும் நன்றி. எல்லாம் என் 71/2 யின் விதி. இதோ எட்டு

1) 8 வயதனிலே


என் வாழ்க்கையில் மறக்கமுடியாத வயது எட்டுதான்.எட்டு வயது வரைதான் நான் என் தந்தையுடன் வாழ்ந்தகாலம்.சேலத்தில் இரண்டாவது அக்ரஹாரத்தில் என் தந்தையின் கைபிடித்துக்கொண்டு ராஜகணபதி கோவிலுக்கு சென்றதும்,சொர்ணபுரீஸ்வரர் கோவிலில் வலம் வந்ததும் அதன் காரணமாக என் அண்ணனுக்கும் அக்காவிற்கும் சுகவனம் என்றும் சொர்ணாம்பாள் பெயர் வைத்ததும்,பிறகு அக்காவையும்,அப்பாவையும் அக்னிக்கு தானம் செய்துவிட்டு,கையில் ஒரு ரூபாய்கூட இல்லாமல் சென்னைக்கு அம்மாவுடன் இரண்டு அண்ணன்களுடன் வந்ததையும் மறக்கமுடியுமா?


2)8,தமோதர ரெட்டித் தெரு


சென்னையில் இருந்த இருக்கப்போகும் நாட்களில் மறக்கமுடியாத நாட்கள் இந்தத் தெருவில் இருந்தபோதுதான்.இல்லாமை என்ற குறைதவிர வேறு எந்தக்குறையும் இல்லாத நாட்கள்.தி நகர் ராமகிருஷ்ணா பள்ளியில் படித்தது, பின்பு ஜைன் கல்லூரியில் பி.காம் படித்து முதல் வகுப்பில் தேறியது,பிறகு சி.ஏ படித்தது எல்லாமே 8 ஆம் நம்பர் வீட்டில் மூலையில் இருந்த சிறிய 20x8 அடி 160 அடி உள்ள கார் செட்டில்தான்.வீட்டில் மொத்தம் 5 உருப்படிகள்.எப்படித்தான் 200 ரூபாயில் அம்மா ஒரு மாதத்தை ஓட்டினாளோ,கற்றுக்கொள்ளாமல் விட்டு விட்டேன். எனக்கு நாரதகானசபா கச்சேரிக்கு போய்வரவே 200 ரூபாய் ஆட்டோ சார்ஜ்.இப்போழுதும் என்காரை கீழே கார் ஷெட்டில் விடும்போது கண் சிறிது கலங்கும் இதுதானே ஒருகாலத்தில் நமக்கு வீடே என்று. அண்ணனும் அண்ணியும் வாழ்ந்தவீடும் இதுதான் பின்பு அம்மாவுடன் அவர்கள் மறைந்ததுவும் 8 ஆம் நம்பர் வீடுதான். ஆகவே மறக்கமுடியுமா இந்த 8 ஆம் நம்பர் வீட்டை. இதில் ஆச்சர்யம் என்னவென்றால் இந்த 8 ஆம் நம்பரை காலி செய்துவிட்டு சென்ற நங்கநல்லூர் வீடும் 8 ஆம் நம்பர்தான்.


