Sunday, February 10, 2008

கவலையை போக்க மருந்து


சமீபத்தில் மதுரையம்பதி தன்பதிவில் மனக்கவலையைப் பற்றி எழுதியிருந்தார். இந்த மாதிரி சமயங்களில் என்ன செய்து மனதை பழைய நிலைக்குக் கொண்டு வரலாம் என்றுயோஜித்ததில் திரு. பாபநாசம் சிவனின் இந்தப் பாடல் ஞாபகத்திற்கு வந்தது.
சிவன் அவர்கள் தனக்கே இந்த மாதிரி ஒரு நிலை வந்ததாக நினத்து
அருமையான பாடல் மூலமாக வெளிக் கொணர்கிறார்.கவலைக்கு மருந்தும் சொல்லுகிறார்

அம்மா கற்பாகாம்பிகையே என் மனம் சஞ்சலப்பட்டால் நான் போய் எவரிடம் போய் சொல்லுவேன் நான் என்ன பண்ணுவேன். உலகத்தையே படைத்து காத்து ரட்சிக்கும் அன்னையே என் மீது மட்டும் ஏன் கருணை வைக்கமாட்டேன் என்கிறாய், ஒருவேளை இதுவும் கலியின் விளையாட்டோ,அல்லது உன்னை கருணாநிதி என்று அழைப்பதுகூட தவறோஎன்று நிந்தாஸ்துதியே செய்கிறார்.

ஆனால் கடைசியில் மனம் தெளிந்து சொல்லுகிறர். அம்மா என்ன நடந்தாலும் நான் உன்னுடைய பாதத்தில்தான் விழுவேன்,உன்னை மட்டுமே தொழுவேன் அம்மா அம்மா என்று அழுது உன்னிடத்தில்தான் புலம்புவேன்.நீ என்னை கைவிடமாட்டய். என்ன ஒரு அசையாத சஞ்சலமில்லாத பக்தி. அதைத்தான் நாமும் செய்ய வேண்டும்
சரி இனி பாட்டைப் படியுங்கள்

ராகம் ஹரிகாம்போஜி தாளம் ஆதி

பல்லவி
எனது மனம் கவலை எனுமிருள் சூழ்ந்தால்

எவரிடம் முறையிடுவேன் என் செய்வேன் ........(எனது)

அனுபல்லவி

உனது மலரடியில் விழுவேன் தொழுவேன்

உருகி அம்மா என்றழுவேன் அன்றி.................... (எனது)

சரணம்

உலகுயிரெலாம் ஈன்ற ஜகன் மாதா

உன் உள்ளம் எனக்கு மட்டு மிரந்காதா

கலியின் கொடுமை கண்டுன் கருணை அஞ்சினதோ

கருணாநிதி யென்றுனைப் புகழ்வதும் பழுதோ.....(எனது)

திருமதி. காயித்ரியின் குரலில் <" இங்கே கேட்கவும்">

14 comments:

நிவிஷா..... said...

nice song. thanks for sharing

natpodu
nivisha

Sumathi. said...

ஹல்லோ சாரி,

ஆமாம், இந்த மாதிரி சமயங்களில் நான் கூட ஏதோஒரு மனதுக்கு பிடித்த பாடலைதான் கேட்கும் பழக்கம் வைத்துள்ளேன், மொத்தத்தில் இசை ஒரு நல்ல இதமான மாற்றம் தரும்.
தாங்க்ஸ். ஒரு நல்ல பாடலுக்கு.

மெளலி (மதுரையம்பதி) said...

அடடே, அருமையா இருக்கு பாடல், கேட்டதில்லை. நன்றி.

ஆனான பாபனாச சிவமே இப்படி புலம்பிருக்கார்ன்னா, நான் எல்லாம் எங்க.... :-)

ambi said...

அருமையான பாடல் மற்றும் படம் தந்தமைக்கு நன்றி. :)

"துன்பம் நேர்கையில் யாழ் எடுத்து நீ இன்பம் சேர்க்க மாட்டாயா?" என்ற பாடலை தான் தாங்கள் சொல்ல வருகிறீர்களோ?னு தலைப்பை பாத்து ஏமாத்து போயிட்டேன். :p

தி. ரா. ச.(T.R.C.) said...

@ஆமாம் வேதா மனதிற்கு உகந்தது மதுரமான சங்கீதம்தான்.மாயயை நீக்குவதும் அதுதான்

தி. ரா. ச.(T.R.C.) said...

அம்பி நீ ஏமாந்து போய் 8 மாசமாகுது. இப்ப என்ன அதற்கு. ஆமாம் இப்போ யாழ் எங்கே இருக்கு

தி. ரா. ச.(T.R.C.) said...

.நிவிஷா கவிதைக் க்டலே நன்றி உன் கருத்துக்களை பகிர்ந்து கொண்டதற்கு.

தி. ரா. ச.(T.R.C.) said...

.சுமதி வாங்க. நானும் உங்களை மாதிரித்தான் ஆனால் கொஞ்சம் வித்தியாசம். ஏதோஒரு மனத்துக்கு பிடித்த பாடலைக் கேட்க மாட்டேன்.மனதிற்கு பிடித்த ஏதோ ஒரு பாடலை கேட்பேன். ஆமாம் சாரி சொன்னது எதற்கு.

தி. ரா. ச.(T.R.C.) said...

மௌளி நீங்க கேட்க வேண்டும் என்றுதானே போட்டேன். இன்னும் பல புலம்பல்கள் பாபநாசனின் பாடல்கள் சந்திர மௌலியான சிவனின் மேல் இருக்கு.

இலவசக்கொத்தனார் said...

ரொம்ப நல்ல பாடல். அருமையான வரிகள். இது சஞ்சய் பாடி என் கிட்ட இருக்கு. தேடி எடுத்து சுட்டி தரேன். வெயிட்டீஸ்!!

Geetha Sambasivam said...

ஞாயிற்றுக்கிழமையே பதிவு போட்டு இத்தனை கமெண்ட்ஸும் வந்திருக்கு, தலைவியான எனக்கு இன்னிக்குத் தான் சாவகாசமா மெயில் வருது! என்ன அநியாயம்? :P :P

இப்போ பதிவைப் பற்றிய பின்னூட்டம்
"தனக்குவமை இல்லாதான் தாள் சேர்ந்தாற்கு அல்லால்
மனக்கவலை மாற்றல் அரிது!"

ஹிஹிஹி, அதுக்காக எங்களுக்கு மனக்கவலை வராதுனு ஒண்ணும் இல்லை, வரும், வரும்!

தி. ரா. ச.(T.R.C.) said...

@கீதா மேடம் வாங்க. நீங்க உங்களுடைய சிஷ்யகோடி(கேடி)பதிவெல்லாம் போய் பத்துட்டு வரநேரம் ஜாஸ்தி. அதான் இங்கே லேட். பரவாயில்லை வந்துட்டீங்களே.நன்றி.

jeevagv said...

நல்ல பாடலை தருவித்தமைக்கு நன்றி.
ஹரிகாம்போஜி பிரகாசிக்கிறது.

தி. ரா. ச.(T.R.C.) said...

@ஜீவா வாங்க. ஹரிகாம்போதி அருமையான ராகம்