இனி நம்ப நிகழ்ச்சிக்கு வரலாமா? டைரியில் குறித்து வைத்துக்கொள்ளுங்கள் கேரளாவிலிருந்து ஒரு சூப்பர் ஸ்டார் வாலிபன் இசை உலகை வெற்றி வலம் வரபோகிறான்.அவர் பெயர் "துஷார்".துடிப்பும்,வேகமும்,இசைஞானமும் உள்ளவர். தன் பாட்டுத் திறத்தால் அரங்கைமட்டும் இல்லாது நடுவர்களையும் நெகிழ்வோடு கண்கலங்க வைத்தவர்.
அடாடா இந்த சிறிய வயதில் என்ன ஒரு ஞானம்,உழைப்பு. அதுதிரைஇசையாகவோ,மெல்லிசையாகவோ, கர்னாடக இசையாகவோ,இந்துஸ்தானிசையாகவோ இருக்கட்டும் எல்லாம் அவருக்கு வசப்படுகிறது.
இந்த நிகழ்ச்சியில் கடைசி கர்நாடக இசைச் சுற்றில் துஷார் வழங்கிய சங்கராபரணம் ராகம் அந்த நிகழ்ச்சிக்கு மணி மகுடமாக விளங்கியது.முதலில் அவர் சங்கராபரண ராகத்தை விரிவாக ஆலாபனை செய்து அதன் நெளிவு சுளிவுகளை வெளிப்படுத்தினார். பின்னர் கீர்த்தனையிலும் தன் முத்திரையை பதித்து நிரவலின் போது தன் திறமையை வெளிப்படுத்தியபோது நடுவர்களின் கண்களில் ஆனந்தக் கண்ணீர் பெருகியது.அத்துடன் முடியவில்லை ஸ்வரப்ப்ரஸ்தாரம் ஆரம்பித்தார் பாருங்கள் அவ்வளவுதான் அவையோர்கள் தங்கள்: இருக்கையின் விளிம்புக்கே வந்து விட்டார்கள். டி வி திரையில் பார்த்துக்கொண்டு இருந்த மக்களின் நிலையும் அதே.ஸ்வரப்ப்ரஸ்தாரத்தின் போதுதான் என்ன ஒரு வேகம்,அசாத்திய தாளக்கட்டுப்பாடு, ஸ்ருதி சுத்தம். குரு சுப்புடு வார்த்தைகளில் சொல்லவேண்டும் என்றால் "தீர்க ஆயுஷ்மான் பவ".
பாடிமுடித்ததும் துஷார் அப்படியே தலையைக் குனிந்து 5 நிமிடங்கள் கண்ணீர் மல்க ஆனந்த பரவசத்தில் இருந்தார். மூன்று நடுவர்களும் கைகூப்பிய நிலையில் என்ன சொல்வது என்று புரியாமல் உன்னதமான சங்கீதத்தின் பிடியில் சிக்கியிருந்தார்கள் பார்வையாளர்கள் நிலையைப்பற்றிச் சொல்லவே வேண்டாம்.இதற்கு பின் நடந்த வற்றை எழுதவதைவிட பார்த்தும் கேட்டும் அனுபவிக்க வேண்டியவை. மொழி மலயாளம்தான் ஆனாலும் புரியும் உணர்ச்சிகளுக்கு மொழி தேவையில்லை.
இதோ ராக ஆலாபனையைக் கேளுங்கள் பாருங்கள்
-
இங்கே கீர்த்தனையைபாடும் சிறப்பை பார்த்து கேட்டு ரஸியுங்கள்.
-
நிகழ்ச்சியின் முத்தாய்ப்பாக விளங்கிய ஸவரப்பிரஸ்தாரம் இங்கே
-
இப்பொழுது பாருங்கள் துஷார் உணர்ச்சிவசப்பட்டு பரவச நிலையில், அவையோர்,நடுவர்கள் அனைவரும் ஒரே உணர்ச்சிவயத்தின் பிடியில். துஷாரின் தன்னிலை விளக்கம் அளித்த பின்னர் நடுவர்கள் தங்களுடைய எகோபித்த பாரட்டு மழையை பொழிந்தனர்.கடைசியாக ஏகமனதாக அனைவரும் மிக அதிகமான மார்க்காக 24/25 அளித்தனர். அதில் ஒருவர் சொன்னார் 25/25 கொடுக்க ஆசைதான் ஆனால் கண்பட்டு விடும் என்ற காரணத்தால் கொடுக்கவில்லை என்று.