3) வங்கியில் பார்த்த 8 வேலைகள்


வங்கியில் சிறப்புஅதிகாரியாக வேலைபார்த்த 30 வருடங்களில் பார்த்த வேலைகளும் 8 தான். ஆயிரம் விளக்கு கிளையில் பயிலும் அதிகாரியாகத் தொடங்கி,ஹார்பர்கிளையில் வெளிநாட்டுசெலவாணிபிரிவிலதிகாரி,தணிக்கை பிரிவிலதிகாரியாக இருந்து பாரத் தர்ஷன் பட்டம் 3 முறை பெற்றதும்,பொது கணக்குத் துறையில் உதவி முக்கிய மேலாளாராகவும்,மியுச்சுவல் பண்டில் உதவி தலைமை அதிகாரியாகவும்,தணிக்கை மற்றும் கண்க்கு பிரிவில் முக்கிய அதிகாரியாகவும்(இங்குதான் 1000 த்துக்கும் மேற்பட்ட சார்ட்டர்டு அக்கௌண்டன்டுகளுடன் பழகும் வாய்ப்பு ஏற்பட்டது), ஒருங்கிணைப்பட்ட கணினித் துறையில் உதவி பொது மேலாளர்ராகவும்,கடைசியாக வணிக வங்கித்துறையின் சேவை மையத்தில் இயக்குனர் ஆகவும் இருந்து ஓய்வு பெற்றது.(இங்குதான் ஆரம்பகாலத்தில் இலவசகொத்தனார் பணியில் இருந்தார்). இந்தப் பதவிகளில் நான் சிறப்பாக பணியாற்றினேனா அல்லது இந்த சிறப்பு பணிகளில் நான் இருந்தேனா என்பது கேள்விக் குறிதான். இருந்தாலும் பட்டயக் கணக்காளராக வங்கியில் புகுந்து இந்த 8 பணிகளில் இருந்தும் வங்கியின் விஜிலென்ஸ் பிரிவில் இருந்து எந்தவிதமான விசாரணயும் இல்லாது 30 வருடங்கள் முழுச்சேவையையும் முடித்து முழு ஓய்வுதிய சலுகைகளுடன் வங்கியின் 100 ஆண்டுகால வரலாற்றில் ஓய்வு பெற்ற முதல் பட்டயக் கணக்காளர் அடியேன் என்பது பெருமைக்குரிய விஷயம்தான்.


4) 8 மார்க்

பள்ளிநாட்களில் எனக்கு வராத பாடமே கணக்குத்தான். ஆனால் பின்னால் நான் எப்படி கணக்கில் புலியாக மாறினேன் என்பது வேடிக்கைதான். 8 ஆம் வகுப்பில் படிக்கும் போது கணக்கில் வாங்கிய மார்க்கும் அதற்காக என் அண்ணன் என்னை பின்னி பெடலெடுத்த அடியும்தான் காரணம். பிறகு ஒரு வெறியுடன் படிக்க ஆரம்பித்து கணக்கை கைவசப்படுத்திக்கொண்டு C .A. வை முடித்தேன். அப்படி கணக்கில் நான் வாங்கிய மார்க்குதான் என்ன? வேறு ஒன்றுமில்லை எட்டும் வரை எட்டுதான்


5)8 விபத்துக்கள்வாழ்க்கையே ஒரு விபத்து என்றான் ஒருவன்.. ஆனால் விபத்தே ஒருவனுக்கு வாழ்க்கையாக முடியுமா? முடியும் என்பதற்கு நானே சாட்சி.

இதுவரை நடந்த விபத்துக்கள் எட்டு . 1972 வில் மதுரையில் மோட்டர்சைக்கிளில்கீழே விழுந்து வலது கால் முட்டிகாலி. .1982இல் சென்னையில் தி' நகரில் மோட்டர் சைக்கிளிலிருந்து விழுந்து இடதுகால் முட்டியும் தொடை எலும்பும் அடி. 1986இல் ஸ்கூட்டர் மோதி கையில் அடி.1992 நங்க நல்லூரில் ஸ்டேஷன் பிளட்பாரத்திலிருந்து கீழே குதித்து மறுபடியும் கால் எலும்பு முறிவு. 1997 இல் மாடிப்படியில் இரண்டுபடிகளை ஒரே தாவலில் தாவியதால் கணுக்கால்எலும்பு முறிவு.1999இல் வீட்டில் குழாய் பள்ளத்தில்கால் வைத்து வலது முட்டி மறுபடியும்பிளவு. 2002இல் பீச் ரோடில்ஸ்கூட்டரின் மீது இரவு2 மணிக்கு வேன் வந்து மோதியதால் தலை மற்றும் கால்களில் அடி.உயிர்பிழைத்தது முருகன்அருள்.2006இல் வீட்டில் ஈரமான கோலத்தில்கால்வைத்து விழுந்து இடது கைஇரண்டு துண்டாகஉடைந்து மெடல் பிளேட் வைத்துஇன்னும்சரியாகமல் தவிப்பு.போதுமடா முருகா
இனி தாங்க முடியாது விபத்து போதுமென்று ஓய்வளிக்க உன்னைஅல்லால் வேறே கதி இல்லையப்பா.

