இன்று நமது 60 வதாவது சுதந்திர தினம்.இந்தியவில் மற்றும் வெளிநாடுகளில் இருக்கும் நமது பிளாக் உலக நண்பர்கள் சேர்ந்து கொண்டாடவேண்டிய தினம். இந்த தினத்தை பாரதியாரின் இரண்டு பாடல்களுடன் அனுபவித்துக் கொண்டாடுங்கள்.
தாயின் மணிக்கொடி பாரீர்
(பாரத நாட்டுக் கொடியினைப் புகழ்தல்)
பல்லவி
தாயின் மணிக்கொடி பாரீர்! -
அதைத் தாழ்ந்து பணிந்து புகழ்ந்திட வாரீர்!
சரணங்கள்
ஓங்கி வளர்ந்ததோர் கம்பம் - அதன் உச்சியின் மேல் வந்தே மாதரம்
என்றே பாங்கின் எழுதித் திகழும் - செய்ய பட்டொளி வீசிப் பறந்தது பாரீர்! (தாயின்)
பட்டுத் துகிலென லாமோ? - அதில் பாய்ந்து சுழற்றும் பெரும்புயற் காற்று
மட்டு மிகுந்தடித் தாலும் - அதை மதியாதவ் வுறுதிகொள் மாணங்க்கப் படலம் (தாயின்)
இந்திரன் வச்சிரம் ஓர்பால் - அதில் எங்கள் துருக்கர் இளம்பிறை ஓர்பால் மந்திரம் நடுவுறத் தோன்றும் - அதன் மாண்பை வகுத்திட வல்லவன் யானோ? (தாயின்)
கம்பத்தின் கீழ் நிற்றல் காணீர் - எங்கும் காணரும் வீரர் பெருந்திருக் கூட்டம் நம்பற்க் குரியர் அவ்வீரர் - தங்கள் நல்லுயிர் ஈந்தும் கொடியினைக் காப்பார். (தாயின்)
அணியணி யாயவர் நிற்கும் - இந்த ஆரியக் காட்சியோர் ஆனந்தம் அன்றோ? பணிகள் பொருந்திய மார்பும் - விறல் பைந்திரு வோங்கும் வடிவமும் காணீர்! (தாயின்)
செந்தமிழ் நாட்டுப் பொருநர் - கொடுந் தீக்கண் மறவர்கள் சேரன்றன் வீரர் சிந்தை துணிந்த தெலுங்கர் - தாயின் சேவடிக் கேபணி செய்திடு துளுவர். (தாயின்)
கன்னடர் ஓட்டிய ரோடு - போரில் காலனும் அஞ்சக் கலக்கும் மராட்டர், பொனகர்த் தேவர்க ளொப்ப - நிற்கும் பொற்புடையார் இந்துஸ் தானத்து மல்லர் (தாயின்)
பூதலம் முற்றிடும் வரையும் - அறப் போர்விறல் யாவும் மறுப்புறும் வரையும் மாதர்கள் கற்புள்ள வரையும் - பாரில் மறைவரும் கீர்த்திகொள் ரஜபுத்ர வீரர் (தாயின்)
பஞ்ச நதத்துப் பிறந்தோர் - முன்னைப் பார்த்தன் முதற்பலர் வாழ்ந்தநன் னாட்டார், துஞ்சும் பொழுதினும் தாயின் - பதத் தொண்டு நினைந்திடும் வங்கத்தி னோரும் (தாயின்)
சேர்ந்ததைக் காப்பது காணீர்! அவர் சிந்தையின் வீரம் நிரந்தரம் வாழ்க! தேர்ந்தவர் போற்றும் பரத - நிலத் தேவி துவஜம் சிறப்புற வாழ்க! (தாயின்) ---
அன்றைய தலைமுறை திருமதி டி.கே பட்டம்மாள் 60 ஆண்டுகளுக்கு முன் பாடிய இந்தப்பாடலை கேட்கஇங்கேசொடுக்கிக்கேட்கவும்
ஜய வந்தே மாதரம்
ராகம் - ஹிந்துஸ்தானி பியாக் தாளம் - ஆதி
பல்லவி
வந்தே மாதரம் - ஜய வந்தே மாதரம்.