-
"எனக்கு "வளர ஸ்ரேஷ்டமாயிட்ட சந்தோஷம்" கேட்டு பார்த்த பின்னர் உங்களுடைய கருத்துக்களையும் கூறலாம்.உங்களுக்கும் பிடிக்கும் என்ற எண்ணத்தில்
கடைசியாக வந்த செய்திகளின்படி திரு. துஷார் அவர்கள் மொத்தமாக 67% எண்ணிக்கையும் 47500 ஸ் எம் ஸ் பதிவும் பெற்று முதலாவது ஸ்டார் பாடகராக தேர்ந்தெடுக்கப்பட்டார்.
29 comments:
ஆம் ஐயா - பதிவர் தமிழ் பிரியனும் இந்த காட்சிப்படத்தை பதிவாக வெளி இட்டிருந்தார்.
அவருக்கு நான் இட்டிருந்த பின்னூட்டம்:
துஷார் மிக அருமையாக - நெடுநாள் பழக்கப்பட்ட கலைஞர் போலப் பாடினார் - பிரம்மிப்பாக இருந்தது.
கீழ் ஸ்தாயிக்கு இறங்கி மீண்டும் மேலே வரும் ஸ்வர சஞ்சாரங்களில் வெகு இலாகவாமாக கையாண்டிருக்கும் திறமை - அருமை. காந்தார சஞ்சாரங்கள் எப்போதும் இனிமை.
தருவித்து தமிழ் நெஞ்சங்களை இசை இன்பத்தினால் நிறைத்தமைக்கு நன்றிகள்.
வாங்க ஜீவா. நீங்கள் சொல்வது முற்றிலும் சரி. குரலின் ஏற்ற இறக்கங்கள் போது ஸ்ருதி விலகிவிடும் .ஆனால் துஷாருக்கு வானம் வசப்படும் என்பார்களே அதுமாதிரி கானம் வசப்பட்டது.தமிழ்ப்பிரியனின் பதிவு முகவரி தர இயலுமா? என்னுடைய பதிவை ஒப்புநோக்க வசதியாக இருக்கும்.
அருமையான ஒரு செய்தியை பகிர்ந்தமைக்கு மிக்க நன்னி. வீட்ல போய் நிதானமா கேக்கறேன். :)
Here's the Tamil priyan's post Link:
http://majinnah.blogspot.com/2008/04/blog-post_7347.html
!அம்பி வீட்டுக்கு போன பிறகு கணேசன்,தங்கமணி ஆகியோரையும் பார்க்கச்சொல்லு..நல்ல இசை நிகழ்ச்சி.அது சரி கணேசனுக்கு போஆன இடத்திலெல்லாம் கேசரியாமே. அவனுக்கு இப்போ ஜாதகத்தில் "ரவா கேசரி யோகம்" போல இருக்கு
மிக அருமை. நன்றி சார்.
எனது பதிவுக்கு வருகைக்கு நன்றி ஐயா! இசையைப் பற்றி ஏதும் அறிவு இல்லாத போதும், சில இசைகளைக் கேட்கும் போது தானாகவே மனத்தை லேசாக்கி ஆக்கிரமித்து விடும். அப்படிப்பட்ட ஒரு இசையைக் கேட்ட போது அதை மற்றவர்களுக்கும் சொல்ல வேண்டுமென்ற ஆவலில் தான் அந்த பதிவு.....
பாடலைப் பற்றி நீங்கள் கூறியவை எனக்கு புரிய வாய்ப்பு இல்லையென்றாலும் ஒரு நல்ல பாடலைத் தான் தமிழ்மணத்தில் அறிமுகம் செய்துள்ளோம் என்பது மன நிறைவைத் தருகின்றது... :)
ஹலோ சார்,
ஆமாம் நான் கூட நிறைய்ய தடவை இந்த நிகழ்ச்சியை பாத்திருக்கிறேன், ஆனால் இந்த பைனல்ஸ் மட்டும் மிஸ்ஸிங். அதால் தானோ நீங்க இங்க குடுத்து இருக்கீங்க. நன்றி.