6) பிடித்த 8 ஊர்கள்

(1)உலிபுரம்: நான் பிறந்த ஊர். சேலத்திற்கு அருகில் ஆத்தூரின் அருகில் தம்பம்பட்டி அதற்கு அருகில்தான் உலிபுரம்.திண்ணைப்பள்ள்ளிகூடத்தில் மண்லில் பயின்றது(எல்.கே.ஜி,யு. கே.ஜி) இங்கேதான் (2) குருவாயூர்: எத்தனை தரம் பார்த்தாலும் அலுக்காத குழந்தை கிருஷ்ணன் ஊர்.ஆனால் இப்போது இங்கும் திருப்பதிமாதிரி ஆகிவிட்டடது.(3) சாங்லி: மஹராஷ்ட்ரா மானிலத்தில் உள்ள அமைதியான அழகான ஊர்.(4) திரியம்பகபுரி: நாசிக் அருகே உள்ள ஊர். கோதவரி நதி பசுமாட்டின் குளம்பு போன்ற இடத்திலிருந்து உற்பத்தியாகும் இடம்.இயற்கை அழகு கொஞ்சும் இடம்.(5) ரோதங்பாஸ்: குளு மணாலிக்கு அருகில் உள்ள குளிர் நடுக்கும் இடம்.பனிப்பாறைகளால் நிறைந்த இடம்.இங்கு இருக்கும்போது தங்கமணிமுன்னால் இருப்பதுபோன்ற உணர்வு,கை கால்கள் உதறும்.(6) ஜோத்பூர்: ராஜஸ்த்தான் மாநிலத்தில் உள்ள அழகான கோட்டைகளும் வெய்யில் வாட்டி எடுக்கும் ஊர்(7) தலைநகர் டெல்லி:சென்னையைத் தவிர்த்து நிறைய நாட்கள் தங்கியிருந்த ஊர்.மாதம் ஒருமுறையாவது சென்றுவருமூர். இருந்தாலும் இன்னும்வழி பிடிபடாத ஊர்.(8) சென்னை: சொர்கமே என்றாலும் அது நம்ம சென்னை அக்னிகுண்டம்போலாகுமா.


7) நிறைவேறாத 8 ஆசைகள்

சிறுவயதில் வக்கீலுக்கு படிக்க வேணடும் என்ற ஆசை

சென்னையை விட்டு வெளியூரில் சென்று வாழவேண்டும் என்ற ஆசை

ஸ்விஸ்ர்லாந்து பார்க்கவேண்டும் என்ற ஆசை

முறையாக சங்கீதம் கற்றுக் கொள்ளவேண்டும் என்ற ஆசை

கீதா மேடத்திடமிருந்து ஆப்பு வங்காத அம்பியை பார்க்கும் ஆசை

தாய் தந்தையருக்கு வேஷ்டி,புடைவை எல்லாம் வாங்கிக் கொடுத்து
பிறந்த நாள் அன்றுஅவர்களிடம் ஆசீர்வதம் வாங்கும் ஆசை

பணத்தை வாங்கிக் கொண்டு ஊரைவிட்டே ஓடிவிட்ட நண்பனை ஒரு முறை பார்க்கும் ஆசை

தங்கமணியிடம்யிருந்து எப்படியாவது இவரும் நல்லவர்தான் நாம் நினைக்கிற மாதிர் அவ்வளவு கெட்டவர் இல்லைஎன்று நல்லபேர் வாங்கும் ஆசை