சரணங்கள்
ஜயஜய பாரத ஜயஜய பாரத
ஜயஜய பாரத ஜயஜய ஜயஜய (வந்தே)
ஆரிய பூமியில் நாரிய ரும் நர
சூரிய ரும்சொலும் வீரிய வாசகம் (வந்தே)
நொந்தே போயினும் வெந்தே மாயினும்
நந்தே சத்தர்உ வந்தே சொல்வது (வந்தே)
ஒன்றாய் நின்றினி வென்றா யினுமுயிர்
சென்றா யினும்வலி குன்றா தோதுவம். (வந்தே) ------
இன்றைய தலைமுறையில் திருமதி பாம்பே ஜெயஸ்ரீ பாடிய இந்தப்பாட்டைக் கேட்க இங்கேசொடுக்கிக்கேட்கவும்
Albert Einstein said: We owe a lot to the Indians, who taught us how to count, without which no worthwhile scientific discovery could have been made.
Mark Twain said: India is the cradle of the human race, the birthplace of human speech, the mother of history, the grandmother of legend, and the great grand mother of tradition. Our most valuable and most structive materials in the history of man are treasured up in India only.
French scholar Romain Rolland said: If there is one place on the face of earth where all the dreams of living men have found a home from the very earliest days when man began the dream of existence, it is India.
Hu Shih, former Ambassador of China to USA said: India conquered And dominated China culturally for 20 centuries without ever having to send a single soldier across her border.
11 comments:
அது எப்படி சார், கரெக்டா நான் போட நினைச்சே பாட்டு நீங்களும் போடறீங்க? க்ர்ர்ர்ர்ர்ர்., வர வர எதை ஜி3 பண்ணறதுனு இல்லாமல் போச்சு! :P
Sir, please correct the Tamilpayani Nalkatti, atleast after seeing this comment. You can contact him, as I already gave you his e-mail id. Search it. :D
ஆஹா!!
நல்ல பாடல்கள் ஐயா!!
வீட்டிற்கு சென்று பாடல்களை கேட்கிறேன்!!
பதிவிட்டமைக்கு நன்றி!! :-)
@கீதா மேடம் வாங்க.நீங்கதான் முதல்வர். முதலா வந்தவர். உங்களுக்காகத்தான் இந்தப் பட்டேபோட்டேன். பயணீயைத் திருத்துகிறேன். சாரை இன்னிக்காவது சுதந்திரமாக இருக்க விடுங்கள் பாவம்
வணக்கம் சிவிஆர். வீட்டுக்குப் போயே கேளுங்கள். ஆஹா என்ன தேசபக்தி தொழில் பக்தி.அப்படித்தான் இருக்கனும்
@கீதாமேடம் எதுக்கு இப்போ G3யை வம்புக்கு இழுக்கிறீங்க. அவுங்க பாவம் எங்கேயாவது பார்ட்டி சாப்பிட்டுகிட்டு இருப்பாங்க.
சுதந்திர தின வாழ்த்துக்கள்!
@TRC sir, அருமையான பாடல்கள், லிங்குக்கு நன்றி. கொடி எல்லாம் ஏத்தி இருக்கீங்க, மிட்டாய் குடுங்க, கனேசனுக்கும் சேர்த்து தான்.
//அது எப்படி சார், கரெக்டா நான் போட நினைச்சே பாட்டு நீங்களும் போடறீங்க? //
@geetha paati, எப்பவும் மொக்கையே போட்டுட்டு இருந்தா உருப்படியான பதிவுகள் போடவே மறந்து போயிடுமாம்.
வாங்க அம்பி. சாக்லேட்டா நீங்க லேட் கிடையாது. அதுசரி வயைத்திறந்தாலே சாப்பாடுதானா. வேறு ஒன்னுமே கிடையாதா?இதிலே மொக்கைன்னு பெரியவங்களை(?) பழிப்புவேறு. தங்கமணி சரியில்லை!
Arumaiyana padalgal....Thank you Sir.
வாங்க மௌளி நீங்களும் ஆடிட்டரா? உங்க தந்தையும் ஆடிட்டரா? வருகைக்கு நன்றி
Post a Comment