ஹலோ சார்,
//கணேசனுக்கு போஆன இடத்திலெல்லாம் கேசரியாமே.//
ஹா ஹா ஹா... அவனுக்கு உங்க சார்பா நான் சரியா அல்வா குடுத்துட்டேன்.அத சொல்லலையா?
மௌளி சார் வாங்க. பாட்டு பிரமாதம்தான். அதான் முதல் பிரைஸ் கிடைச்சது.
முதல் வருகைக்கு நன்றி தமிழ்ப்பிரியன்.ஆம் நல்லதொரு பதிவைத்தான் அளித்தோம். இதில் அளித்தவர்களின் கருத்தும் ஒரே மதிரிதான்.சங்கீதம் குழந்தைகளையும், மிருகங்களையும் ஈர்க்கும் தன்மை உடையதுதான். அப்படியென்றால் இசையில் ஈடுபாடு உள்ளவர்களை மயக்குவதில் ஆச்சர்யம் ஒன்றும் இல்லை.
@சுமதி. திருநெல்வெலிக்கே அல்வா வா! அப்ப நீ பெரிய ஆள்தான்.கணேசன் அதைச் சொல்லவே இல்லயே.
பைனல்ஸ் பாக்கவே இல்லயா. மிகவும் உணர்ச்சி பிழம்பாக இருந்தது.அந்தப் பையன் துஷார் முகத்தில் ஒரு பணிவு,அடக்கம், இதெல்லாம்தான் அவனுக்கு முதல் பரிசை வாங்கித்தந்து இருக்கிறது.
லால் பாக்க்கில் முன்பு இந்திரா காந்திக்கும் மொரார்ஜி தேசாயிக்கும் ஒரு மீட்டிங் நடந்து பின்னர் அவர்கள் பிரிந்தனர் அரசியலில்.போன சனிக்கிழமை கூட அதே மாதிரி ஒரு மீட்டிங் நடந்ததாமே லால் பாக்கில். ஆனால் இதில் பிரிந்தவர்கள் கூடினார்களாமே
புரியாத மொழி என்றால் அவ்வளவு ஈடுபாட்டுடன் இசையைக் கேட்பதில்லை. ஆனால் உங்களின் அறிமுகத்தைப் படித்த பின்னர் எல்லாப் பகுதியையும் கேட்டேன். அருமையிலும் அருமை. எனக்கும் இறுதியில் கண்ணில் நீர் கோர்த்தது. இது தமிழில் (அல்லது வடமொழியிலோ) இருந்திருந்தால் எனக்கு இன்னும் அதிகம் சுவைத்திருக்கும் என்று தோன்றுகிறது. இனி மேல் இவர் பெயரை இட்டுத் தேடிக் கேட்கவேண்டியது தான். ஏதாவது ஒரு தமிழ் கீர்த்தனையாவது பாடியிருக்க மாட்டாரா என்ன?
வாருங்கள் குமரன். துஷார் முறைப்படி சங்கீதம் கற்றுக்கொண்டு இருக்கிறார். இன்னமும் முடியவில்லை. அதற்குள் இந்த போடு போடுகிறார்.சங்கீதத்தை அனுபவிக்க மொழி ஓரளவுக்குத்தான் தேவை.மொழி பாட்டின் பொருளை அறிந்து கொள்ள உதவும்.நாட்டின் பலபாகங்களுக்கு சென்று இருந்தவன் என்ற முறையில் தெரிந்த மொழியின் மீது அதிகப்பற்றும் தெரியாத மொழியின் மீது வெறுப்புணர்சியும் ஏற்படுகிற மயாயையிலிருந்து விலகியவன்.மலயாள மொழியே 70 % வடமொழியும் 30% தமிழும் கலந்ததுதான்.பாட்டை முழுவதும் கேட்டு அனுபவித்ததற்கு நன்றி.வலையில் துஷார் பாட்டு இருக்கிறதா என்று தெரியவில்லை.
//திருநெல்வெலிக்கே அல்வா வா! //
சாதா அல்வா இல்லை, கேரட் அல்வா. எனக்கும் கிடைச்சது. :D
@அம்பி கீழே விழுந்தும் மீசையில் மண் ஒட்டவில்லை கேஸூ. நீதான் ஸ்பாட்லயே இல்லையே. அப்பறம் எப்படி கேசரி?