8) எட்டு

இந்த எட்டு எண் இருக்கிறதே இது நல்ல எண் இல்லை என்பது கணித மற்றும் ஜோஸியத்தின் கணிப்பு.(அதுதான் எட்டில் கீதாமேடத்துகிட்டே மாட்டிகிட்டே போதே தெரிகிறதே) ஒன்பதுதான்
நல்லஎண்ணாம்.ஹைய்யா நம்ப பிறந்த தேதி 9). எட்டுஎன்பது வாழ்க்கையில்
மேல்நிலையிலிருந்து கீழ் நிலைக்கு கூட்டிச் செல்லுமாம்
உதாரணமாக 8x1=8 ,8x2=16=7,8x3=24=6,8x4=32=5,8x5=40=4 இப்படியே குறைந்து கொண்டே வருமாம். ஆனால் 9 என்பது ஸ்திரமான எண்ணாம்.என்ன செய்தாலும் நிலையாக இருக்குமாம். சுக துக்கங்களை சமமாக பாவிப்பார்களாம்.உதாரணமக 9x1=9=9,9x2=18=9,9x3=27=9,9x4=36=9,
45-9=36=9,81-9=72=9

45 comments:

கீதா சாம்பசிவம் said...

சந்தடி சாக்கிலே எனக்கு "அஷ்டோத்தரம்" பாடி முடிச்சாச்சா? நல்ல அபூர்வமான எட்டுக்கள் உங்களோடது! :P

கீதா சாம்பசிவம் said...

நான் தான் ஃப்ர்ஸ்டா இல்லை எட்டாவதா?

கீதா சாம்பசிவம் said...

இந்த நம்பர் கணக்கை வைத்து ஆதிசங்கரரோட ஒரு ஸ்லோகமே இருக்கு! தெரிஞ்சிருக்கும்னு நம்பறேன்.

கீதா சாம்பசிவம் said...

4 கமென்ட் போட்டுட்டேன், ஹிட்லிஸ்ட் ஏற ஏதோ நம்மாலான உதவி!

கீதா சாம்பசிவம் said...

இந்த மாதிரி வெத்திலை, பாக்கு வச்சுக் கூப்பிட்டாத் தான் நம்ம வீட்டுக்கே (வலை வீட்டைச் சொல்றேன்) வரீங்க! காலம் அப்படி மாறிப் போச்சு! :P

கீதா சாம்பசிவம் said...

அத்தனை கமென்ட் போட்டேன், என்ன செஞ்சீங்க என்னோட கமென்டை எல்லாம்? :P

கீதா சாம்பசிவம் said...

அப்பாடி, இப்போவாவது கமென்ட் பப்ளிஷ் செஞ்சீங்களே? எத்தனை கமென்ட் எண்ணிப் பார்த்துட்டுப் போறேன். :)

கீதா சாம்பசிவம் said...

ஏழுதான் ஆயிருக்கு, இன்னும் ஒண்ணு போட்டுட்டா கணக்குச் சரியாயிடும், இதோட எட்டாவது கமென்ட். எட்டுப் பதிவுக்கு எட்டு கமென்ட். :) இந்தக் கமென்ட் போதுமா, இன்னும் கொஞ்சம் வேணுமா? :P

தி. ரா. ச.(T.R.C.) said...

@கீதா மேடம் நீங்களே எட்டு அட் தாவினீங்கன நாங்க 16 அடியாவது தாண்ட வேண்டாமா. பாருங்க நாளைக்கு எங்க சிங்கம்(அம்பி) புலி (சிவா) எல்லோரும் 16அட் தான்தப் போறாங்க

கீதா சாம்பசிவம் said...

சரியாத் தான் சொன்னீங்க அம்பியைச் சிங்கம்னு. சிங்கம் அதிலும் ஆண்சிங்கம் ரொம்பச் சோம்பேறி, தெரியும் இல்லை, சொல்லி வைங்க உங்க சிங்கத்துக்கிட்டே நீங்களே போட்டுக் கொடுத்திருக்கீங்க! :P
புலிக்கும் வலையா? அதெல்லாம் நடக்காது! :P

ambi said...

இதோ வந்தேன் வந்தேன்! :)

ambi said...

//பனிப்பாறைகளால் நிறைந்த இடம்.இங்கு இருக்கும்போது தங்கமணிமுன்னால் இருப்பதுபோன்ற உணர்வு,கை கால்கள் உதறும்
//

பொய் சொன்னாலும் பொருந்த சொல்லனும்! யார் கை கால் உதறுது?னு நான் சொல்லவா? :)

ambi said...

//கீதா மேடத்திடமிருந்து ஆப்பு வங்காத அம்பியை பார்க்கும் ஆசை
//

:)))

ஜூலை ரெண்டாம் வாரம் தம்பதி சகிதமாய் சென்னை விஜயம். ஹிஹி, வழக்கம் போல உங்காத்துல டிபனோ, சாப்பாடோ எதுனாலும் ஓகே!

உமா மாமி சமையல்னா சும்மாவா? :p

ambi said...

//எனக்கு நாரதகானசபா கச்சேரிக்கு போய்வரவே 200 ரூபாய் ஆட்டோ சார்ஜ்.இப்போழுதும் என்காரை கீழே கார் ஷெட்டில் விடும்போது கண் சிறிது கலங்கும் இதுதானே ஒருகாலத்தில் நமக்கு வீடே என்று.//

எங்கள் கண்களும் கலங்கின. ;(

ambi said...

//இந்த 8 பணிகளில் இருந்தும் வங்கியின் விஜிலென்ஸ் பிரிவில் இருந்து எந்தவிதமான விசாரணயும் இல்லாது 30 வருடங்கள் முழுச்சேவையையும் முடித்து முழு ஓய்வுதிய சலுகைகளுடன் வங்கியின் 100 ஆண்டுகால வரலாற்றில் ஓய்வு பெற்ற முதல் பட்டயக் கணக்காளர் அடியேன்//

superrrrrrrrrrrrr! TRC சார்னா சும்மாவா? ச்சும்மா உங்களை நினைச்சாலே அதிருதுல்ல :)

ambi said...

//பள்ளிநாட்களில் எனக்கு வராத பாடமே கணக்குத்தான்.//

கைய குடுங்க. எனக்கும் கணக்கு பிணக்கு ஆமணக்கு தான்! பாரதிக்கே வராது. :)

ambi said...

//இனி தாங்க முடியாது விபத்து போதுமென்று ஓய்வளிக்க உன்னைஅல்லால் வேறே கதி இல்லையப்பா.
//

எங்களாலும் தாங்க முடியாது! நாங்களும் முருகனை வேண்டிக்கறோம்.

ambi said...

//முறையாக சங்கீதம் கற்றுக் கொள்ளவேண்டும் என்ற ஆசை
//

நல்ல வேளை நாங்க தப்பிச்சோம். :p

ambi said...

//சரியாத் தான் சொன்னீங்க அம்பியைச் சிங்கம்னு. சிங்கம் அதிலும் ஆண்சிங்கம் ரொம்பச் சோம்பேறி, தெரியும் இல்லை, சொல்லி வைங்க உங்க சிங்கத்துக்கிட்டே//

இந்தா பாட்டி, இந்த பிரித்தாலும் சூழ்ச்சி எல்லாம் இங்க நடக்காது! ;)

ambi said...

இப்போதைக்கு இது போதும். அப்புறமா வந்து பார்க்கறேன். :)

தி. ரா. ச.(T.R.C.) said...

@அம்பி பாட்டியே 8 அடி பாய்ந்த பின்னர் பேரன்னு சொல்லிக்கிற நீ 16 அடியாவது பாயவேண்டாமா,10 லேயே மூச்சுவாங்கி நின்னுட்டே .
என்னோட சிஷ்யன் கோப்ஸ் பாரு வந்து தூள் கிளப்பபோறான்

ambi said...

மூச்சு எல்லாம் ஒன்னும் வாங்கலை, டேமேஜர் தொல்லை. :)

ambi said...

கைய காலை வெச்சுண்டு சும்மா இருந்தா தானே இந்த மனுஷன்! - உங்கள் விபத்து அனுபவம் பற்றி அம்பியின் தம்பி போடும் கமண்ட்.

கீதா சாம்பசிவம் said...