//அதே மாதிரி ஒரு மீட்டிங் நடந்ததாமே லால் பாக்கில். ஆனால் இதில் பிரிந்தவர்கள் கூடினார்களாமே//
இதென்ன புதுக்கதை....
திராச, போற போக்கைப் பார்த்தால், பெங்களூர்ல மீட் பண்ணினவங்களை விட உங்களுக்கு நிறைய தெரிஞ்ச மாதிரி இருக்கு?. :)
கணேசாஆஆஆஆஆஆஆஆஆஆஆ எனக்கும் கொஞ்சம் சொல்லப்பா... :)
// மொழி மலயாளம்தான் ஆனாலும் புரியும் உணர்ச்சிகளுக்கு மொழி தேவையில்லை.//
உண்மையிலேயே கேரளத்தில் கர்நாடக இசையை அறியாதவர்களே இல்லை என்னும்படியாய் இருக்கிறது, இதிலே அவர்கள் மொழிபேதம் பார்ப்பதில்லை என்பது ஒரு கூடுதல் மன நிறைவு. நன்றி, நாங்களும் இந்த நிகழ்ச்சியைப் பார்த்தாலும் முடிவைப் பார்க்கவில்லை. கொடுத்ததுக்கும் நன்றி.
என்ன சார், நாங்களும் ஏதோ எழுதறோம், கொஞ்சம் யோசிச்சுப் பாருங்களேன். :P அம்பி மட்டுமே இந்த வலை உலகில் இல்லை!
இன்னிக்கு மறுபடியும் போட்டுக் கேட்டோம் சார், ம.பா. நேத்திக்குப் பார்க்கலை, இன்னிக்கு போட்டுக் கேட்டோம், ரொம்ப ரொம்ப அருமையான நிகழ்ச்சியைப் பகிர்ந்து கொண்டதற்கு நன்றி.
@கீதா மேடம். வாங்க மேடம். டூரெல்லாம் முடிந்ததா? ராமாயணம் பிரமாதமா வருது.அம்பியை தொட்டுக்காம இருக்க முடியாது உங்களாலே.பாவம் அவனே வீட்டு வேலைசெய்து கையெல்லாம் காச்சு போச்சு.
@மௌளி நம்ம ஆள் ஒருத்தர் அங்கே உங்களோட இருக்கார் தெரியுமா? ஜாக்கிரதை.
ஐயா,
இந்தப் பதிவுக்கும் வந்து தங்கள் கருத்தைச் சொல்லவும்!
நன்றி!
மிக்க நன்றி தி.ரா.ச. ஒரு கூடுதல் நன்றி என் மனைவியின் சார்பாக. ஊர் மாற்றிப் போகும் படலத்தில் வலைப்பூ விஜயங்கள் மட்டுமல்ல தொலைக்காட்சி சானல்களும், நேரங்களும் பாதிக்கப்பட்டு விட்டன.
Asianet மட்டுமல்லாமல் அனைத்து மலையாள தொலைக்காட்சிகளிலும் சங்கீதத்தின் தரம் மிக உயரத்தில் உள்ளது. அதற்கு முக்கிய காரணம் கீதா மேடம் குறிப்பிட்டு இருக்கும் வெகு பரவலாக காணப்படும் இசை ஆர்வம்தான்.
தங்கள் முயற்சி மூலம், தொடர்ந்து கண்டு வந்த ஒரு நிகழ்சியின் விட்டுப் போயிருந்த ஒரு முக்கிய பகுதியை கண்டு அனுபவிக்கும் வாய்ப்பை கொடுத்திருக்கிறீர்கள். ரெகார்டிங் மிக அருமை. மீண்டும் ஒரு நன்றி.
@வாங்க கபீரன்பன். தங்களையும் தங்கள் வாழ்க்கைத்துணவியரையும் இந்த நிகழ்ச்சி கவர்ந்ததில் வியப்பு ஒன்றும் இல்லை. என்னையும் இந்த நிகழ்ச்சிக்கு அறிமுகப் படுத்தியவர் என் மனைவிதான்.இதே நேரத்தில் "அமிர்தா" டி வியில் இதே மாதிரி சங்கீத நிகழ்ச்சி ந்டக்கும்.அதிலிருந்து என்னை திருப்பியவர் அவர்தான்.எப்படியோ இந்த நிகழ்ச்சி மிகவும் சிறப்பான நிகழ்ச்சியாக அமைந்துவிட்டதில் சந்தோஷம்.