சார், சார்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர், இது என்ன? ஆப்பு தான் ஆப்பு வாங்கற கோபத்திலே உளறுதுன்னா நீங்கள் உமா? ஹிஹிஹி, ஜாடையா எச்சரிச்சிருக்கேன், மேடத்துக்கிட்டே சொல்லிடுவேன்னு! பார்த்து! :P YOU TOO BRUTUSஎத்தனை ப்ரூட்டஸ்கள் இந்த ஒரே ஒரு, கண்ணே கண்ணான சீசருக்கு! :P

கீதா சாம்பசிவம் said...

ஆப்பு, அதான் மாமியார் வீடு இருக்கில்லை, இன்னும் எத்தனை நாளைக்கு ஓசிச் சாப்பாடு? வெட்கமா இல்லை? :P

கீதா சாம்பசிவம் said...

சார், ஒருவழியா "ஆப்பு" உங்க சிஷ்யன் இல்லை, "கோப்ஸ்" தான்னு ஒத்துக்கிட்டீங்களே, முன்னேயே எனக்கு இது விஷயமா மெயில் கூட அனுப்பி இருந்தீங்க இல்லை? நான் வேணா அதைத் தேடி எடுத்து "ஆப்பு"க்கு அனுப்பவா?

பொற்கொடி said...

ettu vibatha??? :O

பொற்கொடி said...

almost unga suyasaridhai madhiri irukku :-)

dubukudisciple said...

super trc sir

தி. ரா. ச.(T.R.C.) said...

@ஆமா நம்ப எப்பவோ நடந்த விபத்துக்காக சைகிளில்கூட ஏறமாட்டோம்லே அதான் 8 விபத்துன்னா ஆச்சர்யம்.

இன்னும் கொஞ்சநாளில் 8x8 வரப்போகுதே அதான் சரிதை

தி. ரா. ச.(T.R.C.) said...

@கீதாமேடம் 12 பின்னுட்டம் போட்ட பா(ர்)ட்டிக்கு சென்னை திரும்பும் போது பயங்கர வரவேற்பு கொடுத்துவிடலாம் அம்பியின் தலைமையில்

கீதா சாம்பசிவம் said...

நறநறநறநறநறநறநறநற.

கீதா சாம்பசிவம் said...

தமிழ்ப்பயணியோட நாட்காட்டியை நீங்களும் போட்டிருக்கீங்களா? கொஞ்சம் சரி செய்யணுமோ? பாருங்க, மேலே எங்கேயோ ஒட்டிட்டு இருக்கு!

தி. ரா. ச.(T.R.C.) said...

@அம்பி ஜுலை நான் ஊரில் இல்லை.
வந்தவுடன் நீ சொன்னா மாதிரி உன்னோடு டாஜ் டின்னர் வெச்சுக்கலாம்.எங்கிட்டே கிரிட் கார்டு கூட கிடையாது

தி. ரா. ச.(T.R.C.) said...

@DD பக்கத்திலே பூரிகட்டைகள் பறக்குதாமே. கதவை கொஞ்சம் சாத்தியே வையுங்கள்.ஜாக்கிரதையாக இருங்கோ.

தி. ரா. ச.(T.R.C.) said...

கீதா மேடம் நற நற ன்னு பல்லைகடிகாதீங்க. ஒரு பல்லுகட்ட யு.ஸில் 100 டாலராம். பாத்து சார் பத்திரம்

கீதா சாம்பசிவம் said...

இது என்ன சார், காலண்டரை வச்சுட்டு வித்தை காட்டறீங்க? இப்போ காலண்டர் கீழே வந்துடுச்சு!

kannabiran, RAVI SHANKAR (KRS) said...

திராச
அருமையான எட்டு!
//இப்போழுதும் என்காரை கீழே கார் ஷெட்டில் விடும்போது கண் சிறிது கலங்கும் இதுதானே ஒருகாலத்தில் நமக்கு வீடே என்று//

ஹூம்...அப்பப்ப நினைத்துப் பார்ப்பது எவ்வளவு நல்லது?
மனசுக்கும் நெகிழ்ச்சி, அறிவுக்கும் எச்சரிக்கை! :-)

//இங்குதான் ஆரம்பகாலத்தில் இலவசகொத்தனார் பணியில் இருந்தார்//

கொத்ஸ்...என்னன்ன கலாட்டா எல்லாம் பண்ணீங்க? இனி திராச ஐயாவைக் கேட்டுத் தெரிஞ்சுக்கலாம்.
அப்பவே பி.க எல்லாம் பண்ணுவாரா திராச? :-)))

//கணக்கில் நான் வாங்கிய மார்க்குதான் என்ன?//
8/10?

//எட்டு என்பது வாழ்க்கையில்
மேல்நிலையிலிருந்து கீழ் நிலைக்கு கூட்டிச் செல்லுமாம்//

எட்டு சனி பகவானின் அம்சமுள்ள எண்! தர்ம சிந்தனைகள் அதிகம்! கர்ம பலனைக் காட்டும் எண்!
108, 1008, லட்சத்து எட்டு என்று பெரிய எண்களோடு எட்டு சேர்வதால் தான் மதிப்பு!
அது மேல் நிலையில் இருந்து கீழ் நிலை அல்ல திராச!
படிப்படியாக பலவற்றில் இருந்து குறைந்து கொண்டே வந்து, ஏகத்தை அடைவது!

kannabiran, RAVI SHANKAR (KRS) said...

//மெடல் பிளேட் வைத்து இன்னும் சரியாகமல் தவிப்பு.போதுமடா முருகா//

இன்னும் சரியாகவில்லையா? டாக்டர் என்ன சொல்கிறார்?

நீங்க தான் இப்பவும் வேகமா நடக்கறீங்களே! கந்த கோட்டத்தில் பார்த்தேனே! வேகத்தையும் கொஞ்சம் குறைத்துக் கொள்ளுங்கள் திராச. பூரண ஓய்வு கொடுங்கள்!

indianangel said...

நல்ல அருமையான எட்டு, வெகு நாள் கழித்து உங்க பதிவுகள் பக்கம் வருகிறேன், இனிமேல் தொடர்ந்து வருகிறேன்!
-ப்ரசன்னா

Cogito said...

rajini style-a ettu etta manidha vazhva pirichi irukka !

Adiya said...

konjam late vandhu erukain. nice to see ur 8s. seems ur life is full of challenges and u proved to the world. sir.

that rothan pass thing is so nice.

மதுரையம்பதி said...

இன்றுதான் படிக்க முடிந்தது சார்...அருமை....

ஆமாம், நீங்கள் மதுரையில் இருந்தீர்களா?...எப்போ?, எங்கு?

manipayal said...

சார் உங்க எட்டு பதிவை இன்னைக்குத்தான் படித்தேன். பல இடங்களில் மனதை வாட்டினாலும் எழுத்துக்கள் அருமை. பல கஷ்டங்களுக்கு பிறகு நீங்கள் பெற்ற வெற்றிக்கு முருகன் அருளும் உங்கள் உழைப்பும் தான் காரணமாக இருக்க முடியும். மேலும் பல வெற்றிகள் பெற வாழ்த்துக்கள்

Srinivasan C said...

ஐயா நானும் உலிபுரம்-ல் பிறந்து வளர்ந்து, 10-ம் வகுப்புவரை உள்ளுரிலே படித்து, திருச்சி, சேலம், கோவை, சென்னை என ஒவ்வொரு ஊரிலும் சில-பல வருடங்கள் வாழ்ந்து தற்போது திருச்சியில் வசிக்கிறேன்.

பிடித்த ஊர்களில் முதல் ஊரா உலிபுரம்-தை குறிப்பிட்டதற்காக அதுவும் முதலில் குறிப்பிட்டதற்காக பெறுமைப்படுகிறேன்

உலிபுரத்தில் உங்களின் உறவினர்கள் பற்றி அறிய அவா.

ஸ்ரீநிவாசன் - 9150170357
http://www.chennaiiq.com