இந்த நிகழ்ச்சியை தொடர்ந்து பார்த்துவந்து துஷாரின் வெற்றியை பார்க்கதவர்களுக்கு இந்தப் பதிவின் மூலம் பார்த்து மகிழ்ந்தது பற்றி சந்தோஷம்.
என்னை மிகவும் கவர்ந்து விட்டது இந்த நிகழ்ச்சி. எனக்கு பிடித்தமாதிரி எங்கள் வீட்டு தோசைகல்லுக்கும் மிகவும் பிடித்துவிட்டது. பாட்டைக் கேட்கும் போது என் மனைவி மும்பை சென்று இருந்த காரணத்தால் இரவு உணவுக்கு தோசை வார்க்க கல்லில் தோசை மாவை விட்டு விட்டு துஷாரின் சங்கரா பரணத்தை கேட்க உட்கர்ந்தேன். துஷாரின் இசை இனிமையில் வசப்பட்டு தோசையை மறந்தேன். துஷார் 96 மார்க்வாங்கியவுடன் மனம் நிறைவுபெற்றவுடன் தோசை நினைவு வந்து பார்த்தால் வீடு முழுக்க ஒரே தீய வாடை. ஓடி சமயல் ரூமுக்கு சென்று பார்த்தால் ஆயிரம் அமாவாசையை வடிகட்டினா மாதிரி தோசை எது கல்லு எது பிரிக்க முடியாமல் அப்படியே ஒன்றிவிட்டது.தோசை எங்கே என்றுபார்த்தால் அது அப்படியே கல்லோடு நடிகர் திலகம் சிவாஜி நடிப்பு போல பாத்திரத்தோடு பாத்திரமாக ஒன்றிவிட்டது.55 பிளாட் காரர்களும் என்ன ஏதோ என்று பதறி விசாரிக்க வந்து விட்டார்கள். செகெயுரிடி தீயணப்புக்கு போன் பண்ணாத குறைதான்.ஆக மொத்தம் அன்று செவிக்கு மட்டும்தான் உணவு சிறிதுகூட வயிற்றுக்கு இல்லை. அந்த நாள் இனிய நாள்.
ஜீவா வந்து பார்த்து எனக்கு தெரிந்தவரை கருத்தையும் சொல்லிவிட்டேன் நல்ல பதிவுக்கு அறிமுகம் செய்ததற்கு நன்றி
Hello sir!
Chanced upon your blog today! Very nice to see that you are so active here.
Hope all is well.
Best regards,
Sowmya Swaminathan (aka Sowmya Srikrishnan)
எந்த சௌமியா.ஒரு சௌமியா கல்யாணத்துக்கு முன்னாலே எனக்கு வீட்டு கூப்பிட்டு சாப்பாடு போடறேன்னு சொல்லிட்டு ஏமாத்திட்டு போனாலே அந்த சௌமியாவா/? இல்லை ஆடிட்டர்ன்னு என்னை இன்கம்டேக்ஸ் ரிடர்ன் போடும்போது படுத்தினாலே அந்த சௌமியாவா?
எப்படி இருக்கே குழந்தை எப்படி இருக்கு கிருஷ்னன் எப்படி இருக்கார்/
என் பிளாக்குக்கு வந்ததற்கு நன்றி. ஆனா பதிவைப் பத்தி ஒன்னுமே சொல்லவில்லையே. நல்லா இல்லையா?
Dear sir
Please accept my appreciation for the high quality blog content. It reveals a very refined personality (something of a rarity in the internet these days)
C P Chandrasekaran
வலைச்சரத்தில் இருந்து அம்பியின் பதிவிலிருந்து வருகிறேன். நமக்கும் ராகம், தாளம் இதிலெல்லாம் அறிவு இல்லை. ஆனால் ரசனை இறைவன் தந்த பாக்கியம்.
ஒரு கச்சேரியை நேரில் பார்த்த அனுபவம் உங்கள் பதிவின் மூலம் கிடைத்தது. அழகாகத் தொகுத்து வழங்கியதற்கு வாழ்த்துக்கள்.
Post a Comment